பூவே உனக்காக 1996ல் வந்த படம், நாங்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த காலம் அது நண்பர் கிரிஸ்டல் செந்திலுடன் பார்த்த விஷ்ணு படம்தான் கோயமுத்தூரில் எனது கணக்கை துவக்கியது என்ற வகையில்விஜய் நமக்கு நெருக்கமானவரே..,
பூவே உனக்காக வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் முகநூலில் எனது நண்பர் மகேஷ் குமார் இந்த படம் வராமல் இருந்திருந்தால் என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
சற்றே இந்தக் கேள்வியை மாற்றி இந்தப் படம் இப்போது வந்திருந்தால் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை இளைஞர்களை கவர்ந்திருந்தால், மனங்களை மாற்றி இருந்தால்.........
1. தான் காதலித்த பெண் தன்னைக் காதலிக்க வில்லை என்றாலும்கூட அவளது நல்வாழ்வுக்க்காக வே உழைப்பான்.
2. தனது காதலியைத் தவிர வேறெந்த பெண்ணையும் மனதாலும் நினைக்க மாட்டான்.
3.இது போன்ற இளைஞர்களின் மத்தியில் எந்த பெண்ணுமே பாதுகாப்பாக உணருவார்கள்.
4.மதம் தாண்டிய திருமணங்கள் இயல்பாக நடக்கலாம்.
5.மதம் தாண்டிய திருமணங்களுக்கு ஆதரவு தரும் இளைஞர்களும் அதிகரிக்கலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எஸ்.ஏ.சந்திர சேகரின் இயக்கத்தை விட்டு வெளி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தபின் விஜயின் இரண்டாவதோ மூன்றாவதோ படம்தான் இது. ஏற்கனவே இதயம் படத்தில் காதலை மூக்கின் நுணியிலேயே வைத்திருந்து முரளி இதய நோயாளியாகி இருப்பார். காதல் படங்களின் துவக்கமாக அது இருந்த போதும் சரியான நாயகர்கள் இல்லாத சூழல் நிலவிய கால கட்டம். முரளியே சீனியர் நாயகர் ஆகியிருந்தார். இருந்தாலும் கூட அவர் கல்லூரி மாணவனாக 97ல் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்கவில் வெற்றிக் கொடி கட்டியிருப்பார்.
கிராமத்திலிருந்து வரும் அப்பாவி இளைஞன் பாத்திரத்திற்கு சரியான தேர்வாக விஜய் அமைந்திருப்பார். அப்போது பல என்சினியரிங் கல்லூரிகள் துவங்கி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நகரை நோக்கி வந்து கொண்டிருந்த காலம் அது. தங்களைப் போன்ற எளிய தோற்றத்தில் இருந்த விஜயயை அவர்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டு விட்டனர். அதன் பிறகு விஜய்யும் அஜித்தும் விதவிதமாக காதலித்துக் கொண்டே இருந்தார்கள். அதன் பின்னர் பணக்கார பையன்களின் காதலும் படமானது. விஜய் திருமலையானதும் அந்த இடத்தில் தனுஷ் போய் உட்கார்ந்து கொண்டார்.
டி.ஆர் சிலம்பரசனை தயாரித்தது போல எஸ்.ஏ.சி விஜயை தயாரித்திருந்தார். வித்தியாசம் என்னவென்றால் எஸ்.ஏ.சி கதை திரைக்கதை இயக்கம் இசையெல்லாம் விஜய்க்கு சொல்லித்தரவில்லை. வித வித மாக காதலித்தே விஜய் அடுத்த தலைமுறையில் நம்பர் ஆகியிருந்தார்.
இந்த படம் வந்திருக்காவிட்டால் விஜய் முழுநேர ஆக்ஷன் ஹீரோவாக சங்கவி, யுவராணி போன்றவர்களை வைத்து தேவா, செந்தூரபாண்டி,செல்வா போன்ற பல கிராமத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களை நடித்துக் கொடுத்திருப்பார். தெலுங்குப் படங்களை அப்படியே ரீமேக் கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே வருங்கால முதல்வராக மாறியிருப்பார். தமிழக மக்களும் காதல் என்பது தொட்டபட்டா ரோட்டில் சாப்பிடும் முட்டை பரோட்டாவாக எண்ணியிருந்து இருப்பார்கள். காதல் தோல்விக்காக கொலை செய்வது, ஆளை வெட்டுவது, தற்கொலை செய்து கொள்வது போன்றெல்லாம் இல்லாமல். திரிஷா இல்லையென்றால் நயந்தாரா என்ற நிலைக்கு முதலிலேயே வந்திருப்பார்கள்.
ஆனால் இதயம், கோகுலம் மற்றும் இந்திக் காதல் படங்கள், மகுடமாக டைட்டானிக் (ஆங்கிலத்திலேயே கோவையில் 100நாள் ஓடியது) போன்ற படங்கள் அணிவகுத்த நிலையில் சில வருடங்கள் தாமதமாகியிருந்தாலும் பூவே உனக்காக வந்தே இருக்கும். ஒருவேளை இப்போது இந்தப் படத்தை ரீமே செய்தால் இளைஞர்களின் காதல் உணர்வுகள் மொட்டு விட்டு மலர்ந்து வன்முறைகள் குறைந்தாலும் குறையலாம்.

செம. அட்டகாஷ்.
ReplyDeleteஇப்ப வந்திருந்தால் படம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும் அவ்வளவுதான்.
ReplyDeleteதான் காதலிக்கும் பெண் தன்னைக்காதலிக்கா விட்டாலும் அவளது நல்வாழ்வுக்காக வாழும் நாயகனை விக்கிரமன் இந்தப்படத்தோடு சேர்த்து மொத்தம் எத்தனை படத்தில் காட்டியிருப்பார் என்பதற்கு ஏதாவது கணக்கு உண்டா ?
இப்ப வந்திருந்தால் படம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும் அவ்வளவுதான்.
ReplyDeleteதான் காதலிக்கும் பெண் தன்னைக்காதலிக்கா விட்டாலும் அவளது நல்வாழ்வுக்காக வாழும் நாயகனை விக்கிரமன் இந்தப்படத்தோடு சேர்த்து மொத்தம் எத்தனை படத்தில் காட்டியிருப்பார் என்பதற்கு ஏதாவது கணக்கு உண்டா ?
நாயக நாயகி தேர்வு சரியாக இருந்தால் கண்டிப்பாக ஓடும். மிக எளிமையான சாதாரண மிக இயல்பான ஒரு பாத்திரத்தில் விஜய் போன்ற ஒரு நடிகர். அதே போல் மிக சாதாரணமாக இருக்கும் நாயகி. உலக அழ்கிகளைப் போட்டால் அவர்களுக்காக உலகையே அழிக்கத் தோன்றும்.
ReplyDeleteஅந்த கால கட்டட்தில் வந்த விஜய் பட நாயகிகள் பிறரின் பார்வைக்காகவே படைக்கப் பட்டவர்கள். அதனால் அவர் காதலிக்கும் பெண் இன்னொருவரை திருமணம் செய்வதை மக்கள் ஏற்றார்கள். இன்று பெரிய ஹீரோ ஆகிவிட்டதால் ஏற்பது சிரமம். எனவே புது ஹீரோ அவசியம்
ReplyDelete