கலைநிகழ்ச்சிக்குத்தேவையான் லக்கேஜ் பொருட்கள் என்றதும் ஏதோ ஒரு ஸ்கூல் பேக் பொருட்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். மெல்லிசை நிகழ்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் முதல் பல்சுவை நிகழ்ச்சிக்குத்தேவையான மேக்கப் சாதனங்கள் வரை அதில்தான் இருந்தன. மெல்லிசைக் குழு அதன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தது. நாங்கள் பல்சுவை நிகழ்ச்சிக்கு ரிகர்சல் பார்க்கும் இடத்தில் உதவி (நின்று) கொண்டு இருந்தோம்.
அடுத்த அறையில் மற்றொரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அழகிய லைலா பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தது.
ஸ்டெப்ஸ் மாத்திப் போடு, ஃபேன் மாத்தி வை போன்ற வார்த்தைகள் எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தது. எங்கள் நெஞ்சம் படக் படக் என்று துடித்துக் கொண்டிருந்தது. சீனியர் மாணவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் அவர்கள் பாட்டுக்கு பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நாங்கள் பக்கத்து அறையை வேடிக்கை பார்க்க போகலாம் என்றாலும் அனுமதி கேட்க பயம். முன்பின் பார்த்திராத இடம் வேறு கொஞ்சம் பயமாக இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்கத்து அறைப் பக்கம் வந்தோம்.
எங்கள் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுமே... ஜூனியர் என்று. அங்கு இருந்த பெரிய மாணவர் எங்களை அழைத்தார். இருதய துடிப்பு அதிகம் ஆனது. இப்போது அழகிய லைலாவை நினைத்து அல்ல... அருகில் போனதும் இரண்டு வில்ஸ் வாங்கி வா என்றார். எங்கள் கையில் காசு எதுவும் கிடையாது. எங்கள் கல்லூரியில் கடைக்குப் போகச் சொன்னால் பணம் மற்றும் சென்று வர வாகணமும் கொடுப்பார்கள். (அப்படித்தான் நாங்கள் பைக் மற்றும் கார் ஓட்டி பழகினோம்) விழிக்க ஆரம்பித்தோம். அவர் மிரட்ட ஆரம்பித்தார். அதற்குல் எங்கள் அறையில் எங்களை அழைக்க ஒரே ஓட்டமாக ஓடி விட்டோம்.இருந்தாலும் மின் விசிறியுடன் ஓடும் அழகிய லைலாவைப் பார்க்க மனம் துடித்துக்க் கொண்டே இருந்தது.
சன்னமாக எங்கள் சீனியரிடம் பேச ஆரம்பித்தோம்.
சார் ராக தாவணி (ராகத்வனி எங்கள் மெல்லிசைக் குழு) யில் எங்களை கூப்பிட்டார்களாம். சரி போங்கடாஎன்று அனுப்பி வைத்தனர். நாங்கள் மெதுவாக நழுவி வந்து நடன அரங்கிற்க்கு வந்தோம். ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்த அழகிய தமிழ் மகள் எங்களைத் தடுத்தார். அடையாள அட்டை கேட்டார். எங்கள்க்கு புரியாத மொழிகளீல் ஒன்று இளம்பெண்கள் பேசும் நுணிநாக்கு ஆங்கிலம். எங்கள் சொத்ப்பலான பதில் மற்றும் ஜூனியர் தனமான மூஞ்சியைப் பார்த்த பின் அவர் தமிழில் கேட்டார். நாங்கள் காட்டிய அட்டையைப் பார்த்த பின்னரும் எங்களை அனுப்ப மறுத்தார். ஆண்களுக்கு அவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு மட்டுமே அனுமதியாம்.
நாங்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய மன நிலையிலேயே இருந்தோம். எங்கள் அணியில் மற்றொரு பெண் உறுப்பினர் உள்ளே இருக்கிறார் அவரை அழைக்க வேண்டும் என்று போராடி உள்ளே சென்றோம். போன கொஞ்ச நேரத்திலயே சிகரெட் வாங்கச் சொன்ன வேற கல்லூரி சீனியரைப் பார்த்து ஒழிந்து கொண்டோம். இரண்டு பாட்டு முடிந்தது. அடுத்த பாட்டு. அழகிய லைலா...................................
எங்கள் கல்லூரி சீனியர் மாணவி எங்கள் தோளைத் தொட்டார். எங்கடா சுத்திட்டிருக்கீங்க.... அடுத்த ஈவண்ட் மெல்லிசை போய் ட்ரம்ஸ் எல்லாம் தூக்கிட்டு வாங்க்................... மனதுக்குள் நொந்து கொண்டே மெல்லிசைக் கூடத்துக்கு நடந்தோம்