பிரம்மபுத்திரா ஆறு திபெத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி, சீனாவிற்குள் நுழைந்து இமயமலையின் ஓரமாகவே பயணம் செய்து அருணாச்சல் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம் பூடான் வழியாக வங்கதேசம் அடைந்து கங்கையுடன் கலந்து வங்கக் கடலை அடைகிறது.
வற்றாத ஜீவ நதிகளில் இதும் ஒன்று. இந்த ஆறு 3848 கி.மீ நீளமானது.கடும் மழை பொழிவினாலும், வெப்ப காலங்களில் இமயமலையில் உள்ள பனி உருகுவதாலும் எப்போதுமே வெள்ளப் பெருக்கில் இருக்கும் ஆறு இது. துணை ஆறுகள் தவிர்த்து பிரம்மபுத்ரா மட்டுமே விநாடிக்கு 700,000 கன அடி நீரைத் தருகிறது.
பிரம்ம புத்திரா இந்தியாவில் பாயும் பகுதியானது land of seven sisters என்று அழைக்கப்படக் கூடிய வட கிழக்குப் பகுதி. அங்கே பெய்யும் மழையிலேயே பிரம்மபுத்ரா ஓடிக்கொண்டேதான் இருக்கும். பிரம்மபுத்ரா ஆறினை முழுவதுமான அணைக்கட்டித் தடுக்கவே முடியாது. அவ்வளவு நீர் இருக்கும் ஆறு அது. காவேரி அணைகளிலேயே மழைக் காலங்களில் திறந்து விட்டு விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பிரம்மபுத்ராவில் அணை கட்டினாலும்கூட அது இந்தியாவுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. அதை அவர்கள் சொல்லவும் போவதில்லை. 1990களிலேயே இவ்வாறு ஒரு வதந்தி கிளம்பி அதை அவர்கள் மறுத்து இருக்கிறார்கள்.
2011ல் மஞ்சள் ஆறு (பிரம்மபுத்ராவை விட பெரிய ஆறு) அணை கட்டப் பட்டதால் புவியியல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு அதை சரி செய்ய சீன அரசு போராடி வருகிறது.
இந்த மாதிரி ஒரு சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து சீனா பிரம்மபுத்ரா ஆறை தடுத்து நிறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை பிடித்து வைத்திருந்தால் இந்திய அரசு சீனப் பொருள்களின் மீது தடை விதித்து இருக்கும் ஆனால் அப்படி இந்திய அரசு செய்ய வில்லை.
தவிரவும் சீனாப் பொருட்களுக்கு இந்தியாதான் பெரிய மார்க்கெட் என்னும்போது அவர்கள் இந்தியாவை பகைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு லாபம் எங்கோ அந்தப் பக்கம்தான் சேர்வார்கள்
அப்புறம் எப்படி சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வாட்ஸ் அப் செய்திகள் பரவுகின்றன? பதில் மிக சுலபமானது. சீன மொபைல்கள் இந்தியாவுக்கு மார்க்கெட் வந்தபின் மைக்ரோமாக்ஸ், லாவா போன்ற இந்திய கம்பெனிகள் அதை அப்படியே வாங்கி இந்த்யாவில் விற்பனை செய்வது போன்றே.
மலிவு விலை சீனப் பொருட்களை இங்கிருக்கும் முதலாளிகள் வாங்கி இந்தியப் பெயரில் விற்கப் போகிறார்கள். அதற்கான முதல்படியாகவே தோன்றுகிறது. அதாவது சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் முதலாளிகளுக்கு போகப் போகிறது.
முடிந்தவரை இந்தியத் தயாரிப்பில் உருவான பொருட்களையே வாங்குங்கள். சீனப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு எதுவும் சொல்லும்முன் எந்த பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.

No comments:
Post a Comment