Friday, July 3, 2009

கலாச்சார மாற்றத்துடன் சில மாற்றங்கள்

நாளை நமதே:-

இதுவே இந்தியில் வந்த ஒரு படத்தின் ரீமேக்தான்.


முதல் காட்சியில்தான் ஒரு குடும்ப பாட்டு. பாட்டு முடிந்த உடன் பெற்றோர் இறந்துவிட அண்ணன் தம்பி மூன்று பேரும் பிரிந்து விடுகிறார்கள். ஒருவர் பயங்கர ரவுடியாகவும், இன்னொருவர் மென்மையான எண்ணங்கள் கொண்டவராகவும், இன்னொருவர் பாடகராகவும் மாறுகிறார்கள். கடைசி அரைமணிநேரத்தில் பழைய பாட்டை பாடி ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். மூத்தவர் ஒரு ஓரமாக நின்று உண்ர்ச்சி கொந்தளிப்பாக பார்த்துக் கொண்டு நிற்பார். வில்லனை பழிவாங்கி அனைவரும் ஒன்றுசேர சுபம்.


இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்வழி தனி வசனம்.... மூத்த அண்ணன் பிரயோகப் படுத்தி இருப்பார். எதிரியையும் மன்னிக்கும் கொள்கை வேண்டும் என மூத்த அண்ணன் கடைசி காட்சியில் வலியுறுத்த விதி அவரையும் மீறி வில்லனைக் கொன்றுவிடும். இந்தியில் இது போன்ற நீண்ட வசனம் இருப்பதாக தெரியவில்லை.{ எனக்கு இந்தி தெரியாது}. இந்திப் படத்தில் மூன்று நடிகர்கள் செய்த பாத்திரங்களை இருவரே செய்திருப்பார்கள். முதல் இரண்டு பாத்திரங்களுக்கு ஒருவரே என்பதால் வித்தியாசப் படுத்திக் காட்ட மேக்கப் கடுமையாக உதவியிருக்கும்.

நீங்கள் கேட்டவை:-
1984ஆம் ஆண்டில் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வந்தபடம். இதி கூட நாளைநமதே படத்தில் வந்தது போல முதலில் ஒரு குடும்ப பாட்டு.

பாட்டு முடிந்த உடன் விதவைத்தாய் கொல்லப் படுகிறார். பாட்டு முடிந்ததும் அண்ணன் தம்பி இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதில் வந்த இரண்டாம் மூன்றாம் சகோதரர்களை ஒரே ஆளாக மாற்றி இருப்பார்கள். இதிலும் மூத்தவர்தான் பழிவாங்கும் எண்ணத்தோடு சுற்றிக் கொண்டே இருப்பார். அடுத்தவர் ஜாலியாகப் பாட்டுப் பாடிக் கொண்டு சில்க் உடன் சுற்றிக் கொண்டிருப்பார். அதில் நேரடியாக பாட்டுப் பாடும் போதே மூவரும் உணர்ந்து கொள்வார்கள். இதிலும் இரண்டாம் முறை பாட்டு உண்டு

அது பதிவு செய்து சண்டையின்போது டேப் ரிகார்டர் பாட ஆரம்பித்து ஒன்று சேர்வார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு புதுமை அப்படத்தில்தான் முதன்முறையாக புதுகுத்தப் பட்டது எனலாம்.
அந்தப் பாடலில் நடித்த நடிகரின் முகபாவங்கள் பலதலைமுறைக்கும் பேசப் படும்வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

அடியேய் .. மனம் நில்லுனா நிக்காதடி.... {நன்றி :Thanjavurkaran } இன்னமும் கல்லூரிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதே அந்தப் படத்தின் நீண்ட ஆயுளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. கனவுகாணும்வாழ்க்கையாவும்.. பாட்டுக்கும்கூட ஆயுள் அதிகம்தான்.

முதல் படத்தில் ராஜஸ்ரீ சிறப்புத்தோற்றத்தில் வந்து பாட்டுப் பாடுவார். இரண்டாவது படத்தில் பூர்ணிமா ஜெயராம் வந்து பாட்டுப் பாடுவார்.

தெலுங்கில் கூட இந்தப் படங்கள் வந்துள்ளன



மற்ற படங்களைப் போல இந்தப் படமும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற படங்களில் கடைசித் தம்பி டம்மியாயிருக்கும். அவரது முக்கிய வேலை முக்கியமான இந்தப் பாடலைப் பாடுவது தான். நீங்கள் கேட்டவையில் இரண்டு தம்பிகளையும் சேர்த்து ஒரே தம்பியாக்கி இருப்பார்கள். ஆனால் தெலுங்கு படம் எடுத்ததற்கு முக்கிய காரணமே கடைசித் தம்பிதானாம். அவருக்காகத்தான் இந்த படமே..,

கடைசித் தம்பி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தம்பி, பெரிய அண்ணனுக்கு நெருங்கிய சொந்தக் காரர், யாரென்று தெரிந்தால் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்?

இது ஒரு மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு. முதற்பதிப்பில் இல்லாத பல பகுதிகளும் படக்காட்சிகளுடனும் வெளியிடப் பட்டுள்ளது.

10 comments:

  1. //ஆத்தா.. ஆத்தோரமாய் பாட்டு இன்னமும் கல்லூரிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதே அந்தப் படத்தின் நீண்ட ஆயுளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. //

    தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

    நீங்கள் சொல்லவந்த பாட்டு

    அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி

    ReplyDelete
  2. சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா, சரி செய்து விட்டேன்

    ReplyDelete
  3. எல்லா மொழி படமும் பார்த்து ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க சார்.. வாழ்த்துக்கள்.. கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை.. NTR ஆ?


    * சில இடங்களில் எழுத்து பிழை.. கவனிக்கவும்..
    //விதவைத்தாய் கொள்ளப் படுகிறார்.//
    கொல்ல
    //அவரது முக்கிய வேளை //
    வேலை

    ReplyDelete
  4. //கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை.. NTR ஆ?//

    அவர்தான் மூத்த அண்ணன்.., கடைசித் தம்பியாக நடிப்பவர்(கிடார்காரர்) யாரென்று தெரிகிறதா? தல..,

    ReplyDelete
  5. பிழைகளை சரிசெய்துவிடுகிறேன்

    ReplyDelete
  6. நீங்கள் கேட்டவை தமிழ் சினிமா (அல்லது இந்திய சினிமா)-வின் மசாலாத்தனத்தை பகடி செய்து பாலு மகேந்திரா எடுத்த படம். ஆக நீங்கள் கேட்டவை ஒரு முழு நீள நகைச்சுவைப் படம். இது போன்ற teasing படங்கள் ஆங்கிலத்தில் அதிகம் பார்க்கலாம். எப்படி​யென்றால் ஒரு சீரியஸான படம் ​வெளிவந்திருக்கும் அதை அப்படியே பகடி செய்து இன்னொரு teasing படம் வெளிவந்து சக்கைப் ​போடு ​போடும். உதாரணம் I know what u did in last summer - இது ஸீரியஸ் த்ரில்லர். இதன் teasing version - The Scary movie இது போல நிறைய உண்டு (007ஐ கூட நக்கலடிச்சிருப்பாங்க) இந்தியில இப்ப சமீபத்தில் வந்த ஓம் சாந்தி ஓம் கூட இந்த வகைதான். தமிழுக்கு (அல்லது இந்தியாவுக்கு?) இந்த வகை படத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பாலு மகேந்திரா என்று கருதுகிறேன். நீ.​கே. படத்தை ஒரு நகைச்சுவைப் படமாக கருதாமல் இந்த மாதிரி மசாலா படங்கள் வரிசையில் வைக்க நான் ஒப்ப மாட்டேன். படத்தின் தலைப்பிலேயே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.. ரசிகர்கள் விருப்பத்திற்காக பாலு தன் கொள்கை, பண்பு மற்றும் தரம் இவற்றையெல்லாம் ஓரமாக ​வைத்துவிட்டு எடுத்த படம்தான் நீங்கள்​கேட்டவை. உங்கள் எண்ணம் என்ன?

    ReplyDelete
  7. வாங்க ஜெகநாதன்

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..,

    இதுபோன்ற கருத்துக்கள் எல்லா இடுக்கைக்கும் வந்தால் இடுகை நன்றாக மேம்படும்..,

    தமிழில் அவ்வாறு சில படங்கள் வந்திருக்கின்றன..

    ஆனால் நீங்கள் கேட்டவை அப்படிப் பட்ட படம் அல்ல என்பது என் கருத்து..,

    ஏனென்றால் அந்தப் படத்தில் பாலு மகேந்திராவின் பல முத்திரைகள் இருக்கின்றன.

    குறிப்பாக வசனம் உச்சரிக்கும் தன்மை,

    அர்ச்சனாவில்(ஷோபாவின்) சாயலில்
    சாயல் நாயகிகள்,

    அவர் மாதிரியே பொட்டுவைத்துக் கொள்வது,

    நாயகர்கள் சட்டையை கழ்ட்டிவைத்து பாடல் காட்சிகளில் தோன்றுவது..

    போன்ற காட்சிகள் அவர் படத்திற்கே உரியவை. இது போன்ற காட்சிகளை அவர் அவருக்கே செய்த பகடியாக தோன்றவில்லை.


    எனக்கென்னவோ பார்த்திபன் உள்ளே வெளியே படம் எடுத்தபோது இருந்த உணர்வில்தான் பாலு மகேந்திரா இந்தப் படத்தினையும் எடுத்து இருப்பார் என்று தோன்றுகிறது,

    ReplyDelete
  8. பகடி வரிசைப் படங்கள் என்றால்

    பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்கள் வருவார்களா? தல

    அவர்கள் எடுப்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கேலி செய்வது போல இருக்கிறது

    ReplyDelete
  9. தெலுங்குப் பாட்டில் வரும் கிடார்காரர் யாரென்று தெரிகிறதா? தல..,

    ReplyDelete
  10. அட... பாலகிருஷ்ணா... என்.டி.ஆரின். மகனே அவரது தம்பியாக நடித்திருக்கிறார். சூப்பர்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails