Thursday, November 26, 2009

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?

யார்க்கர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஓரளவு பரிச்சையம் ஆன வார்த்தை இது. கடைசி ஓவர்களில் அல்லது பந்து பழசான நிலையில் இந்த ஆயுதத்தை உபயோகப் படுத்துவார்கள்.

இந்த யார்க்கர் பந்து வீச்சான மட்டையாளரின் காலுக்கு மிக அருகாமையில் தரையில் படும். குறிப்பாகச் சொன்னால் மட்டையாளர் மட்டைவீசும்போது அவரது மட்டைக்கும் தரைக்கும் உள்ள மிகச் சிறிய இடைவெளியில் பந்து தரையில் பட்டு உள்ளே புகுந்து விக்கெட் குச்சியை வீழ்த்தும். இதற்கு கொஞ்சம் வேகமும் அவசியம்.

வேகம் இல்லையென்றால் மட்டை பிடிப்பவர் இரண்டடி நடந்து வந்துஅல்லது பின்னால் நகர்ந்து தனது தோள்வலிமையில் ஒருவீசு வீசினால் பந்து மைதானதுக்கு வெளியே போய் விழும்.

எனவே துள்ளியமாக வீசுவது அவசியம். கொஞ்சம் தவறினாலும் பந்து புல்டாசாக மாறி வெளியே போய் விழும் அபாயம் அதிகம். அக்ரம் போன்றவர்கள் முதல்பந்திலேயே யார்க்கர் போடுவதில் வல்லவர்கள்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது யார்க்கர் வீசும் அளவு தோள்வலிமை இருக்காது. அப்படி யார்க்கர் நீளத்தில் போட்டால் பந்து போட்டால் மட்டைக்காரர் கொஞ்சம் நடந்துவந்து கால்களை நகர்த்தி இடது கால் பக்கத்தில் வீசி நான்காக்கி விடுவார். சில முறை இவ்வாறு நடந்தால் பந்துவீச்சாளன் தனது கைப்பந்து, கால்பந்து இன்னிங்க்ஸ்களை துவக்கி விட வேண்டிய சூழலுக்கு உள்ளாவார்கள். என்வே பள்ளிக் காலங்களில் யார்க்கரை யாரும் முயற்சித்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனால் புல் டாஸ் பந்து என்பதும் சாதாரணமானது அல்ல. நேராக மட்டையில் வந்து விழும். மட்டைக்காரனை ஓங்கி அடிக்கவைக்கும். கொஞ்சம் தூக்கியே போட்டுக் கொடுத்தால் தூக்கி அடிக்க வைக்கும். சற்றே அழகாக கோழி அமுக்கும் கைகளை உடைய களத்தடுப்பாளரை நிறுத்தி வைத்தால் புல்டாசில் விக்கெட் கிடைப்பது மிக எளிது. குறிப்பாக பின்வரிசை ஆட்டக்காரர்கள் எவ்வளவுதான் தூக்கி அடித்தாலும் மேலே போகும் பந்து புவியீர்ர்பு விதியை பூர்த்தி செய்து கீழே இறங்கும். விதியின் காரணமாக அங்கே நிற்கும் தடுப்பாளர் கோழியைப் பிடித்து வெளியே அனுப்பி விடுவார். நேராக மட்டைக்கே இறங்கும் வகையில் போடுவதால் மட்டைக்காரர் தனது கால்களை மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவே.

எனவே பள்ளிநாட்களில் யார்க்கர் பந்தினைவிட ஃபுல் டாஸ் பந்திலேயே விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் எனது ஓட்டு ஃபுல் டாஸுக்கே..

கல்லூரி வந்தபிற்கு ஓங்கி அடித்து பந்தினைக் காணாமல் போகச் செய்யும் வாய்ப்பு இருப்பதால் போடும் வந்து கொஞ்சம் வேகம் பிடிக்கும் காரணத்தாலும் அங்கு நிலைமை மாறிவிடும்.

எனவே யார்க்கர் போட்டாலும் ஃபுல்டாஸ் போட்டாலும் களத்தடுப்பில் திட்டம் நன்றாக இருப்பின் விக்கெட் கண்டிப்பாக விழும்.

23 comments:

  1. //இருப்பின் விக்கெட் கண்டிப்பாக விழும். //

    ஆமாம்... விழுந்திடுச்சி...

    ReplyDelete
  2. / எனது ஓட்டு ஃபுல் டாஸுக்கே..//

    எனது ஓட்டு டாஸ்மார்க்கே

    ReplyDelete
  3. தல,

    கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் மாற்றிய பதினைந்தாவது டெம்பிளேட் இது.

    எப்படி தல அசராம மாத்துறீங்க?

    நம்ம வலை ரோஜாவில் (எவ்வளவு நாளைக்குதான்ன் வலைப்பூ என்றே சொல்லுவது?) இன்னைக்கு ஒரே ஒரு தடவ மாத்துரதுக்குள்ள தாவு தீந்துருச்சி (இத்தனைக்கும் நான் ஒண்ணுமே பண்ணல - இரண்டு சக துணைவர்கள் பண்ணாங்க).

    ReplyDelete
  4. தல,

    யார்க்கர் பத்தி வாசிம் அகரம் கூட இப்படி சொல்ல முடியாது தல. பின்னீட்டீங்க.

    (பின்ன, அவருக்கு தான் தமிழ் தெரியாதே என்று சொல்லாதீர்கள்).

    தொடர்ந்து கிரிக்கெட் பற்றி எழுதுங்கள். உங்கள் அபிமான பேக் ஐ.பி.எல் பிளேயர் மறுபடியும் வந்துட்டார் கவனித்தீர்களா?

    ReplyDelete
  5. //பழமைபேசி said...

    //இருப்பின் விக்கெட் கண்டிப்பாக விழும். //

    ஆமாம்... விழுந்திடுச்சி...
    //

    வாழ்த்துக்களோடு நன்றி சொல்லுவோம்

    ReplyDelete
  6. //King Viswa said...

    தல,

    கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் மாற்றிய பதினைந்தாவது டெம்பிளேட் இது.

    எப்படி தல அசராம மாத்துறீங்க//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ப்ளாக்கர் கொடுக்கும் டெம்ப்ளேட்களில் ஒன்றிலிருந்து மற்றொன்று செல்வது மிக எளிது தல. ஒரே ஒரு சொடுக்கு போதும்.

    ReplyDelete
  7. //King Viswa said...

    தொடர்ந்து கிரிக்கெட் பற்றி எழுதுங்கள். உங்கள் அபிமான பேக் ஐ.பி.எல் பிளேயர் மறுபடியும் வந்துட்டார் கவனித்தீர்களா?//

    அவர் ஒரு எஸ்.ஜே.சூர்யா ரசிகராகத்தான் இருக்க வேண்டும்..,

    ReplyDelete
  8. //King Viswa said...

    (பின்ன, அவருக்கு தான் தமிழ் தெரியாதே என்று சொல்லாதீர்கள்).//

    குறித்துக் கொள்கிறேன் தல.,

    ReplyDelete
  9. யார்க்கரை அழகா விளக்கியது விளங்காதவருக்கும் தெளிவாகும்

    கிரிக்கெட் பிரியரா தாங்கள்

    ReplyDelete
  10. நம்மளுக்கு பவுண்ஸர் தான் பிடிக்கும்...
    தற்போது யாக்கர் வீசுவதில் "மலிங்க" கலக்குகிறார் இல்ல???
    :)))
    (நாமளும் கிரிக்கட் பாப்பமில்ல...)

    ReplyDelete
  11. தல வலைப்பூ ஜொலிக்குது தல

    ReplyDelete
  12. //அபுஅஃப்ஸர் said...

    யார்க்கரை அழகா விளக்கியது விளங்காதவருக்கும் தெளிவாகும்

    கிரிக்கெட் பிரியரா தாங்கள்
    //

    முன்னாள் ஆட்டக்காரர்

    ReplyDelete
  13. //வழிப்போக்கன் said...

    நம்மளுக்கு பவுண்ஸர் தான் பிடிக்கும்...
    தற்போது யாக்கர் வீசுவதில் "மலிங்க" கலக்குகிறார் இல்ல???
    :)))
    (நாமளும் கிரிக்கட் பாப்பமில்ல...)
    //


    இப்போது மட்டைக்காரரின் மண்டையை உடைக்கப் பயன்படுத்தும் ஆயுதமாக பவுண்சர்களைப் பயன்படுத்துகிறார்கள்

    ReplyDelete
  14. //பிரியமுடன்.........வசந்த் said...

    தல வலைப்பூ ஜொலிக்குது தல
    //


    நன்றி தல..,

    ReplyDelete
  15. //Congrats!

    Your story titled 'யார் எப்படிப் போட்டால் என்ன?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th June 2009 06:00:01 PM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/70286

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//


    நன்றி தமிழீஷ் அணி

    ReplyDelete
  16. எனவே பள்ளிநாட்களில் யார்க்கர் பந்தினைவிட ஃபுல் டாஸ் பந்திலேயே விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் எனது ஓட்டு ஃபுல் டாஸுக்கே..
    ஒரு முறை பாலிடெக்னிக்கிடையில் நடக்கும் போட்டியில் ஒருவர் சும்மாவே மட்டையை சுற்றி பல நல்ல பந்துகளை விளாசி தள்ளிக்கொண்டிருந்தார்.என்னடா இது எப்படி போட்டாலும் அடிக்கிறார் ஆனால் அடிக்கும் விதம் தேர்ந்த ஆட்டக்காரர் போல் இல்லையே என்று நினைத்து ஒரு புல்டாஸ்...ஸ்டப்ம் பப்பரக்கா ஆனது.

    ReplyDelete
  17. பதிவு யார்க்கரா இல்ல இருக்கு.

    எனது ஓட்டு யார்க்கருக்குத்தான்.
    (பைத பை நான் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ன்னு சொல்லிக்க கடமை பட்டிருக்கேன்) :)

    ReplyDelete
  18. @வடுவூர் குமார்
    @அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  19. //கடைசி ஓவர்களில் அல்லது பந்து பழசான நிலையில் இந்த ஆயுதத்தை உபயோகப் படுத்துவார்கள்.//

    ??????

    I think ur taking abour Reverse Swing ...


    Yorker can be bowled in very First Over !!!

    ReplyDelete
  20. ஒருமுறை (நியூஜிலாந்துடன் என்று நினைக்கிறேன்) சௌரவ் கங்குலி யார்க்கரில் அடித்த சிக்ஸர் கண்ணுலேயே நிற்குது டாக்டர்...

    ReplyDelete
  21. அட்டகாசமான (யார்க்கர்) பதிவுங்க சுரேஷ்..

    ReplyDelete
  22. @குறை ஒன்றும் இல்லை !!!
    @ஸ்ரீராம்.
    @அன்புடன்-மணிகண்டன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails