தன்னால் எழுத முடியாத பாடலைப் பாடும் புலவனுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் கொடுத்து ரசிகனாக மாறுகிறான்.
பாடல்களை தனக்குப் பிடித்தது போல் கற்பனைகள் செய்து கொண்டு ரசனையை வளர்த்துக் கொள்கிறான். ( திருவிளையாடல் பாடலில் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா வாக்குவாதத்தில் இறையானரின் கூந்தலுக்கும் மணமில்லை என்று வாதம் வந்த போது எப்படி ஆராய்ச்சி நடந்து முடிவு அறியப்பட்டது என்பது பற்றி பலசுவாரசியமான வாதங்கள் வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்)
இல்லையெனில் நர்சிம் அவர்களின் படைப்புகளைப் பாருங்கள். எவ்வளவு ரசித்து எழுதுகிறார் என்பது புரியும்.
தன்னால் படைக்க முடியாத சிலையை சிற்பி படைக்கும் போது சிலைக்கு ரசிகனாக மாறுகிறான்.
சிலைகளைப் பார்த்து கதைகளை உணர்ந்தது ஒரு காலகட்டம்.
பாடல்களாக வந்த கதைகளை பாடல்களாகவும், கதைகளாகவும் ரசித்துவந்தான். சிலைகளைப் பார்த்து சிலைகளையும் பாடல்களையும் ரசித்துவந்தான். அடுத்த கால கட்டங்களில் நாடகங்களாக வந்த போது சிலையே உருவெடுத்து வந்ததாக கருதி ரசித்தனர். அந்த காலகட்டங்களில் நாடகங்கள் நடிப்பதற்கும் பக்தி நாடகங்கள் பார்ப்பதற்குமே விரதம் இருந்தனர்.
வெறும் அறிவு போதனை மத போதனை கதைகளுக்கு அடுத்து சாகஸ பக்தி இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். அப்போதெல்லாம் சாகஸ்ங்கள் செய்யும் கடவுளின் பிம்பங்களாக வழித்தோன்றலாக தன்னை நினைத்துக் கொண்டு இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். (பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள் -கடவுளின் சாகஸங்களில் ஒரு பகுதி மக்கள் எவ்வளவு மயங்கி கிடந்தனர் என்றும் மற்றபகுதியினர் அதை எவ்வளவு மொக்கை என்று கூறினார்கள் என்றும் கல்கிஅழகாக விளக்கியிருப்பார்.)
அடுத்த சாகஸ சமூகக் கதைகள் வந்த போது நாயகனின் வழித்தோன்றலாக நினைத்து வந்தவன் தனது பிம்பமாகவே கருத ஆரம்பித்துவிட்டான். பரத்துக்கு பால் அபிஷேகம் செய்பவன் தன்னை கோயில் த்ர்மகர்த்தாவாகவும் முதல் மரியாதை பெருபவனாக தன்னை சமுதாயத்தில் மாற்றிக் கொள்கிறான். தனக்கு அவ்வளவு மரியாதை பெற்று தரும் தன் தலைவனை நாம் திட்டினால் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அவ்வாறு சொல்பவனை கண்டபடி கோபப்படுகிறான்.
தன்காலத்தில் இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் நிறையப் பேருக்கு உண்டு. சரோஜாதேவி மாதிரி இன்னைக்கு யார் இருக்கா? என்று சொல்பவர்கள் நிறைய உண்டு. அதே போல் நந்திதா தாஸ் கூட அறிவு ஜீவியாகப் பேசப் பட்டிருக்கிறார். ஆனால் எல்லோரும் அவரவர் காலத்தவர்களை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தனது பிம்பத்தை உயர்த்துவது தனக்குத்தானே பெருமை.(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)
..............................................................................................
பிரச்சனைகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மனம்விட்டு அழ நினைப்பவர்கள், பிறரின் பரிதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் சிவாஜியின் ரசிகர்களாக மாறுவார்கள்.
பிரச்சனைகளை கண்டு பொங்கி எழ நினைப்பவர்களும், தன்னைக் காப்பாற்ற இன்னொரு கடவுள் வருவார் என்று நினைப்பவர்களும் எம்ஜியார், ரஜினி ரசிகர்களாக மாறுகிறார்கள்.
உருவத்தில் பேச்சில் நிறத்தில் தன்னைப் போல் இருக்கும் நாயகனுக்கு ரசிகன் மானசீக அடிமையாக மாறும்போது அந்த நடிகனை திட்டுப் போது கண்டிப்பாக அந்த ரசிகணுக்கு கோபம் வரத்தானே செய்யும்.
...............................................................................................................
தன் பசிக்காக குளத்தில் இருக்கும் அழுக்குகளை தின்று சுத்தப்படுத்தும் மீன் போல தனது படத்தின் ஓட்டத்துக்காக என்றாலும் நல்ல கருத்துள்ள பாடல்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி நல்ல இசையமைப்புடன் கொடுத்து கல்வியறிவு இல்லாத ரசிகனுக்கு கொடுத்த ந்ல்ல இதயமுள்ள நடிகர்களும் உண்டு. (அப்பா..... எம்ஜியாரையும் கலைஞ்ரையும் பேலன்ஸ் பண்ணியாச்சு)
...................................................................................................................
இன்றெல்லாம் ரசிகன் தனது இதய தெய்வங்களீன் மனைவியரை அரைகுறை ஆடையுடன் பார்ப்பதை மிகவும் விரும்புகிறானே... ஏன்?
பின்குறிப்பு:- இந்த இடுகை வெளியானபோது விகடன் குட் பிளாக் பகுதியில் இடம்பெற்றிருந்தது
\\தன்னால் படைக்க முடியாத சிலையை சிற்பி படைக்கும் போது சிலைக்கு ரசிகனாக மாறுகிறான். \\
ReplyDeleteஅருமை.
சூப்பர் சார்
ReplyDelete//தன்காலத்தில் இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் நிறையப் பேருக்கு உண்டு.
ஆனால் எல்லோரும் அவரவர் காலத்தவர்களை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தனது பிம்பத்தை உயர்த்துவது தனக்குத்தானே பெருமை.(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)//
உண்மை
ஏற்புடைய கருத்துக்கள் ஐயா
ReplyDeletewell said. இதில் ரசிகன் மட்டுமல்ல. நடிகர்களை மிகப்பெரிய பிம்பங்களாக சித்தரித்து அவர்களை பற்றி ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்க்கும் ஊடகங்களும் தான்.
ReplyDeleteநமீதா படம் இல்லாத வார பத்திரிகைகள் உண்டா..
இது இங்கு மட்டுமல்ல. ஹாலிவுட்டிலும் உண்டு..
ஆனால் பாலாபிஷேகமெல்லாம் கிடையாது.
அப்படியே இருந்தாலும் ஒரு சினிமா உலக தரத்தில் எடுக்க முடிகிறதா.
கை கால் அசைவிற்கெல்லாம் சவூண்டு கொடுத்தால் இப்படிதான்..
தமிழ் சினிமா கடைசி வரை சவுண்டு சர்வீஸ் நடத்தவேண்டியதுதான்.
வாங்க நட்புடன் ஜமால்..
ReplyDeleteபுருனோ
நசரேயன்
வண்ணத்துபூச்சியார் அவர்களே
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
This comment has been removed by the author.
ReplyDeletesir rasiganukku kovam varama unga wifekku vanthathan kastam...
ReplyDeleteவாங்க ரேகா, வருகைக்கு நன்றி
ReplyDeleteநல்லதொரு பதிவு!!!!
ReplyDeletenalla villakkam suresh
ReplyDeletenalla irunthuchu
//தன்காலத்தில் இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் நிறையப் பேருக்கு உண்டு. //
ReplyDeleteசரி தான்
வாங்க
ReplyDeleteNaresh Kumar,
sayrabala,
கிரி அவர்களே
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
___//இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று
ReplyDeleteநூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது//___
ஹையா
எங்க தாத்தாவுக்கும் பொறுப்பு இல்ல
எங்க அப்பாவுக்கும் பொறுப்பு இல்ல
எனக்கும் பொறுப்பு இல்ல
நெனைக்கவே பெருமையா இருக்கு ...
//பிரச்சனைகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மனம்விட்டு அழ நினைப்பவர்கள், பிறரின் பரிதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் சிவாஜியின் ரசிகர்களாக மாறுவார்கள்.//
ReplyDeleteஎனக்கு நீங்க சொன்ன மூன்றும் வரவில்லை.சிவாஜியின் முகபாவங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.
//பிரச்சனைகளை கண்டு பொங்கி எழ நினைப்பவர்களும், தன்னைக் காப்பாற்ற இன்னொரு கடவுள் வருவார் என்று நினைப்பவர்களும் எம்ஜியார், ரஜினி ரசிகர்களாக மாறுகிறார்கள்.//
ReplyDeleteஎம்.ஜி.ஆர் பிடிக்காம போனதுக்கு ஒரு காரணம் இருக்கலாம்.லாஜிக் இல்லாத கதைகளும் முக்கியமா வில்லன் பெண்ணை கற்பழிப்பதுன்னு ஒரு சீன் வச்சு தீடீர்ன்னு வந்து குதிச்சு சண்டை போடுவது.ரஜனியின் துவக்க கால வில்லத்தனங்கள்,ஸ்டைல் நன்றாகவே இருந்தது.
பாண்டுகள் மூன்று பேர் தவிர இடது பக்க இரண்டு பேர் பெயர் தெரியவில்லைன்னு கேட்டிருந்தேன்.பதில் சொன்னீங்களா:)
ReplyDeleteவாங்க மோனி..
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல.
வாங்க ராஜராஜன் அவர்களே.
ReplyDelete//எனக்கு நீங்க சொன்ன மூன்றும் வரவில்லை.சிவாஜியின் முகபாவங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.//
நல்ல விஷயம்தான், வரவேற்கத்தக்கது.
நல்ல அலசல் தலைவரே
ReplyDelete//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஎம்.ஜி.ஆர் பிடிக்காம போனதுக்கு ஒரு காரணம் இருக்கலாம்.லாஜிக் இல்லாத கதைகளும் முக்கியமா வில்லன் பெண்ணை கற்பழிப்பதுன்னு ஒரு சீன் வச்சு தீடீர்ன்னு வந்து குதிச்சு சண்டை போடுவது//
கற்பழிப்பதை தடுப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்கிறீர்களா...
கற்பழிப்பு காட்சி தடைபடாமல் இருந்தால்தான் லாஜிக்கோடு இருக்கும் என்று நினைக்கிறீர்களா...
நாடோடி மன்னன், அடிமைப்பெண், மலைக்கள்ளன், மந்திரிகுமாரி, போன்ற படங்களில் லாஜிக் இல்லை என்று சொல்கிறீர்களா...
அப்படி சுத்தமாக லாஜிக் இல்லைஎன்று உங்களால் கூறப்படும் படங்களில் உள்ள பாசிடிவ் ஆட்டிட்யூட் உள்ள பாடல்களை ரசிகர்களை முணுமுணுக்க வைத்ததற்கு யார் காரணம்.
உலகம் சுற்றும் வாலிபன் ரசிக்க முடியாத உங்களால் ஆங்கில சாகஸ,தமிழ் சாகஸப் படங்களை ரசிக்க முடிகிறதா...
...............................................
பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு பிடித்தவிஷயங்களை பிடித்த நபர்களை பிடித்த காட்சிகளை ரசியுங்களேன். பிடிக்காத விஷயங்களில் பிடிக்காததற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வது தேவையில்லாத வேலை..ஆனால் கூட்டமாகச் செய்தால் நன்றாகப் பொழுது போகும்.
அதைதான் பொன்னியின் செல்வன் கதையில் ஒருவருக்கு பிடித்த தெய்வங்களையும் கதைகளையும் எவ்வாறு மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்பதையும் கல்கி அழகாக விளக்கியிருப்பார்.
//ராஜ நடராஜன் said...
ReplyDelete.ரஜனியின் துவக்க கால வில்லத்தனங்கள்,ஸ்டைல் நன்றாகவே இருந்தது.//
உண்மைதான். ஆனால் காயத்ரி படத்தினை பதினாறு வயதினேலே படத்தைப் பார்ப்பது போல இன்றைய ரஜினி ரசிகர்களால் பார்க்கமுடியுமா சார்?
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteபாண்டுகள் மூன்று பேர் தவிர இடது பக்க இரண்டு பேர் பெயர் தெரியவில்லைன்னு கேட்டிருந்தேன்.பதில் சொன்னீங்க//
சொன்ன இடத்திலேயே பதில் சொல்லிவிட்டேன்
//முரளிகண்ணன் said...
ReplyDeleteநல்ல அலசல் தலைவரே
//
நன்றி தலைவரே நன்றி
பாடல்களை தனக்குப் பிடித்தது போல் கற்பனைகள் செய்து கொண்டு ரசனையை வளர்த்துக் கொள்கிறான். ( திருவிளையாடல் பாடலில் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா வாக்குவாதத்தில் இறையானரின் கூந்தலுக்கும் மணமில்லை என்று வாதம் வந்த போது எப்படி ஆராய்ச்சி நடந்து முடிவு அறியப்பட்டது என்பது பற்றி பலசுவாரசியமான வாதங்கள் வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்)///
ReplyDeleteகூந்தலில் மணம் உள்ளதா? இப்போதும் ஆராய்ச்சிக்குள்ளது!
வாங்க thevanmayam சார்..
ReplyDeleteஇன்னொருத்தர் மனைவியின் கூந்தலில் மணமில்லை என்று நீ எப்படி சொல்லமுடியும் என்று நக்கீரனைப் பார்த்து நெற்றிக் கண்ணைத்திற்க்கும் அளவிற்கு கோபம் கொண்டதாகவும் ரசிகர்கள் சொல்லுவதுண்டு
தன்னால் முடியாததை ஒருவன் செய்கிற போது ரசிக்கிறான் என்பது சிந்திக்க வைக்கிற வரி. முடிந்ததை சிறப்பாகச் செய்கிற போதும் ரசிக்கிறான்.
ReplyDeleteஆனால் இதையெல்லாம் அறிமுகமில்லாதவன் செய்கிற போது ரசிக்கிறான்.
கூட இருக்கிறவன் செய்தால் பொறாமைப் படுகிறான் அல்லது குறை சொல்கிறான்!
http://kgjawarlal.wordpress.com
அண்ணே... நல்ல அலசல்.
ReplyDelete@Jawarlal
ReplyDelete@நையாண்டி நைனா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,