அழைத்தான்
வந்தாள்
சொன்னான்
செய்தாள்
அவள் வந்தால்
நிதானமா?
போனால்தான்
வேகமா?
எதற்கோ
அழைத்து
ஏனோ
போகச் சொல்லி...
அவளை என்ன
ராகுல் டிராவிட் என்று
நினைத்துக் கொண்டார்களா?
ராகுல் டிராவிட் என்று
நினைத்துக் கொண்டார்களா?
=====================================================================
சிறப்புப் படையல்
இது எத்தனையோ யுகங்கள் தாண்டி நடக்கும்வகையிலான கதை. அதனால் கொஞ்சம் கற்பனைக் குதிரையில் ஏறி இந்தக் கதையைப் படித்தல் நலமாக அமையும்.
அந்த யுகத்தில் நமது கதைக்கு இரண்டு நாடுகள் தேவைப் படுகின்றன. ஒரு நாட்டினை ஜி தேசம் எனவும், மற்றதை ஏதேசம் எனவும் அழைப்போம்.
தொழில்நுட்பங்கள் மிகக் கடுமையாக வளர்ந்துவிட்டிருந்த காலம் அது. மிக நவீன ஆயுதங்கள் போர்களத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. மனித உடலிளேயே ஆயுதங்களை இயக்கும் மென்பொருட்களை இனைத்திருந்தனர். அதற்கான தனி தொழிற்நுட்பப் பிரிவு ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுவந்திருந்தது.
ஏதேசத்தின் தலைவன் திருவாளர் எம். பலபல போர்களை ஜிதேசத்தின் மீது பல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன ஜிதேசத்தவர்களின் உயர்மட்டக்குழுவினர் அதைப் பற்றிய ஆலோசனைகளை செய்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே ஜிதேசத்தவர்கள் ஏதேசத்தவர்களை ஏமாற்றி அழியாவண்ணம் ஒருமென்பொருளை தங்கள் உடலில் பொறுத்தியிருந்தனர். இப்போது திருவாளர்.எம் மை எப்படி அழிப்பது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டபோது அவரது உடலில் இருந்த ஆண்டி-வைரஸ் பற்றிய தகவல்கள் அம்பலமானது . அவரது உடலில் இருந்த ஜீன்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள் போன்றவை மிகக் கடுமையாக ஆராயப் பட்டன. அந்த ஆண்டி வைரஸை அழிக்க வேண்டுமானால் அவர்மீது தாக்குதல் நடத்துபவரின் உடலில் Y குரோமோம் இருக்கவே கூடாது என்றவகையில்
அமைக்கப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில் ஜிதேசத்தின் சார்பாக போர் நடத்தியவர்கள் அனைவரும் ஆண்கள். எனவே திருவாளர் எம்மை அழிக்க வல்ல சக்தி படைத்த ஒரு பெண்ணினை உருவாக்கி அவரது உடலில் இந்த மென்பொருட்களை தரவேற்றம் செய்ய வேண்டிய சூழலுக்கு உள்ளானார்கள்.
ஜிதேசத்தின் உயர்மட்டக்குழுவினர் அனைவரும் சேர்ந்து பெருமாட்டி ச அவர்களைப் படைக்கிறார்கள். அவரது உடலில் பதினாறுவகை ஆயுதங்களையும் ஒருங்கே செயல்படுத்தும் வகையில் அவர் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழுவால் உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகிறார். பெருமாட்டி ச அவர்கள் திருவாளர் எம் அவர்களை கொன்று போரில் வெற்றிவாகை சூடுகிறார்.
ஜிதேசத்தின் வழக்கப்படி வென்றவர்கள் அத்தோடு தங்கள் வேலை முடிந்தவுடன் செயல்படாத்தன்மை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்கு ஒரு கோவில்கட்டி கும்பிடத்தொடங்கிவிடுவார்கள். ஜிதேசத்தின் அழிவில்லாத் தலைவன் ரிபோ எப்போதும் போல ஒழிந்திருக்கும் இடத்தினை விட்டு வெளியே வந்து ஆட்சியினைச் செய்வான்.
ஆனால் இந்தப் போரின் முடிவில் திருவாளர் எம். மட்டுமே அழிந்தார். ஆட்சிப் பொறுப்பை திருமாட்டி எம். எடுத்துக் கொண்டார். அவரது ஆட்சியில் ஏதேசம் மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. ஏதேசத்தினை முழுமையாக வெற்றிக்கொள்ள முடியவில்லை. பெருமாட்டி ச வும், சிலையாக மாறிவிட்டார்.
மீண்டும் ஜிதேசத்தின் உயர்மட்டக்குழுவினர் கூடி ஆராய்ந்தனர். அப்போது திருமாட்டி எம்மின் உடலில் இருந்த ஆண்டி வைரஸின் நுணுக்கங்கள் பிரமிப்பூட்டும் வைகையில் அமைந்திருந்தன. திருமாட்டி எம்மினை அழிக்க வேண்டுமென்றால் அவரைத்தாக்குபவர்களின் உடலில் X குரோமோசோம் என்பதே இருக்கக்கூடாது என்பதைக் கண்டறிகின்றனர். X குரோமோசோம் இல்லாமல் எந்த உயிரினையும் உருவாக்க முடியாது என்ற உண்மை உறைக்க பரிணாம வளர்ச்சி விதிகளை ஆய்கின்றனர். கடைசியில்
Recessive and Dominant Inheritance
பற்றிய ஆய்வுகள் பறக்கின்றன. X குரோமோசோம்கள்
Recessive ஜீன்கள் பற்றிய ஆய்வுகள் முடிவில் திருமாட்டி எம்மினை அழிக்கும் வகையில் ஒரு மனிதனை எப்படி உருவாக்குவது என்பதான முழுவடிவம் உருவாக்கப் படுகிறது. இதற்காக ஜிதேசத்தின் உயர்மட்ட விஞ்ஞானிகள் இருவர் முயற்சி செய்கின்றனர். கடைசியில் X குரோமோசோம்களின் பண்புகள் வெளியே தெரியாவண்ணம் ஒரு மனிதனை உருவாக்குகிறார்கள். ஆனால் மிக நுட்பமான தொழிற்நுட்பத்தின் காரணமாக அது ஒரு குழந்தையாக அமைகிறது. பெருமாட்டி ச வினை முழு சக்திவாய்ந்த வடிவமாகவே ஜிதேசத்தினர் உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பனிரெண்டு ஆண்டுகள் குழந்தை வளர்கிறது அவர் திருவாளர் ஜோ வாக வளர்கிறார். பின்னர் அவர் திருமாட்டி எம்மின் இருப்பிடத்திற்கே சென்று அவரை அழித்து விடுகிறார்.
பின்னர் அவரும் ஜோதிமயமாக மாறிவிடுகிறார். அவரையும் அந்த நாட்டவர்கள் வணங்குகிறார்கள்.
இந்த ஜிதேசத்தை சேர்ந்தவர்கள் ஏதேசத்தைச் சேர்ந்தவர்களின் வெற்றி பற்றிய ஆவணங்களை பொதுவாக அழித்து விடுவார்கள். ஆனால் ஏதேசத்தை வெல்வதற்காக வரும் சிறப்புப் படைப்பின் வலிமையைக் காட்டுவதற்காக ஏதேசத்தின் வெற்றியாளர்களைப் பற்றி மறைமுகமாக சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்கள். ஏதேசத்தின் பெருமை என்பது ஜிதேசத்திலிருந்து கிடைத்த ஆவணங்களை மொழி பெயர்த்தே அமைந்திருக்கின்றன.
இந்தக் கதை கேரள நாட்டில் பிரபலமாக இருக்கும் ஒரு கதையை பின்பற்றி கொஞ்சம் கற்பனையும், மலையாள பாணியும் கலந்து எழுதப் பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமா!
===================================================================
ஜகன் மோகினி கொள்ளுப் பட்டாசு
படத்தில் மீனவப் பெண்ணாக நமீதா வருகிறாராம். காட்சிகள் இயற்கையாக வர வேண்டும் என்பதற்காக அவரே கடலில் இறங்கி முத்துக் குளிக்கிறாராம். இதற்காக சிறப்புக் காமிராக்கள் உபயோகத்தில் உள்ளவனவாம்.
===================================================================
அனல் பறந்த இனிப்பு வகையறா வசனங்கள்
1.கொண்டுவந்தால் தந்தை: கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்; சீர்கேட்பாள் சகோதரி: கொலையும் செய்வாள் பத்தினி
இந்த முத்திரை வாக்கியத்தை ஆராய்ச்சி செய்து எடுக்கப் பட்ட படம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தப் படத்தில்தான் ஒரு முண்ணனிக்கு ஒரு பிண்ணனி ஜோடியாக சேர்ந்தார்.
2.இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது.
இந்தப் படத்தைப் பற்றி இந்த இடத்தில் நிறைய ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்
3.புயலடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்கிறான். ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இந்த உலகத்திலேயே கிடையாது.
4.ஆம்பள கெட்டுப் போனா நனைஞ்சு போன துணிமாதிரி, பொம்பள கெட்டுப் போனா அது கிழிஞ்சு போன மாதிரி தைச்சாலும் தெரியும் ஒட்டுப் போட்டதுதான்னு
5.தந்தை: நீ ஒரு முஸ்லிம் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனா உன் தங்கச்சிய நான் எப்படி கரை சேர்க்கறது?
மகன்: அவளுக்கும் ஒரு முஸ்லிம் பையன் கிடைக்காமலா போயிருவான்.
6.இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க
=====================================================================
சங்குச் சக்கரங்கள் மற்றும் வான வேடிக்கைகள்
=======================================================================
அதிரடி அணுகுண்டு
=======================================================================
சிறப்பு ரசம்
திவாலானவனுக்கு இது திவாலி
திவால் ஆகாதவனுக்கு இது தீபாவளி
திவாலாகாமல் தப்பித்த அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி விடுமுறை சிறப்பு வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete@ஆ.ஞானசேகரன்
ReplyDelete@T.V.Radhakrishnan
@நசரேயன்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteவிடுமுறை தின வாழ்த்துகள்!
ReplyDeleteஹிஹி!
தீபாவளி வாழ்த்துகள்
@DHANA
ReplyDelete@ஷங்கி
நன்றி நண்பர்களே..,
1. தூக்குத் தூக்கி
ReplyDelete2. நாடோடி மன்னம்
3. தவசி
4. ??
5. பம்பாய்
6. குரு சிஷ்யன்
//இந்தப் படத்தில்தான் ஒரு முண்ணனிக்கு ஒரு பிண்ணனி ஜோடியாக சேர்ந்தார்.//
ReplyDeleteஅந்த ஜோடியின் பாடல்களும் ஹிட்டடித்தன.
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteபம்பாய், குரு சிஷ்யன் தெரிகிறது
ReplyDeleteவிடையை கூறுங்கள் தலைவரே
@சென்ஷி
ReplyDelete@அபுஅஃப்ஸர்
@செ.சரவணக்குமார்
@அன்புடன் மலிக்கா
@புருனோ Bruno
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
4.தங்கைக்கோர் கீதம்
ReplyDeleteநண்பர்களே
தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பரே!
புதுமையின் மற்றுமொரு பெயர்
சுரேஷ்!!
// (Mis)Chief Editor said...
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்
நண்பரே!
புதுமையின் மற்றுமொரு பெயர்
சுரேஷ்!!//
நன்றி நண்பரே..,