ராஜூவிடம் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை முருகன். நானும் பூஜாவும் விவாகரத்து வாங்கலாம் ன்னு இருக்கோம்.
முருகனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏண்டா...
......................................................
இந்தக் கதையைத் தொடங்கும் முன் நண்பனின் மனைவி பாகம்-1, பாகம்-2 படித்துவிட்டு வாருங்கள்.
....................................................
பிற்பகலில் ராஜு வீட்டுக்கு வந்த போது தன்னை வரவேற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சியாக தெரியவில்லை என்றுதான் முருகனுக்குத் தோன்றியது. ஊட்டிவரை போய்விட்டு வருவதாகக் கூறினான். இல்லை. இங்கேயே தங்கு. தோட்டங்களைப் பார்க்கலாம் நிறைய பேச வேண்டியுள்ளது என்றுதான் ராஜு முருகனைத தங்க வைத்தான். இப்போது தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.
...........................................................
முருகன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தான். அன்றெல்லாம் முருகன் கூட்டம்தான் உற்சாக பானம் அருந்துவார்கள். ராஜு வெறுமனே ஒரு சிட்ரா பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் போதை மயக்கத்தில் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாட்களில் அவன் ஒரு போதும் குடித்ததே கிடையாது. இன்று தலை கீழாக இருக்கிறது. முருகன் பெப்சி பாட்டிலுடனும் ராஜு உற்சாக பானத்துடனும் இருக்கிறான். உற்சாக பானம் உற்சாகம் கொடுப்பதற்குப் பதிலாக அவனது துக்கத்தின் கரைகளை உடைத்துக் கொண்டு இருந்தது.
காதல் திருமணம் வேஸ்டுடா...
என்னடா பிரச்சனை..
பூஜா சொல்லியிருப்பாளே.. அவள் என்னைவிட நண்பர்கள்ட்டா தானே நல்லா பேசுவா..
போச்சு இனிமெல் வாயத்திறக்கக் கூடாது. இல்லடா ஒன்னும் சொல்லலியே... ஏன் இப்படியெல்லாம் பேசுர....
நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருங்கிய காதலர்களா சுற்றி வந்தீங்க...
இல்லைடா நாங்க ரெண்டு பேரும் நெருக்கமாவே இல்லை. அவளுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவங்களுக்கு குற்ஞ்செய்தி அனுப்புற அளவிற்கோ பேசும் அளவிற்கோ என்னிடம் அவ பேசியதே இல்லை. சாயங்காலம் ஏதாவது ஒரு ஃபிரண்டு வாங்கி தந்ததுன்னு ஒரு கிஃப்டோட வந்து நிக்கறா.. என்கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டனா...
வீட்டுக்கு வந்தாலும் ஃபோனும் கையும்தான்.
ஏண்டா எங்காவது வெளியே கூட்டிட்டி போகவேண்டியதுதானே..
எங்கடா இப்பதான் ஹாஸ்பிடல் நல்லா போயிட்டு இருக்கு. அப்பாவுக்குன்னு நோயாளிகள் வந்தது போக இப்ப எங்களுக்கும் நோயாளிகள் வந்துட்டு இருக்காங்க...
அப்புறம் எப்படிடா விவாகரத்து வாங்குவீங்க?
விவாகரத்து வாங்கிவிட்டு திரும்பவும் ஒரே இடத்தில் வேளை செய்வீங்களா..
இப்ப என்னை என்னடா பண்ணச் சொல்ற...
.....................................................
பிரச்சனை ஓரளவு தெளிவானது. பூஜா கல்லூரியில் இருந்த மாதிரியே இன்னும் இருக்கிறாள். அன்று அதை ஏற்றுக் கொண்ட முருகனால் இன்று அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ர்சியாக ஏற்படும் வாக்குவாததில் பற்பல பிரச்சனைகள்.
.......................................................
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு முருகன் ராஜுவுக்கு ஒரு ஏற்பாடு சொன்னான். பரவாயில்லை. விடுடா..
ஆளுக்கொரு வண்டி வைத்துக் கொண்டுதான ஒரே மருத்துவமனைக்கு போய்ட்டுவர்ரீங்க. இனிமேல் ஓரே வண்டில போய்ட்டுவாங்க.
பிறகு பாருங்க..
..........................................
சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷயங்கள் நார்மல் ஆயிடிச்சு.
...................................................
இந்தக் கதை இப்போது முடிந்தது. மீள்பதிவுதான்; இருந்தாலும் ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
Arumaiya eluthuringa... unga eluthkalai paratta oru vari pathathu ... athuvum neenga sonna vitham :-)super apprum nanga trichy than banglore la velai ... travel panum pothu edutha padanga avai
ReplyDeleteவாங்க தலைவரே... பாராடுதல்களுக்கு நன்றி
ReplyDeleteTala,
ReplyDeleteStory Nalla keethu..
வாங்க வினோத் கவுதம் சார், நன்றி
ReplyDeleteநன்றாக எழுதி உள்ளீர்கள். எதிர்பார்ப்பு மிக எளிதாக நிறைவேற்றி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாராட்டுதல்களுக்கு நன்றி சந்துரு அவர்களே..
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க
ReplyDelete\\
இந்தக் கதை இப்போது முடிந்தது.\\
மீண்டும் உண்டா
வாங்க நட்புடன் ஜமால் அவர்களே...,
ReplyDeleteகண்டிப்பாக... தொடரும்
ஒரே வண்டி சீரூந்தா, இரு சக்கர வாகனமா ;)
ReplyDeleteவாங்க தலை: சைக்கிள்ல போனாக் கூட ஓ.கே. தானே.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅண்ணா,
ReplyDeleteஎங்கயோ ஆரம்பித்து மிக அழகாக கதையை நகர்த்தி,இப்ப வரும் சினிமா படங்களை போல் முடித்து விட்டீர்.
"சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷங்கள் நார்மல் ஆயிடிச்சு."
உங்களிடம் இருந்து இது போல பல தொகுப்புகளை எதிர் பார்க்கிறோம்.
//இது நம்ம ஆளு said...
ReplyDeleteஉங்களிடம் இருந்து இது போல பல தொகுப்புகளை எதிர் பார்க்கிறோம்.//
கண்டிப்பாக தருகிறேன் தல....,
ETHTHANAI THADAVAI THAAN PADIKKIRATHU.ETHAAVATHU PUTHIYA PADHIVU IDAVUM.
ReplyDeleteகருத்துக்கு நன்றி தல..,
ReplyDeleteவேலைப்பளு அதிகம் என்பதால் சென்ற வாரம் நிறைய மீள்பதிவுகள் போட்டுவிட்டேன். இந்த மூன்று நாட்கள் புதிய பதிவுகள்தான்.
அடுத்த சில நாட்கள் மீண்டும் வேலைப்பளு அதிகரிக்க இருக்கிறது. ஆனால் மீள்பதிவு போடும் எண்ணம் இல்லை..,