இன்றைய விளையாட்டு வீரர்களில் மிக அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் டோனியும் ஒருவர். டோனியின் சரித்திரம் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.
அதில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கினது என்று டோனி பெறுமை பட்டுக் கொள்ள முடியாது. அதில் பலரும் செதுக்கி உள்ளனர், ஆனால் அவர் ஒரு குட் ஃபினிஷர், ஒவ்வொன்றையும் கடைசியில அவர் செதுக்கி விட்டிருக்கிறார். டோனியின் கீப்பர் வாழ்க்கை டிராவிட் என்ற பேட்ஸ்மேனால் ஒரு குச்சியும், பர்த்தீவ் பட்டீல் என்ற குழந்தைப் பையனால் ஒரு குச்சியும் தினேஷ் கார்த்திக் என்ற கொடுத்துச் சிவந்த கரங்களால் மற்றொரு குச்சியும் நடப் பட்டு அதற்குப் பின்னால் துவங்கியது. இதில் யாராவது ஒருவர் காட்டடி மன்னனாக இருந்திருந்தால் டோனி வந்தே இருக்க முடியாது. எதைப் பற்றியும் கவலைப் படாமல் அடி பிண்ணிஎடுக்க ஆரம்பித்தார் டோனி. அப்படியே ஒரு அதிரடி ஆட்டக் காரராக கில் கிரிஸ்ட் பாணியில் உருவாக அணியில் நுழைந்து விடுகிறார்.
அடுத்ததாக அவர் கேப்டன் ஆகிய கதை இன்னும் சுவாரசியமானது. உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டேன் என்ற நிலையில் உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி திரும்பி வர எப்படியும் டி 20லும் தோற்று விடுவோம் என்றே எல்லோரும் நினைத்திருந்த நிலையில் கங்கூலி, டிராவிட், சச்சின் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறுகின்றனர். இளைஞர்களுக்கு வழி விடுவதாக கூறினார்கள் நாமும் அதை அப்படியே நம்பி விட்டோம். டி20ல் கேப்டனாக சச்சினின் ஆசிர்வாதம் இருந்ததாகவும் சொல்வார்கள்.
அவர் சில முடிவுகளை எடுத்தார். அதை பலராலும் யூகிக்க முடியாத நிலையில் அவர் எடுத்த பல முடிவுகளில் வெற்றியும் பெற்றார்.
அப்போது கிரிக்கெட்டின் கடவுளாக சச்சினை அவரது ரசிகர்கள் முன்னிறுத்தி வந்தனர். அவரைப் பற்றி பல ஸ்டேடஸ்கள் போட்டு லைக்குகளையும் பெற்று வந்தனர்.
அதே நேரத்தில் கிரிக்கெட்டில் கங்கூலி, டிராவிட், சேவக் போன்றவர்களும் இருந்தனர். அவர்களும் ரசிகர்கள் இருந்தனர். அவர்களில் பலரும் சச்சினின் சாதனைகளுக்கு தங்கள் தலைவனின் சாதனைகள் சளைத்தவை அல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். அவர்களுக்கு சச்சின் மேல் கொஞ்சம் கோபம், பிரமிப்பு கூட உண்டு. தங்கள் தலைவனின் சாதனைகளை சிறியதாக்கிய சச்சினை கொஞ்சம் வெறுத்தர்வர்கள் கூட உண்டு.
ஆனால் சச்சினை அவர்கள் ரசிகர் தூக்கி கொண்டாடிய நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக தங்கள் ஆளின் சாதனைகளை காட்டலாம் என்றால் அவர்கள் ஏறக்குறைய ஓய்வு பெற்றிருந்தனர். அந்த நேரத்தில்தான் டோனி வருகிறார். டோனியின் ஃபேஸ்பு க் ரசிகர்களைப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். பெரும்பாலும் அவர்கள் ஏதாவது ஒரு விஷ்யத்தில் சச்சினை மட்டம் தட்டுவதிலே கவனம் செலுத்தி இருப்பார்கள்.
இப்படியான டோனி ரசிகர்கள்தான் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். ஆபூர்வமாக உண்மையாக டோனி ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் ஃபேஸ் புக்கில் அடித்து ஆடும் பலரும் சச்சின் ரசிகர்களின் எதிர்ப்பாளர்களே.., சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும்.
எம்ஜியார் திரைப்படத்துறையை விட்டு விலகிய பின்னர் சிவாஜி படத்தைப் பார்ப்பதை குறைத்துக் கொண்ட சிவாஜி ரசிகர்கள்போல ரஜினி திரைப் படத்துறையை விட்டு ஒதுங்கிய பின்னர் கமல் படங்களைப் பார்ப்பதை குறைத்துக் கொண்ட கமல் ரசிகர்கள் போல் சச்சினின் ஓய்விற்குப் பின் டோனியின் ஃபேஸ் புக் ரசிகர்களின் அதகள ஆட்டம் குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது.
No comments:
Post a Comment