Wednesday, October 30, 2013

மப்பும் மந்தாரமும்.., கொப்பும் குலையுமாய்..,

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன், கூடுதலாய் சில ஆண்டுகளுக்கு முன் என்றும் கூட சொல்லலாம்.  தமிழ்நாட்டில் மது பற்றிய ஒரு எண்ணம், கசப்பாய், இனிப்பாய், புளிப்பாய் என்று கூட சொல்லலாம். நாம் பதின்ம வயதில் காலடி எடுத்து வைத்திருந்த கால கட்டம்.., 

சூப்பர் ஹீரோவாய் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் சூப்பர் ஹீரோ செயல் செய்பவர்களை சுற்றி, அவர்களது பிரதான அடிபொடிகளாய் நம்மை அடையாளப் படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

அப்போதெல்லாம் தெருவிக்கு ஓரிரு வீடுகளில் டி.வி. இருக்கும் ஓரிரு வீடுகளில் டிவிஎஸ் 50 இருக்கும். சில ஊர்களிலெல்லாம் தெருவே ஒன்றிரண்டுதான் இருக்கும்.  அப்படிப் பட்ட கால கட்டம். 

மலிவு விலை மதுக்கடைகள் அப்போது அங்காங்கே இருந்ததுண்டு. பாக்கெட், இப்போது ஆங்காங்கே விற்கும் தண்ணீர் பாக்கெட் வடிவில் இருக்கும். ரூ2 அல்லது 3 என்று நினைக்கிறேன். நான் வாங்கியதெல்லாம் கிடையாது. பிற்காலத்தில் எனக்கு கிடைத்த பொது அறிவுத் தகவல்கள் அவை.

அப்போதெல்லாம் ஊரில் சில சலம்பல் பார்டிகள் மட்டும் தண்ணி அடிப்பார்கள்.  அடித்துவிட்டு தெரு முக்கு வரை சலம்பல்கள் பறக்கும். ஊரின் நுனி வந்த உடன் அப்படியே பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார்கள். அப்படியே ஒரு ஓரமாய் நடந்துபோய் வீட்டில் அடங்கி விடுவார்கள். சில ஆட்கள் மட்டும் தண்ணி போட்டு விட்டு வந்து மனைவியை அடிப்பது உண்டு. அவர்களை எல்லாம்  தெருவில் இருப்பவர்கள் கண்டபடி திட்டுவார்கள், பெரும்பாலும் முதுகுக்குப் பின் தான்.

வெகுசிலர் போதையில் சண்டை போடுவது உண்டு. வெகு சிலர் என்றால் மொத்த மக்கள் தொகையில் வெகுசிலர்.  இன்று யோசித்துப் பார்த்தால் அவர்கள் போதை ஏற்றாவிட்டாலும்  சண்டைதான் போட்டிருப்பார்கள்.  

யோசித்துப்பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரிகிறது. அன்றைய தேதியில் மதுபோதையை நாடியவர்களை அவர்களது மக்கள், உறவினர்கள் பெரும்பாலும் வெறுத்துத்தான் இருக்கிறார்கள். மதுவை மட்டுமல்ல, மதுவின் நண்பர்களையும்தான்.


இன்றைய நிலையை யோசித்துப்பார்த்தால் மதுவால் ஏற்பட்ட படப்போகும் தீமைகள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை.  ஆனால் மது மற்றும் மதுவின் உறவினர்களை வெறுக்கிறார்களா என்று பார்த்தால் , அப்படியெல்லாம் வெறுப்பவர்களாகத் தெரியவில்லை. நேற்று போதை அதிகமாகிவிட்டது என்பதை தேநீரில் இனிப்பு அதிகம் என்பது போல சொல்லுகிறார்கள். திரைப்படங்களைப் பார்த்தாலே இது நன்றாக விளங்கும். மது மயக்கத்தில் பாடுவதுபோல ஒரு பாடல் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுகிறது.  புகை பிடிப்பவர் ஒரு ஓரமாய் இருந்தால்கூட எச்சரிக்கை ஸ்லைடு போட்டு தெளிவாக்கி விடுகிறார்கள். 

மதுவை எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால்

1.அரசியல்ரீதியாக நன்மைக்காக

2.சீர்திருத்தவாதியாக பெயர் எடுத்தவர்கள். இதிலும் சில புரட்சிவாதிகள் தன்னால் தண்ணி அடித்தால்தான் பேச எழுத முடியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.

3.இன்றுவரை மதுவிற்கு அடிமையாகாமல் இருந்து எங்கே தங்கள் வாரிசுகள், அதில் சிக்கிக் கொள்வார்களோ என்று என்ற பயத்தில் எதிர்ப்பவர்கள் என மிக குறுகிய சில் வட்டத்துக்குள் அடிக்கிவிட முடியும். 

தனது சக மாணவன் தண்ணி அடிப்பதால் அவனை வெறுக்கும் அல்லது அவனது சகஜமாக பழக மறுக்கும்  மாணவன், மாணவி இன்று உண்டா....,?  

மதுப் பழக்கம் உண்டு என்ற காரணத்திற்காக தனது காதலனை வெறுக்கும் காதலி, கணவனை வெறுக்கும் மனைவிகள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். வீட்டில் சிக்கன் வறுத்துக் கொடுக்கும் இல்லத்தரசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  எதிர்காலத்தில் இவர்களும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் காலம் வரலாம் என்றே தோன்றுகிறது.

குறுகிய காலத்தில் இதெல்லாம் நடந்து விடுமோ என்று தோன்றுகிறது. மதுவை வெறுக்கும் மனப் போக்கு குறைந்துகொண்டே வருகிறது என்பதாக உலகம் போய் கொண்டு இருக்கிறது.

இப்படி மப்பும் மந்தாரமாய் மக்கள் போய் கொண்டே இருந்தால் கொப்பும் குலையுமாக விபத்தில் மாட்டிக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகும். என்ன சொல்லி என்ன பிரயொசனம்?  மக்களிடையே மதுவிற்க்கான எதிர்ப்பை வளர்க்காத வரையில் மது ஒழிப்பு சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது .

6 comments:

  1. டாக்டருக்கு என் +1 பிளஸ் வோட்டு!
    மாதத்திற்கு ஒரு முறை இல்லை ஏதாவது விசேஷம் என்று தீர்த்தம் சாப்பிட்டாலும் நண்பிகள் எங்களை சொறி நாய்களை விட கேவலாமக பார்ப்பார்கள். பார்வையே பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் இருக்கும்.

    அன்றைக்கு குடி விஷயத்தில் நண்பிகளிடம் பொய் சொல்லாத மாணவன் இல்லை!
    இன்று!

    ReplyDelete
    Replies
    1. 90க்கு பிறகு பிறந்தவங்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லைங்க சார்..,

      Delete
  2. ///விபத்தில் மாட்டிக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகும்///
    மக்கள் தொகை குறையும்... வியாதி பீடித்தவர்கள், கைகால் இல்லாமல் அலைபவர்கள் அதிகமாவார்கள்...

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails