சமச்சீர் கல்வி பற்றியும் கூட நாம் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டோம். சில தளங்களில் கொடுக்கப் ப்ட்டிருந்த தகவல்கள் பற்றிப் பார்த்தால் சி.பி.எஸ்.சியில் 7ம் வகுப்பில் படிப்பதைத்தான் ஸ்டேட் போர்டு மாணவன் 12ம் வகுப்பில் படிக்கிறானாம். எனவே சமச்சீர் கல்வி முறையால் மாணவர்களின் தரம் குறைந்து விடுமாம். எனவே இது போன்ற தரம் குறையாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தளங்களில் மட்டுமல்லாமல் சில கல்வியாளர்கள் கூட அவ்வாறு சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள் . எனக்கு வெகு காலத்திற்கு முன்பே இது பற்றியெல்லாம் சில சந்தேகங்கள் இருந்தன.
அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் தரம் குறைந்ததாகவும், மெட்ரிக் பாடத்திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் இருப்பதாகவும் சமச்சீர் முறையில் தரம் குறைப்பதால் என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------
இந்த தரம் வாய்ந்த கல்விச் சாலைகளில் 7 வகுப்பு மாணவன் அரசுப் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவனுக்குச் சமம் என்றால் அவன் நேரடியாக பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது ஏதாவது கல்லூரி யில் பட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் படுவானா? அல்லது வெட்டியாக இன்னும் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டுமா? தேவையே இல்லை என்னும் போது ஐந்து ஆண்டு படிக்கும் படிப்பு தரம் உயர்ந்ததாய் இருந்தால் அதனால் என்ன பயன்?
அல்லது தேவையே இல்லாத விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் கல்வி முறை எப்படி தரம் உயர்ந்ததாய் கருதப் படும்?
தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்தால் இந்திய ஆட்சிப் பணிக்கு நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப் படுவானா? இல்லையே அவனுக்கும் அந்த அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவன் படிக்கும் வரை காத்துதானே இருக்க வேண்டியிருக்கிறது? பிறகெதற்கு வெட்டி வேலை?
கவுண்டமனி பாஷையில் சொன்னால் இந்த மெட்ரிக் கல்வியால் ஒரே ஒரு நன்மைதான் இருக்கிறது, 10 வது வரை அங்கு படித்து 11,12க்கு மீண்டும் ஸ்டேட் போர்டுக்கு வந்து மீண்டும் படித்து ஆரம்பத்திலிருந்தே ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆப்பு வைப்பது. அது இந்த சமச் சீர் கல்வியால் தவிர்க்கப் படுகிறது அல்லவா?
============================================================
எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பதைவிட அதை எந்த அளவு உபயோகப் படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். மிக ஆரம்பக் கல்வியில் எளிய கூட்டல் கழித்தல், மொழிப்பாடங்களை பிழையின்றி பேச எழுத கற்றுக்கொண்டாலே போதும். சில வருடங்கள் கழித்து அடிப்படை அறிவியல் மற்றும் நாம் வாழும் இடம் பற்றிய வரலாறு கற்றுக் கொண்டால் போதும். இன்னும் சில நாட்களில் வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களைக் கற்றுக் கொடுக்கலாம். ( இது இப்போது கூட மிக உயர்ந்த தரம் வாய்ந்த கல்வித்திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை) . பின்னர் அறிவியல் கணிதங்களில் சற்று வலிமையைக்கூட்டலாம்.
தரம், தரம் என்று இனிமேலாவது முழங்கிக் கொண்டிராமல் உண்மையைப் புரிந்து கொண்டு குழ்ந்தைகளை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்.
=======================================================
சில ஆட்கள் கல்விக் கட்டணத்தை பள்ளிகளில் குறைவாக நிர்ணயித்து உள்ளதால் இனிமேல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்விட்டீஸ் கற்றுக் கொடுத்தல் குறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள். மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நல்ல விளையாட்டுகளை ஒழுங்கான முறையில் விளையாடக் கற்றுக் கொடுத்தல், மன ஆரோக்கியத்துடன் இயல், இசை, நாடகம், எல்லா மொழிகளிலும் கற்றுக் கொடுத்தல் நல்ல நகைச்சுவை உணர்வைக் கற்றுக் கொடுத்தல். நான் பயின்ற காலத்தில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும், நுண்கலைப் போட்டிகளிலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களே முக்கால்வாசிப் பேர்களுக்கு மேலே இருந்தார்கள். மருத்துவக் கல்லூரியிலும் அப்படித்தான். எங்களோடு போட்டி போட்ட க்லை, பொறியியல் கல்லூரிகளிலும் அப்படியே நிலவியது , பின்னர் என்னதான் அந்த விலையுயர்ந்த பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள்.
---------------------------------------------------------------------
நிறையக் கற்றுக் கொண்டு அறிவு புதையல்களாக மாறுவதைவிட, குறைவாகக் கற்றாலும், கற்றதை முழுவதும் உயயோகப் படுத்தும் வகையில் கற்று சாதித்து வாழும் வாழ்வே சிறந்தது. அதற்கு எந்தக் கல்வி முறை சிறந்தது என்று கூறுங்களேன்
-------------------------------------------------------------------------
சம்ச்சீர் கல்வி மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே தேவையான ஒன்று.
==================================================
சீர் மேவு குரு பாதம்
சிந்தையோடு வாக்கினும்
சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே
சரி
சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்
வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே
சீரெடுத்து பாடி வாரேன் தானே
அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்
யானையை பிடித்து யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவே
உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
கேள்விக்கு பதிலை கொண்டா
உடைச்சி ஏறிவென் ரெண்டா
உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி
சொல்றேன்
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்
சொல்லிட்டான்
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
பாத்துக்கடா சரிதான்
அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
எப்படி
பரதேசியாய் திரிவது எதனாலே
ம்ம்ம்....அவன் பத்து வீட்டு
சரி ..... வேணாம்
அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே
தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா
அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
பாடல் வரிகளுக்கு நன்றி;-பூங்குழலி
It's Not the School that Makes a Student, Rather it's the Schooling that makes him.
ReplyDeleteசரியான இடுகை தல..
ReplyDeleteநம்ம ஊர்ல தான் சின்ன வயசுலயே இஸ்கூல்ல சேத்து உட்டு பிள்ளைங்களைக் கஷ்டப்படுத்துறோம்...
5 வயசுல பிள்ளை முதுகு நிறைய புக்ஸ் எடுத்துட்டுப் போவுது பாவம். எந்த வயசுல எதை எதை கத்துக் குடுக்கணுமோ அதை மட்டும் கத்துக் குடுத்தாப் போதும்.
Well said
ReplyDelete//King Viswa said...
ReplyDeleteIt's Not the School that Makes a Student, Rather it's the Schooling that makes him. //
அது..,
//முகிலன் said...
ReplyDeleteசரியான இடுகை தல..
//
நன்றி தல
//Kumar said...
ReplyDeleteWell said //
நன்றி தல
காசு சம்பாதிக்கனும்னா தனியார் பள்ளிகள் என்ன வேணும்னா பண்ணுவானுங்ககிறது தெரிஞ்சது தான பாஸ்...இவனுங்க தரம் குறைஞ்சுடும்னு ஊளயிடரதுல என்ன அதிசயம்?
ReplyDeleteஇவனுங்க தரம்,ரிசல்ட் னு பண்ற கூத்துல இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் மூள அவிஞ்ச மாதிரி திரியுதுங்க.நல்ல புக்ஸ் படிக்கிறது குறைஞ்சே போச்சு.காரணம் பார்த்தா homework.... இப்ப உள்ள எத்தன குழந்தைங்க தினமும் தன் அப்பா அம்மா வோட பேசி சந்தோசமா இருக்காங்க?வந்ததும் homework,அப்புறம் அலுப்புல தூக்கம்.ஒரு குழந்தைக்கே இப்படி...
ReplyDeleteதரம் தரம் னு அவங்க தனித்தன்மைய கெடுத்தது தான் மிச்சம்....
//ILLUMINATI said...
ReplyDeleteஇவனுங்க தரம்,ரிசல்ட் னு பண்ற கூத்துல இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் மூள அவிஞ்ச மாதிரி திரியுதுங்க.நல்ல புக்ஸ் படிக்கிறது குறைஞ்சே போச்சு.//
பள்ளியில் கொடுப்பது மட்டுமே புத்தகம் என்ற நிலையும் தினசரிகள் படிப்படி கொடிய செயல் என்ற நிலையும் நிறைய பள்ளிகளில் உள்ளது