Friday, November 27, 2009

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது.

இதற்கு முன் இருந்தமுறையில் ஒவ்வொரு முறை கணிணியைத் திறக்கும்போது ஒரு போடும் அளவு எளிமையாக இருந்தது. இப்போது நமது ஓட்டைக்கூட நமக்குப் போட்டுக் கொள்ளமுடியாத சூழல் சில நேரங்க்ளில் ஏற்பட்டுவிடுகிறது.

இதனால்தானோ என்னவோ தமிழீஷில் ஓட்டுக்கள் நிறைய வாங்கியும் சில நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டு வாங்க முடியாமல் போய்விடுகிறது.

எப்போதெல்லாம் நமது ஓட்டுக்கள் விழவில்லை என்று கவனித்த போது ஒரு ஒற்றுமை தெரிந்தது.

கணிணியில் எப்போதெல்லாம் நாம் வரலாற்றை அழிக்கிறோமோ அதற்கடுத்து ஓட்டுப் போட முயற்சித்தால் மோசமான கையொப்பம் என்று நிராகரிக்கப் பட்டுவிடுகிறது.

அதன்பிறகு நமது மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைந்துவிட்டு பின்னர் நாம் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் தமிழ்மணம் நமது மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தச் சொல்லும். நமது  முகவரியையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால் ஓட்டு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. நாம் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையாமல் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் உறுதிப்படுத்துப்படுத்தும்போது சரியான கடவுச்சொல் கொடுத்தாலும் மோசமான கையொப்பம் என்றே வருகிறது. முதல் முறை ஓட்டுப் போட்டுவிட்டால் அதன்பிறகு நாம் மின்னஞ்சலுக்குள் நுழையாமல் ஓட்டுப் போட்டால் கூட ஓட்டுவிழுகிறது.   ஆனால் கணிணி உபயோக வரலாற்றை அழித்துவிட்டால் மீண்டும் அதேபோல்தான் ஆகிறது.

இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தபின் தமிழ்மணத்தில் எனது ஓட்டு சரியாக விழுந்துவிடுகிறது.

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள். அதை இந்த இடுகைக்கே முயற்சித்துப் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------

சில நேரங்களில்,சில இடங்களில்  தமிழ்மண ஓட்டு தமிழீஷ் ஓட்டைவிட அதிகமாகிவிடுகிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை.

Thursday, November 26, 2009

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?

யார்க்கர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஓரளவு பரிச்சையம் ஆன வார்த்தை இது. கடைசி ஓவர்களில் அல்லது பந்து பழசான நிலையில் இந்த ஆயுதத்தை உபயோகப் படுத்துவார்கள்.

இந்த யார்க்கர் பந்து வீச்சான மட்டையாளரின் காலுக்கு மிக அருகாமையில் தரையில் படும். குறிப்பாகச் சொன்னால் மட்டையாளர் மட்டைவீசும்போது அவரது மட்டைக்கும் தரைக்கும் உள்ள மிகச் சிறிய இடைவெளியில் பந்து தரையில் பட்டு உள்ளே புகுந்து விக்கெட் குச்சியை வீழ்த்தும். இதற்கு கொஞ்சம் வேகமும் அவசியம்.

வேகம் இல்லையென்றால் மட்டை பிடிப்பவர் இரண்டடி நடந்து வந்துஅல்லது பின்னால் நகர்ந்து தனது தோள்வலிமையில் ஒருவீசு வீசினால் பந்து மைதானதுக்கு வெளியே போய் விழும்.

எனவே துள்ளியமாக வீசுவது அவசியம். கொஞ்சம் தவறினாலும் பந்து புல்டாசாக மாறி வெளியே போய் விழும் அபாயம் அதிகம். அக்ரம் போன்றவர்கள் முதல்பந்திலேயே யார்க்கர் போடுவதில் வல்லவர்கள்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது யார்க்கர் வீசும் அளவு தோள்வலிமை இருக்காது. அப்படி யார்க்கர் நீளத்தில் போட்டால் பந்து போட்டால் மட்டைக்காரர் கொஞ்சம் நடந்துவந்து கால்களை நகர்த்தி இடது கால் பக்கத்தில் வீசி நான்காக்கி விடுவார். சில முறை இவ்வாறு நடந்தால் பந்துவீச்சாளன் தனது கைப்பந்து, கால்பந்து இன்னிங்க்ஸ்களை துவக்கி விட வேண்டிய சூழலுக்கு உள்ளாவார்கள். என்வே பள்ளிக் காலங்களில் யார்க்கரை யாரும் முயற்சித்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனால் புல் டாஸ் பந்து என்பதும் சாதாரணமானது அல்ல. நேராக மட்டையில் வந்து விழும். மட்டைக்காரனை ஓங்கி அடிக்கவைக்கும். கொஞ்சம் தூக்கியே போட்டுக் கொடுத்தால் தூக்கி அடிக்க வைக்கும். சற்றே அழகாக கோழி அமுக்கும் கைகளை உடைய களத்தடுப்பாளரை நிறுத்தி வைத்தால் புல்டாசில் விக்கெட் கிடைப்பது மிக எளிது. குறிப்பாக பின்வரிசை ஆட்டக்காரர்கள் எவ்வளவுதான் தூக்கி அடித்தாலும் மேலே போகும் பந்து புவியீர்ர்பு விதியை பூர்த்தி செய்து கீழே இறங்கும். விதியின் காரணமாக அங்கே நிற்கும் தடுப்பாளர் கோழியைப் பிடித்து வெளியே அனுப்பி விடுவார். நேராக மட்டைக்கே இறங்கும் வகையில் போடுவதால் மட்டைக்காரர் தனது கால்களை மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவே.

எனவே பள்ளிநாட்களில் யார்க்கர் பந்தினைவிட ஃபுல் டாஸ் பந்திலேயே விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் எனது ஓட்டு ஃபுல் டாஸுக்கே..

கல்லூரி வந்தபிற்கு ஓங்கி அடித்து பந்தினைக் காணாமல் போகச் செய்யும் வாய்ப்பு இருப்பதால் போடும் வந்து கொஞ்சம் வேகம் பிடிக்கும் காரணத்தாலும் அங்கு நிலைமை மாறிவிடும்.

எனவே யார்க்கர் போட்டாலும் ஃபுல்டாஸ் போட்டாலும் களத்தடுப்பில் திட்டம் நன்றாக இருப்பின் விக்கெட் கண்டிப்பாக விழும்.

Friday, November 13, 2009

2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாருக்குன்னே உருவான ஒரு கதையை வெளிநாட்டு ஆளுங்க படம் எடுத்திட்டு இருக்காங்க..,  நாம சூப்பர் ஸ்டாரை வைத்தே அந்தப் படத்தப் பார்ப்போம்.

====================================================

படத்தின் துவக்கத்தில் கிராமச் சூழலில் ஒரு கவிநயம் மிக்க குத்துப்பாட்டு.

மாயா.. மாயா எல்லாம் மாயா

சாயா  சாயா எல்லாம் சாயா

போயா போயா எல்லாம் போயா

வாயா வாயா எல்லாம் வாயா

காயா காயா எல்லாம் காயா

நாயா நாயா எல்லாம் நாயா

பாயா பாயா எல்லாம் பாயா

என்று ஒரு தத்துவப் பாடலோடு சூப்பர் திரையில் நுழைகிறார். அந்த ஊரே அந்தத் திருவிழாவில் ஆடுகிறது.
http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SolXPYv_0AI/AAAAAAAAAc0/bLmVdKwdYxE/s320/aaa.jpg
பெரிய மீசையோடு பிரபு வருகிறார். அங்கு நின்றிருக்கும் பூசாரியிடம் சாமி என் பையன் குருவுக்கு  இன்னிக்கு பொறந்தநாள் அதுதான் உங்க ஆசீர்வாதம் வாங்க வந்தோம் என்று சொல்கிறார்.

பூசாரி அருள்வந்து ஆடுகிறார்.  தெயவமே என்ற வார்த்தையோடு அமைதியாகிவிடுகிறார்.  அடுத்ததாக பழைய கால நயந்தாரா மாதிரி இருக்கும் பாவாடை சட்டை பெண்ணை  அழைத்து சாமி இவளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க இவதான்  குரு கட்டிக்கப் போற பொண்ணு. அடுத்தவருஷம் படிப்பு முடிஞ்சதும் குருவுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்கிறார் பிரபு.

பூசாரி கூர்ந்து பார்த்துவிட்டு  நீ தலைகீழா நின்னாலும் உனக்கு குரு கிடையாது, நீவேற ஆளப் பார்த்துக்க. அடுத்த வருஷம் குரு இந்த உலகத்திலய இருக்க மாட்டார்   என்று சொல்லிவிட்டு மயங்கிச் சரிகிறார்.

மாயன் கோவிலில் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஐதீகம். அதனால் எல்லோரும் சோகமாக மாறுகிறார்கள். ஆனால் குரு மட்டும்  பகுத்தறிவு வாதம் பேசுகிறார். ஆமாம் குருதான் நம்ம சூப்பர் ஸ்டார்.

இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைங்க..,  நீங்களெல்லாம் சொன்னதுனால் நான் அங்க வந்தேன். அங்க வந்தா என்னெல்லாமோ உளர்றாங்க...,

நான் ஒரு முற்போக்கு பத்திரிக்கைக்காரன். நாலு ஜனங்களுக்கு மூட நம்பிக்கை பற்றி எடுத்துச் சொல்லிட்டு இருக்கேன். என்னோட வலைப்பூ பூரா மூட நம்பிக்கை பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன். என்கிட்டயே கதை விடுறீங்களா..., என்று சொல்கிறார்.

அப்படியே பழையகால அச்சு இயந்திரத்தின் மேல் அவர் முகம் தெரிகிறது

நான் ஒரு பத்திரிக்கைக்காரன்,

சண்டை சச்சரவுக்கு கத்திரிக்காரன்

நான் எழுதுவது கத்தி முனையிலே

நான் நடப்பது என் பேனா வழியிலே

என்று தத்துவப் பாடல் பாடுகிறார்.

அப்போது அவர் பின்னால் நாட்டில்  உலகில் உள்ள அனைத்து பத்திரிக்கைக் காரர்களும் அவர் பின்னால் குவிகின்றனர்.

அவரின் பின்னால் பல மதரீதியான பத்திரிக்கைக்காரர்களும் வருகின்றனர். அவருக்குப் பின்னால் வந்த உடன் அனைவரது எழுத்தும் பகுத்தறிவுச் சிந்தனையோடு எழுத ஆரம்பிக்கின்றனர்.

மாயன் கோவில் மர்மம் பற்றி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆய்வு செய்கிறார்கள். அதற்காக தமன்னா நியமிக்கப் படுகிறார். அவர் அடிக்கடி  நான் மாயவரத்துப் பொண்ணு, மாய வரத்துப் பொண்ணு என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அவர் மாயவரத்துப் பொண்ணு என்ற சொன்ன உடனே அவருடன் வந்திருக்கும் சந்தானம் எ ட்ரூ பீஸ் என்ற கூடுதல் வசனத்தை சொல்லிக் கொண்டே வருகிறார்.

அதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் என்ன டூ பீஸா என்று கேட்கிறார். திரும்பிப் பார்க்கும் தமன்னா உடனே தலைவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

மாயவரத்துப் பொண்ணு  இவ

மாயன் கோவில் வந்திருக்கா

ட்ரூ பீஸ் கண்ணு  இப்ப

டூ பீஸில் ஆடி    வாரா..,

என்று அழகான ஜோடிப் பாடல் அங்கே அரங்கேற்றமாகிறது.

தொலைக்காட்சியில் மாயன்கோவிலில் சொன்ன குறிகள் பலிதம் ஆகியிருப்பது ஊர்ஜிதம் ஆன பலசெய்திகள்வெளிவருகின்றன.

சூப்பர் ஸ்டார் பற்றிய தகவல் உண்மையா என்பதை அறிய சூப்பர் ஸ்டாருக்கே தெரியாமல்  அவரைப் பற்றி நேரடி ஒலிப்பரப்பு செய்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். அவரைப் பற்றிய செய்தி எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்கிறது.

அப்போது உலகை அழிவில் இருந்து காக்க ஒரு யாகம் நடத்தப் படுகிறது. யாகத்தின் போது வெளியிடப் படும் புகையால் ஓசோன் மண்டலம் பாதிக்கப் பட்டு உலகம் நேரிடும் என்று சூப்பர் பிரச்சாரம் செய்கிறார். அந்தப் பாடலுக்கு ஓசோன் ஓட்டையால் செய்யப்பட்ட  ஆடை அணிந்து முண்ணனி இந்தி நடிகை ஒருவர் ஆட்டம் போடுகிறார்.  யாகம் தடுத்து நிறுத்தப் படுகிறது.  அதனால் யாகம் நடத்த நினைத்த கோடீஸ்வரர்  சூப்பரைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். சூப்பர் ஸ்டாரின் வீட்டில் வெடி குண்டு வைத்து விடுகிறார்கள்.

அப்போது சூப்பர் ஸ்டார் தனது லேப் டாப்புடனருகிலுள்ள மலை மேல் அமர்ந்து வலைப்பூ எழுதிக் கொண்டும், பின்னூட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார். அப்போது ஒரு வலைப்பூவில் இருந்த லின்க் மூலம் செய்தித்தாளுக்குப் போய் அங்கு தன்வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதை தடுக்க ஓடிவருகிறார்,

அதற்குள் அவர் வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்துவிடுகிறது. ஆனால் அவரது தந்தை  தோட்டத்தில் இருப்பதால் தோட்டத்திற்குச் செல்கிறார்.

ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளிவருகின்றன. சூப்பர் ஸ்டாரின் படுக்கை அறையின் அடியில் இருந்த எரிமலை வெடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குள் அந்த ஊரே நெருப்பு குழம்புக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது.  வேகமாக காரை எடுக்கும் சூப்பர் மின்னல் வேகத்தில் செல்கிறார். அதற்குள் சூப்பரின் கார் வெடித்துவிடுகிறது. 


வெடித்த சிதறலில் இருந்த சூப்பர் அப்படியே வானத்தில் பறக்கிறார். அப்படியே பறந்துவந்து பூமியைப் பெயர்த்து கையில் வைத்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறார். சில நாட்களில் பூமி குளிர்கிறது.

பெயர்தெடுத்த பகுதியில் இருந்த பிரபு

குருவே சரணம்

என்று சொல்ல சூப்பர் ஸ்டார் புதிய யுகத்தின் கடவுளாக மாறிவிடுகிறார்.

http://i11.tinypic.com/42vh3r8.jpg

Wednesday, November 11, 2009

ரிக்கி பாண்டிங் எழுதாத கடிதம்

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்...,

நண்ப! டோனி நீங்களும் உங்கள் அணியும் செய்திருக்கும் உதவி இந்த வையகம் இருக்கும் வரையில் ஆஸ்திரேலிய அணியும், நானும் மறக்கவே மாட்டோம். முதலிடம் முடியிலிருந்து போய்விடும் என்றார்கள், உலகக் கோப்பையை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றார்கள். ஆனால் டோனி..., இந்தியர்கள் என்றும் வந்தாரை வாழவைப்பார்கள் என்ற சொல்லுக்கு இலக்கணமாக எங்களுக்கு தன்னம்பிக்கையும், வெற்றியையும் பரிசாக அளித்தீர்கள்.

உங்கள் துவக்கமும், மத்தியமும் படுவலிமையானது என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்தி அனுப்பிருந்தார்கள். பந்துவீச்சு படுதுள்ளியம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அந்த வள்ர்ந்த சிறுவன்கூட என்னை கொஞ்சம் நடுநடுங்கத்தான் வைத்திருந்தான்.

கோபம் வந்தால் தாயைப் பற்றிப் பேசும் சுழல்சுறாவளி கூட கொஞ்சம் டென்சனைத்தான் கொடுத்திருந்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி இப்படியெல்லாம் யாரும் பயமுறுத்தியதில்லை. கிளார்க்க் வேறு என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அவரும் எங்களோடுவரவில்லை. ஒருவேளை தோற்றிருந்தால் அவர் இல்லாததால்தான் தோற்றொம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

பார்டர், டெய்லர், வாக் போன்றவர்கள் அணியை மற்றவர்களிடன் கொடுக்கும் போது மிக வலிமையான அணியாகத்தான் கொடுத்தார்கள். என்னால் அப்படிக் கொடுக்க முடியாதோ என்ற பயம் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

பயிற்சியில் ஈடுபடமுடியாத எங்கள் சிறுவர்களிடம் ஒருநாள் பயிற்சியில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வராது என்ற நம்ப்பிக்கைச்சொல்லை நீங்கள் கூறிய போதே ஒரு ஒளி தெரிந்தது. எங்கள் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் திறமை அறிந்து அதனைக் கொணர்ந்த உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பரே..,

எங்கே கடைசி ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டுவிடுமோ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆறாம் ஆட்டத்தில் எங்கள் வெற்றிக்காகப் போராடிய உங்கள் விருந்தோம்பல் பண்பினை என்னவென்று புகழ்வது?
http://www.thedipaar.com/pictures/politics/10391.jpgஉண்மையில் சொன்னால் டோனி என் கிரிக்கெட் வாழ்நாளில் தலைவன் என்று ஒரு ஆள் தனியே தேவைப்படாத அணிக்குத்தான் நான் தலைமை தாங்கி இருக்கிறேன். என் அணியில் இருந்த கில்லி, வார்னே போன்றவர்கள் எல்லாம் ஐ.பி.எல்லில் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்தவர்கள். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார்களாகத்தான் இதுவரை இருந்தார்கள். ஆனாலும் வளரும் இளைஞர்களை அழைத்து வருவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கும் உங்கள் அணியின் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தால்தானே இப்படி ஒரு வெற்றியை பரிசளித்து இந்த அணியையும் ஒரு அணியாக அங்கீகாரம் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்.

எங்கே 1986ல் கபில்தேவ் செய்த செயலை நீங்கள் செய்துவிடுவீர்களோ என்று பயந்து கொண்டுதான் இருந்தேன். அப்படி எதுவும் நடந்திருந்தால் ஐயகோ.., இந்திய மாணவர்களையே அடிக்கும் இளைஞர்கள் இந்தியாவிலிருந்து தோல்வியுடன் போனால் எங்களை என்ன செய்வார்களோ ? கடைசியில் காப்பாற்றிவிட்டீர்கள் டோனி. உங்களுக்கும் உங்கள் அணியினருக்கும் கோடானு கோடி நன்றிகளை உறித்தாக்கிக் கொள்கிறேன்.


இப்படிக்கு

20-20லிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப் பட்ட 2011 உலகப் கோப்பை கனவினை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுள்ள உங்கள் நண்பன் பாண்டிங்.

Saturday, November 7, 2009

மின்னல் வேகத்தில் வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புருவை மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல் போல தோன்றும்.

Classic Template க்குள் சென்றால் பதினாறு வார்ப்புரு மட்டுமே இருக்கும். அதை நாம் விரும்பும்போது மாற்றிக் கொண்டே இருக்கலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது எந்த Gadgetம் தவறாது. அதே நேரத்தில் இது பெரும்பாலானோர் வைத்திருப்பது போன்றே இருக்கும். அதில் சில வகை வார்ப்புருக்களை எப்படி மாற்றினாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சில அடிப்படை வார்ப்புருக்களை அமைத்துக் கொண்டால் வண்ணங்களை மாற்ற மாற்ற புதிய வார்ப்புரு போலவே இருக்கும். இதில் ஹெட்டர் படத்தினையும் அவ்வப்போது மாற்ற தினம் ஒரு வார்ப்புரு அமைவது போன்ற ஒரு தோற்றத்தினைக் கொடுக்கும்.

வெளியாட்கள் கொடுக்கும் வார்ப்புருக்களை உபயோகப் படுத்த விரும்பினால் அதில் 7 அல்லது 8 காலம்கள் இருக்கக்கூடிய ஒன்றை உபயோகப் படுத்தலாம். அதிலும் மேற்சொன்ன வழியைப் பயன்படுத்தி சில காலம்களை உபயோகப் படுத்தாமல் விடுவதன் மூலமும், ஹெட்டர் படத்தினை மாற்றுவதன் மூலமும் புத்தம் புதிய வார்ப்புருவாக மாற்றம் செய்து கொண்டே இருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் ஒரு வார்ப்புருவிலிருந்து மற்றொரு வார்ப்புருவுக்கு மாற்ற விரும்பினால் நாம் சந்திக்க்கும் பிரச்சனை முக்கிய Gadget கள் இழக்க நேரிடுதல். அதை இழக்காமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது.

பிளாக்கர் வழங்கும Gadget களை மனதில் வைத்துக் கொள்ளவும். வார்ப்புரு மாற்றியவுடன் அவைகளை add செய்து கொள்ளலாம். வெறும் லின்க் ஆக மட்டும் இருக்கும் Gadgetகளை எல்லாம் ஒரே Gadget ல் போட்டுவைத்துக் கொள்ளவும். அதைத் தனியே ஏதாவது ஒருவடிவத்தில் சேமித்துக் கொள்ளவும். புதிய வார்ப்புரு வந்தவுடன் ஒரே ஒரு பெட்டியைச் சேர்த்து அவைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஹிட் கவுண்ட்டர் முதலான சில விஷயங்களை மட்டும் தனியே வைத்து தனித் தனி பெட்டிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை ரிஸ்க் எடுத்தும் எளிமையாகச் செய்யலாம். தனியாக சேமிப்பதற்கு பதிலா page elements பகுதிக்கு வந்து ஒவ்வொரு Elementஐயும் தனியாக எடிட் செய்ய திறந்து வைத்துக்கொள்ளலாம்.   பின்னர்   இன்னொரு   உலாவியைத் திறந்து புதிய வார்ப்புருவை வடிவமைத்துக்கொண்டு அதில் இதை காப்பி பேஸ்ட் முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முறைகளில் சில நிமிடங்களில் பழைய வார்ப்புருவை மிக எளிமையாக புதிய வடிவத்திற்கு மாற்றிவிடலாம்.

அடிப்படை Minima template ஐ உபயோகப் படுத்திக் கொண்டு பிண்ணனியை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தால் வார்ப்புருவே புதிதாக மாறியது போல இருக்கும். மற்ற வார்ப்புருக்களிலும் இவ்வாறு செய்யலாம். அவைகளில் மாற்றினால் பிண்ணனி மாறியது மட்டுமே தெரியும்.

அந்த வசதியை நிறைய தளங்கள் தருகின்றன. 

http://bloggerblogbackgrounds.blogspot.com/ 

தளமும் அதில் ஒன்று. இவர்கள் தரும் பிண்ணனியை ஒரு  Gadget ல் போட்டு சேர்த்துக் கொள்ளமுடியும். அதை மட்டும் மாற்றினாலே வார்ப்புறு புதிது புதிதாக மாறிவிடும்.

முயற்சி செய்து பாருங்களேன். அவ்வப்போது ஹெட்டர் படத்தையும் மாற்றினால் புதுப்புது வார்ப்பு வருவது போல தோற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.

====================================================================

இது இல்லாமல் பாரம்பரிய முறையிலும் ஒவ்வொரு 

Elementஐயும்   Gadgetஐயும் அதற்குரிய பகுதியில் போய்  ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக் கொள்ளலாம். அல்லது edit templateல் போய் குறிப்பிட்ட பகுதியை copy எடுத்து வைத்துக் கொண்டு பின்னர்  paste செய்தும் புதிய வார்ப்புருவை முழுமை படுத்திக் கொள்ளமுடியும்

====================================================================

புதிய  template ல் பதிவு வரும்போது  புதிய திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வினை வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம்.  தொடர்ச்சியாக படிக்க வருபவர்களுக்கு ஒரு பிரமிப்பினையும் கொடுக்க இயலும்.

=====================================================================

பின்குறிப்பு:- எனக்கும் கணிணிக்கும் உள்ள உறவு சில மாத பந்தமே.., இந்த இடுகையில் ஏதாவது தவறோ அபத்தமோ இருப்பின் சொல்லுங்கள். சரி செய்து கொள்கிறேன். இந்த முறைகளில்தான் நான் வார்ப்புருக்களில் வித்தியாசம் காட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனால் ஆநேகமாக அனுபவ ரீதியில் சரி என்றுதான் நினைக்கிறேன்


Wednesday, November 4, 2009

சாலமன் பாப்பையாவை வஞ்சம் தீர்த்துக் கொண்ட பதிவு

தொடர்பதிவு என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு மகிழ்ச்சியான விஷயம். நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் போடுவது போல இன்னொருவரின் கற்பனைக்கு நாம் ஒரு சட்டைப் போட்டு அனுப்பலாம். சட்டை ரசிக்கப் படும். பாராட்டப் படும். பரிசளிக்கப்படும். இப்போது  மாதவராஜ் அவர்களின் கற்பனை நான் ஒரு சட்டைப் போட்டு அனுப்புகிறேன். இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த   இனியவன்   லால்குடி என். உலகநாதன்,      
அவர்களுக்கு நன்றி.


1.அரசியல் தலைவர்
பிடித்தவர்:- விஜய டி.ஆர். ஆதரித்து பேசினாலும் எதிர்த்துப் பேசினாலும் ஆணித்தரமாக பேசுவார். சில நிமிடங்களில் தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் அதற்கான காரணத்தை மிக அழுத்தமாக மற்றவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற வகையில் பேசுவார்.

பிடிக்காதவர்:- ரஜினிகாந்த் .  இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர். 


2.எழுத்தாளர்
பிடித்தவர்:  கல்கி
பிடிக்காதவர்: பாலகுமாரன்   அவரின் கதையை இவர் தொடர்வதாகச் சொல்லி எழுதிய காரணத்தாலேயே எனக்கு இவரைப் பிடிக்காது. தவிரவும் இவரது ரசிகர்கள் செய்யும் அலப்பரை மற்றும் ரசனை பற்றிய விமர்சனங்களாலும் எனக்கு இவரை பிடிக்காது

3.கவிஞர்

பிடித்தவர்: வாலி  எல்லா வகைப் பாட்டுகளையும் எழுதுவார்.


பிடிக்காதவர்:விஜய டி.ஆர்.



4.இயக்குனர்

பிடித்தவர்: எம்.ஜி.யார் தனது திரைப்படத்தில் தனது கருத்துக்களை படித்திற்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திணிக்கத்தெரிந்தவர். பல வித நல்ல கருத்துக்களை பாமர மக்களையும் முணுமுணுக்க வைத்தவர்.  இவருக்கு அரசியல் சாயம், மற்றும் நாயகன் வேடம் இல்லாமல் இருந்திருந்தால் திரைப்படத்தின் மூலமே ஒரு சமூகப் புரட்சி நடந்திருக்கும். தான் நடிக்கும் படத்தில் ரீமேக் படத்தில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சி வைக்காதவர். தண்ணியடிப்பதை தவிர்த்தவர். உடற்பயிற்சியை கடைசிப் படம் வரை வலியுறுத்தியவர். மாற்றுக்கருத்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு வரவும் 

பிடிக்காதவர்: விசு,   இவரது தம்பியின் மறைவுக்குப் பின் இவரது கற்பனை சுத்தமாக வரண்டுவிட்டது.


5.நடிகர்

பிடித்த நடிகர்:சிவாஜிக்கு அடுத்து தலைவாசல் விஜய் காதல் கோட்டை படத்திற்கு முன்பே ஆளவந்தான் கொலைவழக்கில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

பிடிக்காத நடிகர்: சாலமன் பாப்பையா (இடுகையின் தலைப்பின் நாயகர்)


6.பிடித்த விளையாட்டு: கால்பந்து


பிடிக்காத விளையாட்டு: பெரிய சைஸ் பேக்கரி கம் கூல்டிரிங்க்ஸ் கடைகளில் பந்தை உருட்டி உருட்டி  விளையாடுவார்களே அந்த விளையாட்டு. இதே போல் புரியாத விளையாட்டுக்களும் நிறைய இருக்கின்றன.

7.பிடித்த பேச்சாளர்: அறிவொளி


பிடிக்காத பேச்சாளர்: ஐ.லியோனி


இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


இதைத் தொடர  இளைய பல்லவன் மற்றும் ஸ்டார்ஜன் ஆகியோரை அழைக்கிறேன்.



 

Monday, November 2, 2009

விஜய், அஜித் யார் முதல்ல?

எத்தனையோ படங்களில் ரஜினி சிகரெட் பிடித்திருக்கிறார். எத்த்னையோ விதங்களில் அவர் சிகரெட் பற்றவைத்து இருக்கிறார். ஆனால் அவர் செய்யாத ஒரு முறையில் ஜூனியர் எண்டியார் பத்தவைக்கிறார் பாருங்கள். 




அஜித் விஜய் படங்களெல்ல்லாம் இப்போது பலவிதமான சண்டைப் படங்களாகவே வருகின்றன. ஆனால் கீழே உள்ள சண்டைக்காட்சி போன்ற சண்டைக்காட்சி இவர்களுடைய எந்த படத்துலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. யார் படத்தில் இந்த சண்டைக்காட்சி முதன் முதலில் இடம் பெறப்போகிறதோ தெரியவில்லை

Sunday, November 1, 2009

சில ரகசியங்கள்

மீண்டும் ஒருமுறை தொடர்பதிவிற்கு என்னை அழைத்து பெருமை கொள்ள வைத்திருக்கும் வருங்கால ஐ.நா.சபை பொது செயலாளர் காஞ்சித்தலைவன் இளைய பல்லவன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

இந்த வலைப்பூவே என்னைப் பற்றி சுய தம்பட்டம் ஆகவே இருக்கிறது. எனவெ சிறு குறிப்பு என்பதை விட நெடுங்குறிப்பு என்று ஏற்றுக் கொண்டு இந்த வலைப்பூவை பிந்தொடர்பவராக மாறி எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்துவருமாறு அனைவரையுமே கேட்டுக் கொள்கிறேன். 

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அந்தச் சம்பவத்தை இன்னொரு வலைப்பூவில்  இந்த இடுகையில் போட்டு இருக்கிறேன். வாசித்துவிட்டு தங்கள் கருத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

பழனியில்


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

வழக்கம்போல் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கொண்டாடுகிறார்கள்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

திருமணத்திற்கு பின் அதுபற்றி எனக்குத் தெரியாது. 



6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எங்கள் பாட்டி காலத்தில் தீபாவளிக்கு இட்லி சுடுவார்களாம். அவர்கள் காலத்தில் எங்கள் கிராமத்திற்கே சிறப்பு உண்வே அதுதானாம்.  அது என்னவோ தெரியவில்லை நகரத்தில் தீபாவளிக்காக இனிப்புகளாக செய்து குவித்து, வாங்கிக் குவித்து சாப்பிடுவது என்பது எனக்கு நகைச்சுவையாகவே தெரிகிறது.


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தீபாவளிக்கு மட்டும் என்பதாக வைத்துக் கொண்டு பதில்


பதில் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்வதுண்டு. மின்னஞ்சல், அட்டை எப்படி வாழ்த்துவந்தாலும் பதிலுக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிடுவதுண்டு. நேரிடையாக சொல்பவர்களுக்கு நேரிடையாக வாழ்த்து சொல்லிவிடுவேன்.


8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

பள்ளிக் காலங்களில் நண்பர்களுடன் ஊர்சுற்றுவேன். கல்லூரி காலங்களில் மதியம் கிளம்பி இரவுக்கு முன் விடுதிக்குச் சென்று தீபாவளிக் கொண்டாட்டங்கள். பயிற்சி மருத்துவரான பின் அனைத்து தீபாவளியும் மருத்துவமனையில்தான். தலை தீபாவளிமட்டும் எல்லோரையும் போல


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

நல்ல கேள்வி. இந்த இடுகையின்மூலம் ஒரு நல்ல சிந்தனை துளிர்விட்டிருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி. 


10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அக்பர்  சிநேகிதன்

T.V.Radhakrishnan    தமிழா...தமிழா..

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails