அனுஷ்காவிற்கு அவமானமாக இருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று துளி கூட நினைக்கவில்லை. அவள் சூழலில் அவள் செய்தது சரி என்றுதான் நினைத்தாள். இன்னும் கூட அவள் செய்தது சரிதான் என்றே நினைத்தாள். ஆனால் டார்ஜன் செய்த எதிர்வினையை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அனுஷ்காவும் டார்ஜனும் கல்லூரி மாணவர்கள். அவர்கள் அனைவரும் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். கல்விச் சுற்றுலா என்று பெயரே தவிர சராசரி மாணவர்களின் சுற்றுலாதான். அதில்தான் பூங்காவில் தோழிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். எப்படி தனிமைப் படுத்தப் பட்டாள் என்றே தெரியவில்லை. திடீரென் அவள் அருகில் டார்ஜனும் நின்றிருந்தான்,. அப்போது கூட எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல்தான் பேசிக்கொண்டிருந்தான். திடீரென ஒரு கடிதத்தைக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லிவிட்டான்.
அனுஷ்காவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரியதாக கோபம் வரவில்லை, தனது குடும்ப சூழல், டார்ஜனின் குடும்ப சூழல் அவர்களது ஊர் இதைப் பற்றியெல்லாம் நீண்ட நெடிய சொற்பொழிவு ஆற்றினாள். டார்ஜனுக்கு கொஞ்சம் வியர்த்தாற்போல இருந்தது, மனம் மாறியிருப்பான் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் இங்கு நடப்பதோ.....................
இரவு உணவு முடித்தபின் மாணவர்கள் சிறிய கலைநிகழ்ச்சி நடத்துவதாக சொன்னார்கள். அதில் யாரோ ஒருவன் யாரிடமோ ஐ லவ் யூ சொல்ல பெண் பாத்திரத்தை ஏற்றவன் ஏற்ற இறக்கங்களுடன் அனுஷ்காவின் சொற்பொழிவை சொல்லிக்கொண்டு இருந்தான். குரலில் பயன்படுத்திய வட்டார வார்த்தைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் அது அனுஷ்காதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தோழர்களும் தோழிகளும் ஹோ..............ய் என்று கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அனுஷ்கா நெளிந்து கொண்டிருந்தாள்.
இந்த இடுகை இந்த இடுகையோடு தொடர்பு உடையது. புரியாதவர்கள் இந்த இடுகையை படித்தே தீரவேண்டும்
தல என்னைவைத்துதான் கதை எழுதிருக்கீங்களோன்னு பார்த்தா அவர் டார்ஜன்னா?. கதாநாயகன் மனதை கவர்ந்துவிட்டார் தல..
ReplyDeleteமிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே கதை என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஏய்யா இந்த வேலை உனக்கு? சரியான சமயத்தில் வந்த இடுகை தான். ;)
ReplyDeleteபாராட்டுகள்.
என்ன தல தொடரா?
ReplyDeleteஅருமை சகோதரா.. கதை சூப்பர்...
ReplyDelete