Saturday, September 3, 2016

காதல், களவு தமிழர் பண்பாடே 3.9.16

தனக்கு பிடித்த ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் வாழ்க்கையை தேடிச் செல்வது என்பது பழந்தமிழர் வாழ்க்கையில் இயல்பான ஒன்றே. அதற்கான ஓர் ஆதாரம் இதோ

கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

குறிந்தொகை 116, கோடன் கொற்றனார் எழுதியது

கழிய – ஆறு கடலோடு சேருமிடம், மனைவி கணவனோடு சேருமிடமாகவும் கொள்ளலாம்

காவி –தாம்பூலத்தின் வண்ணம், மலர்கள் ,

குற்றும் – பறித்தும்,அரிசி குத்தும் செயலில் வரும் குத்தும் என்ற பொருளிலும் கொள்ளலாம்

கடல – கடலில் உள்ள,

வெண்டலைப் – வெள்ளைத் தலைகளையுடைய ,

புணரி ஆடியும் – அலைகளில் ஆடியும்,

நன்றே – மிக,

பிரிவு இல் ஆயம் – பிரிவு இல்லாத தோழியருடன்,

உரியது ஒன்று அயர – எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய,

இவ்வழிப் படுதலும் ஒல்லாள் – இந்த வழிக்கு ஒத்துக் இருக்காமல், 

அவ்வழி – அந்த வழியில்,

பரல்பாழ் படுப்பச் சென்றனள் – சிலம்பில் உள்ள கற்கள் பாழாக்கும்படி சென்று விட்டாள்.

மாதோ – அசை,

செல்மழை – செல்லும் மழைமேகங்கள்,

தவழும் சென்னி – தவழும் மலை உச்சி, 

விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே   – வானத்து அளவும் உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்கு (சென்று விட்டாள் )
.
இது ஒரு செவிலித் தாய் பாடியதாக உள்ள பாடல்.  இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்து இதில் உள்ள பொருட்களோடு உங்களுக்கு தோன்றும் பொருளையும் சேர்த்து படிக்கும்போது வெளிப்படும் உணர்வுகள் சுவையாக இருக்கும்.
 
இந்தப் பாடல் ஒரு செவிலித்தாயானவள் தனது மகள் காதலனோடு சென்று விட்டதை சொல்லும் வண்ணம் அமைந்த பாடல். இது போன்ற பாடல்களை பள்ளிகளிலேயே சொல்லித் தர ஆரம்பித்தால் காதல் எண்பது மிக இயல்பான ஒன்று என்பதை மிக ஆரம்பத்திலிருந்தே புகட்ட முடியும்.

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails