Thursday, December 18, 2008

குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்

பொன்னியின் செல்வன் படித்த போது பலரும் பலமாதிரி அந்த நூலை அலசியிருப்பார்கள். நாங்களும் சில நேரங்களில் அலசியபோது கொண்டுவந்த கருத்துகள்தான் இவை.



இந்த நூலினை மகாபாரதத்தையும், சாணக்கியன் சபதத்தையும் கொஞ்சம் நினைவு கூற வேண்டும். ச்குனியின் ராஜ தந்திரங்களையும் , சாணக்கியனின் ராஜ தந்திரங்களும் கொஞ்சமும் குறைந்ததல்ல. சாண்க்கியணை விட சகுனிக்கு காரணங்கள் அதிகம். ஆனால் சகுனி தோற்றதால் வில்லன் கதாபாத்திரமாகவும், சாணக்கியன் வென்றுவிட்டதால் ராஜ தந்திரத்திற்கு ஒரு உதாரணமாகவும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதே நிலைப் பாட்டுடன் கல்கின் பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள்.



முதல் காட்சியில் வந்தியத் தேவன் தூதராக வருகிறார். கல்கி இங்கே தெளிவாகக் கூறுகிறார். இரண்டு ஓலைகளை எடுத்துக் கொண்டு என்று. தந்தைக்கு ஒன்று, தங்கைக்கு ஒன்று. கரிகால் ஆதித்யர் தங்கை குந்தவையை முழுவதும் நம்பியிருந்தால் ஒரே ஓலையில் தங்கைக்கு கடிதம் எழுதி மொத்த தகவல்களையும் அனுப்பியிருக்கலாம். அவருக்கு தங்கை மேல் நம்பிக்கை முழுவதுமாக இல்லை என்பதற்கு இரண்டு ஓலைகளே சாட்சி.

இரண்டாவது ஓலையில் நம்பிக்கையான ஒற்றன் என்று கூறுகிறார். இதை இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று தங்கைக்கு உதவுவதற்காக. இரண்டாவது. தங்கையின் செயல்பாடுகளை அவருக்கு தெரியாமலே கண்காணிக்க.


கல்கியின் எழுத்துக்கள் நமக்கு தெரிவிக்கும் உண்மைகள் இவை.

அடுத்ததாக கந்தமாறன் அரண்மனை நிகழ்வுகள்.


தனியாக ஒரு போட்டி பொதுக்குழு கூட்டப் படுகிறது. அது ஆதித்யர் அரசர் ஆவதை தடுக்க என்று கூறுகிறார்கள். சோழ நாட்டு எதிர்கால் நலனுக்காக என்று கூறுகிறார்கள். அங்கு நடந்த கூட்டத்தில் குந்தவையின் தலையீட்டினை எதிர்த்து மாபெரும் உரையாற்றுகிறார். பெரிய பழுவேட்டரையர். குந்தவையின் செல்வாக்கு ஆட்சியில் நுழைந்திருக்கிறது என்பதையும் கல்கி அவர்கள் நமக்கு காட்டுகிறார்.

ஆதித்யரின் ஆசைகளுக்கு குந்தவை குறுக்கிடுவதையும் அதற்கு காரணங்கள் புரியாதது போலவும் காட்டுகிறார். அது ஏன் குந்தவையின் ஆதிக்க மனப்பான்மையாக இருக்க கூடாது.


நந்தினியின் மேல் கொண்ட நிறைவேறாத காதலும், வீரபாண்டியனைக் கொல்லும்போது நின்ற நந்தினியின் கண்ணீரும் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவரை காஞ்சி செல்லவைத்தது என்று கூறுகிறார்கள். நந்தினி தேவி கதாபாத்திரமே கற்பனை என்னும்போது ஆதித்யர் நாடு திரும்பாமல் இருந்ததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும். இதில் நாம் காணும் முடிவு என்னவென்றால் நந்தினியின் கதாபாத்திரம் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் அவருடைய இயல்புகள் குந்தவையின் பிம்பமாகவே இருக்க முடியும்.

கடம்பூர் மாளிகையில் கந்தமாறன் தங்கையை காதலுடன் நோக்குகிறான் வந்தியத்தேவன் . அது மட்டும் இல்லாமல் அதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இருவருக்கும் மணம் புரிவதற்கான பேச்சுக்கள் இருந்திருக்கின்றன என்றும் கல்கி தெளிவாக கூறுகிறார்.
கந்தமாறன் தங்கை கொலைப் பழியினைக் கூட ஏற்றுக் கொள்கிறார். அந்தப் பெண்ணை விட்டு விட்டு குந்தவை பின்னால் வந்தியதேவன் செல்கிறார்.


அதே போல ஆதித்யனை விட்டுவிட்டு குந்தவைக்கே முழு விசுவாசமாய் மாறிவிடுகிறார் வந்தியத் தேவன். இதுவும் கல்கியின் கூற்றுதான்.

அருண்மொழிக்குக் கூட தனது தோழிகளில் ஒருத்தியை மணம் முடித்து வைக்கவே விரும்புகிறார். குந்தவையும் வெளிநாடு ஒன்றுக்கு வாழ்க்கைப் பட்டு செல்ல விரும்பவில்லை என்பதை கல்கி அவர்களே மிகவும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.


அகண்டபாரதம் அமைக்க ஆசைப்படும் உன்னத எண்ணம் கொண்டவராக குந்தவை தேவி காட்டப் படிகிறார். ஆனால் கடைசி கட்டங்களில் வடக்கு ஆதித்யனுக்கு தெற்கு அருள்மொழிக்கு என்றெல்லாம் பேச்சுக்கள் வருகின்றன. இதையும் கல்கி கூறிவிடுகிறார்.


ப்போது நான் வைப்பது மட்டுமே வாதம்.



தனது ஆதிக்கத்திற்கு வராத தன் அண்ணனிடம் பேச தனது காதலனை அனுப்புகிறார். அங்கு போய் சந்திக்கிறார். கல்கி நந்தினியும் ஆதித்யரும் பேசுவதாகக் காட்டும் இடத்தில் வந்தியத்தேவனும் இருக்கிறார். அவரும் ஏன் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டிருக்கக் கூடாது? நந்தினியை பல முறை பார்த்து ஜொள் விட்டவர்தான் வந்தியத்தேவன் . வாதங்களில் எல்லோரும் மாறி மாறி டென்சன் ஆகி ஏன்கொலை நடந்திருக்கக் கூடாது?


இதில் வந்தியத்தேவர் கடம்பூர் சென்றதையும், கொலையுண்ட இடத்தில் வந்தியத்தேவன் இருந்ததையும், வந்தியத்தேவனின் கத்தியால்தான் ஆதித்யர் கொலையுண்டார். என்பதையும் கல்கி எழுதியிருக்கிறார். இது மட்டும் அல்லாது கொலையைப் பார்த்த மணிமேகலை கடம்பூர் இளவரசியும் வந்தியத்தேவனை தப்புவிப்பதற்காக தன்மேல் பழியைப் போட்டுக் கொள்கிறாள். இதுவும் கல்கியின் எழுத்துத்தான்.

எனவே ஆட்சி அதிகாரத்தின் போதையில் இருந்த குந்தவையின் தூண்டுதலால்தான் வந்தியத்தேவன் இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்று நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
கொலையை யார் செய்தார் என்பதை கல்கி சொல்லவே இல்லை என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதை வெளியே சொல்ல விரும்பாத காரணத்தாலேயே அவர் அவ்வாறு செய்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். பழிதன்மேல் வராமல் இருப்பதற்காக உத்தம சோழனை டம்மி அரசனாக சில காலம் இருத்தி பின்னர் அருள்மொழி ஆட்சிக்கு வருகிறார். அந்த டம்மி அரசனும் குந்தவையின் சம வயதினருமான் உத்தம சோழனும் சில ஆண்டுகளீல் மரணம் அடைகிறார்.

ராஜ ராஜன் கூட பெரும்பாலும் ஊரில் இல்லாமல் போர்களிலேயே இருக்கிறார்.
குந்தவை சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதும் வரலாறு. சுருக்கஞ்சொன்னால் வென்றுவிட்டதால் குந்தவை சாணக்கியனுக்கு ஒப்பாகப் பேசப் படுகிறார், தோற்றிருந்தால் அவர் சகுனியாகவோ நந்தினியாகவோதான் கருதப் பட்டிருப்பார்.


----------------------------------------------
மிகப் பழைய இடுகைதான். இருந்தாலும் பல புதிய புதிய பதிவர்கள் இருப்பதால் அவர்களுக்கான மீள்பதிவு

------------------------------------------------
புதியவர்கள் பின்னூட்டங்களையும் சேர்ந்து நிதானமாகப் படித்து கருத்துக்கூறுங்களேன்.

45 comments:

  1. அன்பரே சகுனி தோற்றதால் வில்லன் எனவும், சானக்கியன் வென்றுவிட்டதால் நல்லவன் எனவும் கருதுவதாக் எழுதியிருக்கிறீர்கள், நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள்‍ சானக்கியன் நாட்டை காப்பதற்காக சந்திரகுப்தன் தான் சிறந்தவன் என்று எண்ணி சூழ்ச்சி செய்தார், ஆனால் சகுனி தனது மருமகன் நாடாள வேண்டும் என்று பேராசையால் வஞ்சனை செய்தான்.

    ஆதித்தன் குந்தவைக்கு அளித்த ஓலையில் தனது ஒற்றன் வந்தியதேவன் என்று குறிப்பிட்டுள்ளான், வந்தியதேவனை அவன் குந்தவையை ஒற்றறிய அனுப்பியிருந்தால் அவன் குந்தவைக்கு அனுப்பிய ஓலையில் அதை குறிப்பிட்டிருக்க் மாட்டான்.

    பல இடங்களில் ஆசிரியர் நந்தினியின் மாயவலையில் சிக்காதவன் வந்தியதேவன் மட்டுமே என்று குறிப்பிட்டு இருக்கிறார், நன்றாக படித்தீர்கள் என்றால் நந்தினிக்கு தான் வந்தியதேவன் மீது ஒரு மோகம் இருப்பது தெரியும்

    ReplyDelete
  2. //ஆனால் சகுனி தனது மருமகன் நாடாள வேண்டும் என்று பேராசையால் வஞ்சனை செய்தான்.//


    வாருங்கள் ராம்குமரன்,

    சகுனியின் ஆசை தனது மருமகன் நாடாள வேண்டும் என்பதல்ல. சகுனியின் சபதம் தனி.

    காந்தார நாட்டின்மீது பீஷ்மர் படையெடுத்துச் சென்று பெண்கேட்கிறார். கவனியுங்கள் படையுடன் சென்று.......


    குருடனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள், சகுனியின் தந்தை, சகோதரர்கள், நாடு அனைத்தும் அழிக்கப் படுகின்றன.இளஞ்சிறுவன் சகுனி மட்டும் விட்டு விடுகிறார்கள். காந்தாரியின் திருமணம் நடக்கிறது.

    மனம் வெறுத்துப் போன காந்தாரி இந்தக் கொடிய உலகத்தை பார்க்க விரும்பாமல் தனது கண்ணைக் கட்டிக் கொண்டு குருடியாக மாறுகிறாள்


    சிறுவன் சகுனியின் மனதில் பெரிய காயமாக மாறி அஸ்தினாபுர வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கிறான். ஆனால் அதில் பாதிதான் வெல்லமுடிந்தது. சிறுவன் சகுனி சபதம் எடுத்தது தவிர மற்ற பகுதிகள் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

    ReplyDelete
  3. //ஆதித்தன் குந்தவைக்கு அளித்த ஓலையில் தனது ஒற்றன் வந்தியதேவன் என்று குறிப்பிட்டுள்ளான்,//



    ஆமாம் ஐயா, சிங்கத்தின் குகையிலேயே சென்று ஒற்று அறிவது இதுதான். ஆதித்யன் மிகவும் நல்லவராகவே காட்டப் படுகிறார். அவர் நல்லவராகவே இருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  4. //மாயவலையில் சிக்காதவன் வந்தியதேவன் //


    குந்தவை காப்பாற்றுகிறார் என்கிறேன். ஆனாலும் நந்தினியைப் பார்த்து ரசிப்பதை கல்கி பல இடங்களில் காட்டுகிறார்

    ReplyDelete
  5. //சகுனி தோற்றதால் வில்லன் கதாபாத்திரமாகவும், சாணக்கியன் வென்றுவிட்டதால் ராஜ தந்திரத்திற்கு ஒரு உதாரணமாகவும் //

    நச்.

    தோற்றதால் சிப்பாய் கலகம்
    வென்றதால் அக்டோபர் புரட்சி

    ReplyDelete
  6. வாருங்கள் சே.வே.சு. ஐயா,

    சரித்திரங்கள் எழுதுபவர்களின் பார்வையிலேயே பதியப் படுகிறது.வென்றவன் எழுதுபவர்களை கட்டுப் படுத்துவதால் அவ்வாறு அமைகிறது.

    நான் சிறுவர்மல்ரில் படித்தவரை அரச சபையில் அவமானப் படுத்தப் பட்டதாலேயே குடுமியை முடியமாட்டேன் என்ற சபதத்தை சாணக்கியன் எடுக்கிறார்.அந்த அரசனை அழிப்பதற்கான வழிவகைகளை தேடுகிறார். கண்ணில்பட்ட சந்திரகுப்தமொரியரை தயார் செய்து ஒரு அரச வம்சத்தையே உருவாக்குகிறார்.


    ஆனால் சகுனியின் சபதம் நாடிலந்த உற்றார் உறவினரை இலந்த தமக்கை வாழ்வு பாழாக்கப் படுவதைப் பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாத அப்பாவிச் சிறுவனின் சபதம்.

    ReplyDelete
  7. அடுத்த வருசம் வந்து கருத்து சொல்றேன்.

    ReplyDelete
  8. வாங்க நசரேயன், குடுகுடுப்பை சார்.


    இது அலசல் மட்டுமல்லாமல் விவாதமாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

    இதற்கு அடுத்த ஆண்டுவரை (இன்னும் 13 நாட்கள்) காத்திருக்கச் சொன்னால்.................



    வருகைக்கும் ஊக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் நன்றிகள்

    ReplyDelete
  9. அருமையான அலசல்.....இன்றும் பொன்னியின் செல்வன் ரசித்து ரசித்து படித்தது கண்ணின் முன் நிற்கிறது.......

    ReplyDelete
  10. please leave kalki...

    and stop reading dinamalar !!!

    ReplyDelete
  11. Dr. சாரதி ,செந்தழல் ரவி,,

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

    ReplyDelete
  12. //ஆதித்தன் குந்தவைக்கு அளித்த ஓலையில் தனது ஒற்றன் வந்தியதேவன் என்று குறிப்பிட்டுள்ளான், வந்தியதேவனை அவன் குந்தவையை ஒற்றறிய அனுப்பியிருந்தால் அவன் குந்தவைக்கு அனுப்பிய ஓலையில் அதை குறிப்பிட்டிருக்க் மாட்டான். //

    ஓற்றர்களில் double agent, sleeper, என்று பலவகை உண்டு

    ReplyDelete
  13. //பல இடங்களில் ஆசிரியர் நந்தினியின் மாயவலையில் சிக்காதவன் வந்தியதேவன் மட்டுமே என்று குறிப்பிட்டு இருக்கிறார்//

    குந்தவையின் வலையில் சிக்கியதாலா

    ReplyDelete
  14. //நச்.

    தோற்றதால் சிப்பாய் கலகம்
    வென்றதால் அக்டோபர் புரட்சி//

    அப்படி மட்டுமல்ல

    எழுதுபவர் யார் என்பதும் முக்கியம்

    ஆங்கிலேயர் எழுதிய வரலாற்றில்
    சிப்பாய் கலகம், வேலூர் கலகம்

    வட இந்தியர்கள் வரலாற்றை எழுதியதால்
    1857 மீரட் சிப்பாய் கலகம் --> முதல் இந்திய விடுதலை போர்
    அதற்கு 50 வருடங்களுக்கு முந்தைய வேலூர் சிப்பாய் கலகம் --> வேலூர் கலகம் மட்டுமே

    ReplyDelete
  15. அது சரி

    குந்தவை மேல் வந்த சந்தேகம் ஏன் அருண்மொழி மேல் உங்களுக்கு வரவில்லை

    ReplyDelete
  16. அன்புள்ள சுரேஷ்

    பொன்னியின் செல்வன் சில வரலாற்று சம்பவங்களை பின்னணியாக கொண்ட ஒரு சிறந்த கற்பனைக் கதையே ஆகும். இந்த நூலில் சொல்லப் பட்டவற்றை சரித்திர ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது. சொல்லப் போனால் இந்தியச் சரித்திரம் பழங்காலங்களில் எப்போதுமே முறையாக எழுதப் பட வில்லை. சில வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள், சில கல்வெட்டுகள், சில பட்டயங்கள் மூலமாகவே நம்மால் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடிகிறது. எனவே பொன்னியின் செல்வன் நூலின் அடிப்படையிலான உங்கள் பதிவின் தலைப்பு "யூகங்களுடன் ஒரு அலசல்" என்றே இருக்க வேண்டும்.

    குந்தவை என்பவர் சரித்திரத்தில் உண்மையில் இடம் பெற்றவர் என்றாலும் பொன்னியின் செல்வன் நூலில் அவருடைய பாத்திரப் படைப்பு (குணாதிசியங்கள்)மற்றும் வந்தியத் தேவன் உடனான காதல் எல்லாம் கற்பனையே ஆகும். சொல்லப் போனால் வந்தியத் தேவன் வாணர் குலத்தவரே அல்ல என்றும் கூறப் படுகிறது. அவர்கள் இருவருக்கும் எந்த வகையில் திருமணம் நடைபெற்றது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது கேள்விக் குறி.

    ஆனால், ஒரு அற்புதமான கற்பனை உலகை நம்மை காணச் செய்தது "பொன்னியின் செல்வன்". அதிலுள்ள பாத்திரங்கள் முக்கியமாக வந்தியத் தேவன் குந்தவை ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நம்முள் என்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே. ஏன் நாம் இடைஞ்சல் செய்ய வேண்டும்?

    ReplyDelete
  17. ஆதித்ய கரிகாலனை கொன்றது பாண்டியர்கள் (மட்டும்) என்றால் அவர்கள் ஏன் அவனது தம்பியை விட்டு வைக்கிறார்கள்

    --

    அட்ரா சக்கை அட்ரா சக்கை

    ReplyDelete
  18. //
    புருனோ Bruno சொன்னது…

    அது சரி

    குந்தவை மேல் வந்த சந்தேகம் ஏன் அருண்மொழி மேல் உங்களுக்கு வரவில்லை//



    அருள்மொழி பாதிக் கதைக்கு வரவே இல்லை. தவிரவும் அவர் அக்கா பிள்ளை. தனியாக சந்தேகப் பட ஒன்றும் இல்லையே சார்.

    ReplyDelete
  19. //அதிலுள்ள பாத்திரங்கள் முக்கியமாக வந்தியத் தேவன் குந்தவை ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நம்முள் என்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே.//


    உண்மை வரலாறுகளில் வென்றவர்கள் என்றுமே நாயகர்கள்தான் அதைத்தான் சாணக்கியன் சபதம் கூறுகிறது.

    ReplyDelete
  20. //Maximum India கூறியது//

    வாங்க சார்.

    இது வெறும் இலக்கிய விவாதம் மட்டுமே..

    பாண்டியர்களின் பார்வையிலும் கொஞ்சம் சோழ தேசத்தைப் பாருங்களேன்..

    ReplyDelete
  21. பொன்னியின் செல்வனின் சிறப்பம்சம் இதுதான் ஒரே நேரத்தில் சிப்பாய் புரட்சியைப் பற்றியும்,

    மகாபாரதம் பற்றியும்,


    மௌரிய வம்சம் பற்றியும் பேச வைக்கும் ஒரு எழுத்து வன்மை கல்கிக்கு மட்டுமே உண்டு..

    ReplyDelete
  22. அலசல் நன்றாக இருந்தது சுரேஷ்.

    ஆதித்த கரிகாலன் கொலை என்பது தமிழக வரலாற்றில் நடந்த ஒரு மாபெரும் நிகழ்வாகும். இது திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கல்கியும் பொ.செ.விலேயே கூறியிருப்பார்.

    யார் கொன்றார் என்பதன் யூகங்கள் அதிகமாக இருந்தாலும், உடையாளூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகள் ரவிதாசன் மற்றும் அவன் கூட்டாளிகள் கொன்றதாக தெரிவிக்கின்றன. ரவிதாசன் கேரள நாட்டைச் சேர்ந்த பட்டதிரி என்பது குறிப்பிடத் தக்கது.

    பொ.செ.வில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளில், கல்கி சொல்வது போல் 'உண்மை கால் வீசம். பொய் முக்கால் வீசம்' இருக்கிறது.

    பொன்னியின் செல்வன் யாஹூ க்ரூப்பில் இதைப் பற்றிய விவாதங்கள் நிறைய நடந்துள்ளன. நானும் ஒரு அலசல் செய்திருக்கிறேன். உடையாளூர் கல்வெட்டுக்கள் இருந்தாலும், கல்கியின் தாக்கத்தால் ஆதித்த கரிகாலன் கொலை ஒரு சென்சேஷனல் ஐட்டமாகவே இருந்து வருகிறது.

    தற்போது சே.கோகுல் என்பவர், வரலாறு.காம்-ல். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த காந்தளூர்ச்சாலைப் போரைப் பற்றி ஒரு நாவல் 'சேரர் கோட்டை' என்று எழுதி வருகிறார்.

    [நானும் இதைப் பற்றி ஒரு பதிவிட முயற்சிக்கிறேன்.:))]

    ReplyDelete
  23. வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி இளைய பல்லவன் சார். நீங்கள் சொன்ன அலசல்களை நானும் தேடிப்பார்க்கிறேன்.

    கல்கி சொன்னதைப் போல் 23ம் புலிகேசி சொன்னது போல்(எதிர்கால தலைமுறைகள் என்னை புஜபல பராக்கிரசாலியாகவே பார்க்கும்) உண்மை கால்பங்குதானோ.........

    ReplyDelete
  24. குந்தவை அலசல் பற்ரிய பின்னூட்டத்தில் சிப்பய் கலகம் பற்ரி அலசப்பட்டு இருப்பதால் அது தொடர்பான எனது பதிவுலிருந்து:

    "சுதந்திரப் போரா? சிப்பாய் கலவரமா?


    பார்ப்பனர்களால் விளைந்த கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பனர்கள் அனைத்து துறைகளிலும் சாம,தான, பேத, தண்ட முறையைப் பயன்படுத்தி ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதில் அவர்களுக்கு ஈடு இணையாக யாரையும் காட்டமுடியாது.

    சமுதாயம், அரசியல், அரசுத் துறைகளில் இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதுபோல் நீதித்துறையில் அவாளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த வகையில் வரலாற்றுத்துறையில் சிந்து சமவெளி பிரச்சனையிலிருந்து, தற்போது நடக்கும் சேதுசமுத்திர பிரச்சனை வரை அவர்கள் ஆதிக்கம் தான் . அந்த வகையில் வரலாற்றைத்திரித்து எழுதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.


    நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் , “முஸ்லீம்படையெடுப்பும், ஆரியர் வருகையும்” என்றுதான் எழுதுவார்கள். முஸ்லீம்களை எதிரிகளாகவும், ஆரியர்களை வேண்டியவர்களாகவும் மனரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “நயவஞ்சக” முயற்சிதான் வரலாற்றை இப்படி எழுதுவதற்கு காரணம்,
    “அதுபோல் அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி” என்று அய்ந்து பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணைக்கூட பத்தினியாக்கும் வித்தை தெரிந்தவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்.

    இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தை.
    இந்த வகையில் பார்ப்பனர் செய்த பித்தலாட்டம் ஒன்றை இங்கு பார்ப்போம்.
    1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் உண்டு. அதைப் பற்றி நம்முடைய நண்பர்கள் இன்னும் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்பிக் கோண்டிருக்கிறார்கள். அது சரியா? அங்கு நடந்தது என்ன? கலவரமா? போரா?

    இதுகுறித்து பெரியார் தரும் தகவல் இதோ:


    ”அன்றைக்கு இராணுவத்தில் மிகுதியாகப் பார்ப்பனர்கள் இருந்தார்கள். பார்ப்பான் தன் நச்சுக் கருத்துகளை புகுத்துவதற்கு மிகவும் சல்லிசாக ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் கடல் கடந்து சென்று சண்டை போட இராணுவத்தைக் கப்பலில் ஏற்ற முற்பட்ட போது கடத்தல் இந்து மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்று கூறி மறுத்து விட்டார்கள்.( மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ள பார்ப்பனர்களும் அடங்குவர் ----தமிழ் ஓவியா)

    பார்ப்பனர்கள் சிப்பாய்களுக்குக் கொடுத்துள்ள துப்பாக்கியில் பசுவின் கொழுப்புத் தடவப்பட்டு உள்ளது. அது இந்து தருமத்துக்கு விரோதம் என்று இந்துக்களையும் பன்றிக் கொழுப்புத் தடவப்பட்டு இருக்கின்றது அது முஸ்லிம் தருமத்துக்கு விரோதம் என்று முஸ்லிம்களையும் தூண்டி விட்டுக் கலகம் செய்யச் செய்தார்கள்.

    மக்கள் கலகம் பண்ணினால் வேண்டுமானால் பட்டாளத்துக்காரனைவிட்டு அடக்கலாம். பட்டாளத்துக்காரனே கலகம் பண்ணினால் யாரைக் கொண்டு அடக்க முடியும்? எனவே வெள்ளைக்காரனுக்கு மிகவும் சிரமமாகப் போய்விட்டது.

    கலகத்தை அடக்க வெள்ளைக்காரன் பார்ப்பனர்களை அழைத்து யோசனை கேட்டான். பார்ப்பனர்கள் நீங்கள் மத விஷயத்திலும் பழக்க வழக்கத்திலும் தலையிடுவதால் தான் மக்களும், இராணுவத்தினரும் ஆத்திரப்பட்டு விட்டார்கள்.

    இனி இப்படி மத விஷயத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதிமொழி கொடுப்பீர்களானால் இப்படி எல்லாம் நடக்காது என்று கூறினார்கள். அதன்படியே விக்டோரியா மகாராணி எழுதிக் கொடுத்தார். அதன்பிறகுதான் கலகத்தை நிறுத்தினார்கள். சமூதாயச் சீர்த்திருத்தக் காரியங்களை எதிர்த்த இந்த முட்டாள்தனமான கிளர்ச்சியைத்தான் சில சரித்திர ஆசிரியர்களும், பார்ப்பனர்களும் உண்மைக்கு மாறாக சுதந்திரக் கிளர்ச்சி என்று திரித்துக் கூறுகின்றார்கள்

    -----------------"விடுதலை" 26-04-1963.


    பெரியார் கருத்திலிருந்து பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள செய்த கலவரமே இந்த சிப்பய் கலவரம். சிப்பாய் கலவரத்தையே முதல் இந்திய சுதந்திரப் போராக சித்தரித்து வரலாற்றில் பதிவு செய்தது பார்ப்பனர்களின் தந்திரமே.

    எனவே 1857 –ல் நடந்தது சிப்பாய்கலவரம்தானே தவிர முதல் இந்திய சுதந்திரப் போர் அல்ல. பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் வராற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் என்பதே உண்மை.."

    நன்றி.

    ReplyDelete
  25. வாங்க தமிழ் ஓவியா சார்...


    23ம் புலிகேசி பார்த்தீர்களா.. அதில் வடிவேல் கட்டுடல் கொண்டவராக காட்டுவதற்காக உடல் பகுதியை மட்டும் வேறொருவரிடம் இருந்து எடுத்து வரைந்து முகம் வடிவேலுடையதாகக் காட்டி எதிர்கால சந்ததியினருக்காக இப்படி வரைந்துவைப்பதாக கூறுவார்.

    சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் என்றுமே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று அமைந்திருக்கும்

    ReplyDelete
  26. சுரேஷ், இதுக்கு ஒரு எதிர் பதிவு போட்டுட்டேன்.

    படிச்சிட்டு கமெண்டுங்க.

    ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

    http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. http://ilayapallavan.blogspot.in/2008/12/blog-post_3172.html இதுரான் சரியான சுட்டி

      Delete
  27. @tail oviyar

    sir, please dont insult indian Freedom fighters. Inniaku nenga ipapdi freeya blogging panrenganu athuku avangalum oru karanam. periyar karanam illa.avaruku kurai solla mattumthan terium. Urupadiya onnum panna teriyathu

    ReplyDelete
  28. @suresh

    very gud discussion. But pandiyas try to kill adhitya mainly because he was the one who kille Veerapandiyan in the war. Also they try kill Rajaraja also. Even in history , the murder was not mentioned. SO kalki left it like tat

    ReplyDelete
  29. /// @tail oviyar

    sir, please dont insult indian Freedom fighters. Inniaku nenga ipapdi freeya blogging panrenganu athuku avangalum oru karanam. periyar karanam illa.avaruku kurai solla mattumthan terium. Urupadiya onnum panna teriyathu

    December 27, 2008 5:23 PM
    நீக்கு
    பிளாகர் LK கூறியது...

    @suresh

    very gud discussion. But pandiyas try to kill adhitya mainly because he was the one who kille Veerapandiyan in the war. Also they try kill Rajaraja also. Even in history , the murder was not mentioned. SO kalki left it like tat///



    உண்மை.. பாண்டிய நாட்டின் தேசபக்தன், ராஜவிசுவாசி கண்டிப்பாக அப்போதைய எதிரி நாடான சோழ நாட்டின் கொலையாளியாகத்தான் இருக்க முடியும்.


    நாம் கூறுவது ஒரு வாதம் மட்டுமே.. எனது வாதப்படி முயற்சித்தது பாண்டிய ராஜவிசுவாசிகள் என்றாலும் வென்றது யார்?

    தவிர மதுராந்தகன் உத்தமன் என்று பெயரில் அரியனை ஏறியதற்கும், அருண்மொழி ராஜராஜன் என்ற பெயரில் அரியணை ஏறியதற்கும் ஏதேனும் காரணம் அல்லது தொடர்பு இருக்குமா.........

    ReplyDelete
  30. //தவிர மதுராந்தகன் உத்தமன் என்று பெயரில் அரியனை ஏறியதற்கும், அருண்மொழி ராஜராஜன் என்ற பெயரில் அரியணை ஏறியதற்கும் ஏதேனும் காரணம் அல்லது தொடர்பு இருக்குமா.........//

    There is no sepecifc reason behind this. At different times in different dynasties, Kings came to power with a different name othere than their names

    ReplyDelete
  31. வாங்க எல்கே அவர்களே....

    //There is no sepecifc reason behind this.//

    அப்படி எப்படி சொல்லமுடியும்.?

    இது போன்ற பட்டப் பெயர்கள் சூட்டப் படுவர்களின் பூரண ஆசிகளுடந்தான் நடக்கின்றன..


    இன்றைய சினிமா நடிகர்களுக்கு, அரசியல் நாயகர்களுக்கு கூட இவ்வாறு பல பெயர்கள் சூட்டப் பட்டு அறியப் படுகிறார்கள். சம்பந்தப் பட்டவர்களுக்கு பிடிக்கவில்லைஎன்றால் சூட்டிய அன்றே பெயர் மறைந்துவிடும்.

    பிடிப்பதுபோன்று முகக்குறி கிடைத்தாலே போதும், அந்தப் பெயர் நிலைத்துவிடும்.

    அதுபோலத்தான் உத்தமச் சோழன் தன்னை வரலாறு உத்தமனாகவே நினைக்க வேண்டும் நினைத்து இருக்கலாம், அல்லது அவரது நலம் விரும்பிகள் நினைத்திருக்கலாம்....

    ReplyDelete
  32. பொன்னியின் செல்வனை எழுத்து எழுத்தா அலசியிருப்பீங்க போல இருக்குது!

    ReplyDelete
  33. //ராஜ நடராஜன் said...

    பொன்னியின் செல்வனை எழுத்து எழுத்தா அலசியிருப்பீங்க போல இருக்குது!
    //


    படிக்கப் படிக்க பல கோணங்கள் கிடைக்கக் கூடிய புத்தகம் அது..,

    ReplyDelete
  34. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  35. பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. கலையமுத்தூர் மருத்துவரைக் காணவில்லைன்னு அறிவிப்பு போடலாம்ன்னு இருந்தேன்... புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. மங்களமுருகேசன் அவர்களின் கட்டுரை கல்வெட்டு மூலமாகக் காட்டுகிறது கொலைகாரர்களை.

    http://mangalamurugesan.blogspot.com/2010/12/blog-post_12.html

    ReplyDelete
  38. // மாணவன் said...

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே//

    வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  39. //பாண்டிச்சேரி வலைப்பூ said...

    பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    //

    வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  40. //பழமைபேசி said...

    கலையமுத்தூர் மருத்துவரைக் காணவில்லைன்னு அறிவிப்பு போடலாம்ன்னு இருந்தேன்... புத்தாண்டு வாழ்த்துகள்!
    //

    வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  41. //Thamizhan said...

    மங்களமுருகேசன் அவர்களின் கட்டுரை கல்வெட்டு மூலமாகக் காட்டுகிறது கொலைகாரர்களை.

    http://mangalamurugesan.blogspot.com/2010/12/blog-post_12.html
    //


    வாருங்கள் நண்பர்களே.,

    ஆதித்ய கரிகாலனைக் கொன்றது என்று சோழர்களின் பார்வையில் பார்ப்பதைவிட பாண்டியர்களின் பார்வையில் பாருங்கள். வீரபாண்டியனின் கொடும் மரணத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய வீராதிவீரர்கள், பாண்டியமன்னனின் தூய விசுவாசிகள் யார் எனப் பாருங்கள். அந்தக் கட்டுரையில் சில கருத்துக்கள் அவர் சொல்ல வருவதற்கு எதிர்மறைப் பொருளை கொடுத்துவிடும்.

    ReplyDelete
  42. அட இது என்ன புது கதை...அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில குந்தவையை வில்லியாக்கி வந்தியத்தேவனை கொலைக்காரனாக்கிட்டாங்களே...வந்தியத்தேவன் கிட்ட ரெண்டு ஓலைக் கொடுத்ததற்கான காரணம் சுந்தர சோழரும் குந்தவையும் தனித்தனியா இருந்ததாலதான்...அது மட்டுமில்லாம குந்தவைதான் தனக்கு நம்பிக்கையான ஒற்றன் வேணும்னு கேட்ருக்காங்க...அதுனால தான் தன் நண்பனை அனுப்பி வெச்சுருக்காரு ஆதித்தக் கரிகாலர்...குந்தவையை வேவு பார்க்க அனுப்பிருந்தா அத கல்கி முதல் அத்தியாயத்துலேயே சொல்லிருப்பாரு...ஆதித்தக் கரிகாலர் பழுவேட்டரையர்கள் மற்றும் மதுராந்தகன் பத்திதான் வந்தியத்தேவனுக்கு எச்சரிக்கை பண்ணி அனுப்புனாரு...நந்நினி கற்பனை கதாபாத்திரம் தான்...ஆனா ஆதித்த கரிகாலர் காஞ்சிப்புரத்துல தங்குனதுக்கு காரணம் வட எல்லை பாதுகாப்பிற்குதான்...இதையும் கல்கி தெளிவா சொல்லிருப்பாரு...மணிமேகலை கற்பனை கதாபாத்திரம்...அவளோட காதல், அவளுக்கும் வந்தியத்தேவனுக்கும் கல்யாண பேச்சுவார்த்தை எல்லாமே கற்பனேயே...வந்தியத்தேவன் மேல கந்தமாறன் கொலைக்குற்றத்தை சாட்டுனதாலதான் மணிமேகலை கொலை பழியை ஏற்க முன் வந்தாளே தவிர வேற காரணம் ஒண்ணும் இல்ல...இது அவளோட உன்னத காதலுக்கு அடையாளம்...அவ்வளவே..ஆதித்தக் கரிகாலருக்கும் நந்தினிக்கும் உரையாடல் உக்கிரமா நடக்குறப்ப வந்தியத்தேவன் யாழ் களஞ்சியத்திலிருந்து வெளி வர முயல்வான்...பெரிய பழுவேட்டரையர் தாக்குனதால தான் அவன் மயங்கி வீழ்வான்...கல்கி எந்த ஒரு இடத்துலயும் வந்தியத்தேவனோட கத்தியாலதான் ஆதித்தக் கரிகாலர் கொல்லப்பட்டார்னு சொல்லவே இல்ல...பெரிய பழுவேட்டரையர் குந்தவையை பத்தி நடுநிசி கூட்டத்துல பேசுனதுக்கு காரணம், குந்தவை தான் தன்னோட திட்டம் நிறைவேற தடைக்கல்னு பெரிய பழுவேட்டரையர் நினைச்சது தான்...அந்த எண்ணம் தப்புன்னு அவரோட மரண தருவாயில் அவரே ஒத்துப்பாரு...அருள்மொழிவர்மரோட தியாகத்தையே கொச்சைப்படுத்துட்டாரு இந்த கட்டுரை எழுதுனவரு ( நீங்கலாம் நல்லா வருவீங்க சார்) ...உத்தம சோழன டம்மி பீஸ்ன்னு சொல்லி அவரையும் கொச்சைப்படுத்தியாச்சு...அடக்கடவுளே...கொடுமை கொடுமை...அருள்மொழிவர்மரை போர்க்களத்துக்கு போகாம அரண்மணைலயே இருக்க சொல்றாரா இவரு!!! குந்தவை சோழ தேசத்தை விட்டுப் போகாதத்துக்கு காரணம் சோழ தேச பற்றன்றி வேற எதுவும் இல்ல

    அபிராமி பாஸ்கரன்..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails