அந்தப் பாத்திரத்தை மட்டும் பாருங்கள். ஒரு ஒப்புக்கு வரும் பத்தோடு பதினொன்றான பாத்திரம். பாட்டை வாங்குகிறார். சபையில் பாடி திரும்பிவருகிறார். வந்து நாயகனிடம் தருகிறார். அப்புறம் கதை அதன்போக்கில் செல்கிறது. இதில் ஒரு நகைச்சுவையாளனால் என்ன செய்து விட முடியும்? ஆனால் சாதித்திருக்கிறாரே....
அந்த பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய சுவைதான் எத்தனை? அந்த பாத்திரத்தைப் பார்த்து நீங்கள் சிரித்திருந்தால் உங்களுக்கு இரும்பு மனம் என்றுதான் சொல்லவேண்டும்.
முதல் காட்சியில் பரிசுத்தொகையைக் கேட்டு ஏற்படும் பிரமிப்பு... அந்த பிரமிப்பே அடுத்த காட்சியில் அவலமாக மாறும் நிலை. ஒரு ஏழையின் புலம்பலாக மாறும். ஒட்டுமொத்த ஏழ்மையின் குரலாக மாறி ஒலிக்க வைத்திருப்பார். அடுத்த காட்சியில் மெத்த படித்த மேதாவியுடன் போட்டியிடும் சாதாரணனாக அனைவரின் பரிதாபத்தையும் பெறுவார்.
சரியோ.. தவறோ.. அந்தப் பாத்திரம் பரிசினைப் பெற வேண்டும் என்ற பரிதவிப்பினை அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருப்பார்.
நான் பார்க்கறதுக்கு சாதாரணமாத்தான் இருப்பேன். ஆனால் என் புலமையைப் பத்தி உனக்குத்தெரியாது..
எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...
கொஞ்சம் வசனநடையில் எழுதறேன். இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கறாங்க.....
எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள்..
அங்க ஒருத்தன் இருக்கான். அவன் தான் உன்பாட்டை குற்றம் சொன்னான்.
பேசறதெல்லாம் பேசு. எழுதுபோது மட்டும் கோட்டை விட்டுறு.
இந்த வசனங்களையெல்லாம் வேறொருவர் எழுதி இருந்தாலும் அதை பேசும் தொனியில் ஆயிரம் அர்த்தங்களை தந்தவர். நாகேஷ்.
வசனங்களை விடுங்கள்.
கோவிலில் நுழைந்த உடன் பாடல் எழுதுவதறாக அவர் துடிக்கும் துடிப்பு.
தமிழ்சங்கத்தில் நுழைந்த உடன் மன்னன் யாரென தெரியாமல் அனைவருக்கும் வணக்கம் சொல்லும் பாங்கு.
மொழியில்லாமல் அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்த பிறவிக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
தமிழ்சங்கத்தில் நுழைந்த உடன் மன்னன் யாரென தெரியாமல் அனைவருக்கும் வணக்கம் சொல்லும் பாங்கு.
ReplyDeleteமொழியில்லாமல் அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்த பிறவிக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
நானும் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்..
நான் பார்க்கறதுக்கு சாதாரணமாத்தான் இருப்பேன். ஆனால் என் புலமையைப் பத்தி உனக்குத்தெரியாது..//
ReplyDeleteஅவர் புலமை உலகம் அறிந்தது>>>
அபிராமி அந்தாதியில் வரும் ஒரு வரி
ReplyDelete"தடைகள் வாராத கொடையும்" அபிராமை பட்டருக்கும் தருமியின் நிலை இருந்திருக்கும் போல.அபிராமி அந்தாதி கேட்கும் போதெல்லாம் நாகேஷ் என்ற மாபெரும் கலைஞன் நினைவுக்கு வருவார்.
01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!
SUREஷ் எனக்குத் தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் நிறையப் பிடிக்கும்.
ReplyDelete//மொழியில்லாமல் அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்த பிறவிக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
ReplyDeleteநானும் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்..//
பிரார்த்தனை செய்யத் தகுதியான நபர் தான் நாகேஷ் என்பதில் எந்த எதிர் கருத்தும் இருக்க முடியாது.நாகேஷின் ஆன்மா சாந்தி அடைய நாம் எல்லோருமே பிரார்த்திப்போம் நண்பர்களே!
இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்
ReplyDeleteஅவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார்க்கு இரங்கல்கள்
நாகேஷ் என்ற ஒரு சகாப்தம்
ReplyDeleteஎன்றும் நிற்கும் நம் நினைவில்
நாகேஷ் இழப்பு, தமிழ்சினிமாவுக்கு ஈடு இணையில்லாதது :(
ReplyDeleteHe made us only to laugh until his death......May his soul rest in Humour.!
ReplyDeleteநான் இன்னும் திருவிளையாடல் படம் பாக்கலையே.....
ReplyDeleteபிறவிக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
ReplyDelete