முன்னொரு காலத்தில் பி.ஜே.பி கூட்டணியில் யார் பிரதமராக இருப்பது என்ற கேள்வி எழுந்தபோது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நபர் என்று வந்து அத்வானியை பின்னுக்குத் தள்ளி வாஜ்பாய் பிரதமராக வந்தார் என்ற ஒரு கருத்து உலாவியது உண்டு. இப்போது தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது அணி ஒன்று உருவாகப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு யார் தலைவராக இருக்க முடியும் என்று ஒரு சின்ன அலசல்.
தலைவருக்கான சில முக்கிய தகுதிகள்:=
1.யார் என்ன திட்டினாலும் தாங்கும் சக்தி வேண்டும். கோபம் எவ்வளவு வந்தாலும் முகத்தில் காட்டாமல் மிஸ்டர் கூல் என்ற பெயர் வேண்டும்.
2.அவர் நிற்பது, உட்கார்வது, சிரிப்பது ஏன் டாய்லட் போவது முதல் அனைத்துமே ராஜதந்திரமாக கருதப் பட வேண்டும்.
3.சிறந்த திறமையாளர்களின் சாதனைகளுக்கு முட்டுக் கட்டை போட தெரியவேண்டும். அதே நேரத்தில் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவரால்தான் அவர் சாதனை செய்ததாக காட்டிக் கொள்ள வேண்டும்
4.வெச்சா குடுமி, சிரச்சா மொட்டை என்ற பழமொழி போல இல்லாமல் சிக் என்று கட்& ரைட்டாக இருக்க வேண்டும்.
5.இவரது ஆள் தோற்றாலும் எல்லாம் ஒரு பயிற்சிதான் என்று சொல்லத் தெரிய வேண்டும்.
6.அவ்வப்போது டம்மி பீஸ்களுக்கு வாய்ப்புக் கொடுத்து முக்கிய காலகட்டங்களில் நிறைய டம்மி பீஸ்களின் ஆதரவைக் காட்டி செல்வாக்கு மிக்கவராக காட்டிக் கொள்ள வேண்டும்.
7.நாடு முழுவதும் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும்.
8.அடிக்கடி டி.வி.யில் வருபவராக இருத்தல் வேண்டும்.
9.கோடிகளில் புரள்பவராக இருக்கவேண்டும். வெள்ளைவெளேர் நடிகைகளுடன் கிசுகிசுக்கப் படுதல் கூடுதல் தகுதி
10.எதிர் அணியினரிடம் மொக்கையாக அடிவாங்கித் தோற்றால்கூட ஏதோ வென்றுவிட்டது போன்று ஊடகங்களால் பேசப் பட வேண்டும்.
இவ்வளவு த்குதிகளும் நிறைந்தவர் யார்?
என்றெல்லாம் அழைக்கப்படும்
மகேந்திர சிங் டோனிதான் அவர்,
சரியான நேரத்தில் சரியான மனிதரை உபயோகப் படுத்திக் கொண்டால் மூன்றாம் அணி உருப்படும். செய்வார்களா?
டிஸ்கி= மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்

உங்களின் அன்புநண்பன்,
கலியுக பார்த்தசாரதி,
நவீன சாணக்கியன் (குடுமியை சமீபத்தில் எடுத்தவர்),
நடந்துவரும் ஹெலிகாப்டர்,
பறந்து பிடிக்கும் டைனஸார்,
என்றெல்லாம் அழைக்கப்படும்
மகேந்திர சிங் டோனிதான் அவர்,
சரியான நேரத்தில் சரியான மனிதரை உபயோகப் படுத்திக் கொண்டால் மூன்றாம் அணி உருப்படும். செய்வார்களா?
டிஸ்கி= மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்
கேப்டன் கூல் பற்றி நான் பேசும்போதெல்லாம் என்னுடைய நண்பர் ஒருவர் கூறுவார்: மாட்டு சாணி கூட எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் அப்படியே இருக்கும், அதுக்காக அதை எல்லாம் கூல் என்று சொல்ல முடியுமா?
ReplyDeleteநல்ல நகைச் சுவை அருமை...வாழ்த்துக்கள்
ReplyDeleteவருங்கால முதல்வர் டோனி வாழ்க
ReplyDelete//King Viswa said...
ReplyDeleteகேப்டன் கூல் பற்றி நான் பேசும்போதெல்லாம் என்னுடைய நண்பர் ஒருவர் கூறுவார்: மாட்டு சாணி கூட எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் அப்படியே இருக்கும், அதுக்காக அதை எல்லாம் கூல் என்று சொல்ல முடியுமா?
//
:0 வாங்க தல
//மதுரை சரவணன் said...

நன்றி தல