Monday, December 9, 2013

நீங்களும் ஆகலாம் அர்விந்த் கஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வாக்குகள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். ஊழலுக்கு எதிராக அவதாரம் எடுத்திருக்கும் கட்சியாக துடைப்பம் கொண்டு துடைக்கக் கூடிய பொருளாக ஊழலை கற்பனை செய்து கொண்டுள்ள மக்களுக்கு ஆம் ஆத்மி ஒரு அவதாரமாகவே தோன்றும். அவர்களிடம் ஊழலை கழுவி சுத்தம் செய்யக்கூடாதா, எரித்து சுத்தம் செய்யக்கூடாதா என்பதெல்ல இந்த இடுகையின் நோக்கம்,  ஆம் ஆத்மியின் வெற்றியில் நமக்கு தெரியும் செய்தி என்ன? என்பதுதான்.

அஸ்ஸாம் கனபரிசத் கட்சியின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்.  ஆனானப் பட்ட அஸ்ஸாம் கனபரிசத் கட்சியே இப்போது பத்தோடு பதினொன்ரு எண்ணும்போது மற்றவர்களைப் பற்றி பேச வேண்டியதே இல்லை.

கஜ்ரிவால் போல திட்டம் போட்டால் யாவருமே வெற்றியை நோக்கிப் போக முடியும்.  கஜ்ரிவால் நினைத்திருந்தால் அகில உலக தேசிய கட்சியை ஆரம்பித்திருக்க முடியும். ஆரம்பித்து ஐந்து மாநில தேர்தல்களில் ஒரு கலக்குக் கலக்கி ஒரு விஜய காந்த் ஆகவோ அல்லது ஒரு சிரன்சீவி ஆகவோ மாறி இருக்கலாம். ஆனால் அவர்கள் டெல்லியில் மட்டும் தனது வேட்டையைக் காட்டி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார். 

சமுதாயத்தை ஊழலற்றதாக மாற்ற நினைக்கும் மக்கள் நம் ஊரில் கூட மாநகராட்சி அளவில், நகராட்சி அளவில் கட்சி அல்லது கட்சி போன்ற அமைப்பை ஆரம்பிக்கலாம். உள்ளூரிலேயே ஆயிரக் கணக்கில் பிரச்சனைகள் இருக்கின்றன.  மாநகராட்சி போன்ற அமைப்புகள் நினைத்தால் அதிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் மிக்ச் சிறப்பான நிர்வாகத்தை தரமுடியும்.

முழுநேர அரசியலில் ஈடுபடும் அளவிற்கு வசதி இருப்பவர்கள் அவரவர் ஊர்களில் ஒன்று சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பியுங்களேன். இன்று ஒரு சில பிரதிநிதிகளின் வருமானத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் பாதி அளவுக்கு மக்களுக்கு செலவு செய்தாலே மக்கள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails