விஜய் ஏறக்குறைய 40 வயதில் இருக்கிறார். திரை உலகிற்கு (ஹீரோவாக) நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
நாயகன் வந்தபோது கமலுக்கு இதை விட வயது குறைவாகத்தான் இருந்திருக்கும். தளபதி வந்தபோது ரஜினிகூட 40ன் துவக்கத்தில்தான் இருந்தார்.
எம்ஜியார் நாடோடிமன்னன் எடுத்த போது 40ல் இருந்தார். அஜித்கூட தனது 40;ல் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார்.
இளைய தளபதி என்ற பட்டத்தை தளபதியாக மாற்றிக் கொள்ள ஆசை வருவது இயற்கைதான்.
==========================================
தமிழில் ஸ்பூஃப் வகைப் படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. இருந்தாலும்கூட தமிழ் ப் படம் தான் முதல் ஸ்பூஃப் படம் என்பது போல வெளி வந்தபோது நாம் எழுதிய இடுகை இது .அதன் முழு உரிமை விஜய்க்குத்தான்.
தலைவாகூட அப்படித்தான். ஒரு முழு நீள ஸ்பூஃப் வகைப் படம் தான்.
அஜித் பில்லா , பில்லா 2 விட்டது போல இதையும் நாயகன் 2 என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஸ்பூஃப் வகை சீரியல்களில் கொடி கட்டிப் பறந்த சந்தானத்தையும் திரைக் கதை வடிவமைப்பில் ஈடுபடுத்தி இருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும்.
கருப்புக் கண்ணாடியை கழட்டாமல் சண்டைப் போட்டு அசத்தும் விஷ்வா பாய் அசத்தலோ அசத்தல். எம் ஜியார் கூட கடைசி காலத்தில் டூயட் சீன்களில் மட்டும்தான் கருப்புக் கண்ணாடியை கழட்டாமல் நடித்திருந்தார்.
காதலன் படத்தில் வந்த போலீஸ் அதிகாரியை காப்பி அடிக்கும் நோக்கத்தில் படைக்கப் பட்ட அமலா பால் பாத்திரம் காதலன் போலீஸ் அளவுக்கு நம்மை கவரவில்லை. அதுவும்கூட இந்த படத்தில் நமக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். இன்றைய சூழலில் பெண் போலீஸ் அதிகாரி என்றால் அவர் நினைத்ததை முடிப்பவன் மஞ்சுளா போன்ற திறமைசாலியாக இருக்க வேண்டும். ஆனால் புதிய பறவை சரோஜா தேவியோடு எல்லாம் இவரை ஒப்பிடுகிறார்கள். பாவம் அவரது பாத்திரப் படைப்பாளி.சந்தானமே சொல்லி விடுகிறார். டிஸ்கோ சாந்தி மாதிரி இருப்பதாக.
நடிகன் படத்தில் நடித்தபோது சத்தியராஜ் பல காட்சிகளில் தனது சிரிப்பை அடக்க சிரமமப் பட்டதாகச் சொல்லி இருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் படமும் அமைந்திருக்கும்.
படத்தில் வரும் பல காட்சிகளை பலரும் துவைத்து போட்டதால் நாமும் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.
==============================================================
வீடியோ காசெட்டை விஜய் கைப்பற்றும் காட்சி, அதில் விஜய் இந்தி பேசிக் கொண்டே நடித்திருக்கும் காட்சி. கொஞ்சம் முயன்றிருந்தால் துப்பாக்கி போல வந்திருக்கும் காட்சி அது. என்ன செய்வது எதைப் பார்த்தாலும் காமெடியாகவே தோன்றுகிறது மக்களுக்கு.
=============================================================
அமலா பால் விஜயிடம் உனக்கு அம்மா ஆக ஆசைப் படுகிறேன் என்று சொன்ன போதே டைரக்டர் சொல்லி விட்டார் அவர் விஜயின் அப்பாவுக்குத்தான் ஆசைப் படுகிறார் என்று. இந்த டைரக்சன் டச் கூட மக்களை சென்றடையவில்லை.
==================================================================
படத்தில் துவக்கத்தில் அண்ணா(விஜயோட அப்பா) வின் ஃபோன் வந்ததால் அவரது நடன நிகழ்ச்சியில் அவரை டிஸ்குவாலிஃபை( அதுதாங்க தகுதி நீக்கம்) செய்து விடுகிறார்கள். பிறகு அவர் தெருவில் ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்து யூ ட்யூப் மூலம் ஹிட் ஆகிறார். பேசாமல் இந்த முறையை கையாண்டிருந்தால் விஜய் நிஜமாகமாக பெரிய ஆள் ஆகியிருப்பாரோ...,
அரசியல்ல ஏதுவுமோ நமக்கு சாதகமா நடக்கறதில்ல. நடக்கிறத நமக்கு சாதகமா மாத்திடணும்.... இதுவும் கூட இந்தப் படத்தில் வரும் வசனம் தான்.
கிளைமாக்ஸ் சண்டை முடிந்த பிறகு வரும் போலிஸ் அதிகாரி (படம் பார்க்காதவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் ) கருப்பு சிவப்பு உடையில்..., இதுவும் மக்களைச் சென்றடையவில்லை.