Sunday, March 13, 2011

வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?

பட பட வென்று தட்டப் பட்ட சத்தத்தில் கல்லூரி விடுதி முழுவதுமே விழித்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுமன் எப்போது தைரியமான ஆளாக இருந்தாலும் முக்கியமான காலகட்டங்களில் இவன் வெறொரு இடத்தில் இடத்தில் இருப்பான். அவனது ராசி அப்படி என்று சிலர் சொல்லுவார்கள். அந்த நேரத்தில் எஸ்கேப்..............    என்று ஓடி விடுவான் என்றும் சிலர் சொல்லுவார்கள்.

ஆனால் கல்லூரி விடுதியின் அறைக்கு ஒரே கதவு என்பதாலும் ஜன்னல் வழியாக வெளியே செல்ல பயமாக இருந்தாலும் அவன் திறக்காமலேயே இருந்தான். என்ன இருந்தாலும் விடுதிக் கதவுகள் அதற்குரிய பலத்தில் தானே இருக்கும். அடித்த அடியில் கதவுகள் உடைந்து விடும் முன்னரே திறந்து விடலாம் என்று திறந்தாலும்    தைரியசாலி போல முகத்தை வைத்துக் கொண்டு  யார்ரா இது இந்த நேரத்தில்  என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தான் சுமன்.

வெளியே  தீஃபக்கின் நண்பர்கள்.  கையில் ஸ்டம்ப் , பேட் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன்  வாசலில் நின்று கொண்டிருந்தனர்,


அதற்குள் சத்தம் கேட்டு  விடுதியில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் கூடி விட்டிருந்தனர்.


 எல்லோரும் வந்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட சுமன்,
என்னடா இந்த நேரத்தில்.......,  அவன் கேட்கும்போது அவன் மிரட்டுகிறானா? இல்லை பயப் படுகிறானா? என்றே தெரியவில்லை.

”தீபக் குமாரை தூக்கிட்டு போய்ட்டாங்க”

என் ரூம்ல செக் பண்ண போரியா.. ,  பண்ணுங்கடா, பண்ணுங்க...,   இப்போது தைரியமாகவே சொன்னான் . சுமன்.

”பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மா விட்டுவாங்களா”

என்னடா இங்க பிரச்சனை.

இங்கிலீஷ் குப்பனும் வந்து சேர்ந்தான். இங்கிலிஸ் குப்பனைப் பற்றி தெரியாதவர்கள் இந்த சுட்டியைத் தட்டுங்கள்.

இங்கிலிஷ் குப்பன் வந்த உடன் இன்னுமேட் தைரியம் ஆனான் சுமன்.


சுமத்ரா மயங்கி விழுந்த கதையையும் , அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் சுருக்கமாக குப்பனிடம் சொல்லப் பட்டன. சச்சின், அஜித் போன்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

சுமத்ரா மயங்கி விழுந்த கதை  தெரியாதவர்கள்  இந்த   சுட்டியத் தட்டுங்கள்.


குப்பன் எப்போது  பிரச்சனைகளை வித்தியாசமாக கையாளுபவன்.  சுமித்ராவின் ஊரைச் சொல்லி நேரா அங்க போயி விசாரிங்கடா என்று சொன்னான்.



சுமன் அறைக்கு ஆயுதங்களுடன் வந்தவர்கள், கிராமத்திற்கு செல்லச் சொன்னதும் பயந்தே போனார்கள். சற்று சோர்வுடனேயே  தீபக்க எப்படி திரும்பிக் கொண்டு வருவது என்று பேச ஆரம்பித்தனர். 

எப்படிடா இதெல்லாம் வீட்டுக்குப் போச்சு?

சுமித்ரா மயங்கி விழுந்த நிகழ்ச்சிக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளையும்  சுமித்ரா மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளானதால் மிகவும் சோர்ந்து எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி ஒதுங்கி இருந்ததால் தோழிகளில் ஒருத்தி வீட்டுக்குத் தகவல் கொடுத்ததாக தோழிகளின் தோழன் ஒருவன் சொன்னான்.

சரி வா.,  நாம சுமித்ரா ஊருக்குப் போய் பேசிப் பார்ப்போம்.

போலிசுக்குப் போலம்டா..,  தீபக் குமாரின் நண்பன் ஒருவன் சொன்னான். வேண்டாம்டா பேப்பர்ல வந்தா ரொம்ப அசிங்கம். தவிரவும் சுமித்ராவோட குடும்ப செல்வாக்கு முன்னாடி போலிஸ் ஒண்ணும் பண்ண முடியாது இது டேஞ்சர் டயபாலிக்.  டயபாலிக் பற்றி தெரியாதவர்கள் இந்த சுட்டியைத் தட்டவும்.

குப்பன், டயபாலிக்,சுமன் போன்றவர்கள் சுமித்ராவின் ஊருக்குக் கிளம்பினார்கள். 


சச்சின்னுக்கு திடீரென்று ஒரு சந்தேகம்.

ஏண்டா சுமித்ராவுக்கு தீஃபக் குமாரை பிடிச்சு கல்யாணம் பண்ணி செச்சிரும்பாங்களாடா?  அந்த ஊரில அரிவாள் மனை கல்யாணம் சகஜம்டா..,

அரிவாள் மனைக் கல்யாணம்  என்பது அரிவாள்மனை முனையில் பெண்ணுக்கு தாலிகட்ட வைப்பது.


என்ன நடக்குதுன்னு யாருக்குத் தெரியும்?  நம்ம போயி பார்த்திட்டு வரும். அவ்வளவுதான்.


ஏண்டா தாலி கட்ட மாட்டேன்னு சொன்ன என்னடா பண்ணுவாங்க


வெட்டிடுவாங்கடா..,


தலையன்னு நினைக்காதடா ...,


கொஞ்சம் திகிலுடனே கிளம்பிப் போணார்கள்.



தொடரும்............................................


முந்தைய பாகத்தினைப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்







Enjoy the climax of 'Siva' by istream

Wednesday, March 9, 2011

ஒரு 18+ கதையின் விமர்சனம்

சராசரியான கதை போன்றுதான் துவங்கியது.

ஏதோ 70-80 நாவல்களில் வரும் காட்சி போல உடலுறவுக்கு பின் அந்தப் பெண்மணியின் உணர்வுகளின் அடிப்படையில் தொடங்கியது கதை. சற்று சூடாக சென்றது.

//
ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா இந்த ஆளு? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை உச்சமடைய முடியுமா?//

இந்த வரிகளிலேயே பெறும்பாலான உணர்வுகள் நமக்கு கிடைத்துவிட்டதாக நினைத்தால் உண்மை அது அல்ல அதற்கு பின்னரும் எழுதியிருக்கிறார். அதை நீங்களே படித்தால்தான் உணர முடியும்.


//அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் வந்தானா? ரேணுகா இல்லைனு தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி//

அந்த ரேணுகாவைப் பற்றி கதையில் சொல்லும்பொது ரேணுகாவின்மே ஒரு பரிதாபம் வருகிறது. அதே ரேணுகா அதைப் பற்றி கவலையே இல்லாமால் இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருப்பதாக காட்டும் கதாசிரியர் வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.

அதுவும் ரேணுகாவை முழுமையாக நாம் தெரிந்து கொள்ளும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அந்த க்ளைமாக்ஸ் “நச்”


வாழ்த்துக்கள் எழுத்தாளரே..,

அந்த கதையை முழுமையாகப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

எச்சரிக்கை டோனி..,

இன்றைய போட்டி

இந்திய அணியின் வாழ்க்கையில் முக்கியமான நாள்

இந்த போட்டி எப்படி அமையப் போகிறது என்பதைவிட சில புள்ளி விவரங்கள்.


நெத்ர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணியில் ஒரு  ஆட்டக்காரர் எடுத்த அதிகப் பட்ச ஸ்கோர் 51.


இந்திய அணியின் அதிக பட்ச ஸ்கோர் 204.

இது தவிர


நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்தது. கொஞ்சம் ரன் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் கூட அந்த குழுவில் பாகிஸ்தான் தான் முன்னிலை வகித்திருக்கும். ஏனென்றால் நியூஸி ஏற்கன்வே தோற்றிருக்கிறது.

தவிரவும்  நியூஸி எடுத்த கடைசி 100 ரன்களுக்கு தேவைப் பட்ட பந்துகள் வெறும் 30. அந்த நூறு இல்லை என்றால் அந்த குழுவின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.

இன்றைய இந்திய அணியில் பியூஸ் சாவ்லா, ஹர்பஜன்சிங் போன்றவர்கள் இன்றைய போட்டியை வாழ்வா, சாவா போட்டியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் விழுமா இல்லை அவர்களை தூக்கி விடுவார்களா? என்பது இன்று தெரிந்துவிடும்.

பேட்டிங்கில் கூட ஏதாவது சாதித்து இன்றைய போட்டியின் யுவராஜ் சிங்காக மாற கனவு கொண்டிருக்கிறார்கள்.


அதனால் அணித் தலைவரின் செல்லப் பிள்ளைகள் பலரும் இடம்பெறத் துடித்துக் கொண்டிருப்பது போல தெரிகிறது, அப்படி செல்லப் பிள்ளைகளாக இடம் பெறும்போது அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அதிரடித் திருப்பங்களுடன் கோடி ராமகிருஷ்ணாவின் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பைப் போட்டி இன்று இந்திய அணிக்கு என்ன தரப் போகிறதோ தெரியவில்லை....,


ஒருவேளை இந்த வீடியோவில் இருப்பது போல நடந்துவிடுமோ..,



Tuesday, March 8, 2011

இது ஒரு கற்புக்கரசியின் கதை

Mahabharat
பாரதத்தில் நடைப் பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்தான் இவை....

பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் செல்லுங்கள். இல்லையேல் சில வருடங்களுக்கு முன் உங்கள் தாத்தா பாட்டியின் சொற்களை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் போதாதென்றால் நீங்கள் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர் எதையாவது ரெஃபரன்ஸ் புத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கதைக்கு வருவோம்.

.....................................................................................................................

அந்த மாபெரும் நாட்டின் இளவரசனுக்கு பெண் தேடுகிறார்கள். அண்ணன், தம்பி இருவருமே பலசாலிகள்..

முதலில் அண்ணனுக்குப் பெண் தேடுகிறார்கள்.

தம்பிக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். அண்ணனுக்கு எல்லோரும் தயங்குகிறார்கள்.

இந்தியத்துணைக்கண்டத்திலே ஏற்க்குறைய மேற்காசிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெண் கேட்கிறார்கள். மூத்த இளவரசனுக்கு பெண் கொடுக்க தயங்கி நிற்கிறார்கள். பெண்கேட்கச் சென்ற குடும்பப் பெரியவர், போருக்கு அழைக்கிறார். அந்நாட்டு இளவரசியின் அனைத்து அண்ணன்களையும் கொள்கிறார்கள். அந்நாட்டின் மன்னனையும் கொல்கிறார்கள். அந்த நாட்டையே அழித்து விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு இளவரசி வருகிறாள். நாட்டின் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும், தனது சின்னத்தம்பியைக் காப்பாற்றவும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.

ஆனால் இந்த கொடிய உலகத்தைக் காண சகிக்காமல் தனது கண்ணைக் கட்டிக் கொள்கிறார்.

அந்த இளவரசிதான் பாரதப் போரின் மகாராணி காந்தாரி அவர்கள்.

அவர் கண்ணைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் முதலானவர்களை பார்க்க விரும்பாமையா? இல்லை திருதிராஷ்டிரன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க விரும்பாத ஒரு பாசத்தின் காரணமாகவா...............

..................................................................................................................

காந்தார தேசத்திலிருந்து தப்பி வரும் குட்டி இளவரன் சகுனி ஒரு சபதம் செய்கிறார். தனது நாட்டை சின்னா பின்னப் படுத்திய பீஷ்மரின் நாட்டையும் வம்சத்தையும் அழிப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் படிப்படியாக காய் நகர்த்தி பாரதப் போருக்கு காரணமாக அமைந்து கௌரவர்களையும் பாண்டவர்களின் மகன்களையும், ஏராளமான போர்வீரர்களையும் அழிக்கிறார். ஏறக்குறைய தனது சபதத்தில் வெல்கிறார்.

எதிர்மறை நாயகனாக பெருவாரியான வெற்றிகளைக் குவித்த சகுனி .. மகாபாரத்தின் நாயகனா? வில்லனா?

...........................................................................................................
மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர். ஐவருக்கும் மனைவியாக திரவுபதி...




.............................................................................................

நடுநிசி நாய்கள் V.2 ( ஆண்-பெண் உல்டா)

தமிழ்நாட்டில் பெண் உரிமை, பெண் முன்னேற்றத்திற்கான படங்கள் பல வந்துள்ளன. நாமும் பல படங்கள் பார்த்துள்ளதால் இனிமேல் படம் எடுக்க போகும் நண்பர்களுக்காக எவ்வாறு பெண் உரிமை படங்கள் எடுக்கலாம் என்று சிறு பார்வை.

1.பெண் உரிமை படம் என்றால் அந்தப் பெண் வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கவேண்டும். ஒன்று அவள் வருமானத்தை நம்பித்தான் அந்தக் குடும்பமே நடக்க வேண்டும். அல்லது அந்தக் குடும்பத்தில் அவள் ஒரு கெஸ்ட் போல வந்து போக வேண்டும்.


2. அவள் மற்றும் அவள் தோழியைத் தவிர அனைவரும் அவளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும். அவளது மேலதிகாரி அவளைக் கற்பளிக்க முயற்சிக்க வேண்டும்.


3.நாயகிக்கு யாராவது ஒரு டம்மி பீஸ் காதலன் ( காவலன் அல்ல)  இருக்க வேண்டும். ஆனால் இறுதிக் காட்சியில் அவர் நாயகியின்  தங்கை அல்லது தோழியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

4. நாயகியின் தாயார் இறுதிக் காட்சியில் ( முறைப்படியே)  கர்ப்பம் தரிப்பதைக் காட்டினால் தமிழத் தாய்க்குலங்கள் கண்ணீர் வடிப்பார்கள்.

5. ஏதாவது ஒரு சோகக் காட்சியில் அல்லது துக்கப் பாடலில் நாயகின் மாராப்பு நழுவுவது போல காட்சி அமைக்க வேண்டும். ஜாக்கெட்டை கழட்டுவது போல காட்சி வைத்தால் சிறந்த் இயக்குநர் என்ற பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

6.மூச்சை இழுத்து இழுத்து பேச வேண்டும்.

7. துவக்கப் பாடல் காட்சியில் ஒண்ணும் தெரியாத பாப்பா போல வரவேண்டும்.

8. பெண் காவல் அதிகாரி பற்றிய படம் என்றால் அவரைத் தவிர அனைத்து ஆண், பெண் காவல் அதிகாரிகளும் கெட்டவர்களாக முறை தவறியவர்களாகவே இருக்க வேண்டும்.


9. பெண் அரசியல் வாதிகள்  அரசியலில் முன்னேற இருக்கும் வழிகளைப் பற்றி விவரித்து படம் எடுக்கலாம். ( உதாரணம் : லாரன்ஸ் நடித்த ராஜாதிராஜா )


10. நவீனகால படமான நடுநிசி நாய்கள் படத்தை உல்டா செய்து ஒரு பெண் பல கொலைகள் செய்வது போல எடுக்கலாம். கொலைகள் மட்டும் செய்வது பல படங்களில் வந்து விட்டதால் கதையின் பின்புலத்தையும் சேர்த்து உல்டா செய்தல் நலம்.  அப்படி ஒரு படம் வந்தால் அது உலக அளவிலேயே தமிழனின் பெருமையை தூஊஊஊக்கி நிறுத்தும்.   அரங்கேற்றம் படம் வந்த போது ( பல ஆண்டுகள் கழித்து நாங்கள் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட பலமான அதிர்வுகளை ஏற்படுத்தும் படமாக இது அமையும்.











Monday, March 7, 2011

சங்க நிர்வாகியின் மனந்திறந்த கடிதம்( தொழில்வளர்ச்சியின் பொருட்டு)

அகில உலக கிரிக்கெட் கோப்பை நிர்வாகிகளுக்கு,

ஐயா,

எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் சங்கம் வைத்து இருக்கிறோம். நீங்கள் சில பல ஆண்டுகளாக உலக்கோப்பை போட்டிகளை நடத்திவருவதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் போட்டிகளை வளர்த்த விரும்புகிறோம். தரத்தினையும் வெகுவாக உயர்த்திட விரும்புகிறோம்.


உங்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி எங்கள் நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 23 கிரிக்கெட் மட்டைகளும் 86 கிரிக்கெட் பந்துகளும் விற்பனை ஆகி உள்ளன. சென்ற ஆண்டைவிட இது மிக மிக அதிகம்.

நீங்கள் மனதுவைத்தால் எங்கள் நாட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெடை இன்னும் அதிகரித்துவிடலாம். எங்களுக்கும் எங்களைப் போன்ற வளரும் நாடுகளுக்கும் உலக் கோப்பை போட்டிகளில் வாய்ப்புத்தாருங்கள்.


நாங்கள் உள்ளே வந்தால் கிரிக்கெட்டில் மேலும் மேலும் பல சாதனைகள் புரிய உதவியாக இருப்போம். இந்த உலகக் கோப்பையையே எடுத்துக் கொள்ளுங்கள். மிக வேகமான சதம். அதிக ரன் குவிப்பு, குறைந்த ரன்களில் அவுட் ஆக்குதல் போன்ற பல பல பல சாதனைகள் எங்களைப் போல வளரும் நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில்தானே நடைபெறுகின்றன.

ரசிகர் எல்லோருக்குமே நாங்கள் விளையாடும் போட்டிகள்தான் பிடிக்கின்றன

அதைவிடுத்து ஏற்கனவே விளையாடிய நாடுகளிடையேயான போட்டிகளைப் பார்ப்பதற்கே வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாங்கள் களம் இறங்கினாலே எதிர் அணியினரின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் வாந்தி பேதி வருகிறதாம் .அந்த அளவிற்கு பயப் படுகிறார்கள்.

முக்கியமான செய்தி ஒன்று. எங்கள் நாட்டில் வீட்டிற்கு வீடு டி.வி. உள்ளது. எங்கள் கருத்தையும் மனதில் வைத்து.  அடுத்த உலகக் கோப்பையின் போது பதினாறு குழுக்களாகப் பிரியுங்கள். அதில் முதலிடம் பெறும் அணியை வைட்த்து ஒரு ஸ்வீட்16 நடத்துங்கள்.  பின்னர் வளக்கம்போல் போட்டிகளை நடத்திக் கொள்ளுங்கள்.  குழுவில் முதலிடம் பெற ஒவ்வொரு அணியும் கடுமையாக உழைப்பார்கள். எங்களோடு மோதும் போட்டியில் தோற்றால் எல்லாம் முடிந்து என்பதால் ஆட்டமும் நன்றாக இருக்கும்.  எங்கள் நாட்டுக் கிரிக்கெட்டும் வளர்ந்துவிடும்

நன்றி 

இப்படிக்கு
சப்ளிங் நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்
( தேசிய அளவிளான தனியார் அமைப்பு)

http://www.sufvillage.co.uk/content/images/Events/pw_history/cricket_field.jpg

Monday, February 14, 2011

கா...த...ல...ர் தி..ன...ம்

சொல்லிவிடலாம்

ஆனால்

என்ன ஆனால்

சொன்னபிறகு

சொன்னபிறகு?

ஏற்க மறுத்தால்

மறுத்தால் மறக்க வேண்டியதுதானே!

மறக்கும் மனம் இருந்தால்

இருந்திருந்தால்?

நினைக்கவே முடியவில்லையே


மறப்பதை நினைக்கவே

முடியவில்லையே


பின்னர்

நினைத்ததை மறப்பது என்பது...,

தொடக்கம் என்றிருந்தால்


முடிவு என்றும்


ஒன்று இருக்குமே


முடிவே

வேண்டாம் என்றுதானே

சொல்லவே வேண்டாம் என்று

மனம் சொல்கிறது

ஒரு நாள்

பல நாட்கள்

ஒரு வாரம்

பல வாரங்கள்

ஒரு மாதம்

பல மாதங்கள்

பல மாதங்கள் தாண்டி

சில ஆண்டுகள் கூட

ஓடிவிட்டன

கல்லூரி வாழ்க்கைகூட

கடைசி நாளில் சொன்னால்கூட


^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

சொல்லி இருந்தால் கூட...,





^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
சொன்னதால் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்.

Sunday, February 6, 2011

வலிமையான இந்திய கிரிக்கெட் அணி வெல்லப் போகும் உலககோப்பை

இந்த உலகக் கோப்பைப் போட்டியிலாவது இந்தியா கோப்பையை வெல்லுமா? என்ற எண்ணத்தில் பலரும் உலகக் கோப்பையை நோக்கி எதிர்பார்க்கும்போது நமக்கு நாமே திட்டத்தின்கீழ்  சில கேள்விகளை நானே கேட்டு நானே பதில் சொல்லி இருக்கிறேன். விருப்பப் படுபவர்கள் பின்னூட்டத்தில் பதில்களைச் சொல்லலாம்.
http://www.bollywoodworld.com/wp-content/uploads/2009/06/bipasha-basu-dhoni-reebok-photo.jpg


1. இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? 

வலிமையான அணி என்று சொல்லுகிறார்கள். பெட்டிங்கில் இந்தியா அணிதான் வெல்லுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

2. அதுதான் உண்மை நிலவரமா? 

சூதாட்டக்காரர்களிடம் நேரடித் தொடர்பு இருப்பவர்கள் மூலமாகத்தான் பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருகின்றன.

3.இந்திய அணிவெற்றி பெறும் அளவுக்கு  வலிமையாகத்தான் இருக்கிறதா?

பேட்டிங் ஓகே தான்.

பந்து வீச்சு ..,  இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று சொல்லுபவர்கள் கூட பந்து வீச்சில் ஆச்சரியம் நிகழும் என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்று சொல்ல மறுக்கிறார்கள்.

4.அதனால் குடியா முழுகிவிடும்?

வலிமையா பேட்டிங் மூலமாக 400 ரண்கள் எடுத்தால் எதிரணியினர் 401 சுலபமாக எடுத்து விடுவார்கள் அவ்வளவுதான்.

5. இந்தியா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்.?

தொடக்கப் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் துவக்க விக்கெட்களை வீழ்த்த வேண்டும்.

6. பந்து வீச்சாளர்களால் தான் வெற்றி பெற முடியுமா?

வெற்றியை முழுமையாக்க பந்து வீச்சாளர்களால்தான் முடியும். அப்படித்தான் சரித்திரம் சொல்கிறது.

7.பேட்டிங்தான் வலிமையாக இருக்கிறதே! அதனால் சமாளித்துவிட முடியாதா?

இதற்கு முன் ஒவ்வொரு முறை உலகக் கோப்பைக்குபோன ஒவ்வொரு அணியும் வலிமையான பேட்டிங் வரிசைதான்.  இதற்கு முந்தைய உலகக்கோப்பையில் இருந்த வலிமையான இந்திய அணிகள் எல்லாம் முக்கிய ஆட்டங்களில் சச்சினுக்குப் பின்னால் வரிசையாக பின் தொடர்ந்ததுதான் நாம் கண்டது.

8. அப்படியென்றால் ஐ.சி.சி தர வரிசையில் முதல்,. இரண்டாம் இடங்களில் இருப்பது என்பதெல்லாம்........,

புள்ளிகளின் அடிப்படை என்பது வேறு, தொடர் வெற்றி பெறுவது என்பது வேறு,  முதல் இடம் அமைவதற்கு தொடர் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை.

9. உலகக் கோப்பை யை இந்தியா வெல்ல கடுமையாக விளையாட வேண்டும் அல்லவா..,

அது உண்மைதான். ஆனால் ஐ.பி.எல் மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் பல வீரர்களுக்கு இருக்கிறது.  அப்போதுதான்  நல்ல சம்பளம் பெற முடியும்.  எனவெ ஐ.பி.எல் வரை உடல் தகுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

10. உலக் கோப்பையை விட ஐ.பி.எல் முக்கியமானதா? 

 பிரிமீயர் என்றழைக்கப் படுவதுதானே முக்கியமானதாக இருக்க முடியும்

Saturday, January 29, 2011

அரவிந்தசாமியும் மணீஷாவும்


அது ஒரு காதலர் தினம்। நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது।। ஒரு வி।ஐ।பி। வருகிறார் என்று ஊரே பரபரப்பாக இருந்தது। எங்களுக்கும் ஒரு பரபரப்பாக இருந்தது। எங்கள் நண்பன் அரவிந்தசாமி, மணிஷாவிடம் காதலைச் சொல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்। அவர்கள் காதலை சொல்லிக் கொள்ளவில்லையே தவிர மற்றபடி காதலர்கள்போல்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்।
அவர்களுக்கு அடிக்கடி பாடங்களில் சந்தேகம் வரும்। அதை சரி செய்ய இவர் இருக்கும் இடத்திற்கு அவரும் அவர் இடத்திற்கு இவரும் வருவார்। ஓரே வகுப்புதான்। ஆனால் செயல்முறை வேறுவேறு இடங்களில்।। அருகில் இருக்கும் எங்களிடம் எல்லாம் சந்தேகம் கேட்க மாட்டார்கள்। இவர்கள் ஒன்றாக படிப்பது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத காரணத்தால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றே நினைக்கிறேன்। பொதுவாக இது போன்று ஆரம்பிக்கும்போது மற்ற நண்பர்களை வெட்டி விடுவார்கள்।
லஷ்மி காம்ப்ளக்ஸில் என்னமோ வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான்। அரவிந்தசாமி। । கல்லூரி விடுதியில் மதிய உணவு எடுத்தபின் கிரிக்கட் ஒன்பிச் விளையாடிக் கொண்டிருந்தபோது காந்தி புரத்தில் குண்டு வெடித்ததாக செய்தி வந்தது। இவன் வேற அங்கதானே போயிருக்கிறான்। ஒன்றும் புரியவில்லை। யூனிட்ஸ்க்கு என்ன ஆச்சோ என்று என் ரூம்மேட் வேறு புலம்ப ஆரம்பித்தான்। மனிஷாவும் அவனுக்கும் ஒரே இடத்தில் செயல்முறை வகுப்பு இருப்பதால் அப்படி।
சிறிது நேரம் கழித்தபின் நிஜமாகவே எங்களுக்கு படபடப்பு அதிகம் ஆனது। நாங்கள் சென்று பார்த்து வர வேண்டும் என்றால் எங்கள் சீணியர் மாணவர்கள் அனுமதிக்கவில்லை। (யாரும் வண்டி கடன் கொடுக்கவில்லை)। மாலைப் பொழுது ஆனது। அவர்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லை। ஆனால் ஊரில் ஆங்காங்கே குண்டு வெடிப்பதாக மட்டும் தகவல் வந்து கொண்டே இருந்தது। இந்த நேரத்தில் அரவிந்தசாமி வீட்டில் இருந்து வேறு பத்திரமாக இருக்கிறீர்களா? என்று போண் வேறு செய்துவிட்டார்கள்। அப்போது செல்போன் கிடையாது।
மிகக் கொடுமையான நேரங்கள் அது। அந்தநேரத்தில் அடுத்த தகவல் வந்தது। மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலேயே குண்டுவெடித்தது। செவிலியர்கள் பலி। மற்றும் படுகாயம்। யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்। உலகப் போர் காலத்தில் கூட மருத்துவமனைக்குள் குண்டு வெடித்து கிடையாதாம்।
நாங்கள் என்ன செய்ய முடியும் அரவிந்தசாமியின் வீட்டிலிருந்து மீண்டும் போன் வந்தால் என்ன சொல்வது। கூப்பிடுகிறோம் என்று சொல்லி வைத்துவிட்டோம்। அதன்பிறகு போண் பிசியாகவே இருந்தது। எல்லா மாணவர்களையும் அவர்கள் வீட்டில் விசாரித்துக் கொண்டிருந்தனர்।। இரவும் வந்துவிட்டது। அப்போது மருத்துவ மனையை விசாரித்து ரெண்டும் இருக்கா என்றும் கேட்டோம்। ஒரு தகவலும் இல்லை।
மருநாள் காலை। கோவையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை। ஆனால் மருத்துவ கல்லூரி படுவேகத்துடன் இயங்கி கொண்டிருந்தது। வேகமாக மருத்துவ மனைக்குச் சென்று காயம் அடைந்தவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்று எல்லா பகுதிகளையும் சுற்றி சுற்றீ வந்தோம்। மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிய வேலை ஒன்றும் கிடையாது என்றாலும் அன்று பார்க்க வருபவர்களுக்கு கூட நிறைய வேலை இருந்தது।
ஒவ்வொரு முறை சுற்றும் போதும் தப்பித்து விட்டார்கள் என்று மனம் சந்தோஷப் படும்। அடுத்த வினாடியே இப்போது ஏதும் கொண்டுவந்திருப்பார்களோ நாம் சரியாய் பார்க்கவில்லையோ என்று துக்க பட வைக்கும்। உடனே மீண்டும் ஒரு சுற்று। நரக வேதணை என்பது அதுதான்। இப்போது கூட அன்று கண்ட காட்சிகள் குலைநடுங்க வைக்கின்றன। அடுத்த மூன்று நாட்களும் எல்லா வார்டுகளையும் சுத்தோசுத்து என்று சுத்தி ஒருவழியாக நிலமை கட்டுக்குல் வந்தது।
,
இவர்கள் என்ன ஆனார்கள்।? அங்கேதான் விதி।। காதலர் தினத்தை கொண்டாட முதலில் தேர்ந்தெடுத்த இடம்। ஈச்சனாரி பிள்ளையார் கோவில்। அவ்விடம் ஊரின் நுழைவாயிலில் இருக்கிறது। அங்கேயே செய்தி கிடைத்த உடன் அப்படியே அவனது பைக்கில் பொள்ளாச்சிக்கு (சொந்த ஊர்) போய் மணிஷாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டான்। மறுநாள் அவன் மாணவர் விடுதிக்கு போன் போட்டிருக்கிறான்। நாங்கள் பயிற்சி மருத்துவர்களுடன் இருந்திருக்கிறோம்।எங்களுக்கு மூன்று நாள் கழித்து தெரிந்தது.



எப்படியோ என்னோட ரூம்மேட் யூனிட்ஸ்க்கு ஒன்னும் ஆகல என்று மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

 ==========================================================
மீள்பதிவுதான், முதலில் வெளியான தேதி முதல் பின்னூட்டத்தில்

Wednesday, January 26, 2011

சிவாஜி கணேசன் { ரகசிய} பேட்டி

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது  இந்த ஒலிச் சித்திரத்தை கேட்க நேரிட்டது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntcal2011FP.jpg

சில சுவையான தகவல்கள் :
1. ஆண்களுக்கு பெண்களை விட நளினம் அதிகம்
2. இன்றைய படங்களில் நீளமான வசனம் இல்லையே என்று பிள்ளைகள் வருத்தப் படுகிறார்கள்.
3. சக நடிகர்கள் ஒத்து வந்தால் மட்டுமே ஒத்திகை இல்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறேன்.
4.தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது தவறே இல்லை.
5.கொடுத்து வாங்குவதுதான் நல்ல முறை
6. I belong to periyar
7.சிவாஜி கணேசனின் 125வது பட விழாதான் அண்ணா பேசிய கடைசிக் கூட்டம்.

முழுப் பேட்டியையும் கேட்க இந்த இடத்தைச் சுட்டுங்கள்

டிஸ்கி;- இது நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் ரகசிய என்ற பெயரை திணிக்க நேர்ந்திருக்கிறது

Monday, January 24, 2011

மகர ஜோதியின் எதிர்காலம்

மகரஜோதி மனிதன் ஏற்றுவதா இல்லை தானே தோன்றுவதா என்பது பற்றி நீதி மன்றத்தின் மூலம் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

இதில் மகரவிளக்கு மனிதன் ஏற்றுவது என்றும் மகரஜோதி தானே தோன்றுவது என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். இதில் இவ்வளவு தூரம் குழப்பம் தேவையே இல்லை என்பதுதான் நம்து கருத்து.


மக்ரஜோதி மனிதன் ஏற்றுவது என்று சொன்னால்மட்டும்  இதனை சாதாரண விளக்காக் பார்க்கும் எண்ணம் வந்துவிடும் என்பது சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகரஜோதி மனிதன் ஏற்றுவது செயற்கையானது என்றெல்ல்லம் முழுவதும் நிரூபித்தால் கூட  மக்கள் ஆண்டுகொருமுறை இறைவனுக்காக ஏற்றப் படும் புனித தீபத்தைக் கண்டால் மாபெரும் புண்ணியம் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். இதே போல்தான் இருப்பார்கள். 


மகரஜோதி இறைவனின் வடிவம் இயற்கையின் பிரதி என்றால் சொல்லவே வேண்டாம்.   அப்படியென்றால் அதை எப்படி கண்டறிவது ? அப்படி ஒரு வழி இருந்தா;ல் அந்த வழியிலேயே போய்  இயறகையையே வென்றுவிடலாமே . எப்படியோ  ம்கரஜோதிச் செய்திகள் மக்ரஜோதியை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கின்றன. 


Sunday, January 23, 2011

நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

சுமித்ரா, நக்மா இரண்டு பேரும் காணாமல் போனது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாடா...,,, தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்றது என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஏறக்குறைய கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன... இந்த சூழலில் எங்கள் தானைத் தலைவர், அன்பு அண்ணன், கடமைதவறா மாவீரன் டயபாலிக் எங்களை அழைத்தார். அவர் வகுப்புத் தலைவர் அல்லவா..., பொறுப்பு பொங்கி வழிந்தது....

என்னடா..,

போயி ரெண்டு பேரெயும் கூட்டிட்டி வாங்கடா..,

ரெண்டில்ல

ரெண்டோடு ரெண்டு நாலு..........


நாங்கூப்டாவல்லாம் வரமாட்டா.......... வேற யாராயவது அனுப்பு,


கடுப்பானார் டயபாலிக். சற்று கோபமாகவே சென்சார் செய்யக்கூட கூச்சப்படும் வகையில் தனது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி டயபாலிக் எங்களுக்கு உத்தரவிட்டார்..
==========================================================


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம்பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. சுட்டிகளைப் பயன்படுத்திப் படித்துவிடுங்கள்.
=========================================================

முதல்பகுதியில்


எங்களில் முதலில் திருமணம் ஆனது சுமித்ராவிற்குத்தான். இன்னும் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அனைவரும் இருந்ததால் சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.

(ஒரு ஞாபகத்துக்காக) கதை சுபமாகத்தான் முடியும்

=========================================================

வரவர டயபாலிக் ரொம்ப பண்றாண்டா..,, இவளுகல்லாம் வந்தா என்ன? போனால் என்ன? இவளுகப் போயி தேடச் சொல்றாண்டா.. புலம்பிக்கொண்டே வந்தான் சச்சின்.., அறிவைத் தவிர எல்லாம் வளர்ந்திருக்கும். அவ என்னைக்காவது நம்மள மதிச்சிருக்காளா? அவள ஏண்டா நம்ம தேடணும். சச்சினுக்கு நக்மா என்றாலே அலர்ஜி.. அல்ர்ஜி என்றால் சாதாரண அலர்ஜி அல்ல. அனாபைலாகிக்ஸ் என்று சொல்லக் கூடிய அளவு அதி தீவிர அலர்ஜி. கடுப்பின் உச்சத்தில் டயபாலிக்கை கொதறிக்கொண்டே இருந்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்களின் காதலர்கள் என்ற லேபிளில் ஆள் இருக்கும் போது தன்னை அனுப்புவதில் இன்னும் பெரிய கோபம்.

வாடா.., இன்னொரு முறை லால்பாக் சுத்திப் பார்க்கலாம். சற்று சமாதானப் படுத்திக்கொண்டே லால்பாக் கில் வலம்புரியாக சுற்ற ஆரம்பித்தோம். நண்பன் இங்கிலீஷ் குப்பனும், அஜித்தும் இடம்புரியாகச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

250 ஏக்கர் பரப்பலவில் பரந்துவிரிந்து கிடக்கும் பெரிய பூங்கா அது. தோட்டங்களாகவே பரவிக்கிடந்தது. அதில் செடிகளிலேயே கடிகாரம் செய்து வைத்திருந்தனர்.

டேய் அங்க பாரு சச்சின் கூவினான். என்னடா ட்ரெஸ் இது ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியல..............

போடா. இந்த ஊர்ல நெரயாப் பெண்கள் ஜீன்ஸ் போடறாங்க........ வந்த வேளையைப் பாரு..

ஆனா இந்த மாதிரி எந்தப் பொம்பளயும் ஜீன்ஸ் போட மாட்டா. எவ்ளோ பெரிய கூலர்ஸ் போட்டிருக்கா பாரு. நான்கூட வழியில வாங்கலாம்னு சொன்னேன். நீதான் மஞ்சுளா( உலகம் சுற்றும் வாலிபன் நாயகியேதான்) கண்ணாடி மாதிரி இருக்குன்னு சொல்லீட்டே.....

நாங்கள் போகும் வழியில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அங்கு உள்ள பெட்டிக்கடையில் 20அல்லது30 ரூபாய் கண்ணாடிகள் குவித்துவைத்திருந்தனர். அதைக் கேட்டு சச்சின் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். நாங்கள்தான் கேவலமாக இருப்பதாகச் சொல்லித்தடுத்துவந்தோம். ஆனால் அதே மாதிரி கண்ணாடி இங்கே இன்னொரு பெண்..

பாதுகாப்பான தொலைவுக்கு சச்சினை அழைத்துவந்துவிட்டு நாங்கள் இருவரும் அந்த நாகரீக மங்கையை நோட்டமிட ஆரம்பித்தோம். ஒரு கையில் ஏதோஒரு சிப்ஸ், இன்னொரு கையில் வேறொரு ஐட்டம்.

டேய் வாக்மேன் பாருடா...

இல்லடா அவ பொண்ணுதான்.., எனக்கு நல்லாத்தெரியுது.

நானும் அதைத்தாண்டா சொல்றேன்..

வாக்மேன் எங்க மாட்டியிருக்கா பாரு...

எங்கே என்று வாய் கேட்டாலும் கண்களுக்கு அந்த இடம் கிடைத்துவிட்டது..

அந்த பெண் அணிந்திருந்த டி-சர்ட்டின் நெஞ்சுப் பகுதியில் வாக்மேனை செருகிக் கொண்டு இரண்டு கைகளிலும் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு அந்தப் பெண் நடந்துகொண்டிருந்தாள்.. வாக்மேன் கருவி சற்று எடை கூடிய கருவி என்பது அது மாட்டிய இடத்தை கீழே இழுத்ததில் இருந்து எங்களால் உணரமுடிந்தது.

அவள்ந்டையே வேறொரு மாதிரி இருந்தது. அப்போது அந்த அவளின் தோழிப் பெண் வந்து சேர்ந்தால். தோழியைப் பார்த்த உடன் எங்களுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. அந்த நாகரீக வேற்று கிரகவாசி நக்மாதான் என்று.. வேகமாக அவள் அருகில் சென்றோம்.

நக்மா எங்கள் வகுப்பில் இருந்தாலும் கடந்த ஒரு ஆண்டில் அவளை நாங்கள் (நான்) அவ்வளவு அருகில் இருந்து பார்த்ததில்லை. தவிரவும் புடவை கட்டி கோட் போட்டுப் பார்த்த ஜீவராசியை நாகரீகக் கண்கொண்டு பார்த்ததில் எங்களுக்கு அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுவிட்டது. தனது ரசனையும், நக்மாவின் ரசனையும் கூலர் விஷயத்தில் ஒன்றாய் அமைந்தது சச்சினுக்கு மிகுந்த சந்தோஷம். டயபாலிக் எது செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும்டா.. (டயபாலிக்கின் பாத்திரம் வித்தியாசமானது அவர் எது சொன்னாலும் அவரது நண்பர்கள் அவரைத் திட்டுவார்கள். ஆனால் அவர் சொல்வதைத்தான் கேட்பார்கள்)

போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் டயபாலிக்குக்கே

என்ற எண்ணமே டயபாலிக் யின் நண்பர்களுக்கு இருந்தது.

டயபாலிக் யை புகழ்ந்து கொண்டே நக்மாவுடன் கடலை போட ஆரம்பித்தான். சச்சினுக்கு கல்லூரி வாழ்க்கையில் அதுதான் முதல் கடலை. அதுவே நன்கு விளைந்து கொண்டிருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நடுவில் வாக்மேனின் கேசட் கூட மாற்றிவிட்டான்.அவள் இரண்டு கையிலும் வைத்திருந்த நொறுக்கு தீனிகளை கைகளை மாற்றாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவன் பேசிக்கொண்டே இருந்தபோதிலும் காதில் இருந்த இயர்பீஸை கழட்டாமலேயே சச்சினுடன் கடலை போட்டுக் கொண்டுவந்தாள் நக்மா, கூடவே அல்லக் கையும்

பத்தடி தள்ளி நானும் அவர்கள் பின்னாலேயே பேருந்துவுக்கு வந்து சேர்ந்தேன்.

பேருந்தில் சுமித்ராவும் உட்கார்ந்திருந்தாள். இங்கிலீஸ் குப்பனையும் அஜித்தையும் பார்த்தியா? இது நான்



நாங்க ஏன் அவனுகள பார்க்கணும்? வழக்கம் போல் சுமித்ரா உதார்விடத்தொடங்கினாள்

உங்க ரெண்டு பேரையும் தேடிட்டுத்தான் வந்தானுக...

நாங்க என்ன சின்னப் பொண்ணுகளா... தொலஞ்சு போக சுமித்ரா கொஞ்சம் அமைதியாக பதில் சொன்னமாதிரி இருந்தது.

உங்களுக்காகத்தான் வண்டி ஒருமணிநேரம் காத்துக் கிடக்கு. இது இன்னொரு தோழி.

அவர்களைப் பார்ர்கவே இல்லை என்று சொல்லிவிட டயபாலிக் கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்கச் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் இங்கிலீஷ் குப்பனும் அஜித்தும் வந்து சேர்ந்தனர்.

கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு வந்துக்கிட்டே இருக்க வந்ததும் கோபத்துடன் அஜித் சொன்னான்.

சுமித்ராவின் தோழி:- நான் அப்பவே சொன்னேன். இவதான்

கூப்ட்டா போகதடி. விவகாரம் புடிச்சவனுக ன்னு சொன்னா..

இங்கிலீஷ் குப்பன்:-உங்களத்தேடி நாங்க வந்தா எங்களுக்கு அல்வா கொடுத்துட்டு சுத்துரியா

சுமித்ரா:-இங்க பாரு நீ எங்கள தேடி வருவேன்னு எங்களுக்கு எப்படித் தெரியும். ஏதோ ரவுசு உடறேன்னு நினைச்சு அப்படிச் சொன்னேன். நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற.. முதல்ல வாய மூடு..

இங்கிலீஷ் குப்பன் பயங்கர கடுப்புடன் அடிங்க்............... என்று சொல்லிக் கொண்டு பாய்ந்தான் . மூடு என்பது அவர்களின் வட்டாரச் சொல்லில் ஒரு கெட்டவார்த்தை என்பது அதன்பின் தான் எங்களுக்குத் தெரிந்தது.

திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான் சுமன்குமார்

=========================================================

தொடரும்

Thursday, January 20, 2011

சூடு 20.1.11.

இப்போதைய பயங்கர சூடான இடுகை
முதலிடத்தில் இருக்கும் இந்த இடுகை   திரு .ராஜன் அவர்களால் எழுதப் பட்டுள்ளது.பகவத் ஆச்சார்யா என்பவர் தனது மனைவியுடன் மற்றும் சில குழந்தைகளையும் இணைத்து வெளியிட்ட குறும்படங்கள் பற்றி எழுதியுள்ளார்.

கலை மற்றும் வெளிப்புறப்படப்பிடிப்புகளைப் ப்ற்றி புகழ்ந்து எழுதியுள்ளார். க்ளைமாக்ஸ்ஸில் கரசேவை பற்றியும் எழுதியுள்ளார்.

============================================================

இரண்டாவது சூடான இடுகை திரு ஜாக்கி சேகருடையது. வழக்கம்போல் புகுந்து விளையாடி இருக்கிறார்.  சபரிமலையில் சம்பவத்தின் துவக்கத்தில் தடியடி நடந்தது என லேசாக பொறுத்திப் ஓட்டுள்ளார்.

ஒரு பிரிண்டர் வழியாக குழந்தை பிறப்பது போல ஒரு கார்ட்டூன் கொடுத்துள்ளார். குழந்தை பிறப்பு என்பது. பிரிண்டரில் பேப்பர் வருவது போல என்பது மிக மேம்போக்கான உதாரணம். குழந்தை பிறப்பு இதைவிட கடுமையானது. பார்ப்பதற்கு மிக சுலபம் போல இருந்தாலும் பிரிண்டரில் பேப்பர் பழுதடைவது போல குழந்தைகளும் கொஞ்சம் ஏமாந்தாலும் சிக்கல்தான்.

பிரசவகாலத் துணை பற்றி எழுதியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா? தமிழக்த்தில் பிரசவ நேரத்தின்போது துணையாக இருக்க்ப் போகும் பெண்ணுக்கு பிரசவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்

=====================================================================

சி.பி.செந்தில்குமாரின் இடுகை இது. கவுண்டர் அட்டாக்கில் இருக்கும் இடுகை.  ஆன்லைனில் 10 பேருக்கும் குறைவாக இருந்தால் புது இடுகை போடுகிறாராம். நாங்களெல்லாம் ஒருநாளைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் கீழே இருந்தால்தான் புது இடுகை போடுவோம்.

==============================================================

மின்னல் அவர்களின் சூடான இடுகை ஒரு பத்திரிக்கைச் செய்தி அடிப்படையிலானது.

======================================================


=========================================================

பரிசல்காரன் அவர்களின் இடுகையும் சூடாகவே இருந்தது. இவரும் கூட சபரிம்லை விபத்து பற்றி அவர் பார்த்த நபரின் கருத்தை எழுதி யுள்ளார்.  அலைபேசிக்கு பதிலாக மின்னஞ்சல் உபயோகப் படுத்தப் போவதாக ஒரு நண்பர் தெரிவித்ததாக தெரிவித்து இருக்கிறார்.  அந்த 19 ரூபாய் மேட்டர். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று?

=============================================================

காவலன் பாதுகாப்பாக இருக்க விஜயின் சிரமங்களை வருண் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள இடுகையும் சூடான இருக்கிறது.

=============================================================

ஆளுக்கொரு கேள்வி   கேள்வி இருக்கும் ஜீவன்சிவத்தின் கேள்விகளும் இளமையானவை. எப்போதும்  ஆளும்கட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சியை பார்த்தும் எப்போதும் ஆளும்கட்சியைப் பார்த்தும் கேட்கக்கூடிய கேள்விகள். நாளை சிலம்பரசன் முதல்வரானாலும் இந்த கேள்விகளின் அடிப்படையில் சும்மா கிளீகிளி என்று கிளிக்கலாம்.

=================================================================


பச்ச புள்ள நிலாவ புடிக்க ஆசப்பட்ட மாதிரி......ன்னு தொடங்கி ஒரு வசனம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும். அப்படி ஆசைப்பட்ட ஒரு பச்சைக்குழந்தையின் கதையை விசா எழுதி இருக்கிறார்.


====================================================





நட்டநடுராத்திரியில், வெளிநாட்டு பாணியில்......,

கல்லூரியில் நண்பன் வீட்டில் goat cutting. எங்களை அழைத்திருந்தான். பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் போகும் வழியில் வீடு. {ஆனால் அதை ஊர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவனே அதை தோட்டம் என்றுதான் கூறுவான்}.


அவனது குடும்பம் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். அவனது தந்தை திருப்பூரில் ஏற்றுமதியாளர். தவிர நிறைய விவசாயம். சுருக்கமாகச் சொன்னால் சூரிய வம்சம், நாட்டாமை சரத் குமார் வீடு மாதிரி. அவனது அண்ணன் சென்னையில் பொறியியல் துறையில் ஏதோ வேலை. அவனது அக்கா குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில்தான் goat cutting. [கிடா வெட்டும் நிகழ்ச்சிதான்]



வசதி படைத்த குடும்பம் அல்லவா.. அதில் உணவுகள் எல்லாம் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தினர். வீட்டின் கீழ்ப்பகுதியில் தலைவாழை இலைபோட்டு சோறு, கூட்டு, குழம்பு, ரசம், பொறியல், வடை, ஆடு, முட்டை, கோழி என்று அமர்க்களப் படுத்தி இருந்தார்கள். எங்களுக்கு மாடியை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர்.

நாங்கள் ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போல் நினைத்திருந்தார்களோ என்னவோ.. எங்களுக்கு உணவே வேறா மாதிரி இருந்தது. பஃபே முறை. நான், ஃபிரைடு ரைஸ்.. இன்னபிற பெயர் தெரியாத உணவுவகைகள் [மட்டுமே].


பார்த்த உடனேயே எங்களுக்கு ஒரே ஏமாற்றம் . இருந்தாலும் சமாளித்துக் கொண்டோம். இருந்தாலும் தட்டைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சாப்பாடு வாங்கத்தொடங்கினோம்.

டேய்.. மணி... நண்பனின் பால்ய சிநேகிதர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. அதே நேரத்தில் கீழே உள்ள சொந்தங்களுக்கும் சப்பாத்தி, காளான், கறி வகையறாக்கள் சிறப்பு உணவாக வழங்கப் படுவது தெரிந்து அவர்களும் வர ஆரம்பித்தனர். சின்ன அறையில் வெளியே வராமல் உள்ளேயே நின்று கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அந்த அறையின் மொத்த கொள்ளளவினையும் தாண்டி............ வெளியே செல்லவும் வழியின்றி.... மறுபடியும் வாங்க படியேறி வரவேண்டுமே...... ஒரே நேரத்தில் எல்லாப் பொருட்களையும் தட்டில் வாங்கிக் குவித்து மொத்தமாய் பிசைந்து சாப்பிட...


எப்படியோ ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம். கீழே வந்தால் எல்லோரும் தலைவாழை இலைபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எங்கு பஃபே முறையில் சாப்பிட்டாலும் அந்தக் காட்சிதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

Monday, January 17, 2011

தமிழ்மண விருதுகள்- ஒரு (மாதிரியான) பார்வை

தமிழ்மணத்தில்  சென்றவருட சிறந்த பதிவுகள் விருதுகள் அறிவித்துவிட்டார்கள். முதலில் விருது வழங்கியவர்களுக்கு நன்றிகளையும் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்.


பொதுவாக எந்த ஒரு கதை அல்லது படைப்புகளைப் பொறுத்த மட்டிலான போட்டி என்றால் அது நடுவர்களின் மனதிற்கு அல்லது அவர்களின் மனதில் உள்ள த்ராசின் கணிக்கப் பட்ட அளவிலானதுதான். எனவே இது போன்ற போட்டிகளில்  வெற்றிபெறாதவர்கள் கவலைப் பட வேண்டியது இல்லை என்பதே நமது கருத்து. அதை ஏற்கனவே வெறொரு இடுகையில் கூறியுள்ளேன்.


ஆனால் தமிழ்மணம் விருதுகள் என்பது முற்றிலும் வேறுபட்டது. அது ஓட்டுக்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது. வாசகர்கள் ஆகட்டும்.  பதிவர்கள் ஆகட்டும் . அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரே ஒரு ஓட்டுத்தான் உண்டு.  அனைத்து மனிதர்களுக்கும் ஒரு நல்ல எண்ணம் மற்றும் பலவீனம் ஒன்று உண்டு. அதாவது தனது நண்பர்கள் முன்னிலை பெறவேண்டும்.  என்றே எண்ணுவார்கள். எனவே தங்கள் ஓட்டுக்களை பெறும்பாலும் ந்ந்ந்ந்ந்ந்ந்ந்நெருங்கிய நண்பர்களுக்கு அளிக்கவே விரும்புவார்கள். அவை போக மிச்சம் மீதி ஓட்டுக்கள் இருந்தால் அதை மற்ற நபர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள். எனவே  பெரும்பாலும் அதிக நண்பர்கள் உள்ளவர்கள் மற்றும் அதிக நண்பர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்கள் ஆகியோரே இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறமுடியும்.  அதிலும் அதிக நண்பர்கள் கணீனி வைத்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் வெற்றிபெற்ற இடுகைகளில் மூன்றாம் கட்ட நடுவர்கள் தேர்ந்தெடுத்தால்கூட முதல் இரண்டு கட்டங்களில் வெல்வது என்பது ஓட்டுக்களின் அடிப்படையில்தான்.

எனவே தமிழ்மணத்தில் சிறந்த இடுகைகளில் எழுதியும் முதல் இரண்டு கட்டங்களை தாண்டவில்லை என்று நினைத்தால் மற்றும் அடுத்த ஆண்டில் இந்த விருதுகளைப் பெறவேண்டும் என்று நினைத்தால் வாக்குரிமை படைத்த அனைவரையும் நேரில் சந்தித்து  அவர்களின் அன்பினைப் பெற்று அவர்களது வாக்கினையும் பெற முயற்சி செய்தால் கண்டிப்பாக அடுத்த ஆண்டு விருதுகளையும் பெற்றுவிடமுடியும்.  அதே ஓட்டுரிமை பெற்ற அதிக நண்பர்கள் இருந்தால் உங்கள் பதிவு  அடிக்கடி பரிந்துரைக்கப் பட்ட பதிவாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் ஏழு ஓட்டுக்கள் இருந்தாலே போதுமானது. பின்னர் என்ன புகுந்து விளையாடுங்கள்.

என்ன செய்தார் எம்.ஜி.ஆர்...?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவ்ர்களின் 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.
........................................................................................................................

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள்.


அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்.ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி.. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.



திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!


லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.


சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.


லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?


துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!


ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!


சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!


சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!


குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!


சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.


திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.


சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.


திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.


சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!


திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.


ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு.
‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’
னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!


சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.


ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.


சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரைஇருக்கணுமே!


குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.


சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!


கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!


திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி!
‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’
ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்

எனக்கு நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.

...................................................
ஒரு திரைப் படத்தில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.


இன்று சொல்லுகிறார்களே.." மக்கள் விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறோம்." எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுக்கு யார் பொறுப்பு? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் திரையலகத்தில் இருந்த காலத்தில் இருந்த எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?

  • இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.


அவர் மிகக் குறைவாக வசனம் பேசும் நடிகராக வெறும் பொழுதுபோக்கு நாயகராக அவரை பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக ஒரு செய்தி. அவரே தயாரித்து அவ்ரே இயக்கிய படம் நாடோடி மன்னன். நான் அவன் இல்லை. என்று கூறிவிட்டு எம்.என். ராஜம் அவர்களிடம் பத்து நிமிடம் விடாமல் வசனம் பேசுவார். அதில் நவீன தொழில்நுட்பங்கள். காமிராவை கண்டபடி நகர்த்திக் கொண்டும் அவரும் கண்டபடி நடந்து கொண்டும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். நாற்பது வருடங்கள் கழித்துதான் அந்த உத்திகளை மற்றவர்கள் பரவலாக உபயோகப் படுத்தினார்கள்.

அதே போல் அவரது நூறாவது படம்கூட அவரது விருப்பக்கதைதான் அமைந்தது.



தாயைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். தன்னையே நினைத்து கனவுகாணும் பெண்கள் தன் மனைவியாக இல்லாத சூழலில் தங்கையாகவே நினைக்க வேண்டும் முதலான கருத்துக்களை தொடர்ந்து திணித்து வந்து கொண்டிருந்தவர் அவர்.


எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர். கூண்டுக்கிளி படத்தில் கூட எரியும் சிகரெட்டை கையில் வைத்திருந்து தூக்கியெரிந்து விடுவார். ஒளி விளக்கில் மது அருந்த நினைத்து பாட்டிலை எடுத்தவுடன் மனசாட்சி வந்து அவரை கண்ட படி திட்டுமாறு பாட்டு அமைத்திருப்பார்கள். இன்று சட்டம்போட்டு செய்யும் வேளையில் மனக் கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டியவர் அவர்.

அவர் வில்லனாக நடித்த நினைத்ததை முடிப்பவனில் அவருக்குமுன்னால் சிகரெட் பிடிப்பவர்களை உடனே அடித்துவிடும் குணாதிசயம் படைத்தவராக வருவார். அந்தப் படம் வெளிவந்த காலத்தில்தான் நமது பகுதிகளில் வளர்ந்துவந்த நாகரிகம் அது. அதனை வெளிப்படையாக எதிர்க்கும்வண்ணம் அந்தப்பாத்திரப்படைப்பு அமைந்திருந்தது.


அவரது 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.

Sunday, January 16, 2011

சின்னப் பசங்களுக்கு எச்சரிக்கை. மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று ஏதாவது ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்வது.


சில உறுதிமொழிகள் உங்கள் உதவிக்கு:-

  • 1. காலையில் எழுந்ததும் கண்விழிப்பேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் தினமும் பல்விலக்குவேன் என்றும் குளிப்பேன் என்றும் உறுதி எடுப்பது கொஞ்சம் ஆபத்தானது.
  • 2.காலையில் காஃபி போடும் வேளையை இனிமேல் மனைவியிடம் கொடுத்துவிடுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் சோறு கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.
  • 3. அடிக்கடி முகம் கழுவுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் மேக்கப் போடுவேன் என்று எடுத்து விடாதீர்கள் செலவு தாங்காது.
  • 4. சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விடுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று உறுதிமொழி எடுப்பது ஆபத்தானது. கிட்டப் போனால் முட்டம் பகை என்று பழமொழியே இருக்கிறது. அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு வரமாக அமையும்.
  • 5. தினமும் இருசக்கரவாகனத்தில் செல்லலாம் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் உங்களுக்கு லிப்ட் கொடுப்பவர்கள் உங்களையும் வண்டி எடுத்து வரச் சொல்லும் அபாயமும் குறைந்தபட்சம் எரிபொருள் நிரப்பச் சொல்லும் வாய்ப்பும் இருக்கிறது.
  • 6.மது, புகை ஆகியவற்றை நிறுத்துமாறு உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். பத்தாவது முறையாக இருபதாவது முறையாக என்று சாதனை அளவுகளை குறித்துக் கொள்ள முடியும். ஆனால் உங்களை ரஜினிக்கு எதிரானவராக காட்டும் வாய்ப்பு இருக்கிறது.
  • 7.சினிமா பார்க்க மாட்டேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் ஐங்கரன் முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் நஷ்டமடைய நீங்கள் மறைமுக காரணமாகவும் உலக பொருளாதாரம் வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பேர்க்க வேண்டி வரலாம்.
  • 8.ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றலாம் என்று முடிவு செய்யலாம். அனைத்து போஸ்டர்களையும் வேறொருவர் ஒட்டிவிட்டு உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கலாம்.
  • 9.ஏதாவது விளையாட்டு வீரனாக மாறி மாடலிங் உலகில் நிறைய சம்பாதிக்கலாம் என உறுதி எடுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பிரபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் குறைந்தபட்சம் நாசர், டெல்லி கணேஷ் போன்றவர்களுக்கு போட்டி கொடுக்கமுடியுமா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
  • 10.கல்லூரி மாணவர்கள் யாரையாவது காதலிக்கலாம் என உறுதி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கொலை கேசில் மாட்டும் வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.

உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்பது நமது மன உறுதிக்கும் செயலாற்றும் தன்மைக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். என்வே எடுக்கும் உறுதி மொழி உறுதியாக அமைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ இந்த புத்தாண்டில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..


புத்தாண்டுடன் பொங்கல் கொண்டாடிவிட்டு வீரவிளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கே சுட்டுங்கள்.

Wednesday, January 12, 2011

நடிகை கண்ணாம்பாவின் கதாபாத்திரத்தில் நடிகை சோனா

வெகுநாட்களுக்கு பிறகு குறுந்தகட்டின் உதவியுடன் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயர் எடுத்துப்போடும்போது தென்பட்டது. கதாநாயகன் பெயரோடு சேர்ந்து  கீழே கடைசியில் தென்பட்டது. திரைப்படத்தின் துவக்கத்திலேயே தட்சசீலத்தை வென்றுவிட்டு  நாயகன் நாடுதிரும்புகிறார். அவரது புகழை பறைஅறிவிப்பவர் சொல்லும்போதெல்லாம்  குதிரை திரையின் ஒருபக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஓடுகிறது,

நாயகன் குணாளன் நேராக சென்று நாட்டின் பேரரசர் சாம்ராட் அசோகரைச் சந்திக்கிறார்.  அசோகர் கலிங்க போருக்குப் பின் சண்டையே போட்டதில்லை என்று சொல்கிறார்கள். கரீனா கபூரின் கண்ணீருக்குப் பின்னர் அவர் புத்தமதத்தைத் தழுவி விட்டதாக ஷாருக்கான் எங்களுக்குச் சொல்லிக் கொடுந்திருந்தார். இருந்தாலும் எம்.கே.தியாகராஜ பாகவதர் தட்சசீலத்தில் கலகக் காரர்களை ஒடுக்கி திரும்புவதாக ஒரு வசனத்தை பின்னர் வைக்கிறார்கள்.

குணாளன் தனது தந்தையைச் சந்தித்த உடன் தந்தை மணமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அவருக்கு அவரது சிற்றன்னையை அறிமுகப்படுத்துகிறார், குணாளன் போரில் இருந்த நேரத்தில் அவரது தந்தை மகாச் சக்கரவர்த்தி அசோகர் மணம்புரிந்து கொண்டாராம். அந்த சித்தியின் பெயர் மனத்தில் நிற்கவில்லை,. ஆனால் அவரை அழைக்கும்போதெல்லாம் த்ரிஷா என்ற உச்சரிப்பே எனது காதில் விழுந்தது. தந்தையின் மனைவியாக கண்ணாம்பா நடித்திருந்தார்,  கண்ணாம்பா என்றதும் மனோகரா கண்ணாம்பா உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நினைவிற்கு வரவேண்டியவர்  மனோகரா டி.ஆர் ராஜகுமாரி. அவரைவிட தளுக்கும் குளுக்கும் நிறைந்த ( வர்ணனை உதவி:- வசனகர்த்தா இளங்கோவன்)  உடல்மொழியுடன் கண்ணாம்பா வலம்வருகிறார்.

அவருக்கு பார்த்த உடனேயே எம்.கேடி.யை பிடித்துப் போய்விடுகிறது. அவரை அடையத்துடிக்கிறார், பலானபலான திட்டங்கள் போடுகிறார். சிறப்பாக அலங்கரித்துக்கொள்கிறார். அசோகரின் மூலமாக குணாளனை அந்தப் புரத்திற்கு அழைத்துவந்து பாடச் சொல்கிறார், தந்தையின் முன்பாக மகன் சிற்றன்னையின் அந்தப் புரத்தில் பாட்டுப் பாடுகிறார். கடவுள் வர்ண்ணை மாதிரி பாடுகிறார்.  அதில் கண்ணாம்பா மிகவும் மனம் உருகிவிடுகிறார்.

அவசர வேலை காரணமாக தந்தை அசோகர் வெளியே கிளம்ப மகன் குணாளன் அந்தப் புரத்தில் பாடுவதை தொடருகிறார்.

உன்னை கண்டு மயங்காத பேர்களுண்டோ....,

இந்தப் பாடல்கூட கடவுள் பக்தி பாடல்தானாம்.

சிற்றன்னை சொக்கிப் போய் நடனமும் ஆடுகிறார். இந்தப் பாடல் முடிந்த உடன் எம்.கே.டியை வழிக்குக் கொண்டு வர கண்ணாம்பா பல இலக்கிய விவாதங்களில் ஈடுபடுகிறார்.  இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்தால் சோனா பத்துக்கு பத்து மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்.

ஆனால் சோனாவால் இவ்வளவு பெரிய இலக்கிய விவாதத்தில் ஈடுபடமுடியுமா என்று தெரியவில்லை.

எம்கேடி அறிவுரை கூறிகிறார், இந்த நிலையில் அசோகர் அந்தப்புறத்தில் நுழைய குணாள் குற்றம்சாட்டப் பட்டு நாடுகடத்தப் படுகிறார்.

இளவரசன் குணாளுக்கு  ஆதாரவாக ஒரு பிட்சு பேசுகிறார், அவரை எண்ணெய் கொப்பரையில் போடுமாறு  உத்தரவிடுகிறார். புத்தபிட்சு எண்ணெய் கொப்பரையில் போட்ட உடன் தாமரையாய் மாறி தப்பிவிடுகிறார், இதை கேட்ட அசோகர் பிட்சு மகான் என்பதாக உணர்ந்து படுத்தபடுக்கையாகிவிடுகிறார்.


இவருக்கு வைத்தியம் பார்க்க வரும் வைத்தியரின் மகனாக இளம்வைத்தியராக என்.எஸ்.கிருஸ்ணன் வருகிறார், அவரை கண்ணாம்பாவின் அந்தரங்க தோழி மதுரம் ஆசைப் படுகிறார், அவரை தன்வழிக்கு கொண்டுவர அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார்,  அவரது பேச்சு சன் ம்யூசிக் நிகழ்ச்சிகளிடையே வரும் வாயாடிகளின் குழைவிற்கு நிகராக அமைந்திருக்கிறது. அதுவு,ம் காதல் நோயால் தான் வாடுவதாக இளம்வைத்தியரிடம் சென்று மருந்து கேட்க அவர் பல ஓலைச்சுவடிகளை எடுத்துப்படிக்க அவரது கைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கும்.

எம்.கேடி.யின் மனைவி காஞ்சனை தனது சின்ன மாமியாரைப் பார்த்து தனது கணவனை மீட்க உதவி கேட்க செல்கிறார். இவருக்கு சின்னமாமியாருக்கு முன்பே திருமணம் ஆகியிருக்கும்.  அங்கு தன் கணவன் மேல் சின்ன மாமியார் ஆசைப் படுவது புரிந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.

மகேந்திரனிடம் அடைக்கலமாகி இருக்கிறார் குணாள். அவருக்கு சில கடிதங்கள் வருகின்றன. மகேந்திரனாக நடித்திருப்பவர் எம்.ஜி.ராம்சந்தர். அதாவது பிற்கால எம்.ஜி.ராமச்சந்திரன் (எ) எம்.ஜி.ஆர் அவர்கள்.

குணாளின் மனைவி மூன்று மாத கர்ப்பம் மற்றும் கடும் ஜூரம் என்று கடிதம் வர யாருக்கும் தெரியாமல் நாடுதிரும்பி தனது மனைவியைப் பார்க்க அந்தப் புரத்திற்குள் நுழைகிறார். அந்தப் புரத்தில் அவரது சிற்றன்னை ஒரு முன்னேற்பாட்டுடன் உள்ளே தங்கியிருக்கிறார்.

-----------------------------------------------------------------------------

இந்தக் காட்சியில் மின்சாரம் போய்விட்டதால் படத்தை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது படத்தைப் பார்த்துவிட்டு மீதவிமர்சனத்தை எழுதிவிடுகிறேன்.

இதன் தொடர்ச்சி இங்கே உள்ளது

Sunday, January 9, 2011

தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்

ஒருவழியாக இந்த ஆண்டில் பொழுதுத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

எந்திரன் படம் போல விரும்பி வருபவர்களுக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் விருந்தளிப்பதற்கான ஐ.பி.எல். விரைவில் வெளிவரப் போகிறது. அதற்கான ஏலமும் ஒப்பந்தமும் நடந்து கொண்டே இருக்கின்றன.  சச்சின். டோனி போன்றவர்களை அந்தந்த அணியிலேயே ஒரு சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொண்டார்கள்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் வீரர்களை ஏலம் விட்டத்தில் சச்சின், டோனி போன்றவர்களை விட காம்பீர் அதிகச் சம்பளம் பெற்றிருக்கிறார்.

ஒருவேளை சச்சின், டோனி போன்றவர்கள் கூட பொது ஏலத்தில் வந்திருந்தால் அதிகம் சம்பாதித்து இருப்பார்களோ?

=============================================================

கங்கூலியும் கூட ஏலத்தில் விடப் பட்டார்கள். சின்ன பையன்களைக்கூட எடுப்பவர்கள். கங்கூலியை எடுக்காமல் விட்டுவிட்டார்கள். யானை படுத்தாலும், குதிரை மட்டம்தானே?  தெரியவில்லை.  அவரைவிட திற்மையான 11 பேர் அணியில் தேர்வாவது போல இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ள முடியவில்லை. வெகு வெகு சிறிய ஆட்டக்காரர்கள் கூட ஏலம் போய் இருக்கிறார்கள். ஆனால் கங்கூலி இல்லை.

இந்த ஆண்டு கங்கூலிக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு சச்சின், டோனி போன்றவர்களுக்கு ஏற்படாது என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் அப்ப்டி சூழல் வந்தால் கும்ளே மாதிரி நாகரீகமாக தப்பித்து விடலாம் அதுவரை அவர்களுக்கு நிம்மதி.


========================================================

பழைய கால திரைப்படங்களை போல ஏலம் நடைபெறும் இடத்தில் மட்டை, பந்து போன்றவற்றை கொண்டு வந்து ஒரு ஆட்டம் போட்டிருந்தால் ஏலம் எடுத்திருக்க மாட்டார்களா?

குறைந்த பட்சம் பழைய் ஆட்டங்களையெல்லாம் தொகுத்து ஒரு டிவிடி போட்டு அதை ஒரு சுற்று விட்டிருக்கலாமோ!

முதலிலேயே உச்ச நீதிமன்றம் போய் ஏலம் எடுக்கப் படுவதற்கு ஒரு தடையில்லா சான்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ!   ஏற்கனவே இவ்வாறு நடந்த நிகழ்வு பற்றி செய்தி இடத்திலும் அதைப் பற்றிய சில கருத்துக்கள் இந்த இடத்திலும் உள்ளன்.

தனது தீவிர ரசிகை ஒருவரை பினாமியாக போட்டு தனியாக ஒரு அணியை விலைக்குவாங்கி இருக்கலாமோ!

=================================================================
கிரிக்கெட் வீரர்களை இந்தப் பாட்டில் வைத்து கற்பனை செய்துபார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.., ஏனென்றால் ஐ.பி.எல் ஏலம் தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே இந்தப் பாட்டு வந்து விட்டது.



மின்னஞ்சலில் படிப்பவர்களுக்கு வீடியோ தெரியாதென்றால் இங்கும் லின்க் களில் ஒரு தட்டுத்தட்டி தளத்திற்குவந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

கள்ள ஓட்டுப் போடத் தெரியுமா?

நீங்கள் திரட்டிகளில்  பிடித்த பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் எண்ணம் கொண்டவரா?

நம் ஒருவர் ஓட்டு என்ன செய்துவிடும் என்று எண்ணுபவரா?


கள்ள ஓட்டுக்களை சரமாரியாகப் போடும் திறமை வாய்ந்தவரா?

எப்படி இருந்தாலும் இந்த இடத்திற்குப் போய் அதில் அதில் மறுமொழி எண் 11ஐப் படியுங்களேன்

Saturday, January 8, 2011

பணம் இல்லாத லைஃப்பும் பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும்

 பணம் இல்லாத லைஃப்பும்
பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும் போர்
மேல்  நாட்டு ஞானி சொன்னதாக ஒரு நகைச்சுவை நடிகர்

இன்று வீட்டிற்குள் நுழையும்போது ஆதித்யா ஓடிக் கொண்டிருந்தது.  எம்.ஜி.யார் படம் போல .  எம்.ஜி.ஆர் படம் ஓடிக் கொண்டிருந்தது.  எம்.ஜி.ஆர்  மேஜர் சுந்தர் ராஜனிடம் அவரது வீட்டில் வைத்துத்தான்  விவாதித்துக் கொண்டிருந்தார்.  தான் கட்ட மறுத்த அபராதத்தை ஏன் கட்டினீர்கள்?அபராதம் கட்டியதால்  தான் தவறு செய்யததாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடுமே என்று சொல்கிறார். அதற்கு நீதிபதியான மேஜர்  சட்டம் உன்னை குற்றவாளி என்றதால் உனக்கு தண்டனை  கொடுத்தேன். நீ நிரபராதி என்று எனது மனசாட்சி சொன்னதால் உனக்கான அபராதத்தை நான் கட்டினேன் என்கிறார்.

எனக்கு இதில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.  நீதிமன்றங்களில் குற்றங்களை ஆராயும்போது சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே நோக்கப் படுகின்றனவா? 

அதில் நீதிபதிகளின் சுய எண்ணங்கள் கருத்துக்களின் அடிப்படையிலான பார்வைகள் கொடுக்க மாட்டார்களா?

சட்டங்கள் , சாட்சியங்கள், வாதங்கள், பிரதிவாதங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகின்றன என்றால்  ஒரே பென்ச்சில் இருக்கும் மூன்று நீதிபதிகளில்  ஒருவர் வேறுகருத்து கொள்வது எப்படி?  மூவரில் இருவர் ஆளுக்கொரு கருத்து கொள்கிறார்கள் என்றால் மூன்றாமவர் சொல்லும் கருத்துதான் தீர்ப்பாக அமையுமா?  மூன்றாமவர் என்ன முடிவு எடுத்தாலுமே அது சட்டட்த்துக்கு உட்பட்டுத்தானே அமையும்.  அப்படி என்றால் குற்றவாளிக்கு  ஆதாரவான  நிலையை மூன்றாம் நபர் எடுத்துவிட்டால் குற்றவாளி விடுதலை அடைந்து விட மாட்டார்களா? 


அதாவது வாதங்கள் , பிரதிவாதங்கள் சாட்சிகளின் அடிப்படையில்தான் முதலாமவர் குற்றவாளி என சொல்லுகிறார். ஆனால் மற்ற இருவரும் அதே அடிப்படையில் அவரை நிரபராதி என்று கருதிவிட்டால் நீதியின் நிலை என்ன ஆகும்.      பலநேரங்களில் பென்ச்சுகளில் இந்த கருத்து மாறுபாடுகள் ஏற்படுகின்றன. 

அப்படியென்றால் குற்றவாளிக்கு அதிர்ஷ்ட்டக் காற்று அடித்தால் அவனுக்கு ஆதரவான எண்ணங்களைக் கொண்ட நீதியாளர்கள் வந்தால் விடுதலையாகிவிடலாமா?

======================================================================

மேலே சொன்ன தத்துவம் இடம் பெற்றிருந்த படம் ரிக்‌ஷாக்காரன், ஐசரிவேலன், சோ அவர்களிடம் சொல்லுவதாக காட்சி அமைந்திருந்தது.  நீதிபதி கூட ரிக்‌ஷாகாரன் படத்தினைச் சேர்ந்தவர்தான்.


http://icdn.raaga.com/catalog/cd/T/T0000766.jpg

Sunday, January 2, 2011

கலைஞர், மு.வ, சாலமன் பாப்பையா செய்த தவறு.

கலைஞர்,  மு.வ, சாலமன் பாப்பையா மூவரும் தனித் தனியே ஒரே தவறை செய்திருப்பதாக இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறார்கள் . ஒரு எட்டுப் ப்டித்துப் பாருங்களேன்.

முக்கியமாக அதில் அவர்கள் செய்திருக்கும் வாதம் கண்டிப்பாக படிக்க வேண்டியது.

Saturday, January 1, 2011

பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

ஆண்கள் , பெண்கள் விடுதி மாணவர்கள் மதியம் தாண்டியும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
முன்னிரண்டு நாட்களில் நடந்த கல்லூரி விழாவுக்காக விழிந்திருந்த அலுப்பும், முதல்நாளில் இரவில் நடந்த இசை இரவினை ரசித்த களைப்பும், விழாவில் சாதித்த ஒரு திருப்தியுமாக அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். விழாக்காலங்களில் கூட தங்கள் கடமை தவறாத மாணவ மாணவிகள் புத்தகங்களுடன் வீட்டுக்குச் சென்று விட்டதால் அப்போது விடுதிகளில் இருந்த அனைத்து மாணவ மாணவிகளும் விழாவில் பங்கெடுத்தவர்களாகவே இருந்தனர்.

எல்லோரும் எதாவது ஒரு போட்டியில் வென்ற இருந்தனர். சிலர் மேடை ஏறி பரிசு வாங்கி இருந்தனர். சிலர் முறைசாராப் போட்டிகளில் பரிசு வாங்கி இருந்தனர். முறை சாரா போட்டிகள் என்பது சற்று வித்தியாசமான போட்டிகள். வழக்கமான மேடை போட்டிகளுக்கு நடுவே போட்டி நடத்துபவர்கள் பார்வையாளர்களுக்கு நடுவே வந்து சில கேள்விகள் கேட்பார். அந்த கேள்விகள் பாட சம்பந்தமாக இருக்கலாம்.அல்லது முந்தைய போட்டியின் போட்டியாளரின் கருத்தில் இருக்கலாம், பார்வையாளருக்கு முன்னால், பின்னால் அமர்ந்திருக்கும் சக பார்வையாளரின் சட்டை, அல்லது புடவை வண்ணத்தை கூட கேட்பார்கள். மிகவும் எளிமையான கேள்வி அல்லது போட்டியாக அமையும். பொதுவாக கேட்கப் படும் பார்வையாளர் பரிசு பெறும் நோக்கிலேயே அந்த போட்டிகள் அமையும். எனவே எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதிலெல்லாம் கலந்து கொண்டு களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மாலை நேரத்தில் ஒவ்வொருவராக எழுந்து தேநீர் குடித்துவிட்டு வெளியே வந்து நடைபயில ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் சிறப்பு விடுப்பாக முதல்வரால் அறிவிக்கப் பட்டிருந்தது.

நடைபயிலும்போதே எல்லோருடைய கால்களும் பிள்ளையார் கோவிலை நோக்கியே அமையும். அது நடைமுறைச் சட்டம் ஆதலால் அவ்வாறாகவே நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது பிள்ளையார் கோவிலில் நண்பர் ஜில்லட்டின் குமார் ஒரு கூட்டத்தினைக் கூட்டி பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான்.
இங்கிலீஷ் குப்பனின் கொட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. சகமாணவிகளை மதிப்பதில்லை. பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட கொடுப்பதில்லை. எல்லோரும் ரசிக்கும் கலை நிகழ்ச்சிகளைக்கூட தனிநபர் தாக்குதல்களுக்கு உபயோகப் படுத்துகிறான். சமீபத்தில் நடந்த மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா நிகழ்ச்சியில் கூட பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறான். இதை வளரவிட்டால் நம் கல்லூரியில் பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும். நாமெல்லாம் கூடி பெண்ணுரிமையை காத்தே தீர வேண்டும்.

அவனது அந்தப் பேச்சினை அங்கே இருந்த சில பெண்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர். இதனை கண்டிப்பாக தட்டிக் கேட்டே தீர வேண்டும். என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். அந்தப் பெண்களில் சுமித்ராவோ போட்டிகளில் கலந்து கொண்டிருந்த பெண்களோ யாரும் இல்லை. ஆனாலும் ஜில்லட்டின் குமாரின் பேச்சிற்கு ஆட்கள் சேர்ந்து கொண்டிருந்தன்ர்.

-----------------------------------------------------------------------------------------------

குப்பன் கடந்த பல நாட்களாக தூங்காமல் இருந்ததால் மிகவும் அசந்து தூங்கிகொண்டு இருந்தான். இரவு எட்டுமணி அளவில் நண்பர்கள் எழுப்பினர்.

அரைதூக்கத்தில் இருக்கும்போதே சொல்ல ஆரம்பித்தனர்.

சுமித்ராவின் துப்பட்டாவை திருடிவிட்டதாக கல்லூரி முதல்வரிடம் புகார்கொடுக்க போறாளாம். சாட்சிக்கு நடன அரங்கில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் , அவன் சபதம் செய்தபோது அருகில் இருந்த மாணவர்கள், அவனை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்த சீனியர் மாணவர்கள், மாணிக் ஃபாத்திமா நாடகத்தினைப் பார்த்த ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் சாட்சிகளாகச் சொல்ல போகிறாளாம்.

இப்ப என்னடா செய்யறது?

தூக்கக் கலக்கத்திலேயே குப்பன் சொன்னான்..,

"நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது"


..............................................................................................................



தொடரும்


இதன் முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியையோ அல்லது அருகில் உள்ள சுட்டிகளையோ பயன் படுத்துங்கள்.

Saturday, December 25, 2010

இது............................................

நன்றி நண்பர்களே..,

வெகுகாலத்திற்குப்பின் நானும் 250 பிந்தொடர்பவர்களை எட்டிவிட்டேன்.  பதிவுலகம் 2009ன் தொடக்கத்தில் 250 பிந்தொடர்பவர்களை பெற்றவர்கள் எல்லாம் மிகவும் சாதித்தவர்களாகவே இருந்தனர். அதே நேரத்தில் ஒரு நண்பர் மிக வேகமாக 100 நண்பர்களைப் பெற்று சாதனை படைத்து அதே வேகத்தில் ஓய்வும் பெற்றார். அவர் பெயர்காரணமாகவே நான் எனது பெயரில் ஊர் பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். கடந்த சில மாதங்களாகவே கண்ணி முன் அமரும் நேரம் மிகக் குறைந்துவிட்ட காரணம் இருந்தாலும் அவ்வப்போது பதிவுலகத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  அலைபேசி மூலம் சில பல பதிவுகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

இப்போதெல்லாம் மிக விரைவில் அதிக நண்பர்களைப் பெற்று விடுகிறார்கள். நான் ஏறக்குறைய 100 நண்பர்களையும், 1 லட்சம் ஹிட்ஸ்களையும் இரண்டுநாட்கள் இடைவெளியில் பெற்றேன். அடுத்து அடுத்து என்று மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு  இப்போது 250 நண்பர்ரையும் பெற்றுவிட்டேன். 


இந்த நண்பர்களின் அன்புக்குத் தலைவணங்குகிறேன்.   இந்த நேரத்தில் யாராவது கழண்டு கொண்டால் மீண்டும்  250 பெறும்போது மீண்டும் இதை மீள்பதிவு போடுவேண் என்று எச்சரிக்கை செய்வதோடு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்


#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிசம்பர் மாத அரையாண்டு விடுமுறை வார வாழ்த்துக்கள்.


=================================================================
நேரம் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதையை ரீமேக் செய்து எழுதிய இடுகைக்கு ஒரு சென்று கருத்துக்களைக்கூறவும்.

Sunday, December 12, 2010

ரஜினி ரசிகர்கள் செய்யத் தவறிய வேலை நிறுத்தம்

எந்திரன் படம் பார்த்த்போது ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. படம் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் வசீகரனின் உழைப்பு மொத்தமாக வீணாகிபோவதுபோல படம் எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

அதிபுத்திசாலி ரோபோ சமுதாயத்திற்கு ஆகாதாம். என்ன ஒரு பலவீனமான ஒருவாதம்.  படத்தின் ஆரம்பத்திலிருந்தே வசீகரனை காமெடியாக்கி  வைத்த இயக்குநரை என்னவென்று சொல்வது?

போக்குவரத்துவிதிகளின்படி வண்டி ஓட்டத் தெரிகிறது. முன்னால் போகும் வண்டியை ஓவர்டேக் செய்யத் தெரிகிறது.   கேட்டால் புரகிராம் செய்திருக்கிறார்களாம். அதேபோல் மனிதர்களின் குறிப்பிட்ட உறுப்புகள் வெளியே தெரியாவண்ணம் வெளியே வரவழைக்ககூடாது என்று புரகிறாம் செய்து விட வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு சிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்ட வேண்டும்.

உணர்வுகள் இல்லாததால்தான். ரகசியம் கேட்ட புரபஸரிடம் பதில் சொல்ல மறுக்கிறதா சிட்டி?  அழுத்திக் கேட்கும்போது  டாக்டரிடம் கேட்டுக் கொண்டுவந்து சொல்கிறேன் என்கிறதா?

ஐஸ்வர்யாவின் துப்பட்டாவை இழுக்கும்முன் காப்பாற்ற வருகிறதா?

சிந்திக்கும் செயல் இல்லாததால்தான்  வால்யூம் அதிகரித்து  சவுண்ட் சிஸ்டம் உடைக்கிறதா?   ஜிப்பைக் கழட்டி பேண்ட்டை உறுவுகிறதா?

தடுமாறும் ஐஸ்வர்யாவுக்கு ஜிப்ஜாப் மூலமாகவும் பின்னர் ஸ்கேன் மூலமாகவும் பிட் கொடுத்து உதவுகிறதா?

துறைத் தலைவரே பிரசவம் பார்க்க தடுமாறும்போது தேவையான தகவல்களை வரிடைப் படுத்தி, எதை உபயோகிப்பது எதை ஒதுக்குவது என்பதை பகுத்தாய்ந்து பிரசவம் பார்க்கிறதா?  (இது மிகத் திறமை வாய்ந்த அறிஞர்களாலேயே பல நேரங்களில் சாத்தியம் ஆவது இல்லை)

ராணுவத்திற்கு யார் தேவை?

மேலதிகாரியின் உத்தரவை அப்படியே பின்பற்றும் போர்வீரனைத்தான் பெறும்பாலான தளபதிகள் விரும்புவார்கள். அரசுப் பணியில் முதலில் கட்டளையை நிறைவேற்று. பின்னர் எதிர்ப்பை தெரிவி, என்றுதான் சொல்கிறார்கள்.

எதிர் நாட்டு மக்களுக்கும் நம் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அழித்துவிடும் என்கிறார்கள். இதுவரை எந்த யுத்தத்தில் நல்லவன் கெட்டவன் பார்த்து போர்வீரர்கள் செயல்பட்டு இருக்கிறார்.

எதிரிகளின் மேல் செலுத்தும் ஆயுதங்கள் செலுத்துபவர்களை பதம் பார்த்த சம்பவங்கள் யுத்த களத்தில் சாதாரணம். அதேபோல்  விலைபோன மனிதர்கள், எதிரிக்காக செயல்பட்ட நபர்களும் அதிகம்.  ஆனால் இது போன்ற ஒரு சொத்தைக் காரணத்தைக் காட்டி சிட்டியை நிகாரித்துவிடுகீறார்கள்.


நாட்டின் பிரதமரையே மெய்காப்பாளர்களை வைத்து முடித்த சம்பவங்களையெல்லாம் பார்த்து விட்டோம்.   இதில் சிட்டியால்தான் உலகம் அழியுமாம். என்ன கொடுமைடா சாமி?


முதல்வன்படத்தில் அர்ஜீனின் ஆட்சியால் தமிழகம் முன்னேறியதுபோல  சிட்டியின் சேவையால் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் காட்டி படத்தை முடித்திருக்க வேண்டும் இயக்குநர். படம் வெளியான அன்றே ரசிகர் அனைவரும் உலகம் தழுவிய வேலை நிறுத்தம் செய்திருந்தால்  ஒருவேளை இயக்குநரும், படத் தயாரிப்பாளர்களும் பணிந்திருப்பார்களோ?

ரசிகர்களின் வேலையே படம் பார்ப்பதுதானே?

 ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த பத்து ரஜினி படங்களைப் பற்றி எழுதியபோது பத்து ரஜினி படங்களின் கதைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சொல்லி படங்களை கேட்டு ஒரு இடுகை போட்டிருந்தேன்.  அதில் மூன்று படங்கள் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கின்றன. நேரம் இருந்தால் கண்டுபிடியுங்களேன்

Saturday, December 11, 2010

இந்த ஹீரோக்களெல்லாம் யாருப்பா?

ரஜினியை அரசியலுக்கு யாரெல்லாம் கூப்பிடுறாங்க.  அப்படி கூப்பிடும் நபர்கள் எல்லோரையும் ரஜினிக்குத் தெரியுமா என்று கேள்விகேட்டால் அந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது பதிவுலகில் பலரும் இதே தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்கும் இந்த தலைப்பில் பதிவு போடவேண்டும் என்ற ஆசை.  எனனை யாராவது கூப்பிட்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் என்னைக் கூப்பிட்ட அந்த நண்பருக்கு நன்றியையும் அவரது பதிவினைப் பார்க்காததற்கு  அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இந்த இடுகையை ஆரம்பிக்கலாம்.

1. திரைப்படம் எண் ஒன்று

ஒரு வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன். அவனது முதலாளி ஆசைப் பட்டதற்காக  ஒருபெண்ணை தூக்கிக் கொண்டுவந்து கொடுக்கிறான்.
அந்தப் பெண்ணை முதலாளி கெடுத்து கொண்றுவிட  அந்த வேலைக்காரனுக்கு அந்தப் பெண் சிறுவயதில் தொலைந்துபோன தனது தங்கை என்று தெரிய  முதலாளியை பழிவாங்க சபதம் ஏற்று நண்டூறுது நரியூருது என்று பாடுவார்.  அந்த ஹீரோ யார்?

2. திரைப் படம் இரண்டு.

இரண்டு நண்பர்கள். முதல்நபர் அலுவலகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவரது அடிபொடிபதவியில் இருப்பர். பதவிக்காரர் ஒரு அஜால்குஜால் பேர்வழி.   அவரால் கெடுக்கப் பட்ட ஒருபெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று மணந்துகொள்கிறார். அந்தப் பெண்மணி இவரை தெய்வமாக வழிபடுகிறார். தெய்வத்திற்கு கரைப் பட்ட பூவைத் தரமாட்டேன் என்று  பலான விஷயத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார். ஹீரோ அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானும் என்று பாட்டுப் பாடுவார். அந்த ஹீரோ யார்?

3.திரைப் படம் எண் மூன்று.

முறைப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு ஒரு பெண்குழந்தை பெற்றுக் கொள்கிறார். முறைப் பெண் இவரை விட்டு விலகி விட அவரது தங்கையை திருமணம் செய்து கொள்கிறார். பழைய மனைவி பிற்காலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து வர அவரை பெற்றவர்கள் முதல் அனைவரும் ஒதுக்கிவைக்கிறார்கள். அவர் இறந்த உடன் தனி நபராக ஈமச் சடங்குகள் செய்கிறார் ஒரு ஹீரோ.  அவர் யார்?   இதில் மகளாக நடித்தவர் பின்னர் ஜோடியாக நடித்தார். விரைவில் அம்மாவாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது

4. திரைப்படம் எண் நான்கு

40வயதைத் தாண்டிய ஒரு ஹீரொயின் அவரது வய்தை ஒத்த ஹீரோவை வைத்து ஒரு படம் எடுத்தார்.  அந்த ஹீரோவுக்கு சின்ன வயது தம்பி, நடக்கமுடியாத தங்கை, வயதான் தாயார். இப்படி இருக்கு மூளையில் கட்டி.  அந்த நேரத்தில் ஊரில் ஒருபிரமுகர் கொல்லப் பட அவரைக் கண்டுபிடித்தால் பரிசாக ஒருபெரிய தொகை அறிவிக்கப் பட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவராக அதில் சிக்கிக் கொள்கிறார். சிறையில் இருக்கும்போது  மயக்கம்வர அவரது கட்டியைஅரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி விடுகிறார்கள்.  இப்போது தன் வக்கீல் காதலியிடம் உண்மையைச் சொல்ல அவரை வெளிக் கொண்டுவர வழி தெரியாமல் தவிக்க  மைக்கேல் டிசௌசா ட்ரூ கிறிஸ்டியன் என்று அறிமுகம் ஆகி  சண்டையெல்லாம் போட்டு கடைசிக் கட்டத்தில் குண்டுகள் துளைக்கப் பட்ட நிலையில் வெகுநேரம் போராடி ஹீரோவைக் காப்பாற்றிய சின்ன ஹிரோ யார்?

5. திரைப்படம் என் ஐந்து
சென்ற படத்தில் ஹீரோ பெரிய அண்ணனாகவும், சின்ன ஹீரோ அடுத்த அண்ணனாகவும் இன்னொரு தம்பியுடன் நடித்த படம்.  சகோதரர் 2, 3 இருவரும் அண்ணியின் கொடுமை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற  காலங்கள் ஓடுகிறது, 2க்கு 1ஐ அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். 2. ஒரு கொலைவழக்கில் மாட்டிக் கொள்ள 1 தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து வாதாடி சகோவை காப்பாற்றுகிறார். அந்த நடு சகோதரர் யார்?


6 திரைப் படம் எண் 6, 7.
ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள்.  ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.

முதலாளியை திருமணம் செய்து கொண்டு பின்விளைவுகளை ஒரு படமாகவும், தொழிலாளியை திருமணம் செய்துகொண்டு ஒரு படமாகவும் தந்து மக்களை மகிழ்வித்த நடிகர் யார்?

7. திரைப் படம் எண்8
ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?

8. திரைப் படம் எண் 9
ஒரு சராசரி மனிதன். அவனது தந்தைக்கு வாக்குக் கொடுத்தபடி தனது மாற்றாந்தாய் குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டுவர வாழ்க்கையை தியாகம் செய்துவிடுகிறார். அவர் அதில் வெற்றிபெறும் நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நபரை பார்க்கிறார். அந்த மனிதர் நம் ஹீரோ பெரிய தாதாவாக நாயகன் கமலஹாசன் போன்று இருந்த காலத்தில் நன்கு அறிந்த்வர். நமது ஹீரோ மீது கொலை முயற்சியும் செய்தவர். சூழ்நிலை அவரது மகளையே நமது ஹீரோ திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது.

இந்த ஹீரோ யார்?


9. திரைப்படம் எண் 10. 

சின்னத்தம்பி பிரபு மாதிரி ஒரு ஹீரோ. அவருக்கு கடவுள் அவரது வாத்தியார். பல வித்தைகளை வாத்தியார் கற்றுக் கொடுக்கிறார். ஒரு கால கட்டத்தில் அவர் கோபம், தாபம் பற்றியும் சொல்லிக் கொடுக்கும்போது  வாத்தியாரின் காதலியை இவர் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்தம்பி பிரபுதானே என்று அலட்சியமாக கொடுத்த பிரச்சனை ஆகிவிடுகிறது.  வாத்தியாரின் காதலியிடம் தன்னைக் காதலிக்குமாறு கெஞ்சும்போதும்,  வாத்தியாரிடம் தனக்காக காதலியை விட்டுக் கொடுக்குமாறு பேசும்போதும் ஒரு ரொமான்ஸ் ஹீரோவை நாடு இத்தனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவே தோன்றும். பின்னர் அவரே வில்லனாகி காதலியை குழந்தை பெற்றுத் தருமாறு மிரட்டும்போது பகிரென்று இருக்கும். அந்த ஹீரோ யார்?


=====================================================================

ஹீரோ பேர் எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். படத்தின் பேரைச் சொல்லுங்கள்.

Monday, November 8, 2010

நிறுத்துங்கள் மனிரத்னம் அவர்களே! (கேபிளாரின் இடுகைக்கு தொடர் இடுகை)

மனிரத்னம் எடுக்கப் போகும் அடுத்த உல்டா படத்தின் விவரத்தை கேபிளாரின் 
கொத்து பரோட்டா-08/11/10   படித்த போது நெஞ்சே வெடித்துவிடும் போல ஆகிவிட்டது.




வழக்கமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்து அவருக்குப் பிடித்த மாதிரி ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்து உலகத் தரம் வாய்ந்த சில படங்களின் காட்சிகளை இனைத்து என்னைப் போன்ற எளியனுக்கு உலகப் படக் காட்சிகளை பார்க்கச் செய்யும் புண்ணியம் மனிரத்னம் அவர்களையே சாரும்.

அவர் இப்போது எடுக்கப் போகும் படம் பொன்னியின் செல்வன் கதையாம்.

பொன்னியின் செல்வன் கதை உங்களுக்குத் தெரியும் அல்லவா?

ஒரு மகாராஜா,  அவரால் நடக்கமுடியாது. வயோதிகர்.

அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள்.

மூத்தமகனின் ஆக்ரோஷம் தாங்காமல் அவரை நாட்டின் வடபகுதிக்கு அனுப்பி நாட்டைக் காப்பாற்ற அனுப்புகிறார்.  இளையவரை நாட்டில் அனைவருக்கும் பிடிக்கிறது.
http://farm2.static.flickr.com/1065/729656299_d493d29968_o.jpg

இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும்,  இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும்,  அவரது காதலனும்  இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.


தமிழகம் இன்று இருக்கும் நிலையில் இந்த மாதிரிப் படம் இப்போது வேண்டாமே. அவர் அதை இந்தியில் எடுத்தாலும் தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.

ஐயா மனிரத்னம் அவர்களே தயவு செய்து தமிழ் நாட்டை விட்டுவிடுங்கள்.

உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.


Monday, September 6, 2010

மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

இது என்னோட மானப் பிரச்சனை, சுமித்ராவோட துப்பட்டா என் கைக்கு வந்தாகணும்; அந்த இத்துப்போன அட்டுக்கு நான் யாருன்னு காட்டியாகணும்.
 http://static.ibnlive.com/pix/sitepix/04_2010/manisha_wed630x420.jpg
இங்கிலீஷ் குப்பன் ஆக்ரோசமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு அதி பயங்கர தீவிரம் இருந்தது. சுமித்ராவிடம் விட்ட சவாலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணமும் பட்டொளிவீசி பறந்து கொண்டிருந்தது.

----------------------------------------------------------------------------------

ஏற்கனவே கெட்ட வார்த்தை பேசியதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு இந்தச் சுட்டி.

சுமன் - சுமித்ரா சவாலையும் அப்போது ஏற்பட்ட சண்டையும் அறிய இந்தச் சுட்டி.

கதையின் முந்தைய பகுதிகளுக்குப் போக இந்தச் சுட்டி
--------------------------------------------------------------------------------------------------

ரொம்ப சிம்பிள்டா.., ஆண்கள் விடுதிக்கும், பெண்கள் விடுதிக்கும் ஒரே சலவை தொழிலாளிதான். அவரை நாம கரெக்ட் பண்ணிடலாம். நிகழ்ச்சி நடக்கும்போது துப்பட்டா நம்ம கைக்கு வந்துவிடும்.

நண்பர் ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் நான் பத்து நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை அந்த அன்கோண்டா துப்பட்டாவ சலவைக்குப் போடவே இல்லை.

சலவைத் தொழிலாளி நம்மள ஏமாத்துறாரா?

அப்படி ஒன்னும் தெரியலயேடா... நான் தினமும் பைனாக்குலர் மூலமா துணி காயப் போடும் இடத்தை தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

-----------------------------------------------------

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுமித்ராவுக்கெ நெஞ்சு அடைப்பது போல ஆகிவிட்டது. சவால் விட்டிருந்தாலும் கூட அதற்கு இவ்வளவு மும்மரமாக இங்கிலீஷ் குப்பன் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பான் என்று அவள் துளிகூட நினைத்துப் பார்க்கவில்லை. அதுவும் பெண்கள் விடுதியின் துணி காயப் போடும் பகுதியை பைனாக்குலர் கருவி மூலம் தினமும் கண்காணிக்க முடியும் என்ற செய்தி அவளது வயிற்றில் புளியைக் கறைத்தது. பாதுகாப்பான பகுதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் தங்கள் இருப்பிடத்தை தினமும் சிலர் பார்க்கிறார்கள் என்றால்.. , எந்த பெண்ணிற்குத்தான் அச்சம் வராது.

-------------------------------------------------------------------------------------------

சரி வேற என்னடா வழி இருக்கு,

டேய் நம்ம பெண்தோழிகள் மூலமா ராத்திரியோடு ராத்திரியா அவ துப்பட்டாவ எடுத்திட்டு வரச் சொல்லிடலாமா!

அதெல்லாம் முடியாது. எனக்கு எந்த பொண்ணோட உதவியும் தேவையில்லை. வேணும்னா அவ ரூம்ல எங்க வச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்கடா........., நானே போய் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்.
இங்கிலீஷ் குப்பன் உறுதியுடன் சொன்னான்
-------------------------------------------------------------------------------------

தனது அறைக்கே வந்து துப்பட்டாவை எடுப்பானாமா? நினைக்கும்போது சுமித்ராவின் கால்கள் தரைக்கு கீழே நழுவ ஆரம்பித்தன. அவளுக்கு குப்பனின் செயல்கள் நன்கு தெரியும் . அவன் சொன்னால் எதையும் செய்வான். பெண்கள் விடுதிக்குள்ளே வருமளவு துணிந்து விட்டவனை எப்படிச் சமாளிப்பது?

அவளோடு இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுமனை எரிப்பது போலப் பார்த்தான். ஏதோ கொஞ்சநேரம் கடலை போடலாம் என்று நினைத்து சுமித்ராவுடன் வந்த சுமன் இந்த திட்டத்தை ஒட்டுக் கேட்டபின் இந்தப் பகுதிக்கு ஏன் வந்தோம் என்ற எண்ணம்தான் வந்தது.

இருந்தாலும் சுமித்ராவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லிவிட்டு, துப்பட்டாவை பெட்டியில் வைத்து பூட்டிவிடும்படி சொல்லி விட்டு இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
--------------------------------------------------------------------------------

சுமன் - சுமித்ரா இருவரும் ஒரு ஓரமாக நகர்வதை கண்ட சில மூத்த மாணவர்கள் அவர்களது அறிவுப் பூர்வமான ஆலோசனைகளைக் கேட்க நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர்
. அவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சுமித்ரா ஒட்டுக் கேட்ட செய்தியையும் இங்கிலீஷ் குப்பன் மற்றும் தோழர்களிடம் தெரிவித்தனர்.

அந்தக் கோடாரிக் காம்ப என்ன செய்கிறேன் பார்
இங்கிலீஷ் குப்பன் கொதிக்க ஆரம்பித்தான். அவன் அவ்வப்போது இலக்கிய உவமை சொல்லிக் கொண்டு சண்டை போடுவான்.

-----------------------------------------------------------------------------

மறுநாள் கல்லூரி சுவர்களில் இங்கிலீஷ் குப்பனை ஆதரித்து சுவரொட்டிகள் பளிச்சிடத் தொடங்கின. பிற ஆண்டு மாணவர்களும் இங்கிலீஷ் குப்பனின் சவாலை ஆதரித்து அவரவர் பங்கிங்கிற்கு ஒரு பிரசுரம் போட்டார்கள். ஒட்டு மொத்தத்தில் இங்கிலீஷ் குப்பனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். சுமித்ராவிற்கும் தான்........

பெண்கள் மத்தியில் சுமித்ராவிற்கு ஆதரவு பெருகியது . சுவரொட்டிகளில் சுமித்ரா பெயர் இல்லாவிட்டாலும் அவள்பெயரும் சேர்ந்தே பேசப்பட்டது

-------------------------------------------

கல்லூரி விழா அன்று பல்சுவை நிகழ்ச்சியில் ஒரு பகுதி

மாணிக் ஃபாத்திமா..

மாணிக் ஃபாத்திமாவாக இங்கிலீஷ் குப்பன் நடித்திருந்தான். துப்பட்டாவால் முகம் மூடி இங்கிலீஷ் குப்பன் நடந்து வந்த உடனேயே மாணவ மாணவியரின் கரகோஷம் கட்டிடத்தையே அதிரச் செய்தது.
அதில் ஒரு காட்சி

காட்சி முன் சுருக்கம்:-

மாணிக் ஃபாத்திமா தமிழகத்தின் முதலமைச்சர். தண்ணீர் கொடுக்க மறுக்கும் அண்டை மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தைக்காகச் செல்கிறார் ( பாஷா படத்தில் தங்கைக்கு சீட் வாங்க ரஜினி போவாரல்லவா.. அதன் பாதிப்பில் உருவாக்கப் பட்ட காட்சி)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYVfqi8Anw1Joo3_tQg5Z6jQgdcbaLOfrC4mVf8d-_jvwCeMv6G7EHqf3SIR79HTzzSlNH59qghlCrPCiv7ECJOTH2v3BJTEbtTrnCfDaApzpSD1pUvhaLd6zpPmnTqDME_FZlPDknr7w/s400/rajini32.jpg




http://i43.tinypic.com/wmo42b.jpg

மாணிக் ஃபாத்திமா :- அண்ணே எம் பேரு ஃபாத்திமா...., மாணிக் ஃபாத்திமா

வேற்று மாநில முதல்வர்:- நீ யாரா இருந்தா என்னம்மா.. தண்ணீர் கொடுக்க முடியாது . முதல்ல நடையக்கட்டு.

மாணிக் ஃபாத்திமா:- அண்ணே தண்ணீ இல்லேன்னா இல்லைன்னு சொல்லி இருக்கலாம். ஆனா அதுக்கும் ஒரு இது இருக்கு.. நீங்க பேசறது தப்புண்ணே

வே. மா. முதல்வர்:- அதுதான் கெளம்பு அப்பிடிணாச்சில்ல கிளம்பும்மா.., எனக்கு நெரயா வேலை இருக்கு

மாணிக் ஃபாத்திமா:- அண்ணே எம் பேரு ஃபாத்திமா...., மாணிக் ஃபாத்திமா

வே.மா.முதல்வர்:- ஐ.. ஐ... யே யாரும்மா நீ.. திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு...... கிளம்பும்மா

மாணிக் ஃபாத்திமா:- எனக்கு இன்னொரு பேரும் இருக்கு

வே. மா.முதல்வர்:- (வித்தியாசமாக பார்க்கிறார்)

மாணிக் ஃபாத்திமா:- சுமித்ரா..

சுமித்ராவின் பெயரைச் சொன்னதுமே பய்ங்கரமான கைத்தட்டலுடன் மாணவர்களிடமிருந்து விசில் சத்தமும் வர ஆரம்பித்தது.

வே.மா. முதல்வர்:- ஐயோ.. சுமித்ராவா.. அக்கா எல்லா தண்ணீயும் நீங்களே எடுத்துக்கங்க.. இந்த ஆறு குளம், அணைக்கட்டு எல்லாமே உங்களோடதுதான்...

என்று கதற ஆரம்பித்தார்... ஏற்கனவே கைத்தட்டிக் கொண்டு இருந்த மக்கள் இன்னும் உற்சாகமாகத் தட்டிக் கொண்டே இருந்தனர்.

இத்தோடு இந்தக் காட்சியை முடிந்திருந்தால் சுமித்ரா கூட ஓரளவு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஆனால் அதற்கடுத்து வந்த வசனம் தான் சுமித்ராவை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு போனது.

பய்ந்து நடுங்கிய முதல்வர். எல்லாத்தையும் எடுத்துக்கங்க என்று கதறியதோடு அல்லாமல் தயவு செய்து முகத்தை காட்டீராத.., தயவு செய்து முகத்தை காட்டீராத என்றும் சேர்த்து சொல்லிக் கொண்டே ஓட ஆரம்பித்தார்.

சுமித்ரா வெறுப்பின் விளிம்பிற்கே போக ஆரம்பித்தாள்.
துப்பட்டா எப்படி அவனுக்கு கிடைத்தது என்ற கேள்வி கூட அவள்து மனதில் எழவில்லை. எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தனது சிந்தனையைப் பரவவிட்டாள்

தொடரும்.........................................................................................

மேற்கொண்டு படிக்க 


http://kanavukale.blogspot.com/2009/10/blog-post_19.html  

அழுத்துங்கள்

மறக்காம தமிழீஷ், தமிழ்மணங்களில் ஓட்டுப் போட்டுவிடுங்கள்

Saturday, August 21, 2010

அழகிய லைலா.., அவளது ஸ்டைலா.., அந்தப் புரத்து மகராணி

பெண்கள் கல்லூரியில் கலைவிழா தலைப்பின் கீழ் முதன்முறையாக கலைவிழாவிற்கு சென்ற அனுபவத்தை தெரிவித்திருந்தேன். நாங்கள் முதன் முறையாக பெண்கள் கல்லூரிக்குச் சென்ற பிரமிப்பு அடங்குவதற்கே சில மணிநேரம் ஆனது. (உண்மையைச் சொன்னால் இன்னும் அந்த பிரமிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது).

கலைநிகழ்ச்சிக்குத்தேவையான் லக்கேஜ் பொருட்கள் என்றதும் ஏதோ ஒரு ஸ்கூல் பேக் பொருட்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். மெல்லிசை நிகழ்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் முதல் பல்சுவை நிகழ்ச்சிக்குத்தேவையான மேக்கப் சாதனங்கள் வரை அதில்தான் இருந்தன. மெல்லிசைக் குழு அதன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தது. நாங்கள் பல்சுவை நிகழ்ச்சிக்கு ரிகர்சல் பார்க்கும் இடத்தில் உதவி (நின்று) கொண்டு இருந்தோம்.


அடுத்த அறையில் மற்றொரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அழகிய லைலா பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தது

http://lifeisreallybeautiful.com/wp-content/uploads/2009/08/marilyn_monroe_famous_blown_up_dress_picture.jpg
ஸ்டெப்ஸ் மாத்திப் போடு, ஃபேன் மாத்தி வை போன்ற வார்த்தைகள் எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தது. எங்கள் நெஞ்சம் படக் படக் என்று துடித்துக் கொண்டிருந்தது. சீனியர் மாணவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் அவர்கள் பாட்டுக்கு பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நாங்கள் பக்கத்து அறையை வேடிக்கை பார்க்க போகலாம் என்றாலும் அனுமதி கேட்க பயம். முன்பின் பார்த்திராத இடம் வேறு கொஞ்சம் பயமாக இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்கத்து அறைப் பக்கம் வந்தோம்.

எங்கள் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுமே... ஜூனியர் என்று. அங்கு இருந்த பெரிய மாணவர் எங்களை அழைத்தார். இருதய துடிப்பு அதிகம் ஆனது. இப்போது அழகிய லைலாவை நினைத்து அல்ல... அருகில் போனதும் இரண்டு வில்ஸ் வாங்கி வா என்றார். எங்கள் கையில் காசு எதுவும் கிடையாது. எங்கள் கல்லூரியில் கடைக்குப் போகச் சொன்னால் பணம் மற்றும் சென்று வர வாகணமும் கொடுப்பார்கள். (அப்படித்தான் நாங்கள் பைக் மற்றும் கார் ஓட்டி பழகினோம்) விழிக்க ஆரம்பித்தோம். அவர் மிரட்ட ஆரம்பித்தார். அதற்குல் எங்கள் அறையில் எங்களை அழைக்க ஒரே ஓட்டமாக ஓடி விட்டோம்.
இருந்தாலும் மின் விசிறியுடன் ஓடும் அழகிய லைலாவைப் பார்க்க மனம் துடித்துக்க் கொண்டே இருந்தது.


சன்னமாக எங்கள் சீனியரிடம் பேச ஆரம்பித்தோம்.
சார் ராக தாவணி (ராகத்வனி எங்கள் மெல்லிசைக் குழு) யில் எங்களை கூப்பிட்டார்களாம். சரி போங்கடா
என்று அனுப்பி வைத்தனர். நாங்கள் மெதுவாக நழுவி வந்து நடன அரங்கிற்க்கு வந்தோம். ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்த அழகிய தமிழ் மகள் எங்களைத் தடுத்தார். அடையாள அட்டை கேட்டார். எங்கள்க்கு புரியாத மொழிகளீல் ஒன்று இளம்பெண்கள் பேசும் நுணிநாக்கு ஆங்கிலம். எங்கள் சொத்ப்பலான பதில் மற்றும் ஜூனியர் தனமான மூஞ்சியைப் பார்த்த பின் அவர் தமிழில் கேட்டார். நாங்கள் காட்டிய அட்டையைப் பார்த்த பின்னரும் எங்களை அனுப்ப மறுத்தார். ஆண்களுக்கு அவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு மட்டுமே அனுமதியாம்.

நாங்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய மன நிலையிலேயே இருந்தோம். எங்கள் அணியில் மற்றொரு பெண் உறுப்பினர் உள்ளே இருக்கிறார் அவரை அழைக்க வேண்டும் என்று போராடி உள்ளே சென்றோம். போன கொஞ்ச நேரத்திலயே சிகரெட் வாங்கச் சொன்ன வேற கல்லூரி சீனியரைப் பார்த்து ஒழிந்து கொண்டோம். இரண்டு பாட்டு முடிந்தது. அடுத்த பாட்டு. அழகிய லைலா...................................


எங்கள் கல்லூரி சீனியர் மாணவி எங்கள் தோளைத் தொட்டார். எங்கடா சுத்திட்டிருக்கீங்க.... அடுத்த ஈவண்ட் மெல்லிசை போய் ட்ரம்ஸ் எல்லாம் தூக்கிட்டு வாங்க்................... மனதுக்குள் நொந்து கொண்டே மெல்லிசைக் கூடத்துக்கு நடந்தோம்

Monday, August 9, 2010

????

உணர்வுகளை

உருக்கி


ஒன்ற நினைக்க

உருகி

உருகி

ஒன்றாய் ஆக


அதுவோ இதுவோ



என்றெல்லாம்

அவ்வளவுதான்

அவ்வள்வேதான்

என்றாகிப் போனது

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails