Sunday, April 21, 2013

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சுந்தரபாண்டியன் 2 ?

விக்கிற விலைவாசில பாதாமும் பிஸ்தாவும் வாங்கிக் கொடுத்து பொண்ண நாங்க வளர்த்தால் நீங்க அஞ்சு ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சட்டை போட்டுக் கொண்டு கரெக்ட் பண்ணிட்டு போயிடுவீங்க நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கணும்     
 உபயம்: சந்தானம்- கலகலப்பு

மேல இருக்கற வசனத்தை கேட்டு ரசித்து என்சாய் பண்ணி சிரித்து குதித்து விசிலடித்த அதே ரசிக்க கண்மணிகளுக்கு கௌரவம்ன்னு ஒரு படத்த ரீலீஸ் பண்ணியிறுக்காங்க.  நல்ல விஷயம்தான். அது ஏற்கணவே இந்தியில் வந்தது. அதில் ஜாதிப் பெயர்லாம் சொல்லியிருக்காங்க. இதில சொல்லல அப்பிடின்னு ஒரு குரூப் சொல்லிட்டு இருக்காங்க.  நல்ல படங்க எந்த மொழில இருந்தாலும் தமிழுக்கு கொண்டு வருவதுதானே நாம பாரதியாருக்கு செய்யற மரியாதை.  அதை செய்திருக்கும் ராதா மோகனுக்கும், பிரகாஷ் ராஜுக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒரு டிவி நிகழ்ச்சியில கவுரவக் கொலைப் பற்றியும் , ஜாதிக் கொடுமைகள் பற்றியும் பேசி ஒருதடவ மார்க்கெட்டிங் பண்ணியாச்சு.  ஆனாலும் பாருங்க   ஒரு தினசரிப் பத்திரிக்கை. இது கவுரவக் கொலை அல்ல., உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை என்று எழுதியிருங்காங்க.   மத்தபடி படத்தைப் பத்தி நல்லாத்தான் எழுதி இருக்காங்க. ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அப்படிங்க வார்த்தையைப் படிச்சதும் ஷாக் ஆயிட்டேங்க., அதுவும் எப்படி.,  பாண்டவர் பூமி படத்தில் கொலை நடந்த உடனே நம்ம ராஜ்கிரண் நிப்பாரே அப்படி.,

இப்ப பாருங்க.,  ஜாதி, கவுரவ கொலை அப்படி இப்படின்னு பேசி பதிவர்கள் விமர்சனம் கூட எழுத முன் வர மாட்டாங்கராங்க., திருமதி தமிழை விட கவுரவும் படத்துக்கு  பதிவர்களின் விமர்சனம் குறைவுதான்.

======================================================================
தமிழ் திரையில்  ஜாதிப் பிரச்சனை பற்றி பேசுவதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதைப் பின்பற்றினால் மட்டுமே அந்த படம் மக்கள் வரவேற்பைப் பெரும்.

உயர்ந்த தாழ்ந்த ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச கூடாது, வேண்டுமென்றால் உயர்ந்த பிற்படுத்தப் பட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம்.

தாழ்ந்த ஜாதி  என்ற வார்த்தைக்குப் பதிலாக ஏழைகள் என்று உபயோகப் படுத்தலாம். பரதேசி என்று கூட சொல்லலாம். ஆனால் தலித் என்று சொல்லக் கூடாது.

தாழ்ந்த ஜாதியைக் காப்பாற்ற ஒரு உயர்ந்த ஜாதிக் காரர்தான் வரவேண்டும். அவர் ஜாதி வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.   அவர் தந்தையும் அவ்வாறே இருத்தல் நலம். அவர் வீட்டில் எல்லாம் ஏழைகளுக்கும் சோறு போடுவதாக ஒரு காட்சி அமைத்து. ஹீரோ குரூப்ஸ் வரும்போது. சாப்பிடுபவர்கள் எழுந்து  நின்று முதுகை வளைத்து  சாமீன்னு சொல்லி ஒரு கும்பிடு போட்டால் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அனைத்து தரப்பினரும் பாராட்டுவார்கள். 

தமிழில் வெளி வந்த ஜாதி மறுப்பு திரைப்படங்களில் வெற்றிபெற்ற படங்கள் இரண்டு.

1. இது நம்ம ஆளு. அதிலும் ஹீரோ தலித் கிடையாது. சவரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்.  தலித் என்பவர் அவர்களுக்கும் கீழே

2.வேதம் புதிது. இதிலும் கூட சத்தியராஜைப் பார்த்து அமலாவின் தம்பி கேட்கும் கேள்விகளை தமிழகமே புல்லரித்துப் பார்த்தது. நீங்க படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்டபோது சத்தியராஜ் ஷாக்காகி நிற்க தமிழகமே ஷாக் ஆகி நின்ற மாதிரி ஒரு ஃபீலிங்ஸ். யோசிச்சு பாருங்க,  அதே கேள்வியை ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவன் கேட்டிருந்தால் புல்லரித்து நின்ற ஜனம் என்ன செய்து இருப்பார்கள்?

==================================================================
இன்னொரு படமும் உண்டு. அதில் நிஜமாகவே ஹீரோவை தலித் ஆக காட்சி இருப்பார்கள். குடும்ப கவுரவம் காக்க அந்தப்  பெண் சாக,   மேல்ஜாதிப் பெண் காதலித்த இளைஞனும் கடைசியில் சாக எல்லோரும் நெஞ்சமும் மகிச்சியாக இருக்க அந்தப் படம் வெற்றி பெற்றது.   யாருக்காவது நினைவு  இருக்கா?

=================================================

கவுரவக் கொலை பற்றி மிக சமீபத்தில் உள்ளது உள்ளபடி ஒரு படத்தில் காட்சிப் படுத்தி இருப்பார்கள். படத்தில் துவக்கத்திலேயே  அந்த பையனை துரத்திக் கொண்டுப் போய் நடுக் காட்டில் வைத்து அவன் கெஞ்சும்போது தங்களது  வழக்கமான டயலாக் சொல்லி அந்தப் பையனை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றுவிட்டு அவர்கள் அப்படித்தான் என்று பதிவு செய்திருப்பார்கள்.  அந்தப் படம்  சுந்தர பாண்டியன்.

பில்லா உருவான கதையை பில்லா 2 என்று சொல்லி (அதை நாயகன் 2, பாஷா 2 என்று சொல்லி இருக்கலாம் ) வெளிவிட்டது மாதிரி  இந்தப் படத்தையும்  சுந்தர பாண்டியன் 2 என்று சொல்லி மார்கெட்டிங் பண்ணி இருக்கலாம்.  டிவி நிகழ்ச்சியில் அழுத பெண்களின் கண்ணீரை விட பவர் ஃபுல்லாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails