Sunday, March 27, 2011

குந்தவையாக அனுஷ்கா







மனி ரத்னம் எடுக்கப் போகும் பொன்னியின் செல்வன் கதையின் குந்தவையாக அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குந்தவை பாத்திரத்திற்கு நமிதா ஓ. கே என்று சொல்லி இந்த இடுகையினைப் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

 மனிரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் கதையினை இப்போது கை வைத்திருக்கிறார் என்று இந்த இடுகையில் சொல்லி இருந்தாலும் இப்போது மீண்டும் ஒரு முறை கதைச் சுருக்கத்தினை நினைத்துப் பார்ர்போம்.

தந்தை சுந்தரச் சோழர் மிகப் பெரிய பேரரசர். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.  மூத்தவர் மதுரை மண்ணிலே எதிரிகளை பந்தாடியவர். அவரது ஆக்ரோஷத்துக்கு மன்னர் பயந்து நாட்டின் வட பகுதியை நிர்வகிக்க அனுப்பி விடுகிறார். இளையவர் பட்டத்துக்கு வர மக்கள் விரும்புகிறார்கள். மகளும் அரசாங்க நடவடிக்கையில் தலையிடுகிறார். மகளின் காதலன் சோழ குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். இறுதிக் கட்டத்தில் அவர் சிறைக்கெல்லாம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்படித்தான்  பொன்னியின் கதையோட்டம் செல்கிறது. இவர்களை ஒழித்துக் கட்ட போராடும் பாத்திரப் படைப்பாக நந்தினி...,


தனக்கேற்றாற்போல் சரித்திர நிகழ்வுகளை வளைத்துக்கொள்ளும் திரையுலக பிரம்மாக்கள் இந்தப் படத்தை என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்னும்போது இந்தப் பாடல் கண்ணில் பட்டது. குந்தவை பாடும் இந்தப் பாடலை அப்படியே ரீமேக் செய்தால்....

ஏ..,  ஏ.... , ஏ....,   ஏ  ஃபார் ஆப்பிள்.....,
ஏ..,  ஏ.., ஏ.., ஏ... ,,  போடு
ஏ.., எ..., ஏ.., ஏ...,  ஏடேய்..,


தம்பி ஏடேய்..,

உன்னோடது நாடேய்..,

ஏடெய்.,  நாடேய்..,

ஏடுன்னா இன்னா நைய்னா

மெம்மரி.,   மெம்மெம்மெம்மரி கார்டெய்

ஏடு தந்தானடி தில்லையிலே ( பழைய அம்மா குரலில்)

ஏய்ய்ய்ய்ய்ய்ய்..,

இன்னாங்கடா பண்றீங்க..,

சிங்குடா..,  சாங்குடா....................., 

===========================================================

இந்த காணொளியப் பார்த்தால் அனுஷ்காவிற்கு குந்தவை பாத்திரத்தை விட நந்தினி பாத்திரம்தான் நன்கு பொருந்தி வரும் என்று தோன்றுகிறது.



குந்தவை பாத்திரத்தையும், நந்தினி பாத்திரத்தையும் கல்கி வெவ்வேறாக படைத்திருந்தாலும் இரண்டும் ஒரே பாத்திரமாகத்தான் இருந்திருக்கும் என்பதற்கு பொன்னியின் செல்வன் கதையிலிருந்து நான் கொடுத்திருக்கும் வாதங்கள் இந்த இடுகையில்..,

==================================================================
பொன்னியின் செல்வன் கதையைப் படிக்கும்போது ஒவ்வொரு காட்சியும் படிப்பவர் மனதில் மிகப் பிரமாண்டமாகவே விரிந்திருக்கும். ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும்போது அந்தக் கதையை உள்ளார்ந்து படித்த பலரிடமும் காட்சியைக் கேட்டு உள்வாங்கி காட்சிப் படுத்தினார்கள் என்றால் ஓரளவு திருப்தியைக் கொடுக்கமுடியும். இல்லையென்றால் சிரமம்தான். இருந்தாலும் இந்தக் காட்சி ஓரளவு வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.



================================================
வந்தியத் தேவன் அறிமுகக் காட்சியில் இப்படியொரு பாட்டுப் போட்டால்............,



விஜய்க்குத்தான் அந்தப் பாத்திரம் என்று சொல்கிறார்கள்.

5 comments:

  1. மனதில் ஏற்கெனவே வாழும் பாத்திரங்களின் பிம்பங்களோடு, குறிப்பாக மணியம் படனகளில், கதையை வாசித்தவர்களுக்கு திரையில் வரும் பாத்திரத்துடன் ஒன்ற முடியாது. இந்தக் கதைக்கு என்றில்லை, எந்த நாவலையுமே படமாக்குவதில் இந்தப் பிரச்னை உண்டு.

    ReplyDelete
  2. //"நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன்"//

    நகைச்சுவைப் பின்னூட்டம் தர முடியாததற்கு மன்னிக்கவும்!!

    ReplyDelete
  3. //ஸ்ரீராம். said...

    மனதில் ஏற்கெனவே வாழும் பாத்திரங்களின் பிம்பங்களோடு, குறிப்பாக மணியம் படனகளில், கதையை வாசித்தவர்களுக்கு திரையில் வரும் பாத்திரத்துடன் ஒன்ற முடியாது. இந்தக் கதைக்கு என்றில்லை, எந்த நாவலையுமே படமாக்குவதில் இந்தப் பிரச்னை உண்டு.
    //

    உண்மைதான் தல..,


    ஆனால் பொன்னியின் செல்வன் முழுவதும் படித்த அதே நேரம் புதுப்படம் பார்க்கும் ரசிகர்கள் ஆயிரம் பேர்களாவது இருப்பார்களா?

    ReplyDelete
  4. //, எந்த நாவலையுமே படமாக்குவதில் //

    மனிரத்னம் நாவலைப் படமாக்குவார் என்று தோன்றவில்லை. ராவணனுக்கு சேறு பூசி, சீதையின் இரண்டாம் காதலைச் சொன்ன மாதிரி, அப்பா, இரண்டு மகன்கள், மகள் அரசாட்சியில் இவர்களது பங்கு, இவர்களை பழிவாங்கத் துடிக்கும் நந்தினி, சுந்தரச் சோழனின் யாருக்கும் தெரியாத காதல்கதை, இப்படி ஒரு பேண்ட் ச்ர்ட், அரசியல் கதைதான் வரப்போகிறது. அதை பொன்னியின் செல்வன் என்று சொல்லிக் கொள்ளப் போகிறார்கள்.

    ReplyDelete
  5. //நகைச்சுவைப் பின்னூட்டம் தர முடியாததற்கு மன்னிக்கவும்!! //

    அணிகலன் போன்ற சுவை ஒன்றை சேர்த்து இருக்கிறீர்களே ஐயா.., நான் அதற்கு நன்றிதான் கூறவேண்டும்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails