அமெரிக்க பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்யவும், அமெரிக்க தேர்தலை ஒத்திப் போடும் முயற்சிகளும் துவங்கப் பட்டுள்ளன. இந்த முயற்சிகளை தொடரும்போது அமெரிக்க நாட்டு விளையாட்டுகளின் வண்ணம் மாறத் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவின் அரசியல் மற்றும் விளையாட்டு வீரர்கள் கதற தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் 20-20 போட்டிகள் நடத்தப் பட வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்து இருப்பது. அமெரிக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது. 20-20 போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கத்தொடங்கினால் ஒரு பெரிய திருவிழா போல் ஆகிவிடும் என்பதாலும், நடன குழுக்கள் அமெரிக்க கலாச்சாரத்திற்கேற்ப தங்கள் உடைகளை மைதானத்திலேயே மாற்றக் கூடும் என்பதாலும் அமெரிக்காவில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு 20-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எந்த இடையூறும் நிகழக் கூடாது என்பதற்காக அமெரிக்கத்தேர்தல் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப் படலாம் என்று பரவலாகப் பேசப் படுகிறது.
20-20 போட்டிகள் அமெரிக்காவில் ந்டைபெறுவது பற்றி பிற விளையாட்டுவீரர்களிடம் கருத்துக் கேட்டபோது
கால்பந்து வீரர்:-
விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த போட்டிகள் அமைகின்றன. இதே போல் கால்பந்திலும் 5-5-5 என்ற அளவில் நடத்த வேண்டும். ஒவ்வொரு பாதியும் ஐந்து நிமிடம் மட்டும் நடைபெறுவதால் முதல் வினாடியிலிருந்தே கோல் அடிக்க வேண்டும் என்ற உணர்வு வருவதால் போட்டி இன்னும் ஆக்ரோசமாக அமையும் என்று தெரிவித்தார். இதையே ரக்பி,கைப்பந்து மற்றும் ஹாக்கி வீரர்களும் தெரிவித்தனர்.
கூடைப் பந்துவீரர்கள் இதை பற்றிக் கூறும்போது 20-20ஐப் பின்பற்றி கூடைப் பந்திலும் அளவுகளை மாற்ற வேண்டும். கூடையை 2 அடி உயரத்தில் வைத்தால் இன்னும் அதிகமான புள்ளிகள் எடுத்து போட்டி மேலும் அதிக பரபரப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ஓட்டப்பந்தயவீரர்கள் கூறும்போது ஏற்கனவே இந்த நடைமுறை ஓட்டப் பந்தயத்தில் இருப்பதாகவும், ஆனால் நூறு மீட்டர் என்ற அளவை 20மீ என்று குறைத்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்.
நீச்சல் வீரர் கூறுகையில் நீச்சல் போட்டிகளி ஐந்து மீட்டர் என்ற அளவில் வைத்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்றார். இவ்வாறு தூரங்களை குறைத்தால் நீச்சல் தெரியாத வீரர்கள் கூட நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டிருந்தனர்.
பொருளாதார நிபுணர்களிடம் கேட்டபோது
20-20 போட்டிகள் அமெரிக்காவில் நடப்பது என்பது சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி விடும்.
சுற்றுலாவிற்கு வரும் அரபு தேசத்தவர்கள் மூலம் பல் ஆயிரம் கோடி டாலர்கள் அந்நியப் பணம் கிடைக்கும்.
உள்நாட்டில் வேலை செய்யும் ஆசியர்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்று விட்டால் அந்த வேலைகளை அமெரிக்கர்களுக்கே கொடுத்துவிடலாம். என்வே தற்காலிகமாக பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நடன குழுக்கள் நிறைய அமைப்பது மூலம் ஒரு லட்சம் பேருக்கு நிரந்த வேலை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமையும்..
தேர்தல் நூறு ஆண்டுகளுக்கு தள்ளிப் போட படுவதன் மூலம் நூறு லட்சம் கோடி கண்டெயினர் டாலர்கள் மிச்சம் ஆகும் என்று கூறினார்.
மொத்தத்தில் ஐ.சி.சியின் அறிவிப்பால மொத்த அமெரிக்காவும் மகிழ்ச்சி கடலில் (மூழ்க ) மிதக்கப் போகிறது என்பதே உண்மை
இது ஒரு மீள்பதிவு
தல,
ReplyDeleteசொன்ன மாதிரியே மீ த பஸ்ட்டு.
அப்பாடா, இன்னும் அறுபத்தி ரெண்டாயிரத்து முன்னுத்தி மூணு பதிவுதான் பாக்கி.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
என்னா நடக்குது இங்க..!
ReplyDeleteநான் எங்க இருக்கேன்..!
தல,
ReplyDelete//அமெரிக்காவின் அரசியல் மற்றும் விளையாட்டு வீரர்கள் கதற தொடங்கியுள்ளனர்.//
போற போக்கை பார்த்தா இது உண்மையில் நடந்தாலும் நடக்கும்.
//நடன குழுக்கள் அமெரிக்க கலாச்சாரத்திற்கேற்ப தங்கள் உடைகளை மைதானத்திலேயே மாற்றக் கூடும் என்பதாலும்// இது ஏதோ வேண்டுகோள் / ஆசை போல தெரிகிறதே தல?
//இவ்வாறு 20-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எந்த இடையூறும் நிகழக் கூடாது என்பதற்காக அமெரிக்கத்தேர்தல் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப் படலாம் என்று பரவலாகப் பேசப் படுகிறது// அமெரிக்க கைக்கூலி, ஒபாமா ரசிகன் Lalit மோடி செய்த சதிதான் இது. ஒபாமா அமெரிக்காவின் நிரந்தர Preseident ஆக வேண்டும் என்று செய்த சதி இது.
இதனை உடனடியாக CBI விசாரிக்க வேண்டும். அதற்க்கு கேப்டன் விஜயகாந்த் தலைமை ஏற்க வேண்டும்.
//தற்காலிகமாக பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.// ஏதேது. தமிழக அரசியல் விளம்பரங்களை பார்த்து வந்த பாதிப்பு போல இருக்கே?
//நடன குழுக்கள் நிறைய அமைப்பது மூலம் ஒரு லட்சம் பேருக்கு நிரந்த வேலை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமையும்// ரீபீட்டெய்.
தல, இதுக்கு மேல முடியல. முடிஞ்சா ஆம்புலன்ஸ் அனுப்புங்க தல.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
//டக்ளஸ்....... said...
ReplyDeleteஎன்னா நடக்குது இங்க..!
நான் எங்க இருக்கேன்..!
//
தல அமெரிக்க பொருளாதாரத்தைப்பற்றி அலசிக் கொண்டிருக்கிறோம்.
வருகைக்கும் கேள்விக்கும் நன்றி
//King Viswa said...
ReplyDeleteதல,
சொன்ன மாதிரியே மீ த பஸ்ட்டு.//
பிரிச்சு மேஞ்சிருக்கீங்களே தல...
வருகைக்கும் மீள் வருகைக்கும் நன்றி
////டக்ளஸ்....... said...
ReplyDeleteஎன்னா நடக்குது இங்க..!
நான் எங்க இருக்கேன்..!
//
தல அமெரிக்க பொருளாதாரத்தைப்பற்றி அலசிக் கொண்டிருக்கிறோம்.
//
ஹிஹி... காயப்போட்ட பிறகு சொல்லுங்க...
ஹாய் சுரேஷ்
ReplyDeleteஉண்மையிலே விளையாட்டு வீரர்கள் கொடுத்து வைத்தவர்கள் !..
அப்படியே எங்க ஊருக்கும் வாங்க!
ReplyDeletehttp://www.ensaaral.blogspot.com/
சுரெஷ்!
ReplyDeleteஐ.பி.எல் ஐ வச்சு விளையாடுறீங்களே!!!
அடிங்க சிக்ஸர், ஃபோரா !!
ஓட்டும் போட்டாச்சு!!
ReplyDelete//ச்சின்னப் பையன் said...
ReplyDeleteஹிஹி... காயப்போட்ட பிறகு சொல்லுங்க...//
இப்பத்தானே அலசறோம், இன்னும் பல வேலைகளை முடித்தபின் நடக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
//starjan said...
ReplyDeleteஹாய் சுரேஷ்
உண்மையிலே விளையாட்டு வீரர்கள் கொடுத்து வைத்தவர்கள் !..
//
ஆமாம் தல..
//starjan said...
ReplyDeleteஅப்படியே எங்க ஊருக்கும் வாங்க!
http://www.ensaaral.blogspot.com/
//
கண்டிப்பாக தல
//thevanmayam said...
ReplyDeleteசுரெஷ்!
ஐ.பி.எல் ஐ வச்சு விளையாடுறீங்களே!!!
அடிங்க சிக்ஸர், ஃபோரா !!
//
அடிப்படையில் நாமெல்லாம் விளையாட்டு வீரர்கள் தானெ தல
//thevanmayam said...
ReplyDeleteஓட்டும் போட்டாச்சு!!
//
வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி தல
//King Viswa said...
ReplyDeleteஅமெரிக்க கைக்கூலி, ஒபாமா ரசிகன் Lalit மோடி செய்த சதிதான் இது. ஒபாமா அமெரிக்காவின் நிரந்தர Preseident ஆக வேண்டும் என்று செய்த சதி இது.
//
பார்த்தீங்களா மக்களே .., இதில் எத்த்னை விஷயங்கள் என்று
ஹா ஹா ஹா ஹா
ReplyDelete//முரளிகண்ணன் said...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா//
வாங்க தல..,,,,,,,,,