Friday, November 13, 2009

2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாருக்குன்னே உருவான ஒரு கதையை வெளிநாட்டு ஆளுங்க படம் எடுத்திட்டு இருக்காங்க..,  நாம சூப்பர் ஸ்டாரை வைத்தே அந்தப் படத்தப் பார்ப்போம்.

====================================================

படத்தின் துவக்கத்தில் கிராமச் சூழலில் ஒரு கவிநயம் மிக்க குத்துப்பாட்டு.

மாயா.. மாயா எல்லாம் மாயா

சாயா  சாயா எல்லாம் சாயா

போயா போயா எல்லாம் போயா

வாயா வாயா எல்லாம் வாயா

காயா காயா எல்லாம் காயா

நாயா நாயா எல்லாம் நாயா

பாயா பாயா எல்லாம் பாயா

என்று ஒரு தத்துவப் பாடலோடு சூப்பர் திரையில் நுழைகிறார். அந்த ஊரே அந்தத் திருவிழாவில் ஆடுகிறது.
http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SolXPYv_0AI/AAAAAAAAAc0/bLmVdKwdYxE/s320/aaa.jpg
பெரிய மீசையோடு பிரபு வருகிறார். அங்கு நின்றிருக்கும் பூசாரியிடம் சாமி என் பையன் குருவுக்கு  இன்னிக்கு பொறந்தநாள் அதுதான் உங்க ஆசீர்வாதம் வாங்க வந்தோம் என்று சொல்கிறார்.

பூசாரி அருள்வந்து ஆடுகிறார்.  தெயவமே என்ற வார்த்தையோடு அமைதியாகிவிடுகிறார்.  அடுத்ததாக பழைய கால நயந்தாரா மாதிரி இருக்கும் பாவாடை சட்டை பெண்ணை  அழைத்து சாமி இவளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க இவதான்  குரு கட்டிக்கப் போற பொண்ணு. அடுத்தவருஷம் படிப்பு முடிஞ்சதும் குருவுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்கிறார் பிரபு.

பூசாரி கூர்ந்து பார்த்துவிட்டு  நீ தலைகீழா நின்னாலும் உனக்கு குரு கிடையாது, நீவேற ஆளப் பார்த்துக்க. அடுத்த வருஷம் குரு இந்த உலகத்திலய இருக்க மாட்டார்   என்று சொல்லிவிட்டு மயங்கிச் சரிகிறார்.

மாயன் கோவிலில் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஐதீகம். அதனால் எல்லோரும் சோகமாக மாறுகிறார்கள். ஆனால் குரு மட்டும்  பகுத்தறிவு வாதம் பேசுகிறார். ஆமாம் குருதான் நம்ம சூப்பர் ஸ்டார்.

இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைங்க..,  நீங்களெல்லாம் சொன்னதுனால் நான் அங்க வந்தேன். அங்க வந்தா என்னெல்லாமோ உளர்றாங்க...,

நான் ஒரு முற்போக்கு பத்திரிக்கைக்காரன். நாலு ஜனங்களுக்கு மூட நம்பிக்கை பற்றி எடுத்துச் சொல்லிட்டு இருக்கேன். என்னோட வலைப்பூ பூரா மூட நம்பிக்கை பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன். என்கிட்டயே கதை விடுறீங்களா..., என்று சொல்கிறார்.

அப்படியே பழையகால அச்சு இயந்திரத்தின் மேல் அவர் முகம் தெரிகிறது

நான் ஒரு பத்திரிக்கைக்காரன்,

சண்டை சச்சரவுக்கு கத்திரிக்காரன்

நான் எழுதுவது கத்தி முனையிலே

நான் நடப்பது என் பேனா வழியிலே

என்று தத்துவப் பாடல் பாடுகிறார்.

அப்போது அவர் பின்னால் நாட்டில்  உலகில் உள்ள அனைத்து பத்திரிக்கைக் காரர்களும் அவர் பின்னால் குவிகின்றனர்.

அவரின் பின்னால் பல மதரீதியான பத்திரிக்கைக்காரர்களும் வருகின்றனர். அவருக்குப் பின்னால் வந்த உடன் அனைவரது எழுத்தும் பகுத்தறிவுச் சிந்தனையோடு எழுத ஆரம்பிக்கின்றனர்.

மாயன் கோவில் மர்மம் பற்றி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆய்வு செய்கிறார்கள். அதற்காக தமன்னா நியமிக்கப் படுகிறார். அவர் அடிக்கடி  நான் மாயவரத்துப் பொண்ணு, மாய வரத்துப் பொண்ணு என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அவர் மாயவரத்துப் பொண்ணு என்ற சொன்ன உடனே அவருடன் வந்திருக்கும் சந்தானம் எ ட்ரூ பீஸ் என்ற கூடுதல் வசனத்தை சொல்லிக் கொண்டே வருகிறார்.

அதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் என்ன டூ பீஸா என்று கேட்கிறார். திரும்பிப் பார்க்கும் தமன்னா உடனே தலைவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

மாயவரத்துப் பொண்ணு  இவ

மாயன் கோவில் வந்திருக்கா

ட்ரூ பீஸ் கண்ணு  இப்ப

டூ பீஸில் ஆடி    வாரா..,

என்று அழகான ஜோடிப் பாடல் அங்கே அரங்கேற்றமாகிறது.

தொலைக்காட்சியில் மாயன்கோவிலில் சொன்ன குறிகள் பலிதம் ஆகியிருப்பது ஊர்ஜிதம் ஆன பலசெய்திகள்வெளிவருகின்றன.

சூப்பர் ஸ்டார் பற்றிய தகவல் உண்மையா என்பதை அறிய சூப்பர் ஸ்டாருக்கே தெரியாமல்  அவரைப் பற்றி நேரடி ஒலிப்பரப்பு செய்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். அவரைப் பற்றிய செய்தி எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்கிறது.

அப்போது உலகை அழிவில் இருந்து காக்க ஒரு யாகம் நடத்தப் படுகிறது. யாகத்தின் போது வெளியிடப் படும் புகையால் ஓசோன் மண்டலம் பாதிக்கப் பட்டு உலகம் நேரிடும் என்று சூப்பர் பிரச்சாரம் செய்கிறார். அந்தப் பாடலுக்கு ஓசோன் ஓட்டையால் செய்யப்பட்ட  ஆடை அணிந்து முண்ணனி இந்தி நடிகை ஒருவர் ஆட்டம் போடுகிறார்.  யாகம் தடுத்து நிறுத்தப் படுகிறது.  அதனால் யாகம் நடத்த நினைத்த கோடீஸ்வரர்  சூப்பரைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். சூப்பர் ஸ்டாரின் வீட்டில் வெடி குண்டு வைத்து விடுகிறார்கள்.

அப்போது சூப்பர் ஸ்டார் தனது லேப் டாப்புடனருகிலுள்ள மலை மேல் அமர்ந்து வலைப்பூ எழுதிக் கொண்டும், பின்னூட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார். அப்போது ஒரு வலைப்பூவில் இருந்த லின்க் மூலம் செய்தித்தாளுக்குப் போய் அங்கு தன்வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதை தடுக்க ஓடிவருகிறார்,

அதற்குள் அவர் வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்துவிடுகிறது. ஆனால் அவரது தந்தை  தோட்டத்தில் இருப்பதால் தோட்டத்திற்குச் செல்கிறார்.

ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளிவருகின்றன. சூப்பர் ஸ்டாரின் படுக்கை அறையின் அடியில் இருந்த எரிமலை வெடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குள் அந்த ஊரே நெருப்பு குழம்புக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது.  வேகமாக காரை எடுக்கும் சூப்பர் மின்னல் வேகத்தில் செல்கிறார். அதற்குள் சூப்பரின் கார் வெடித்துவிடுகிறது. 


வெடித்த சிதறலில் இருந்த சூப்பர் அப்படியே வானத்தில் பறக்கிறார். அப்படியே பறந்துவந்து பூமியைப் பெயர்த்து கையில் வைத்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறார். சில நாட்களில் பூமி குளிர்கிறது.

பெயர்தெடுத்த பகுதியில் இருந்த பிரபு

குருவே சரணம்

என்று சொல்ல சூப்பர் ஸ்டார் புதிய யுகத்தின் கடவுளாக மாறிவிடுகிறார்.

http://i11.tinypic.com/42vh3r8.jpg

32 comments:

  1. தல சீக்கிரம் கதை கேட்டு ரஜினிகிட்ட இருந்து கால் வரும்.

    அட்டகாசம்.

    ReplyDelete
  2. அவ்வ்வ் கதை படிக்கும் போதே மிகப்பிரமாண்டமா இருக்கே ? எத்தனை கோ?

    ஓசோன் ஓட்டை டிசைன் -- குறும்பு மருத்துவரே உமக்கு

    ReplyDelete
  3. ட்ரூ பீஸ் கண்ணு இப்ப

    டூ பீஸில் ஆடு வாரா..,

    டைமிங்க ரைமிங்கா வருதே சூப்பர் பீஸ்

    ReplyDelete
  4. நல்லா இருக்கு !!!அப்படியே கமலுக்கும் இதே கதையை உல்டா செய்யவும்!!!

    ReplyDelete
  5. //சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். //

    இது சூப்பர்ஸ்டார் கதை மாதிரி தெரியலையே, சொந்த கதை மாதிரி இருக்கே

    ReplyDelete
  6. Reaction Ticked, And voted.

    நயன்தாரா மாதிரிப் பொண்ணு என்று சொல்லிட்டு தமன்னாவுக்கு வந்துட்டீங்களே...ஒருத்தர் படமாவது போட்டிருக்கலாம்...!!

    "நாட்டில் "

    நடுவில் ஒரு கோடு....

    இதை எப்படிக் கொண்டு வந்தீர்கள் என்று சொல்லித் தரவும். ஒரிஜினலில் இது தெரியவில்லை...

    ReplyDelete
  7. // அக்பர் said...

    தல சீக்கிரம் கதை கேட்டு ரஜினிகிட்ட இருந்து கால் வரும்.

    அட்டகாசம்.//

    மனிதன், சந்திரமுகி படங்கள்ள வந்த மாதிரியா தல

    ஹி ஹி..,

    ReplyDelete
  8. // சூரியன் said...

    அவ்வ்வ் கதை படிக்கும் போதே மிகப்பிரமாண்டமா இருக்கே ? எத்தனை கோ?

    ஓசோன் ஓட்டை டிசைன் -- குறும்பு மருத்துவரே உமக்கு//

    நன்றி தல..,

    ReplyDelete
  9. // சூரியன் said...

    ட்ரூ பீஸ் கண்ணு இப்ப

    டூ பீஸில் ஆடு வாரா..,

    டைமிங்க ரைமிங்கா வருதே சூப்பர் பீஸ்//

    தானா வருது தல.., தமன்னாவுக்காக..,

    ReplyDelete
  10. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    உள்ளேன் ஐயா//

    நன்றி தல,,,

    ReplyDelete
  11. // gulf-tamilan said...

    நல்லா இருக்கு !!!அப்படியே கமலுக்கும் இதே கதையை உல்டா செய்யவும்!!!//

    விரைவில் வரும் தல..,

    ReplyDelete
  12. // T.V.Radhakrishnan said...

    அட்டகாசம்//

    நன்றி தல..,

    ReplyDelete
  13. // சங்கர் said...

    //சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். //

    இது சூப்பர்ஸ்டார் கதை மாதிரி தெரியலையே, சொந்த கதை மாதிரி இருக்கே//

    இதுவரை ஏற்காத கதாபாத்திரம் தல..,

    ReplyDelete
  14. // ஸ்ரீராம். said...

    Reaction Ticked, And voted.

    நயன்தாரா மாதிரிப் பொண்ணு என்று சொல்லிட்டு தமன்னாவுக்கு வந்துட்டீங்களே...ஒருத்தர் படமாவது போட்டிருக்கலாம்...!!

    "நாட்டில் "

    நடுவில் ஒரு கோடு....

    இதை எப்படிக் கொண்டு வந்தீர்கள் என்று சொல்லித் தரவும். ஒரிஜினலில் இது தெரியவில்லை...//


    நன்றி தல..,

    Settings

    Basic

    கீழ்பகுதியில்
    Select post editor வந்து

    Updated editor தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    பின்னர் நீங்கள் புதிய எடுகை எழுதினாலோ அல்லது திருத்தும்போதோ மேற்கண்ட வசதி தானே கிடைத்துவிடும். தல,,,

    ReplyDelete
  15. நீங்க எழுதின பாடல்களை பார்த்துட்டு sankar உங்களை ரோபோ படத்தில் பாடல்
    எழுத கூப்பிடலாம்.
    ஆனாலும் தமன்னா பாட்டு சூப்பரு :-) :-) :-) :-)

    ReplyDelete
  16. :)

    ரொம்ப நல்லா இருந்தது.. ஓசோன் ஓட்டை உடை அவ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  17. // nvnkmr said...

    நீங்க எழுதின பாடல்களை பார்த்துட்டு sankar உங்களை ரோபோ படத்தில் பாடல்
    எழுத கூப்பிடலாம்.
    ஆனாலும் தமன்னா பாட்டு சூப்பரு :-) :-) :-) :-)//

    நன்றி நண்பரே..,

    ReplyDelete
  18. // சென்ஷி said...

    :)

    ரொம்ப நல்லா இருந்தது.. ஓசோன் ஓட்டை உடை அவ்வ்வ்வ்வ்வ்வ்!//

    நன்றி நண்பரே..,

    ReplyDelete
  19. என்ன இது சுரேஷ்?

    நல்லாதான போய்கிட்டு இருத்துச்சு?

    ReplyDelete
  20. // சிங்கக்குட்டி said...

    என்ன இது சுரேஷ்?

    நல்லாதான போய்கிட்டு இருத்துச்சு?//

    வாங்க நண்பரே.., ரொம்ப நாளா ஆளக்காணோம்,

    ReplyDelete
  21. நல்லாதான் கதை விடுரீங்க டாக்டர்

    ReplyDelete
  22. @ஸ்ரீராம்.
    @ஆ.ஞானசேகரன்

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  23. எப்படி டாக்டர், ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
    கலக்கல் விமர்சனம். முன்னுரை மட்டும் எழுதாம விட்டிருந்தா, இது எந்திரன் படக்கதை என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

    ReplyDelete
  24. // பாலா said...

    thalarvar cell number tharvaa?//


    மின்னஞ்சல் முகவரின்னா நேரடியாவே சொல்லிடலாமே...,

    ReplyDelete
  25. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    எப்படி டாக்டர், ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
    கலக்கல் விமர்சனம். முன்னுரை மட்டும் எழுதாம விட்டிருந்தா, இது எந்திரன் படக்கதை என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.//


    எந்திரனுக்கு மூன்றுகதை எழுதியிருக்கிறேன் தல..,

    ReplyDelete
  26. வருட கடைசி என்பதால் வேலை பளு அதிகம், வார இறுதி இரண்டு நாள்தான் கிடைகிறது :-)

    ReplyDelete
  27. //சிங்கக்குட்டி said...

    வருட கடைசி என்பதால் வேலை பளு அதிகம், வார இறுதி இரண்டு நாள்தான் கிடைகிறது :-)//

    இருந்தாலும் இடுகை, குறைந்தபட்சம் பின்னூட்டமாவது போட்டுவிடுவோமே..,

    ReplyDelete
  28. வருகை தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails