Wednesday, September 14, 2016

நன்றி அமித் ஷாஜி

இந்த நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.  மகா சக்கரவர்த்தி மகாபலியின் வருகை உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. உண்மையில் மகாபலியின் வருகையை கேரளா தாண்டி கொண்டு சென்ற பெருமை அமித் ஷாவையே சேரும். 

மன்னன் மகாபலியின் பெருமையை வெறும் சடங்காக சம்பிரதாயமாக பாடிக் கொண்டிருந்த மக்களை உணர்ச்சிப் பூர்வமாக ஒவ்வொரும் பகிர்ந்து கொள்ளக் காரணமே அமிஷ் தான் அவர் போட்ட வாமன ஜெயந்தி போஸ்டர்தான்.  நம்ம ஊரில் பிள்ளை சதுர்த்தி திருவிழா போல வாமன ஜெயந்திக்குஅடி போட்ட போஸ்டரை எதிர்த்து கேரளாவே பொங்கிக் கொண்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு

வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை

இன்று ஒவ்வொருவரும் மகாபலி பற்றிச் சொல்லுகிறார்கள். மகாபலி ஆட்சியில் பஞ்சம் இல்லை, பசி இல்லை, பட்டினி இல்லை, இள வயது மரணம் இல்லை, சாதி இல்லை. அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இன்றி சமத்துவத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர். வந்துள்ளவர் தானம் என்று கேட்டால் எதையும் கொடுக்கும் மனதோடு வாழ்ந்து வந்திருக்கிறார்.  அவர் ஆட்சியில் யாரும் கெட்ட எண்ணத்துடன் தானம் கேட்டதில்லை.  வந்திருப்பவர் கபட வேடதாரி என்று  எச்சரிக்கப் பட்டும் தானம் கொடுக்க சம்மதிக்கிறான்.  

அவன் நாட்டில் பார்த்த முதல் வேட தாரி வாமனன்.  உள்ளன்றொரு வைத்து புறம் ஒன்று பேசும் முதல் நபர் வாமனன்.   

இன்று கேரளாவில் உள்ள ஒவ்வொரு ட்விட்டரும், முகநூலாரும் வாமன அவதாரத்தின் வஞ்சனையையும்  மகாபலியின் பெருமைகளையும் ஆரிய திராவிட வித்தியாசத்தையும் தெளிவாக ஆவணப் படுத்தி பேசுகிறார்கள்.  நேரில் பார்ப்பவர்களிடம் ஓணம் வாழ்த்துக்கள் என்று சொன்னாலே அவர்கள் மகாபலியின் பெருமை பேசி பதில் சொல்கிறார்கள்.

இப்படி ஓர் ஆரிய எதிர்ப்பு திராவிட வாழ்த்து சமீப காலத்தில் வந்ததே இல்லை. இப்படி ஒரு சூழல் வந்ததற்கு  அமித் ஷா அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

பின்குறிப்பு:- கேரள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது இன்னொரு நண்பர் சொன்ன செய்தி, மகாபலிக்கு முற்பிறவி சாபமாம் அதனால்தான் வாமணன் அவரை பாதாள உலகம் அனுப்பினாராம்.

பின்குறிப்பு 2:-  வாமனனை வில்லனாக கொண்ட இந்த கதைக்கும் விஷ்ணுவை பெண்ணாக்கி அவருக்கு குழ்ந்தையையும் கொடுத்த கதைக்கும் ஏதாவது அரசியல் தொடர்ப்பு இருக்குமா?

பின்குறிப்பு 3:- நாம் ஏன் தீபாவளியைக் கூட  பூமாதேவியின் மகனான நரகாசுரனின் மீள் வருகை நாளாக மாற்றிக்கொண்டாடக் கூடாது?


2 comments:

  1. அதானே? ஏன் கொண்டாடக் கூடாது?

    ReplyDelete
  2. கதைகள் என்னவாகியும் இருக்கட்டும். குடிப்பதற்கு காரணங்கள் எப்படி தேவை இல்லையோ அப்படியே கொண்டாட்டங்களுக்கும் காரணங்கள் தேவை இல்லை. ஓணம் என்பது ஒரு பொருளடிதாரப் பரவலே.

    --
    Jayakumar

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails