Saturday, November 7, 2009

மின்னல் வேகத்தில் வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புருவை மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல் போல தோன்றும்.

Classic Template க்குள் சென்றால் பதினாறு வார்ப்புரு மட்டுமே இருக்கும். அதை நாம் விரும்பும்போது மாற்றிக் கொண்டே இருக்கலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது எந்த Gadgetம் தவறாது. அதே நேரத்தில் இது பெரும்பாலானோர் வைத்திருப்பது போன்றே இருக்கும். அதில் சில வகை வார்ப்புருக்களை எப்படி மாற்றினாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சில அடிப்படை வார்ப்புருக்களை அமைத்துக் கொண்டால் வண்ணங்களை மாற்ற மாற்ற புதிய வார்ப்புரு போலவே இருக்கும். இதில் ஹெட்டர் படத்தினையும் அவ்வப்போது மாற்ற தினம் ஒரு வார்ப்புரு அமைவது போன்ற ஒரு தோற்றத்தினைக் கொடுக்கும்.

வெளியாட்கள் கொடுக்கும் வார்ப்புருக்களை உபயோகப் படுத்த விரும்பினால் அதில் 7 அல்லது 8 காலம்கள் இருக்கக்கூடிய ஒன்றை உபயோகப் படுத்தலாம். அதிலும் மேற்சொன்ன வழியைப் பயன்படுத்தி சில காலம்களை உபயோகப் படுத்தாமல் விடுவதன் மூலமும், ஹெட்டர் படத்தினை மாற்றுவதன் மூலமும் புத்தம் புதிய வார்ப்புருவாக மாற்றம் செய்து கொண்டே இருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் ஒரு வார்ப்புருவிலிருந்து மற்றொரு வார்ப்புருவுக்கு மாற்ற விரும்பினால் நாம் சந்திக்க்கும் பிரச்சனை முக்கிய Gadget கள் இழக்க நேரிடுதல். அதை இழக்காமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது.

பிளாக்கர் வழங்கும Gadget களை மனதில் வைத்துக் கொள்ளவும். வார்ப்புரு மாற்றியவுடன் அவைகளை add செய்து கொள்ளலாம். வெறும் லின்க் ஆக மட்டும் இருக்கும் Gadgetகளை எல்லாம் ஒரே Gadget ல் போட்டுவைத்துக் கொள்ளவும். அதைத் தனியே ஏதாவது ஒருவடிவத்தில் சேமித்துக் கொள்ளவும். புதிய வார்ப்புரு வந்தவுடன் ஒரே ஒரு பெட்டியைச் சேர்த்து அவைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஹிட் கவுண்ட்டர் முதலான சில விஷயங்களை மட்டும் தனியே வைத்து தனித் தனி பெட்டிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை ரிஸ்க் எடுத்தும் எளிமையாகச் செய்யலாம். தனியாக சேமிப்பதற்கு பதிலா page elements பகுதிக்கு வந்து ஒவ்வொரு Elementஐயும் தனியாக எடிட் செய்ய திறந்து வைத்துக்கொள்ளலாம்.   பின்னர்   இன்னொரு   உலாவியைத் திறந்து புதிய வார்ப்புருவை வடிவமைத்துக்கொண்டு அதில் இதை காப்பி பேஸ்ட் முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முறைகளில் சில நிமிடங்களில் பழைய வார்ப்புருவை மிக எளிமையாக புதிய வடிவத்திற்கு மாற்றிவிடலாம்.

அடிப்படை Minima template ஐ உபயோகப் படுத்திக் கொண்டு பிண்ணனியை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தால் வார்ப்புருவே புதிதாக மாறியது போல இருக்கும். மற்ற வார்ப்புருக்களிலும் இவ்வாறு செய்யலாம். அவைகளில் மாற்றினால் பிண்ணனி மாறியது மட்டுமே தெரியும்.

அந்த வசதியை நிறைய தளங்கள் தருகின்றன. 

http://bloggerblogbackgrounds.blogspot.com/ 

தளமும் அதில் ஒன்று. இவர்கள் தரும் பிண்ணனியை ஒரு  Gadget ல் போட்டு சேர்த்துக் கொள்ளமுடியும். அதை மட்டும் மாற்றினாலே வார்ப்புறு புதிது புதிதாக மாறிவிடும்.

முயற்சி செய்து பாருங்களேன். அவ்வப்போது ஹெட்டர் படத்தையும் மாற்றினால் புதுப்புது வார்ப்பு வருவது போல தோற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.

====================================================================

இது இல்லாமல் பாரம்பரிய முறையிலும் ஒவ்வொரு 

Elementஐயும்   Gadgetஐயும் அதற்குரிய பகுதியில் போய்  ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக் கொள்ளலாம். அல்லது edit templateல் போய் குறிப்பிட்ட பகுதியை copy எடுத்து வைத்துக் கொண்டு பின்னர்  paste செய்தும் புதிய வார்ப்புருவை முழுமை படுத்திக் கொள்ளமுடியும்

====================================================================

புதிய  template ல் பதிவு வரும்போது  புதிய திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வினை வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம்.  தொடர்ச்சியாக படிக்க வருபவர்களுக்கு ஒரு பிரமிப்பினையும் கொடுக்க இயலும்.

=====================================================================

பின்குறிப்பு:- எனக்கும் கணிணிக்கும் உள்ள உறவு சில மாத பந்தமே.., இந்த இடுகையில் ஏதாவது தவறோ அபத்தமோ இருப்பின் சொல்லுங்கள். சரி செய்து கொள்கிறேன். இந்த முறைகளில்தான் நான் வார்ப்புருக்களில் வித்தியாசம் காட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனால் ஆநேகமாக அனுபவ ரீதியில் சரி என்றுதான் நினைக்கிறேன்


18 comments:

  1. நன்றிங்க மருத்துவரே!

    ReplyDelete
  2. ஓகோ. அப்ப இதுதான் அடிக்கடி சட்டையை மாற்றுவது போல வார்ப்புருவை மாற்றிக்கொண்டிருக்கிறீர்களா? வார்ப்புருவை மாற்றுவது சற்று ரிஸ்கான வேலை. நான் மாற்றும்போது எல்லா கேட்ஜட்களையும் காப்பி செய்துவிட்டு புதிய வார்ப்புருவில் பேஸ்ட் செய்துவிடுவேன். இல்லையேல் எல்லாம் போய்விடும். முக்கியமாக ஹீட் கெளண்டர் போனால் அவ்வளவதான். நன்றி சார்...

    சிலமாதங்களிலேயே மிக புலமை அடைந்துவிட்டீர்களே...

    ReplyDelete
  3. // பழமைபேசி said...

    நன்றிங்க மருத்துவரே!//

    நன்றி தல

    ReplyDelete
  4. //நாஞ்சில் பிரதாப் said..

    முக்கியமாக ஹீட் கெளண்டர் போனால் அவ்வளவதான். //

    அப்படி யொறும் இல்லை தல., ஹி கவுண்ட்டர் தளத்தில் நமது கணக்கில் நுழைந்து மீண்டும் நமது பழைய codeஐ பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் வந்த ஹிட்டுகள் கணக்கில் சேர்ந்திருக்காது. வார்ப்புரு மாறிய உடனே அதைச் செய்துவிட்டால் பழைய ஹிட் கவுண்ட்டர் நமது மிகச்சிறிய சேதாரத்தோடு கிடைத்துவிடும்

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு சுரேஷ் நன்றி.

    ReplyDelete
  6. :) நல்ல பதிவு டாக்டர்!

    ReplyDelete
  7. @ஆ.ஞானசேகரன்
    @சிங்கக்குட்டி
    @சென்ஷி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  8. //இதை ரிஸ்க் எடுத்தும் எளிமையாகச் செய்யலாம். தனியாக சேமிப்பதற்கு பதிலா page elements பகுதிக்கு வந்து ஒவ்வொரு Elementஐயும் தனியாக எடிட் செய்ய திறந்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் இன்னொரு உலாவியைத் திறந்து புதிய வார்ப்புருவை வடிவமைத்துக்கொண்டு அதில் இதை காப்பி பேஸ்ட் முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.//

    இதை விட எளிதான வழி இருக்கிறது

    வார்ப்புருவை எடிட் செய்து அந்த html நிரலை பாருங்கள் (Edit HTML - > widgets templates expand செய்யாமல்)

    அதில் sidebar இருக்கும்

    b:section class='sidebar' id='sidebar-top' preferred='yes'


    b:widget id='HTML4' locked='false' title='' type='HTML'/

    b:widget id='HTML5' locked='false' title='' type='HTML'/

    /b:section

    என்பது போலிருக்கிறதல்லவா

    இதில் b:section.... மற்றும் /b:section இடையில் இருப்பதை காப்பி செய்து உங்களது புது வார்ப்புருவில் இதே போன்ற இடங்களில் ஒட்டினால் போதும்

    மீண்டும் மீண்டும் ஒவ்வொரு element ஆக நகலெடுக்க வேண்டாம்

    இதை விட எளிதான வழி என்னவென்றால்

    மாற்றுமுன்னர் அனைத்து elementகளையும் ஒரே பக்க பட்டையில் (side bar) வைத்துக்கொள்ளுங்கள்

    அதன் பிறகு புது வார்ப்புரு மாற்றிய பின்னர் அதை வேண்டும் இடத்திற்கு மாற்றி விடலாம்

    ReplyDelete
  9. சகலகலா டாக்டர் வாழ்க

    ReplyDelete
  10. //புருனோ Bruno said...//

    இடுகையை மேம்படுத்தியமைக்கு நன்றி தல..,

    ReplyDelete
  11. @அக்பர்
    @அன்புடன் அருணா
    @நசரேயன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  12. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  13. // TamilNenjam said...

    குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்//

    நன்றி தலைவரே

    தங்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. // T.V.Radhakrishnan said...

    நல்ல பகிர்வு//

    நன்றி தலைவரே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails