Friday, November 27, 2009

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது.

இதற்கு முன் இருந்தமுறையில் ஒவ்வொரு முறை கணிணியைத் திறக்கும்போது ஒரு போடும் அளவு எளிமையாக இருந்தது. இப்போது நமது ஓட்டைக்கூட நமக்குப் போட்டுக் கொள்ளமுடியாத சூழல் சில நேரங்க்ளில் ஏற்பட்டுவிடுகிறது.

இதனால்தானோ என்னவோ தமிழீஷில் ஓட்டுக்கள் நிறைய வாங்கியும் சில நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டு வாங்க முடியாமல் போய்விடுகிறது.

எப்போதெல்லாம் நமது ஓட்டுக்கள் விழவில்லை என்று கவனித்த போது ஒரு ஒற்றுமை தெரிந்தது.

கணிணியில் எப்போதெல்லாம் நாம் வரலாற்றை அழிக்கிறோமோ அதற்கடுத்து ஓட்டுப் போட முயற்சித்தால் மோசமான கையொப்பம் என்று நிராகரிக்கப் பட்டுவிடுகிறது.

அதன்பிறகு நமது மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைந்துவிட்டு பின்னர் நாம் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் தமிழ்மணம் நமது மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தச் சொல்லும். நமது  முகவரியையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால் ஓட்டு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. நாம் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையாமல் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் உறுதிப்படுத்துப்படுத்தும்போது சரியான கடவுச்சொல் கொடுத்தாலும் மோசமான கையொப்பம் என்றே வருகிறது. முதல் முறை ஓட்டுப் போட்டுவிட்டால் அதன்பிறகு நாம் மின்னஞ்சலுக்குள் நுழையாமல் ஓட்டுப் போட்டால் கூட ஓட்டுவிழுகிறது.   ஆனால் கணிணி உபயோக வரலாற்றை அழித்துவிட்டால் மீண்டும் அதேபோல்தான் ஆகிறது.

இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தபின் தமிழ்மணத்தில் எனது ஓட்டு சரியாக விழுந்துவிடுகிறது.

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள். அதை இந்த இடுகைக்கே முயற்சித்துப் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------

சில நேரங்களில்,சில இடங்களில்  தமிழ்மண ஓட்டு தமிழீஷ் ஓட்டைவிட அதிகமாகிவிடுகிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை.

18 comments:

  1. முயற்சி திருவினையாக்கியது தல..நன்றி

    ReplyDelete
  2. டாக்டர் சார், சில விசயங்களை ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவது சரி என்று நினைக்கிறேன். அப்படியே மொழி பெயர்ப்பது அபத்தமாகத் தெரிகிறது.

    உதாரணம் - உபயோக வரலாறு - Usage History

    சென்னை விமான நிலையத்தில் Physically challenged - என்பதை இப்படி மொழி பெயர்த்திருப்பார்கள் - வெளிப்புற அறைகூவலர்கள் இப்படி வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது சரியா?

    ReplyDelete
  3. சரியாக சொன்னீங்க.

    முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி மருத்துவரே..

    மிக அழகான விளக்கம்.

    நீங்க சொன்னது சரிதான்.

    மீண்டும் ஒரு முறை நன்றி.

    நான் தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஒட்டுப் போட்டுட்டேன்.

    ReplyDelete
  5. அட போங்க தல..

    தமிழ் மணத்தோட நான் டூ தல...

    சும்மா ஓவரா டார்ச்சர் பண்ணுது...

    ReplyDelete
  6. @பிரியமுடன்...வசந்த்
    @வானம்பாடிகள்
    @முகிலன்
    @அக்பர்
    @இராகவன் நைஜிரியா
    @கடைக்குட்டி
    @Starjan ( ஸ்டார்ஜன் )

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  7. // முகிலன் said...

    டாக்டர் சார், சில விசயங்களை ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவது சரி என்று நினைக்கிறேன்.//

    உண்மைதான், சரியான தமிழ்பதம் குழப்பத்தில் ஆழ்த்தும்போது அந்த வேற்று மொழிச் சொல்லை அப்படியே தமிழில் ஏற்றுக் கொள்ளலாம்.

    //உபயோக வரலாறு - Usage History//

    நல்ல வேறு பதம் யாராவது சொல்லுங்கள் பின்பற்றிக் கொள்கிறேன்.


    //Physically challenged - என்பதை இப்படி மொழி பெயர்த்திருப்பார்கள் - வெளிப்புற அறைகூவலர்கள் இப்படி வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது சரியா?//

    வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்ததுபோல தெரியவில்லை. புதிதாக ஒரு வழக்குச் சொல் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள். இதில் பல சொற்கள் முதலில் அபத்தம்போல தோன்றினாலும் பின்னாளில் தமிழாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும்.

    ReplyDelete
  8. எனக்கும் இதே பிரச்சினை இருந்தது. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  9. ஓசிலே ஓட்டு கேட்டா எப்படி ஊருல 1000 ரூபாயாமே

    ReplyDelete
  10. சரியா சொன்னீங்க....இந்த முறைதான் சரி....

    ReplyDelete
  11. ம்ம்ம்ம் சரிதான்... மிக்க நன்றி டாக்டர்

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு சுரேஷ் நன்றி :-)

    இந்த பின்னூட்டத்தையும் உங்கள் பதிலையும் எப்படி வேறு படுத்துகிறீர்கள் என்று எனக்கு சொல்ல முடியுமா?

    நானும் முயன்று பார்கிறேன்.

    ReplyDelete
  13. நான் தமிழிஷ் மட்டும்தாங்க....!

    ReplyDelete
  14. @Subankan
    @Anonymous
    @க.பாலாசி
    @ஆ.ஞானசேகரன்
    @சிங்கக்குட்டி
    @ஸ்ரீராம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  15. //சிங்கக்குட்டி said...

    நல்ல பகிர்வு சுரேஷ் நன்றி :-)

    இந்த பின்னூட்டத்தையும் உங்கள் பதிலையும் எப்படி வேறு படுத்துகிறீர்கள் என்று எனக்கு சொல்ல முடியுமா?//


    உங்க கமெண்ட் தனித்து தெரிய இடத்திலிருந்து தெரிந்து கொண்டேன்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails