Saturday, November 15, 2008

பெண்கள் கல்லூரியில் கலைவிழா

நாங்கள் கல்லூரியில் சேர்ந்து ஒரு ஆண்டு பூர்த்தியான கால கட்டம் அது. ஒரு மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் முடிந்திருந்தது. அதன் உபயத்தில் சீனியர் மாணவர்களுடன் ஓரளவு நெருக்கம் ஏற்பட்டது. அந்த வேலையில்தான் நகரின் முக்கிய பெண்கள் கல்லூரியில் ஆண்டுவிழா அழைப்பிதல் கண்ணில் பட்டது.


அனைவரும் புறப்பட தயாராயினர். கல்லூரியில் இருந்த அனைத்து ஆண்களும் ரெடி. கடைசியில்தான் தென்பட்டது அந்த விதி. போட்டியாளர்கள் மட்டுமே கல்லூரியின் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.
எங்கள் கல்லூரி அப்போது கலை நிகழ்ச்சிகளில் முன்னணி வகிப்பவர்கள்தான். எனவே கலைக்குழு கிளம்பினர். லக்கேஜ் அதிகமாக இருந்ததால் அதைத் தூக்க ஆட்கள் தேவைப் பட்டபோது நாங்கள் தென்பட்டோம். அதிஷ்டமா இல்லையோ நாங்களும் கலந்து கொள்ள சென்றோம். பாட் பூரியில் நாங்கள் கல்ந்து கொள்வதாக பேர் எழுதிக் கொண்டு அடையாள அட்டை பெற்றுதந்தார்கள். கல்லூரியில் நுழைந்ததும்...........................................................




கல்லூரியில் நுழைந்ததும் ஒரு அதிர்ச்சியை குழுத்தலைவர் வெளியிட்டார். பேர் குடுத்தவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் நெகடிவ் மார்க். மற்றும் அந்த அணி ஒட்டு மொத்த சாம்பியன் வெல்ல முடியாது. எங்களுக்கு அது ஒன்றும் பெரிதாக படவில்லை. ஒரு ஆண்டாக காதில் மட்டுமே கேட்டு வந்த இடத்தை நேரில் பார்க்கிறோமே................. பரவாயில்ல சார் நாங்க ஸ்டேஜ் ஏறிடுவோம்............. எங்கள் தைரியத்தை மெச்சினார்கள். ஆனாலும் லக்கேஜ் தூக்குவதிலேயே காலம் களிந்தது..... தீடிரென எங்களுக்கு அழைப்பு. அடுத்த ஈவண்ட் உங்களோடதுதான் ரெடியாகுங்க............... நாங்கள் கேட்டோம். பாட் பூரினா என்ன சார்? அனைவரும் அதிர்ந்தனர் ...................................................................................




எங்களுக்கு ஏதோ சாப்பாட்டு போட்டி என்ற எண்ணமே இருந்தது. மேடை ஏறச் சொன்னதும் திருதிருவாணோம்..... நெகடிவ் மதிப்பெண்ணுக்கு பயந்து எங்களை மிரட்டி மேடை ஏற்றினார்கள்.. வினாடி வினா மாதிரி சில சுற்றுக்கள் சென்றன.. அடுத்த சுற்று திரைப்பட பெயரை கண்டுபிடிக்கும் சுற்று. எங்களுக்கு கிடைத்த படம் சிதம்பர ரகசியம். நிகழ்ச்சியின் போது ஓடுவது உள்ளத்தை அள்ளித்தா. ஒருவர் நடிக்க் மற்றவர் கண்டுபிடிக்க வேண்டும். சீக்கிரம் கண்டுபிடிக்க நிறைய பாயிண்ட்.

அந்த படத்தை நாங்கள் எப்படி கண்டு பிடித்தோம். எங்கள் வகுப்பு மாணவர் ஒருவருக்கு சீணியர்கள் வைத்தபெயர்(உடைகளின் தன்மையை வைத்து) அது. அவரை போல நடித்து படத்தைப் பிடித்தோம்.



அடுத்து சில சுற்றுக்கள். . மாற்று மொழி கலக்காமல் இருநிமிடம் பேசும் சுற்று கூட இருந்தது. கடைசிசுற்று. ஐந்து வால் பேப்பர்களை கிழித்து போட்டிருந்தனர். ஒருவர் கையில் ஒரு கிழியாத படம்... கேள்விகள் கேட்டுக் கொண்டே குவியலில் இருந்து படத்தை எடுத்து ஒட்ட வேண்டும். ந்ண்பன் புத்திசாலி. கருப்புவெள்ளையா.... பெண்ணா இரண்டே கேள்விகளில் வேலை முடித்தான், கடைசியில் பரிசும் கிடைத்தது.

6 comments:

  1. இதே போல் சில கதைகளுக்கு

    http://www.narsim.in/2008/10/blog-post_06.html பாருங்கள் :) :)

    ReplyDelete
  2. புகை படம் இல்லாத பெண்கள் கல்லூரி பற்றிய பதிவு உப்பு இலாத உணவு போல உள்ளது நண்பரே.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  3. நன்றி புருனோ சார்.. நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்..

    நன்றி குப்பன் சார். லக்கேஜ் தூக்கச் சென்ற முதலாமாண்டு மாணவர்கள் புகை விடுவதற்கே பயந்து கொண்டு சென்றவர்கள்

    ReplyDelete
  4. அட... உங்க பானி பூரி அனுபவத்த யார் கேட்டதுங்க... போன விசயம் சிறப்பா நடந்ததா இல்லையானு சொல்லுங்க ;))))

    ReplyDelete
  5. நன்றி ஜி சார்....

    போனது லக்கேஜ் தூக்க..........

    நீங்கள் எதிர்பாப்பது விரைவில் வரும்

    ReplyDelete
  6. தங்களைப் பற்றிச் சொல்லும் போது

    "சிந்திக்க முயல்பவன்,முயன்றுகொண்டே இருப்பவன்"

    என்று சொல்லியிருப்பது நன்றாக இருந்தது.

    முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails