Saturday, February 7, 2009

விஜய் - தமிழ்ப்படம் - கேட்காமலே சில சிந்தனைகள்

எனது இந்த இடுகையைப் படிக்கும்முன் முரளிக் கண்ணன் அவர்களின்

விஜய் நம்பர்- 1 ஆக முடியுமா? படித்துவிட்டு பிறகு வாருங்கள்.

விஜய் அவர்களின் லட்சியம் செயல்பாடு ஆகியவற்றை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஒரு உண்மையைத் தெளிவாக அறிய முடியும்.

அதற்கு முன் எம்ஜியாரின் கால கட்டங்களையும் ரஜினியின் கால கட்டங்களையும் கொஞ்சம் ஆராய்ந்தால் முரளிக்கண்ணன் சார் அவர்களின் ஒப்பீடு போல வேறுசில விஷயங்களையும் அறியலாம்.

எம்ஜியாரின் கால கட்டத்திலேயே எஸ். எஸ். ராஜேந்திரன் (தமிழ்நடிகர்களில் முதன்முதலாக ச.ம.உ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.). ஜெமினி, ஆகியோர் இருந்திருக்கிறார்கள். பின்னர் முத்துராமன், ஜெயசங்கர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சிவக்குமார் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் படங்களில் கூட ஆரம்ப கட்டங்களில் ஜெமினி , முத்துராமன் ஆகியோரின் இளமை போதாத கதாப்பாத்திரங்களுக்குதான் ரஜினி கமல் போடப் பட்டதாக பேசப் படுவதும் உண்டு.

எம்.ஜி.யாரையும் ரஜினியையும் ஒப்பீடு செய்தோமென்றால் எம்.ஜி.யாரின் காலத்தில் நடித்த நடித்த நடிகர்களையும் ரஜினி காலத்தில் நடித்த நடிகர்களையும் ஒப்பு நோக்குதலே சரியாக அமையும். ஜெய்சங்கரையோ, ரவிச்சந்திரனையோ, ஏ.வி.எம் ராஜனையோ அடுத்த நம்பர் 1 என்று அந்த காலகட்டத்தில் பேசியிருப்பார்களா? என்பது தெரியவில்லை. சிவக்குமாருக்கு கூட அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா தெரியவில்லை. (ஒருவேளை ராமன் பரசுராமன் ஓடியிருந்தால் பேசப் பட்டிருப்பாரோ என்னமோ).

விஜயகுமார், எம்.ஜி.ஆர் ரசிகராகவே கூட நடித்துப் பார்த்தால் ஒருகதாப் பாத்திரமாகக் கூட அவரை ஒருமையில் அழைக்கத்தயங்கியவர் அவர். ( இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்.ஜி.யாரோடு சண்டை போடும்போது பேசும் வசனம்தான்0

அதே போல இன்று நடிக்கும் நடிகர்களையும் எடுத்துக் கொண்டால் அந்த காலக் கட்டத்தில் இருப்பது போன்ற சூழலோடு பொருத்திப் பார்க்கமுடிகிறது. எல்லா நடிகர்களும் அடிதடி, சராசரி இளைஞர்களை கவரும்படியான கதைகளையும் படமாக்கி வருகிறார்கள். இது பழைய காலகட்டத்தில் நடித்த இரண்டாம் வரிசை நடிகர்களின்பாணிதான். எத்தனை நடிகர்கள் ரஜினி பாணியில் நடித்தாலும் ரஜினி ரசிகனாக வேஷம் போட்டாலும் அது ரஜினியின் இடத்தைப் பலப் படுத்துமேதவிர இவர்களுக்கு உதவாது.

விஜய்க்கு கூட தனது இடம் பற்றி மிகத்தெளிவான கருத்து இருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் வில்லு படத்தைப் பற்றிய பேச்சுகளில்கூட அது ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் மாதிரி ஒரு தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.


பழைய தமிழ்நடிகர்களில் ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது ஒருவர்தான். எத்தனை ரகசிய உளவாளி படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆரை யாரும் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்ல மாட்டார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் அவர் ஜெயசங்கர் ஒருவர்தான். எனவே விஜய் அடுத்த ஜெயசங்கராகவே கருதப் படுவார், கருதப் படுகிறார்.

எம்.ஜி.யார்ர்க்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதலிடம் பிடித்தவர். அதே காலகட்டத்தில் எம்.ஜி.யார் முண்ணணியில் இருந்தார்.அவர் ஜெய சங்கர்.

அதேபோல ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர். அவரது தலைமுறையில் அவரே முதலிடம்.   அவர் விஜய்.

எம்.ஜி.ஆர், ரஜினி வரிசைக்கு இன்னும் பத்து(20) ஆண்டுகள் கழித்து புதிதாக நடிக்க வருபரால் முயற்சி செய்ய முடியும். அதற்கும் திரைப் படக் கலையின் வடிவம்கூட மாறிப் போய்விடும் வாய்ப்பு கூட இருக்கிறது.
===========================================================

இது ஒரு மீள்பதிவு
http://tamilshots.mywebdunia.com/images/vijay.jpg


===========================================================

இன்றைய அவரது பாணி எம்.ஜி.ஆர் பாணி படத்தலைப்புகளிலும், ரஜினி பாணியில் ரசிகர் மன்றங்கள் நடத்துவதிலும் செல்கிறது. இந்த இடுகை வெளிவந்த காலத்திற்குப் பிறகு படத்திற்கு பெயர்வைக்கும் போக்கும் ரசிகர் மன்றங்களை நடத்திச் செல்லும் போக்கும் பெருமளவு மாறியிருக்கிறது என்றாலும் அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து ரசிக்கவே இந்த மீள் பதிவு.http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataV/vijayonline/images/vijaynewatmstillsn08.jpg

இந்த இடுகையைப் படித்துத்தான் விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டார் என்றெல்லாம் நான் கூறமாட்டேன் என்பதையும் இந்த இனிய த்ருணத்திலே வலையுலகத்தின் முன் வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதனையும் டிஸ்கியாக போட்டுக் கொள்ள இருக்கிறேன் என்பதையும் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்

http://gallery.techsatish.net/d/53592-3/Vijay+and+his+fans+observe+fast+over+Sri+Lankan+Tamils+issue+_3_.jpg

மீண்டும் மீள்பதிவு

33 comments:

  1. சிந்திக்க வைக்கிறீர்கள் :)

    ReplyDelete
  2. \\விஜய்க்கு கூட தனது இடம் பற்றி மிகத்தெளிவான கருத்து இருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் வில்லு படத்தைப் பற்றிய பேச்சுகளில்கூட அது ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் மாதிரி ஒரு தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
    பழைய தமிழ்நடிகர்களில் ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது ஒருவர்தான். எத்தனை ரகசிய உளவாளி படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆரை யாரும் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்ல மாட்டார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் அவர் ஜெயசங்கர் ஒருவர்தான். எனவே விஜய் அடுத்த ஜெயசங்கராகவே கருதப் படுவார், கருதப் படுகிறார்\\

    சுரேஷ் சார், இது வித்தியாசமான பார்வை.

    ReplyDelete
  3. //விஜய் அடுத்த ஜெயசங்கராகவே கருதப் படுவார், கருதப் படுகிறார்//

    :-))

    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?

    ReplyDelete
  4. என்ன சுரேஷ், இவ்வளவு சீரியஸ் மேட்டர 'மொக்கை'ன்னு வகைப் படுத்தியிருக்கீங்க?!?!?!

    இருந்தாலும் விஜய் ஜெய்சங்கர் மாதிரி வருவாருன்னு சொல்றீங்க இல்லையா???

    ஜெய் - விஜய். உம் சரியாத்தான் இருக்கு. ஓக்கே ஓக்கே..

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..


    புருனோ Bruno


    முரளிகண்ணன்


    சரவணகுமரன்

    இளைய பல்லவன் அவர்களே....

    ReplyDelete
  6. ஏற்கனவே வில்லு டல்லு............... இதுல இது வேறயா?.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்முடியல

    ReplyDelete
  7. தமிழ் சினிமா வின் நெ.1 கதாநாயகன் என்கிற அந்தஸ்து யாரால் நிணயிக்கப்படுகிறது என்பதே ஏனைய மொழியிலிருந்து தமிழ் சினிமாவை வித்யாசப்படுகிறது.
    1.வசூல் முக்கியம். ஆனால் வசூல் மட்டுமே நெ.1 என்பதை தீர்மானிக்காது.(எம் .ஜி.ஆர்,ரஜினி,கு வசூல் ஆகாத படங்களின் வரலாறு உள்ளது).
    2.சிறந்த நடிப்பாற்றல் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
    3.உலக சினிமா தரத்துடன் ஒரு துளியும் ஒப்புமை செய்ய யியலாத படங்களைத் தரவேண்டும்.
    4.10 வயதுக்குட்பட்ட‌ குழந்தைகளின் ஆதர்ச ஹீரோ வாக இருக்கவேண்டும்.
    5.சினிமாவுக்கு வெளியே மேக்கப் போடாதவர்களாக இருக்க வேண்டும்.
    6.சம காலத்தில் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்கள் வெளிவந்து திரையுலகத்தை கலக்கினாலும் கொஞசமும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் ஃபார்முலா ப்டங்களையே தர வேண்டும்.
    7.க‌டைசியாக..... எந்த‌ப்ப‌ட‌ம் ரிலீஸ் ஆனாலும் தியேட்ட‌ர் அல்லோக‌ல‌ப்ப‌ட‌ வேண்டும்.
    த‌ற்போது இது விஜ‌ய் க்கு இருப்ப‌தும்,ம‌றைந்த‌ ஜெய்ச‌ங்க‌ர் இதில் எதிலும் க‌ட்டுப்ப‌டாத‌வ‌ர் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகிறேன்.

    ReplyDelete
  8. விஜய்-ஜெய் குட் காம்பினேஷன்

    ReplyDelete
  9. இதை நீங்கள் மொக்கை என வரிசைப்படுத்தியிருப்பதால் அவ்வளவி சீரியஸகா பதில் சொல்ல முடியவில்லை.

    தமிழ் திரையுலகில் முதலிடம் முழுக்க முழுக்க வணீக ரீதியானது. அதை மக்களை விட வினியோகஸ்தர்கலே சரியாக கணிப்பர். அவர்கள் விஜயைத்தான் செல்லப்பிள்லை என்கிறார்கள். உதாரணம் படுதோல்வி என பதிவுலகம் சொன்ன குருவி கூட அவர்களுக்கு லாபம்தானம். கொண்டாட்டங்களை பற்றி சொல்லியிருக்கிங்க. விஜய் படம் ரிலீசாகும் தியேட்டருக்கு போகும் வாய்ப்பில்லை என்றல் சில வீடியோக்கள் தருகிறேன் பாருங்கள். ஜெய்சங்கரோடு விஜய்காந்தையும் அதன் பின் இபோது மூனு நாள் ஒப்பனிங்க் மட்டுமே காட்டும் அஜித்தையும் ஒப்பிடலாம். ரஜினி நடிப்பதை நிறுத்திய பின்னர்தான் முதலிடம் வந்தார். கமல் நடிக்க மட்டுமே செய்வேன் என்ற பிந்தான் போட்டொயில் 2ம் இடத்திற்கு வந்தார்.

    ReplyDelete
  10. எம்.ஜி.ஆர் காலத்தில் லுச்சாவையெல்லாம் சொன்ன நீங்கள் சிவாஜியை ஏன் கூறவில்லை?

    வெரி சிம்பிள், பார்க்க சுமார், நடிப்பு சுத்தம் இவன் எப்படி நம்பர் ஒன் என்ற எரிச்சல். வேறு ஒன்றுமில்லை. னாம் போடற பதிவு மாதிரிதான் விஜய் படங்கள். மொக்கையோ தக்கயோ மக்களை எண்டெர்டெய்ன் பண்ணுது. எத்தனை பேர் நல்ல ப்திவு மட்டும்தான் போடுவேனு இருக்காங்க? ரீச்சுக்ககவும், இருப்பை தக்க வைத்துக் கொள்லவும் ஏதாச்சும் ஒன்னு போடறோமே? அதுதான் அவரும் செய்கிறார். அவரை இரண்டாம் இடம் சொல்பவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். ஒரேடியாக ஜெய்சங்கர் என்ற சொன்ன உங்களை பார்த்து.. ரைட் விடுங்க

    ReplyDelete
  11. @கார்க்கி
    இன்னைக்கு ரொம்ப தான் கோவமா இருக்கீங்க போல. கூல்...தல

    ReplyDelete
  12. கார்க்கிய ஏம்பா இப்படி டென்சன் ஆக்குறீங்க... இப்பதான் தாமிரா பதிவுல டென்சன் ஆனார்...... உடு சகா பாத்துக்கலாம்

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி..


    அத்திரி

    சே.வேங்கடசுப்ரமணியன்.

    Bleachingpowder


    கார்க்கி அவர்களே...

    ReplyDelete
  14. // கார்க்கி கூறியது...

    இதை நீங்கள் மொக்கை என வரிசைப்படுத்தியிருப்பதால் அவ்வளவி சீரியஸகா பதில் சொல்ல முடியவில்லை.//


    மொக்கை போடுவதுதான் பயங்கர சீரியஸனான வேலைன்னு பேசிக்கறாங்க பாஸ்..

    ReplyDelete
  15. //சே.வேங்கடசுப்ரமணியன். கூறியது..//


    கருத்து எண் 1. ஜெய்க்கு உண்டு.

    க.எ.2. ஜெய்க்கு உண்டு.

    க.எ.3. ஜெய்க்கு உண்டு.

    க.எ.5. ஜெய்தான் அதில் சிறந்தவர்.
    ( மேக்கப் போடுபவரால்தான் முதலிடம் வரமுடியும். என்று நீங்கள் சொல்ல நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    க.எ.6 ஜெய் கூட அப்படித்தான் சார்.

    க.எ.7. ஜெய்க்கு வெள்ளிக்கிழமை ஹீரோ என்று பட்டப்பெயர்கூட உண்டு சொல்லிக் கொள்கிறார்கள். வரவேற்பு இல்லாமலா அத்தனை படங்களில் நடித்திருப்பார்.

    க.எ.4... ஜெய் காலத்தில் படம்பார்த்த யாராவது உதவிக்கு வந்தால் பரவாயில்லை. அப்படி குழந்தை ரசிகர்கள் இல்லவிட்டால் அதனை ஒரு வித்தியாசமாகக் கருத்தில் கொள்ளலாம்.

    ReplyDelete
  16. //கார்க்கி சொன்னது…

    எம்.ஜி.ஆர் காலத்தில் லுச்சாவையெல்லாம் சொன்ன நீங்கள் சிவாஜியை ஏன் கூறவில்லை? //


    நம்பர் 1 என்று யாரை வேண்டுமானும் சொல்லிக் கொள்ளலாம். அதற்காக சிவாஜி, கமல் போன்றோரை நம்பர் 2 என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.

    ReplyDelete
  17. //வெரி சிம்பிள், பார்க்க சுமார், நடிப்பு சுத்தம் இவன் எப்படி நம்பர் ஒன் என்ற எரிச்சல். வேறு ஒன்றுமில்லை.//



    இது விதண்டாவாதாம். ரஜினியை மீறி விஜயை தேவையில்லாமல் தலைக்கு மேல் தூக்கி வைத்திருந்தால் ............


    // னாம் போடற பதிவு மாதிரிதான் விஜய் படங்கள்.//

    இப்படி சொல்லுங்கள். சிறப்பாக இருக்கிறது. 90க்குபின் வந்தவர்களில் அற்புதமாக மக்களை மகிழ்விப்பவர் அவர்தான். அவரது துவக்க ஐந்து ஆண்டு படப் பாடல்களும் சமீபத்திய தெலுங்கு ரீமேக்( டப்பிங் என்று கூட சொல்லலாம்) படப் பாடல்களும் அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன்.

    ReplyDelete
  18. //புருனோ Bruno கூறியது...
    சிந்திக்க வைக்கிறீர்கள் :)
    //

    ரிப்பீட்ட்ட்டு

    ReplyDelete
  19. விஜய் பாடங்களில் ரசிக்கக் கூடியவையும் அவருக்கு சாதமாகவும் இருப்பவை.
    பாடல்கள்.
    அவரின் நடனத்திறமை.
    அவரின் நகைச்சுவை நடிப்பு .எல்லாக் கதாநாயகர்களுக்கும் இந்த இயல்பான நகைச்சுவை வராது. இந்த விஷயத்தில் அவர் ரஜனி மாதிரி.
    கதாநாயகிகளுடன் ஆபாசமாய் நெருக்கம் காட்டாமல் பாடல் காட்சிகளில் நடிப்பது .இந்த விஷயத்திலும் கொஞ்சம் ரஜனி மாதிரித்தான்.இதனால் எல்லா வயதினையிரையும் சின்னப் பிள்ளைகளையும் ரசிகர்கள் ஆக்கி உள்ளார்.
    அவருடைய குறைபாடுகள்.
    ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள்.
    ஒரே மாதிரியான கதைகள்.
    நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.அவருக்கு நடிப்புத் திறைமை இருக்கக் கூடும். ஆனால் இன்று வரை அதைக் காட்டக் கூடிய ஒரு கதா பாத்திரத்தில் நடிக்கவில்லை.இந்த விஷயத்தில் ரஜனியிடம் இருந்து வேறு படுகிறார். ஆரம்ப காலத்தில் ரஜனி தனது நடிப்புத் திறைமையைக் காட்டக் கூடிய மாதிரி நடித்துள்ளார். உதாரணம்.முள்ளும் மலரும்,ஆறில் இருந்து அறுபது வரை.
    விஜய் கதை விஷயத்தில் தலை இட்டு ஒரே மாதிரியான படங்களையே தந்து கொண்டிருக்கிறார்.இப்படியே போனால் தனது செல்வாக்கை இழக்கக் கூடும்.

    சமீப காலமாக தமிழ் நாட்டு ரசிர்களின் ரசனை மாறி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.நல்ல கதை அமைப்பும் சிறந்த இயக்கமும் உள்ள படங்கள் குறைந்த செலவில் எடுத்த படங்கள் என்றாலும் சிறிய நடிகர்களோ அல்லது அறிமுக நடிகர்களோ நடித்திருந்தாலும் கூட மக்களால் வரவேற்கப் படுகிறது.
    அதே சமயம் பெரிய செலவில் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் சரியான கதை இல்லாமல் ஒரே பாணியில் எடுத்ததால் தோல்வி அடைந்துள்ளன.
    இனிமேல் விஜய் போன்றவர்கள் கதையிலும் பாணியிலும் கவனம் எடுக்கவிட்டால் மாறிவரும் ரசிப்புத் தன்மை காரணமாக தமது மார்கெட்டை இழக்கக் கூடும்.

    ReplyDelete
  20. உண்மையில் வித்தியாசமான சிந்தனை தான்!!

    ReplyDelete
  21. அட என்ன சுரேஷ் இது? நீங்க "அஜித்" ரசிகராக்கும்னு நினைச்சிட போறாங்க ? நீங்க அஜித் ரசிகரா? விஜயை இந்த அளவுக்கு விமர்சனம் பண்ணிட்டீங்க.ஆனாலும் நல்ல விமர்சனம் தான்.

    ReplyDelete
  22. வாங்க sen,

    பல சிறப்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  23. வாங்க இசக்கிமுத்து, லோசன், திருமதி டவுட் அவர்களே..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. //மிஸஸ்.டவுட் சொன்னது…

    அட என்ன சுரேஷ் இது? நீங்க "அஜித்" ரசிகராக்கும்னு நினைச்சிட போறாங்க ? நீங்க அஜித் ரசிகரா? விஜயை இந்த அளவுக்கு விமர்சனம் பண்ணிட்டீங்க.//


    வாங்க மேடம், பதிவுலகமே விஜய் யைப் போட்டு திட்டி முழக்கும் போது விஜய்க்கு ஆதரவாக முதன் முதலில் பதிவிட்டவன் நாந்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் வெந்த புண்ணில் வேல் பாச்சும் கொடூர பதிவர்கள் படித்துவிட்டு பின்னர் சொல்லுங்கள்

    ReplyDelete
  25. விஜய் தன் இமேஜ் ஐ காப்பாத்தனுன்னா ,

    நல்ல கதையில் நடித்தாருன்னா ஒகே.

    இப்படி லொப்பத்தனமா நடித்தா கனவை கலைச்சிடலாம்....

    ReplyDelete
  26. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    விஜய் தன் இமேஜ் ஐ காப்பாத்தனுன்னா ,

    நல்ல கதையில் நடித்தாருன்னா ஒகே.

    இப்படி லொப்பத்தனமா நடித்தா கனவை கலைச்சிடலாம்....
    //


    நன்றி தல

    ReplyDelete
  27. நீங்கள் சொல்ல வருவது என்னவென புரியவில்லை. ரஜினிக்கு மேல் யாரையும் வைக்க கூடாதென சொல்கின்றீர்கள் இது எந்த விதத்தில் நியாயம். சினிமாவில் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கை விஜய் இன்னும் மிஞ்சவில்லை என்றாலும் விஜய் ரசிகனுக்கு அவர் பெரிது தானே. எப்படி எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு ரஜினியை தூக்கிப்பிடிக்கின்றார்களோ அதே போல.....ஜெயசங்கருடன் ஒப்புடுவதேல்லாம் முட்டாள் தனம்.

    ReplyDelete
  28. இப்படி சொல்லுங்கள். சிறப்பாக இருக்கிறது. 90க்குபின் வந்தவர்களில் அற்புதமாக மக்களை மகிழ்விப்பவர் அவர்தான். அவரது துவக்க ஐந்து ஆண்டு படப் பாடல்களும் சமீபத்திய தெலுங்கு ரீமேக்( டப்பிங் என்று கூட சொல்லலாம்) படப் பாடல்களும் அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றன்.?////
    \/////


    ரசினி மட்டும் என்ன செய்தார்??
    அவரும் பல மொழிபடங்களை டப் செய்துள்ளார்
    அல்லது சொல்லாமல் கதையை திருடி செய்யப்பட்டுள்ளது

    அவர் நடித்து பெரிய வெற்றி பெற்ற பல படங்கள் வேறு இந்திய மொழிகளில் வெற்றி பற்றவையின் தழுவல்களே

    ReplyDelete
  29. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails