Wednesday, November 11, 2009

ரிக்கி பாண்டிங் எழுதாத கடிதம்

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்...,

நண்ப! டோனி நீங்களும் உங்கள் அணியும் செய்திருக்கும் உதவி இந்த வையகம் இருக்கும் வரையில் ஆஸ்திரேலிய அணியும், நானும் மறக்கவே மாட்டோம். முதலிடம் முடியிலிருந்து போய்விடும் என்றார்கள், உலகக் கோப்பையை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றார்கள். ஆனால் டோனி..., இந்தியர்கள் என்றும் வந்தாரை வாழவைப்பார்கள் என்ற சொல்லுக்கு இலக்கணமாக எங்களுக்கு தன்னம்பிக்கையும், வெற்றியையும் பரிசாக அளித்தீர்கள்.

உங்கள் துவக்கமும், மத்தியமும் படுவலிமையானது என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்தி அனுப்பிருந்தார்கள். பந்துவீச்சு படுதுள்ளியம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அந்த வள்ர்ந்த சிறுவன்கூட என்னை கொஞ்சம் நடுநடுங்கத்தான் வைத்திருந்தான்.

கோபம் வந்தால் தாயைப் பற்றிப் பேசும் சுழல்சுறாவளி கூட கொஞ்சம் டென்சனைத்தான் கொடுத்திருந்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி இப்படியெல்லாம் யாரும் பயமுறுத்தியதில்லை. கிளார்க்க் வேறு என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அவரும் எங்களோடுவரவில்லை. ஒருவேளை தோற்றிருந்தால் அவர் இல்லாததால்தான் தோற்றொம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

பார்டர், டெய்லர், வாக் போன்றவர்கள் அணியை மற்றவர்களிடன் கொடுக்கும் போது மிக வலிமையான அணியாகத்தான் கொடுத்தார்கள். என்னால் அப்படிக் கொடுக்க முடியாதோ என்ற பயம் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

பயிற்சியில் ஈடுபடமுடியாத எங்கள் சிறுவர்களிடம் ஒருநாள் பயிற்சியில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வராது என்ற நம்ப்பிக்கைச்சொல்லை நீங்கள் கூறிய போதே ஒரு ஒளி தெரிந்தது. எங்கள் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் திறமை அறிந்து அதனைக் கொணர்ந்த உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பரே..,

எங்கே கடைசி ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டுவிடுமோ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆறாம் ஆட்டத்தில் எங்கள் வெற்றிக்காகப் போராடிய உங்கள் விருந்தோம்பல் பண்பினை என்னவென்று புகழ்வது?
http://www.thedipaar.com/pictures/politics/10391.jpgஉண்மையில் சொன்னால் டோனி என் கிரிக்கெட் வாழ்நாளில் தலைவன் என்று ஒரு ஆள் தனியே தேவைப்படாத அணிக்குத்தான் நான் தலைமை தாங்கி இருக்கிறேன். என் அணியில் இருந்த கில்லி, வார்னே போன்றவர்கள் எல்லாம் ஐ.பி.எல்லில் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்தவர்கள். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார்களாகத்தான் இதுவரை இருந்தார்கள். ஆனாலும் வளரும் இளைஞர்களை அழைத்து வருவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கும் உங்கள் அணியின் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தால்தானே இப்படி ஒரு வெற்றியை பரிசளித்து இந்த அணியையும் ஒரு அணியாக அங்கீகாரம் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்.

எங்கே 1986ல் கபில்தேவ் செய்த செயலை நீங்கள் செய்துவிடுவீர்களோ என்று பயந்து கொண்டுதான் இருந்தேன். அப்படி எதுவும் நடந்திருந்தால் ஐயகோ.., இந்திய மாணவர்களையே அடிக்கும் இளைஞர்கள் இந்தியாவிலிருந்து தோல்வியுடன் போனால் எங்களை என்ன செய்வார்களோ ? கடைசியில் காப்பாற்றிவிட்டீர்கள் டோனி. உங்களுக்கும் உங்கள் அணியினருக்கும் கோடானு கோடி நன்றிகளை உறித்தாக்கிக் கொள்கிறேன்.


இப்படிக்கு

20-20லிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப் பட்ட 2011 உலகப் கோப்பை கனவினை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுள்ள உங்கள் நண்பன் பாண்டிங்.

16 comments:

  1. //20-20லிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப் பட்ட 2011 உலகப் கோப்பை கனவினை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுள்ள உங்கள் நண்பன் பாண்டிங்.//

    நச்.. :)

    ReplyDelete
  2. கலக்கல் கடிதம் மொழி பெயர்த்து டோணிக்கு அனுப்பிவிடுங்கள்

    ReplyDelete
  3. //இந்திய மாணவர்களையே அடிக்கும் இளைஞர்கள் இந்தியாவிலிருந்து தோல்வியுடன் போனால் எங்களை என்ன செய்வார்களோ ?//

    கலக்கல் டயலாக்..

    நீங்க போட்டிருக்கும் படம் பதிவிற்கு பொருத்தமாக இருக்கிறது. இதற்குத்தான் லாயக்கு இவிங்க...
    கபில்தேவ் போனதற்குபுறம் இந்திய கிரிக்கெட் அணிநாறிப்போச்சு...

    ReplyDelete
  4. தல உண்மையாவே பான்டிங் இப்படித்தான் நினைச்சிருப்பார்.

    அசத்தல்.

    ReplyDelete
  5. @அன்புடன்-மணிகண்டன்
    @வந்தியத்தேவன்
    @நாஞ்சில் பிரதாப்
    @அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  6. கடிதம் செம ஹாட் தல...

    ReplyDelete
  7. // ஜெட்லி said...

    கடிதம் செம ஹாட் தல..//

    நன்றி தல...,

    ReplyDelete
  8. உண்மையிலேயே ரொம்...பவே Feel பண்ணித்தான் எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  9. // ஸ்ரீராம். said...

    உண்மையிலேயே ரொம்...பவே Feel பண்ணித்தான் எழுதி இருக்கீங்க...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  10. நிச்சயம் பாண்டிங் மனதில் இப்படித்தான் நினைத்து இருப்பார்

    ReplyDelete
  11. என்ன தல செம காண்டா எழுதி இருக்கீங்க???

    பாண்டிங்க்கு தோனுனத நீங்க எப்புடி ரீட் பண்ணீங்க???

    அப்டியே தோனியும் என்ன நெனக்குறார்ன்னு கேட்டு சொல்லுங்க :-)

    ReplyDelete
  12. @முரளிகண்ணன்
    @கடைக்குட்டி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலை..

    ReplyDelete
  13. // T.V.Radhakrishnan said...

    அசத்தல்//
    நன்றி தல...,

    ReplyDelete
  14. //கடைக்குட்டி said..
    அப்டியே தோனியும் என்ன நெனக்குறார்ன்னு கேட்டு சொல்லுங்க //
    தோனி பாண்டிங்குக்கு எழுதின (சின்ன)கடிதம் என் கைக்கு கிடைச்சுது.

    அன்புள்ள பாண்டிங்,
    தங்கள் கடிதம் கிடைத்தது. தங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்களை மட்டும் அல்ல, மட்டமான டீம்னு பெயர் எடுத்த உலக வரைபடத்திலேயே இல்லாத நாட்டு டீம் கூட எங்க தயவுல ஜெயிச்சு இருக்காங்க. அவங்க அனுப்பின நன்றிக் கடிதங்களோட, உங்க கடிதத்தையும் பத்திரமா வச்சிருக்கேன். அடிக்கடி நம்ம ஊருக்கு விளையாட வாங்க.
    "யாமிருக்க பயமேன்?"

    இப்படிக்கு,

    முடி சூடா முடியுடன்,
    தோனி

    ReplyDelete
  15. //பெயர் சொல்ல விருப்பமில்லை//

    நன்றி தல.., சூப்பர் ..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails