Monday, May 31, 2010

இலக்கியத்தில் கெட்ட வார்த்தை

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய இலக்கியங்கள் எவ்வளவோ வந்து இருக்கின்றன. அதிலும் பல இலக்கியவாதிகள் சிலபல நாட்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுத அவர்கள் தங்கியிருக்கும் ஊருக்கே வந்து அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து எழுதுவார்களாம்.  அவர்களோடு வாழ்ந்து எழுதிருப்பார்களா என்பது அவர்களைக் கேட்டால்தான் தெரியும்,. 

நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளை ப் படிக்கும்போது கெட்ட வார்த்தைகள் குபீர் குபீரென விழும்.   பெண்கள் மிக சாதாரணமாக கெட்ட வார்த்தைகள் உபயோகப் படுத்துவார்கள்.  பதின்மத்தின் துவக்கத்தில் இருந்த நண்பர்கள் அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.


பின்னர்தான் தெரிந்தது இது போன்ற கெட்ட வார்த்தைகளை சேர்த்தால்தான் விளிம்புநிலை மனிதர்களின் கதை, கதை களத்தோடு ஒன்றிப் போகுமாம்.  இல்லையென்றால் அந்தக் கதைக்கும்  சராசரி மனிதர்களின் பிரச்சனைக்கும் வித்தியாசம் தெரியாதாம்.  அதற்காகவே இந்த கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தே தீரவேண்டுமாம். 

பாகவதர் காலத் திரைப்படங்களில் பேசப்பட்ட மொழியாகட்டும், அதற்கடுத்த மனோகரா கால மொழியாகட்டும், தங்கப் பதக்கம் சிவாஜிகால மொழியாகட்டும், திரைப் படங்களின் தாக்கம் மக்களின் பேச்சுக்களில்  அதிகம் இடம் பிடித்திருக்கிறது. என் எஸ் கே பாணியைவிட நாயக்ர்களின் பாணி பேச்சு வழக்கு இடம்பிடித்து இருக்கிறது.  சிலருக்கு கவுண்டமணி பாணி பேச்சுக்களும் இடம் பிடித்திருக்கிறது.

என் நண்பன் ஒருவன் சின்ன வயதில் மாவீரன் படத்தில் ரஜினி உபயோகிக்கும் ஸ்டைலிஷ் வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்துவான்.  அதற்காக வீட்டில் நிறைய அடிவாங்கினாலும் அவன் அதை மாற்றவே இல்லை, மிக நெடுங்காலம் ஆகியும்கூட அந்த வார்த்தையை மிகக் குறைந்த அளவிலாவது உபயோகப் படுத்தியே தீருகிறான். ஆனால் விளிம்பு நிலை மனிதர்கள் இப்போதெல்லாம் மிகச் சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்துவதில்லை.  புதிய தலைமுறை மாணவர்களிடம் இந்த எச்சரிக்கை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கிறது,.  கிராம மாணவர்களிடம் மிக அதிகமாகவே இருக்கிறது.  ஆனால் நகரத்தில் இது போன்ற கெட்ட வார்த்தைகளை நண்பர்கள் மத்தியில் சரளமாகவே உபயோகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


பல கதைகளில்  இந்த கெட்ட வார்த்தைகளை தவிர்த்தால் கூட கதையின் சாராம்சம் குறையாமலேயே பார்த்துக் கொள்ள முடியும். இன்று அவர்களின் வாழ்க்கை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.  மாற முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மிகத் தவிர்க்க       இயலாத சூழலில் தங்கள்மேல் விழும் உடல் ரீதியான மனரீதியான  வ்ன்முறையை எதிர்க்க மட்டுமே இந்த வார்த்தைகளை உபயோக்ப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தயவு செய்து விளிம்புநிலை மனிதர்களை பற்றி கதை எழுதினால் அதில் கெட்ட வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள். இதுபோன்று தவிர்ப்பதால் கதை இயல்பாக இல்லாமல் போகலாம். யார் அறிவார்கள்? ஒருவேளை நீங்கள் இயல்பு மாறி எழுதுவதால் கூட அவர்களின் அந்த இயல்பே மாறிப் போகக்கூட நேரிடலாம்.

டிஸ்கி 1:

இது எதிர்வினை அல்ல

டிஸ்கி 2

எதிர்வினை அல்ல என்பதால் எந்தப் பதிவிற்கான எதிர்வினை என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது

டிஸ்கி 3

இந்தக் கெட்ட வார்த்தைகளை கதையில் புகுத்துவதால் கெட்டவார்த்தைப் போட்டு கூகிள் ஆண்டவரின் தேடும்போது உங்கள் தளம் முண்ணிலையில் வந்து ஹிட்ஸ்களைக் குவிக்கக் கூடும்

5 comments:

  1. டிஸ்கி மூன்றுமே டாப்

    ReplyDelete
  2. டிஸ்கி நல்லாயிருக்கு!!!

    ReplyDelete
  3. விஸ்கி!!! இல்ல.. இல்ல..
    டிஸ்கி நல்லாயிருக்கு அண்ணே...!!!

    ReplyDelete
  4. வருகை தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. கருத்து சொல்லும் அனைவருக்கும் நன்றி, நன்றி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails