Wednesday, October 28, 2009

பொதுவில் ஒரு மறுமொழி

http://tvrk.blogspot.com/2009/10/5_28.html   
தளத்தில் ஒரு பாடலும் பொருளும் அழகாகக் கொடுத்துள்ளார் நமது திரு. T.V.Radhakrishnan  அவர்கள்.



அதாவது


கொங்குதேர் வாழ்க்கை..............,  பாடலும்

அதற்கான பொருளும்

பூக்களை தேர்ந்து ஆராய்ந்து.....................எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

(இல்லை ..என அர்த்தம்) 

முழுமையாகப் படிக்க இதை அழுத்துங்கள்


எனக்  கூறியிருக்கிறார்.

அருகில் உள்ள ஓட்டுப் பட்டை அவருக்கானது நீங்கள் விரும்பினால் அவருக்கு இங்கிருந்தே ஓட்டுப் போடலாம்

  நான் சொல்லும் கருத்து அவரது வலைப்பூவிற்கு ஏற்புடையதாக அமையுமா என்று தெரியவில்லை. அதனால் தனி இடுகை. ஏற்கனவே கூட சில இடங்களில் இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.

அதாவது இந்தப் பாடலின் பொருள்

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதை அழுத்தமாக பதிவதாக அமைந்திருக்கும்.

நக்கீரனார் அதை மறுத்துப் பேசுகிறார்.

அப்போது அதற்கு ஆதாரவாகப் பேசும்போது

அன்னை உமையவளின் கூந்தலுக்கும் மணம் கிடையாது என்று கூறுகிறார்.

உடனே வந்திருக்கும் தெய்வப் புலவருக்கு கடும் கோபம் வருகிறது.

அதாவது அவரது மனைவியின் கூந்தலில் மணம் இருக்கிறது இல்லை என்று கூற இன்னொருவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அல்லது எப்போது பரிசோதித்தார் என்று கடும் கோபம் கொண்டு எரித்துவிட்டதாக

நாங்கள் பள்ளியில் படித்தபோது எங்கள் தமிழாசிரியர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். அப்போது இப்பாடல் மனப்பாடப் பகுதியில் இடப்பெற்று இருந்தது.


9 comments:

  1. இறைவன் பாட்டிலேயே குற்றமா? என எரித்ததாயும்..அதுவும் நக்கீரனின் திறமையைக் காட்ட சிவனின் திருவிளையாடலில் ஒன்று என்றும் இறை நம்பிக்கை உள்ளவர் கூறுவர்

    ReplyDelete
  2. நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே ..

    ReplyDelete
  3. டாக்டர் சுரேஷ்‍_ன் தமிழ்ப்பணி வாழ்க

    ReplyDelete
  4. தமிழிஷில் இணைத்துவிட்டேன்

    ReplyDelete
  5. @T.V.Radhakrishnan
    @கட்டபொம்மன்
    @Starjan ( ஸ்டார்ஜன் )

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  6. ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .
    http://no-bribe.blogspot.com

    ReplyDelete
  7. என்ன டாக்டர் டெம்பிளேட் மாற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்

    ReplyDelete
  8. // லஞ்சம் said...

    ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .
    http://no-bribe.blogspot.com//

    படிக்கிறோம் நண்பரே..,

    ReplyDelete
  9. // ஆ.ஞானசேகரன் said...

    என்ன டாக்டர் டெம்பிளேட் மாற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்//

    ஒரு புதிய முயற்சிதான் நண்பரே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails