Thursday, March 24, 2011

இன்று இந்தியா வெல்லும் (புதுசு)

இன்று   நடைபெறும்  ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான போட்டியில் இந்தியா வெல்லும் என நம்புவதற்கான காரணங்கள்:-

1. இதுவரை டோனி ஒழுங்காக ஆடவில்லை. அதனால் இன்று அவர் சதம் அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

2.அவர் விளையாடவில்லை என்பது அவரை நம்பி ஒப்பந்தம் செய்திருக்கும் பல விளம்பரதாரர்களுக்கு மாரடைப்பே வந்து விடும். அந்த வாய்ப்பை டோனி தரமாட்டார்.

3.இந்தியா போட்டியை விட்டு விலகினால் போட்டியின் சுவாரசியம் குறைந்துவிடும். அது கிரிக்கெட் உலகிற்கு நல்லதல்ல.

4.இந்தியா வென்றால் அடுத்து பாகிஸ்தானுடன் போட்டி. அண்ட லோக பிரபஞ்ங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் அனைத்து கடவுள்களும் கிரகங்களும் அந்தப் போட்டியை எதிர்ப்பார்த்து இருப்பதால் கிரகங்களின் நிலை இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.

5.சுழற்பந்து சுலபமாக எடுபடும் வாய்ப்பு இருக்கிறது என்பது தமிழ்நாட்டு தேர்தல் கூட்டணியிருந்தே  தெரிகிறது. இதுவும் இந்தியாவிற்கு சாதகமானதுதான்.

6.ரிக்கி பாண்டிங் இந்தியா அணிக்கு, குறிப்பாக டோனி அணீக்கு மிகவும் கடமைப் பட்டு இருக்கிறார்.   அதனால் இந்தியாவிற்கு வாய்ப்பு அதிகம். புரியாதவர்கள் இந்தச் சுட்டியைத் தட்டவும்.









டிஸ்கி: இது நகைச்சுவையாக எழுதப் பட்டது.

டிஸ்கி 2 ; ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி பலம் பொறுந்திய அணியாகவே இருக்கிறது.

டிஸ்கி 3; ரிக்கி பாண்டிங்கைவிட டோனி அமைதியாக இருக்கிறார். அவ்வப்போது டெண்டுல்கரும் பந்து வீச்சாளர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார். எனவே இந்தியா வெல்லும்

டிஸ்கி 4; யாராவது தமிழ்மணத்திலும் இண்டிலியிலும் சேர்த்து விடுங்கள்

6 comments:

  1. இனிமேல் டோனி சதம் அடிக்க முடியாதே

    ReplyDelete
  2. அநேகமாக அரை, முழு இறுதிகளில் 100 போட்டு தொடர்நாயகன் வாங்குவார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. உதிரி கூட 21 .

    நம்ம தலை மட்டும்தான் ஒற்றை இலக்கம்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails