Saturday, April 27, 2013

எம்ஜியார், ரஜினிகாந்த்,சல்மான்கான்,சிவாஜி சேர்ந்து செய்த காரியம்

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா  - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

தமிழ்மணம் இடுகைகளை நாம் படிக்க மிகவும் உதவி செய்யும் ஒரு தளம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமக்குப் பிடித்த இடுகைகளை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிறந்த இடுகையை இன்று படிக்க நேர்ந்தது.  சரி பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி சொல்லுவோம் என்று எண்ணி அவர்கள் பெயரைப் பார்த்த போது கீழ்கண்ட பெயர்கள் இருந்தன. 

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்



kamalhassan shahrukhkhan mgramachandran salmankhan kkarun09 kumanan5183 kaleelullahkhan satwik nisanthika bagavathar aamirkhan alexpandian geminiganesan sivajiganesan Hajahmohamed rajnikanth senthilkkum

சன்னலை மூடு

ரஞ்சிக் கோப்பைக்கு IPLகாரர்கள் சொல்லித்தரும் பாடம்

ஐ.பி. எல். கிரிக்கெட் ஆரம்பித்த இரண்டாம் வருடத்திலேயே உலகம் சுற்றப் போய்விட்டது. நம்மூர் சின்னப் பசங்க எல்லாம் தென்னாப்பிரிக்கா பார்க்க போய்விட்டார்கள்.(போயிருக்கற பசங்கல விளையாடவிட்டால் பரவாயில்லை) சென்ற முறை உலககோப்பை நடந்த போது அங்கே அழகிகளின் நடனம் நடந்ததே. யாராவது மறக்க முடியுமா.. ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே... அதே மாதிரி இந்த வருடம் கூட எதிர்பார்க்கலாம்.

ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்.

ரஞ்சிக்கோப்பை அணிகளையும் ப்ரீத்தி, சில்பா போன்றோருக்கு ஏலம் கொடுத்துவிடலாம். ஏலம் எடுக்காவிட்டால் இலவசமாகவாவது கொடுத்துவிடலாம். பெரிய பெரிய திரை எல்லாம் வைத்து கிரிக்கெட் போட்டியை மைத்தானத்துக்குள்ளேயே ஒளிபரப்புகிறார்கள். அதே போல் பெரிய பெரிய திரை வைத்து போட்டியை ஒளிபரப்ப வேண்டும். கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம். பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பார்களே அப்படி. பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம். தனியாக கண்ணாடிகளை விற்று காசு பார்க்கலாம்.

அவ்வாறு இலவசமாகக் கூட வாங்க மாட்டேன் என்று சொன்னால் அதற்கும் கவலைப் பட வேண்டியதில்லை. IPL காரர்களிடம் பேசி அந்த அணியை ஏலம் எடுக்க caution depositஆக இந்த அணிகளை ஏலம் எடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதியை கொடுக்கலாம்.

ஆட்டத்தின் போது அக்சய் குமார் வகையாறாவைச் சேர்ந்த ஃபேசன் ஷோ கலைஞர்களைக் கூட்டிக் கொண்டு சென்றால் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிடும்.
(படத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே)அவர்களை மைதானத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கச் சொன்னால் ரசிகர்களும் உற்சாகம் கொள்வார்கள். இது போண்ற ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.

அனுஷ்கா,மந்திரா பேடி மாதிரி திறமை வாய்ந்த ஆட்களை சின்னத்திரை https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrfpAidiL5VuI7igEMHix_Fb9QHnGTdkbnNlrjvxfjhjXh88Yh3NDxZxVbuIg2T2s9cuheyoCmTaW8aKjqhfZCbCLWtXQF2-W_qaIgDAMC-ZQNWJgluZMPTQlwsaqwtCwIorJWnDpfXcd4/s400/anushka-0003.jpghttp://www.bosey.co.in/blogpics/mandira.jpg
வர்ணனையாளர்களாக நியமித்து அவர்களது கருத்துக்களை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்களும் ஆட்டத்தின் போது தொலைக்காட்சியைவிட்டு நகராமல் இருப்பார்கள். ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

ஓரளவு ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் பிரபலம் அடைந்துவிட்டால் உலகம் பூராவும் நமது போட்டிகளை நடத்தலாம். அங்குள்ள நடிகர்கள், நடிகைகள், விளம்பர மாடல்கள் போன்றோரை உபயோகப் படுத்திவந்தால் உலகின் அனைத்து வித மைதானங்களிலும் விளையாடும் திறமையை நமது ஆட்டக்காரர்கள் பெறுவார்கள். பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எத்தனை நாள்தான் குண்டுசட்டியில் குதிரை ஓட்டப் போகிறார்கள்

டிஸ்கி;- மிகப் பழைய பதிவு, மீள்பதிவாக வருகிறது. வெளிவந்த காலம் அறிய முதல் பின்னூட்டத்தின் தேதி பாருங்களேன்.

Sunday, April 21, 2013

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சுந்தரபாண்டியன் 2 ?

விக்கிற விலைவாசில பாதாமும் பிஸ்தாவும் வாங்கிக் கொடுத்து பொண்ண நாங்க வளர்த்தால் நீங்க அஞ்சு ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சட்டை போட்டுக் கொண்டு கரெக்ட் பண்ணிட்டு போயிடுவீங்க நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கணும்     
 உபயம்: சந்தானம்- கலகலப்பு

மேல இருக்கற வசனத்தை கேட்டு ரசித்து என்சாய் பண்ணி சிரித்து குதித்து விசிலடித்த அதே ரசிக்க கண்மணிகளுக்கு கௌரவம்ன்னு ஒரு படத்த ரீலீஸ் பண்ணியிறுக்காங்க.  நல்ல விஷயம்தான். அது ஏற்கணவே இந்தியில் வந்தது. அதில் ஜாதிப் பெயர்லாம் சொல்லியிருக்காங்க. இதில சொல்லல அப்பிடின்னு ஒரு குரூப் சொல்லிட்டு இருக்காங்க.  நல்ல படங்க எந்த மொழில இருந்தாலும் தமிழுக்கு கொண்டு வருவதுதானே நாம பாரதியாருக்கு செய்யற மரியாதை.  அதை செய்திருக்கும் ராதா மோகனுக்கும், பிரகாஷ் ராஜுக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒரு டிவி நிகழ்ச்சியில கவுரவக் கொலைப் பற்றியும் , ஜாதிக் கொடுமைகள் பற்றியும் பேசி ஒருதடவ மார்க்கெட்டிங் பண்ணியாச்சு.  ஆனாலும் பாருங்க   ஒரு தினசரிப் பத்திரிக்கை. இது கவுரவக் கொலை அல்ல., உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை என்று எழுதியிருங்காங்க.   மத்தபடி படத்தைப் பத்தி நல்லாத்தான் எழுதி இருக்காங்க. ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அப்படிங்க வார்த்தையைப் படிச்சதும் ஷாக் ஆயிட்டேங்க., அதுவும் எப்படி.,  பாண்டவர் பூமி படத்தில் கொலை நடந்த உடனே நம்ம ராஜ்கிரண் நிப்பாரே அப்படி.,

இப்ப பாருங்க.,  ஜாதி, கவுரவ கொலை அப்படி இப்படின்னு பேசி பதிவர்கள் விமர்சனம் கூட எழுத முன் வர மாட்டாங்கராங்க., திருமதி தமிழை விட கவுரவும் படத்துக்கு  பதிவர்களின் விமர்சனம் குறைவுதான்.

======================================================================
தமிழ் திரையில்  ஜாதிப் பிரச்சனை பற்றி பேசுவதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதைப் பின்பற்றினால் மட்டுமே அந்த படம் மக்கள் வரவேற்பைப் பெரும்.

உயர்ந்த தாழ்ந்த ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச கூடாது, வேண்டுமென்றால் உயர்ந்த பிற்படுத்தப் பட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம்.

தாழ்ந்த ஜாதி  என்ற வார்த்தைக்குப் பதிலாக ஏழைகள் என்று உபயோகப் படுத்தலாம். பரதேசி என்று கூட சொல்லலாம். ஆனால் தலித் என்று சொல்லக் கூடாது.

தாழ்ந்த ஜாதியைக் காப்பாற்ற ஒரு உயர்ந்த ஜாதிக் காரர்தான் வரவேண்டும். அவர் ஜாதி வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.   அவர் தந்தையும் அவ்வாறே இருத்தல் நலம். அவர் வீட்டில் எல்லாம் ஏழைகளுக்கும் சோறு போடுவதாக ஒரு காட்சி அமைத்து. ஹீரோ குரூப்ஸ் வரும்போது. சாப்பிடுபவர்கள் எழுந்து  நின்று முதுகை வளைத்து  சாமீன்னு சொல்லி ஒரு கும்பிடு போட்டால் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அனைத்து தரப்பினரும் பாராட்டுவார்கள். 

தமிழில் வெளி வந்த ஜாதி மறுப்பு திரைப்படங்களில் வெற்றிபெற்ற படங்கள் இரண்டு.

1. இது நம்ம ஆளு. அதிலும் ஹீரோ தலித் கிடையாது. சவரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்.  தலித் என்பவர் அவர்களுக்கும் கீழே

2.வேதம் புதிது. இதிலும் கூட சத்தியராஜைப் பார்த்து அமலாவின் தம்பி கேட்கும் கேள்விகளை தமிழகமே புல்லரித்துப் பார்த்தது. நீங்க படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்டபோது சத்தியராஜ் ஷாக்காகி நிற்க தமிழகமே ஷாக் ஆகி நின்ற மாதிரி ஒரு ஃபீலிங்ஸ். யோசிச்சு பாருங்க,  அதே கேள்வியை ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவன் கேட்டிருந்தால் புல்லரித்து நின்ற ஜனம் என்ன செய்து இருப்பார்கள்?

==================================================================
இன்னொரு படமும் உண்டு. அதில் நிஜமாகவே ஹீரோவை தலித் ஆக காட்சி இருப்பார்கள். குடும்ப கவுரவம் காக்க அந்தப்  பெண் சாக,   மேல்ஜாதிப் பெண் காதலித்த இளைஞனும் கடைசியில் சாக எல்லோரும் நெஞ்சமும் மகிச்சியாக இருக்க அந்தப் படம் வெற்றி பெற்றது.   யாருக்காவது நினைவு  இருக்கா?

=================================================

கவுரவக் கொலை பற்றி மிக சமீபத்தில் உள்ளது உள்ளபடி ஒரு படத்தில் காட்சிப் படுத்தி இருப்பார்கள். படத்தில் துவக்கத்திலேயே  அந்த பையனை துரத்திக் கொண்டுப் போய் நடுக் காட்டில் வைத்து அவன் கெஞ்சும்போது தங்களது  வழக்கமான டயலாக் சொல்லி அந்தப் பையனை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றுவிட்டு அவர்கள் அப்படித்தான் என்று பதிவு செய்திருப்பார்கள்.  அந்தப் படம்  சுந்தர பாண்டியன்.

பில்லா உருவான கதையை பில்லா 2 என்று சொல்லி (அதை நாயகன் 2, பாஷா 2 என்று சொல்லி இருக்கலாம் ) வெளிவிட்டது மாதிரி  இந்தப் படத்தையும்  சுந்தர பாண்டியன் 2 என்று சொல்லி மார்கெட்டிங் பண்ணி இருக்கலாம்.  டிவி நிகழ்ச்சியில் அழுத பெண்களின் கண்ணீரை விட பவர் ஃபுல்லாக இருந்திருக்கும்.

Wednesday, April 3, 2013

காதல் கோவணம்

அம்மணமாக சுற்றும் ஊரில் கோவணம் கட்டிக் கொள்வது போன்றதுதான் காதல் திருமணம். சிலர் அந்தக் கோவணத்தைக் கழட்டி தலையில் சுற்றிக் கொள்வதாலேயே காதல் திருமணம் என்பது முழுவதும் ஒதுக்க வேண்டியது என்ற முடிவுக்கு வரவேண்டியது இல்லை.
 

பெரும்பாலும் காதல் திருமணத்திற்கு எதிரி என்று பார்த்தால் பெற்றோர் என்று சொல்லுவார்கள். பார்த்தால் அப்படியும் இருக்காது. கூட இருக்கும் சொந்தங்கள் பந்தங்கள் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்கள். இந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையும் குறிவைத்து சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான் பெரிய எதிரியாக இருந்து இம்சை கொடுப்பார்கள். இவர்களுக்கு பயந்துதான் பெரும்பாலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்., கருணைக் கொலைகள் தான் ஒரு மானஸ்தன் என்பதை  தன் சாதிக்காரனுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். 

200- 300 கிமீ தள்ளி உள்ள, சில நேரங்களில் பக்கத்து மாநிலங்களில் உள்ள பெண்ணையோ, மாப்பிள்ளையையோ மெட்ரிமோனியலில் தங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இருந்த ஒரே காரணத்துக்காக மணம் முடித்து வைக்கும் பெற்றோர்களால் ஏன் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ திருமணம் முடித்து வைக்க முடியவில்லை? இந்த சுற்றமும் சூழ நிற்கும் கூட்டங்களால் வந்த வினைதான் இது. 

தங்கள் சாதியிலேயே திருமணம் செய்து கொண்ட பலரையும் பாருங்களேன். அவர்களது கஷ்ட காலங்களில் இந்த சுற்றமும் சூழ வந்து கும்மியடித்தவர்கள் யாராவது வந்து உதவி செய்து இருக்கிறார்களா என்று?   காதல் திருமணம் செய்தவனானாலும், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் அவனவனாகப் பார்த்து அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தால்தான் உண்டு.

அப்புறம் எப்படித்தான் இதைத் தாண்டுவது எனப் பாருங்கள்.  காதலிப்பவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு வேலை தேடிக் கொண்டு பிறந்த ஊரை விட்டு தள்ளி இருக்கும் நகரத்துச் சென்றவர்கள் காதல் திருமணம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்குக்கு போனவர்கள் கதிதான் அதோ கதி ஆகியிருக்கிறது.

சொந்த ஊர், சொந்த மண் என்ற நினைப்போடு இருந்தால் கருணைக் கொலையை  சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது, இதில் தலித், தலித் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.   ஆனால் சாதி வேறுபாடு பார்த்தல் என்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சாதி பார்க்காமல் பழகும் மக்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அப்படி சாதி பார்க்காமல் பழகுபவர்கள்கூட சாதி மறுப்பு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்களா என்பது சற்று சந்தேகம் தான். 

எனக்குத் தெரிந்தவரை  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்  சொந்த ஊர் பக்கம் போகாமல் இருப்பது. இருவருமே நல்ல வேலையில் இருப்பது.ஆகிய காரணங்கள் மட்டுமே அவர்களது திருமணத்தை வாழ வைக்கும். இதை பயந்து ஓடுதல் என்று நினைக்கத் தேவையில்லை. புதிய வாழ்க்கை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிந்தால் உங்களை பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களும் கண்டிப்பாக உங்களுடன் வந்து மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள்.  அப்படி உங்களோடு வர மறுத்தால்  பெற்றோர் பார்த்து வைத்து திருமணங்களில் எத்தனை பேர் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டினால் அவர்களும் மனம் மாறக் கூடும்.

=================================================================
இன்றைய இளைஞர்கள் ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்ள எனக்குத் தெரிந்து சில காரணங்கள்.

1. அவர்களை யாருமே காதலிக்க மறுப்பது.., சிலர் சிலபல முயற்சிகள் செய்தும் பலனிக்காமல் போயிருக்கும்.

2.இதுவரைக்கும் பெற்றோர் சொன்னதை கேட்கவில்லை. இதை மட்டுமாவது பெற்றோர் விருப்பதுக்கு விட்டு விடுவோம் என்று ஒதுங்குவது ( இதில் அவர்களது சோம்பேரித் தனமும் இருக்கிறது)

3.நமக்கு நல்ல துணை கிடைத்து விட்டது. நமது சகோதர / சகோதரிக்கு நல்ல துணை கிடைக்குமா என்ற சந்தேகம். ( பம்பாய் அரவிந்த சாமி மாதிரி யாருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை)

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails