எருமைக்கு நோவுன்னா காக்கைக்கு கொண்டாட்டம் - என்.எஸ்.கிருஷ்ணன் மதுரை வீரனில்
அக்காமாலாவையும், கப்ஸியையும் கவிழ்த்து, அந்த குளிர்பானங்களுக்கு விளம்பரம் கொடுத்தவர்களை ஓங்கி அறைந்து, நாடக் நடிகை செல்லம்மாவை பெண் என்பதால் விடுகிறேன் என்று சொன்ன சிம்புதேவனின் படத்தை ஆராயாமல் , அனுபவித்து சிரியுங்கள் என்று சொன்னால் எப்படி? அதனால் நாம் நம் பாணியில் ஆராய உட்கார்ந்தோம். வாழ்க ஞாயிற்றுக் கிழமை.
=========================================================
சில உண்மைக் கதைகளை எடுத்துவிட்டு அதைக் கற்பனை என்று டிஸ்கிபோடுவார்கள் . இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். ஆனால் அதை வேறு களத்தில் எடுத்து இருக்கிறார்கள் அவ்வளவுதான். சிங்கத்தின் பெயரைக் கேட்டாலே அது புரிய வேண்டும்.கௌபாய் பிண்ணனி இல்லாமல் வேறு எந்தக் கட்டத்தில் எடுத்திருந்தாலும் உண்மைக்கதை உடனடியாகப் புரிந்திருக்கும். இப்போது கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவேண்டும்
=============================================================
வலைப்பூ எழுதும் பலரும் காமிக்ஸ் ரசிகர்களாக, வெறியர்களாக இருப்பதால் அவர்கள் பலருக்கும் இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் முழு திருப்தியளிக்கவில்லை என்றும் ஆனாலும் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு கூடிய திருப்தி அடைவதாகவும் எழுதியிருந்தார்கள். அவர்கள் ஏன் மகிழ்ச்சி அடையவில்லை என்பதைஆராய்வதே நமது முதல் கட்ட லட்சியமாக இருந்தது.
பொதுவாக டெக்ஸ்வில்லரைப் பார்த்தால் எனக்கு எப்போதுமே எம்ஜியார் நினைவுதான் வரும். லக்கிலுக்கைப் படிக்கும்போது நாகேஷ் நினவு வரும்.
அதுவும் டெக்ஸ்வில்லரின் பாத்திரப் படைப்பு எம்ஜியார் படங்களின் பாத்திரப் படைப்புக்கு ஈடாகவே எனக்குத் தோன்றியது. எம்ஜியார் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராடுபவராக வருவார். ஆனால் அவர் உயர்ந்த குடியில் பிறந்தவராகவே வருவார். மதுரைவீரன் திரைப்படத்தில் கூட மதுரைவீரன் ஒரு ராஜகுமாரன் என்றும் அந்தக் குழந்தையை தூக்கி காட்டில் வீச அதை எடுத்து செருப்புத் தைப்பவர் வளர்த்ததாகக் கதை சொல்லுவார்கள். நானும் அதற்கான ஆதாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறேன். எந்த எழுத்துவடிவங்களிலும் அப்படி இருப்பதாக யாரும் சொன்னதில்லை.கர்ணபரம்பரைக் கதைகள் கூட மதுரைவீரன் பூர்வகுடியாகவே சொல்லுகின்றன. ராஜகுமாரனாகக் காட்டவில்லை. ஆனால் அப்படி ஒரு பிம்பத்தை தொடர்ந்திருப்பார்,அப்படி எடுத்தால்தான் பெருவாரியான மக்கள் பார்ப்பார்களோ என்னவோ!
டெக்ஸ் வில்லரும் அப்படித்தான். பல கதைகளில் நவஜோக்களுக்கு, செவ்விந்தியர்களின் பங்காளராக வந்தாலும் அவர் ஒரு வெள்ளையர். ஒரு வெள்ளயரை முன்னிலைப் படுத்தியே கதை நகரும்.
ஆனால் லாரன்ஸின் தோற்றம், டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் பாவையில் வரும் வில்லனைப் போல அதாவது வெள்ளையரின் நடை உடையில் வலம் வரும் செவ்விந்தியரைப் போல அல்லவா தெரிகிறது. டெக்ஸை எதிர்பார்த்து வருவோருக்கு டெக்ஸின் வில்லனை ஹீராவாக ஏற்கும் மனம் வருமா? தவிரவும் தொடக்க காட்சிகளில் ரஜினையை வேறு கிண்டல் செய்கிறார். கருப்பராக தோற்றமளிக்கும் லாரண்ஸ் மக்களின் மனதில் இடம் பிடிக்க சிரமப் படுகிறாரோ என்னமோ!
ஆனால் கதைப் படி கதாநாயகனின் கூட்டம் பூர்வ குடிகள் அல்ல, அதற்கு மனோரமாவின் உடைகளே சாட்சி
=======================================================
அடுத்ததாக நாயகிகள். என்னத்த சொல்ல, ஒவ்வொரு பாடலின்போதும் அலைப்பேசியில் பேசி பாடலைக் கவனிக்கத் தவறிவிட்டேன். இருந்தாலும் சந்தியாவின் கண்கள். அத்தோடு மண்டையோடு சேர்த்து, ......... ண்டையும் உடைத்துக் கொண்ட நாயகியின் தலை முடி, லட்சுமிராயின் எஸ்பாஸ் இவ்வள்வுதான் எனக்குத் தெரிந்தவை.
==============================================================
U S A கோட்டையினருடன் செய்யும், அணு ஆயுத ஒப்பந்தம் ,அணு ஆயுத ஒப்பந்தமாக உங்களுக்கு தோன்றுகிறதா? அதிகாரப் பகிர்வு என்று சொல்லிக் கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கேலி செய்வதாகவே தோன்றுகிறது.
=================================================================
தலைவன் இறந்ததை மறைத்துவிடவேண்டும்,. அப்போதுதான் தொடர்ச்சியாக் போரிட முடியும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். முகலாய சரித்திரத்தில் இதைக் காணமுடியும். ஹேமு ஏறக்குறைய போரில் வெற்றி பெற்ற நிலையில் குத்துப் பட்டு இறக்க அவரது படைகள் முகலாயப் படைகளால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு முகலாய சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழக்கால் ஊன்றுகிறது.
1. சிங்கத்தின் கதை
2. சிங்காரத்தின் கதை
ஒருவேளை சிங்காரம் இறந்திருந்தால் அது ஊடகங்களின் பார்வைக்கு வந்திருந்தால் சிங்காரத்தின் இறந்த புகைப்படம் சிங்கத்தின் பழைய புகைப்படத்துடன் ஒப்பிடப் பட்டு சிங்கம் இறக்கவில்லை என்று மீண்டும் நிறுவப் பார்த்திருப்பார்களா? அப்போதும் ஜெய்சங்கர் புர மக்களின் நம்பிக்கையான சிங்கம் வருவார் என்பது தொடர்ந்திருக்குமோ?
===================================================
ஜெய்சங்கர்புரம், ஷோலேபுரம் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே? அனுராதா புரம் என்று அந்தக்காலத்திலேயே தமிழன் ஒரு நடிகையின் பெயரை வைத்திருக்கிறானே அதையெல்லாம் தொடர்படுத்திக் கொள்ளலாமா?
===============================================================
அப்படி என்றால் சிங்கத்திற்கும் சிங்காரத்திற்கும் உள்ள இடைவெளி. அந்த கட்சி மாறும் கோடரிக்காம்புக்கு தெரிந்திருக்குமே? அப்போது அந்தக் கதாபாத்திரம் என்ன செய்திருக்கும்?
==========================================================
நாசரின் ஒரு கண் சொல்லும் கதைகள் என்ன என்ன? கடைசியில் அந்தக் கண்ணைக் கீழே போட்டு கசக்க வைக்கும் சிம்பு தேவன் சொல்லுவது தான் என்ன? சிலருக்குப் புரியும்.
====================================================
தமிழ் எழுத்துக்கள் எத்தனை ? பொங்குதமிழனுக்கு கஷ்டம் ஏற்படும்போது என்ன செய்வான் போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் சிம்பு தேவன் செய்துள்ளார். வாழ்க சிம்பு தேவன். நாம் தேடியலையும் பல விஷயங்கள் நம் கண் எதிரிலெயே உள்ளன. அதைவிடுத்து நாம் பல ஆபத்துக்களை தாண்டித் தாண்டி தேடிக்கொண்டே இருக்கிறோம் என்ற ஆன்மீகக் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.
மீண்டும் மீண்டும் பார்க்க பல கோணங்களில் படத்தை ரசிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.
=========================================
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே
-ஆயிரத்தில் ஒருவன்
m,,,,,,,,,,,,,,,,,,,,,,,m
ReplyDeleteIthu singaththai patriya kathayo ? puliyay patriya kathayo ? theriyavillai.
ReplyDeleteSimbuvukku US endral pidikkathu endru mattum theriyum.
Karthick Chidambaram ( biopen )
konjamalsalkonjamkirukkal.blogspot.com
:))
ReplyDeleteவேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல தலைவரே....
மீ தி போர்த்.
ReplyDeleteதல,
பின்னிட்டீங்க. அற்புதமான உவமைகள். சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத கருத்துக்கள்.
தல,
ReplyDeleteநீங்களும் பஞ்ச டையலாக் எல்லாம் போட்டு பின்னி பெடலேடுதிட்டீங்க. அதுவும் உங்க டைம் காமெடியன் வசனம் வேற.
அதுவும் அந்த அனுராதாபுரம் மேட்டர் எல்லாம் புதுசு தல.
பல விஷயங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய மிரட்டல் சிங்கம் வாழ்க.
//ஜெய்சங்கர்புரம், ஷோலேபுரம் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே? அனுராதா புரம் என்று அந்தக்காலத்திலேயே தமிழன் ஒரு நடிகையின் பெயரை வைத்திருக்கிறானே அதையெல்லாம் தொடர்படுத்திக் கொள்ளலாமா?//
ReplyDeleteஇப்பிடியெல்லாம் யோசிக்க உங்களால மட்டும் தான் முடியும்..
டிஸ்கி: இது பாராட்டல்ல
ரொம்ப அருமையா அலசியிருக்கீங்க தல..
ReplyDeleteபடத்தில் வந்த நல்ல கருத்துகளையும் அவதானித்து எழுதியமை அருமை
ReplyDeleteஆகா ஆகா,. இதுவன்றோ ஆராய்ச்சி..
ReplyDeleteஅருமை நண்பரே..
உண்மையிலேயே சில விஷயங்களை தோண்டியெடுத்து சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள்..
எனக்கும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் சில மண்டைக்குள் குடைகிறது..
எல்லாம் சரி. இதுல யாருங்க அது? வெள்ளைக் குதிரையில் ஒரு இந்தியக் கௌ பாய்? ;)
ReplyDeleteLOSHAN
எப்படி பாஸ் இப்படிலாம்....
ReplyDeleteகங்கா போன்ற திரைப்படங்கள் பார்த்த நினைவுகளோடு திரைப்படம் பார்க்கப் போன எனக்கு பெரிய ஏமாற்றம்.கவுபாய் படங்களில் நகைச்சுவை தனியே வரும்.(நாகேஷ் குதிரைக்கு பின்னால் புல்லைப்போடுவது போல). படம் முழுதும் நகைச்சுவை என்றபெயரில் துக்கடாக்களை தொடுத்து திரில்லிங்கை கெடுத்துவிட்டார்.கப்சா எனத் தெரிந்தாலும் அதில் பார்வையாளனை ஒன்ற வைக்கும் கலை கவுபாய் படங்களுக்கு உண்டு.இதே கதையை சீரியசாக எடுத்திருந்தாலும்,இறந்து போன சிங்கத்திற்கு பதிலாக அதேமாதிரியான வேறு ஒருவர் என்றில்லாமலும்(பில்லா) இருந்திருந்தால் என்னையுமறியாமல் சில இடங்களில் தூங்கியிருக்க மாட்டேன்.என்ன செய்வது கல்பாத்திக்கு இந்த கோரம் தேவையா?
ReplyDelete//பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
ReplyDeleteஉரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே
-ஆயிரத்தில் ஒருவன் //
யாரது தல :)
ஆராய்ச்சி அபாரம்.
இதுக்கு உங்களுக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
அப்புறம் செம்மொழி மாநாட்டுக்கு போவிங்க தானே.
//பிரியமுடன் பிரபு said...
ReplyDeletem,,,,,,,,,,,,,,,,,,,,,,,m //
வாங்க தல
// Karthick Chidambaram said...
ReplyDeleteIthu singaththai patriya kathayo ? puliyay patriya kathayo ? theriyavillai.
Simbuvukku US endral pidikkathu endru mattum theriyum.
//
அது உள்ளங்கை நெல்லிக்கனி தல
//ஜெட்லி said...
ReplyDelete:))
வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல தலைவரே.... //
மீண்டும் மீண்டும் பார்க்கும்போது ஏதாவது தெரியும் தல
//King Viswa said...
ReplyDeleteமீ தி போர்த்.
தல,
பின்னிட்டீங்க. அற்புதமான உவமைகள். சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத கருத்துக்கள். //
வாங்க தல
//King Viswa said...
ReplyDeleteதல,
நீங்களும் பஞ்ச டையலாக் எல்லாம் போட்டு பின்னி பெடலேடுதிட்டீங்க. அதுவும் உங்க டைம் காமெடியன் வசனம் வேற.
//
உண்மையில் அவர் ஆல் டைம் அம்பாசிடர்
//முகிலன் said...
ReplyDelete//ஜெய்சங்கர்புரம், ஷோலேபுரம் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே? அனுராதா புரம் என்று அந்தக்காலத்திலேயே தமிழன் ஒரு நடிகையின் பெயரை வைத்திருக்கிறானே அதையெல்லாம் தொடர்படுத்திக் கொள்ளலாமா?//
இப்பிடியெல்லாம் யோசிக்க உங்களால மட்டும் தான் முடியும்..
டிஸ்கி: இது பாராட்டல்ல //
இதனை தமிழ் இலக்கணத்தில் தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லுவார்கள் தல. இயற்கையாக நடக்கும் அல்லது உள்ள விஷயத்தில் நமது எண்ணங்களை ஏற்றிச் சொல்லுவது.
பதில் டிஸ்கி:- இதை என்பதிவிற்கு கிடைத்த வெற்றீயாகக் கருதுகிறேன். இதில் துளிகூட விலகுதல் கூடாது என்று படிப்பவர்களின் எண்ணம் அமைவதாக நினைக்கிறேன். எனவே நீங்கள் சொன்னதை பாராட்டாகவே நினைக்கிறேன்.
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteரொம்ப அருமையா அலசியிருக்கீங்க தல.. //
நன்றி தல
//S.Sudharshan said...
ReplyDeleteபடத்தில் வந்த நல்ல கருத்துகளையும் அவதானித்து எழுதியமை அருமை //
நன்றி தல
//LOSHAN said...
ReplyDeleteஆகா ஆகா,. இதுவன்றோ ஆராய்ச்சி..
அருமை நண்பரே..
உண்மையிலேயே சில விஷயங்களை தோண்டியெடுத்து சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள்..
எனக்கும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் சில மண்டைக்குள் குடைகிறது.//
இந்த இடுகையைப் படித்துவிட்டு இன்னும் சிலரின் மண்டையைக் குடையவேண்டும். அதுதான் சிங்கத்தின் காதலி பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி
//LOSHAN said...
ReplyDeleteஎல்லாம் சரி. இதுல யாருங்க அது? வெள்ளைக் குதிரையில் ஒரு இந்தியக் கௌ பாய்? ;)
LOSHAN //
அவர் பெயர் இப்போது சு வில் ஆரம்பிக்கும். டாக்டர் என்றும் சொல்லுவார்கள். ஆனால் அது நான் அல்ல.
//ஷாகுல் said...
ReplyDeleteஎப்படி பாஸ் இப்படிலாம்...//
தானா வருவது தல
//சே.வேங்கடசுப்ரமணியன். said...
ReplyDeleteகங்கா போன்ற திரைப்படங்கள் பார்த்த நினைவுகளோடு திரைப்படம் பார்க்கப் போன எனக்கு பெரிய ஏமாற்றம்.//
இது கவுபாய் படம் அல்ல தல.., சிம்புதேவன் தன்கதைக்கு கவுபாய் வேடம் போட்டு சொல்ல வந்த பல விஷயங்களை சென்சாருக்கு தப்பிச் சொல்லிவிட்டார்.
//அக்பர் said...
ReplyDelete//பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே
-ஆயிரத்தில் ஒருவன் //
யாரது தல :)
ஆராய்ச்சி அபாரம்.
இதுக்கு உங்களுக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
அப்புறம் செம்மொழி மாநாட்டுக்கு போவிங்க தானே. //
நன்றி தல, போகத்தான் நினைத்திருக்கிறேன்
enjoyed the post more than the film.
ReplyDelete