தேர்தலில் வாக்களிப்பது என்பது முழுக்க முழுக்க சுயநலம் தொடர்பான விஷயம்தான். இதில் வருத்தப் பட ஒன்றும் இல்லை. நம்மை ஆள்பவர்கள் நமக்கு தோதாக அமையவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை 89தேர்தல் முதற்கொண்டு நேரடியாக பார்த்து வருகிறேன். மக்களின் வாக்களிக்கும் மனப்பாண்மை என்பது முழுக்க முழுக்க தன் தலைவன் தொடர்பாகவே அமைகிறது.
எம் ஜி யாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் கலைஞருக்கோ, கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் எம் ஜி யாருக்கோ, அவரது கட்சிக்கோ வாக்களிக்கவே மாட்டார்கள்.
ஆனால் எம் ஜி யாருக்குப் பிறகு தனது தலைவராக கலைஞரை ஏற்றுக்கொண்டவர்கள் நிறைய உண்டு. எப்படி சச்சின் சதம் அடித்தால் தான் அடித்தது போல மக்கள் மகிழ்கிறார்களோ அதே போல தனது தலைவர் ஜெயித்தால் தானே ஜெயித்தது போல் தானே முதல்வர் ஆனது போல நினைப்பவர்கள் அதிகம். அது அவர்களுக்கே தெரியும். உண்மை அல்ல. இது கற்பனை என்று. ஆனால் அந்த கற்பனையிலேயே வாழ்பவர்கள் மிக அதிகம்.
குறிப்பிட்ட நாயகர்களுக்கு, கடவுளர்களுக்கு கூட்டம் இருப்பது போலத்தான் இதுவும்.
தலைவர் கொடுக்கும் வாக்குறுதிகள் முக்கியத்துவம் வகித்தாலும் தலைவரால் அதை நிறைவேற்ற முடியுமா அல்லது இத்தனை நாள் ஏன் நிறைவேற்றவில்லை என்பதிலும் வாதவிவாதங்கள் செய்கிறார்கள். அப்போதும் கூட தலைவரின் ஆளுமைத் திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
லஞ்சங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் பெரும்பாலான மக்களால் விரும்பப் படுகிறது. தன் தலைவரால் நியமிக்கப் பட்ட பிரதிநிதி, அலுவலகங்களில் தனது திறமையைக் காட்டி காரியம் சாதிக்கும்போது மக்கள் புளங்காகிதம் அடைகிறார். ( காணிக்கையும் செலுத்துவார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள் )
தன்னையும் தன் சமுதாயத்தையும் பார்த்து மற்றவர்கள் பயப்பட தலைவரின் பெயர் உபயோகப் படும் என்றால் மட்டுமே சாதி, மதங்கள் உள்ளே நுழைகின்றன. ஆனால் பல நேரங்களிலும் பெரும்பான்மையான சாதியைச் சேர்ந்தவர்களையே அரசியல் கட்சிகள் நியமிக்கின்றன. இது அடியாள் சேர்ப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர வெற்றிக்கு உதவுமா என்பது கேள்விக் குறிதான்.
நடுநிலை வாக்காளர்கள் என்ற நிலையில் சிலர் இருப்பார்கள். இவர்கள் ஊசலாடும் வாக்காளர்கள் என்றே சொல்லலாம். இவர்களைப் பொறுத்தவரையில் யார் தலைமைக்கு வந்தால் இந்த முறை நம் தொழில் நன்றாகப் போகும் என்று பார்ப்பார்கள். யார் வந்தாலும் ஒன்றுதான் என்னும்போது தொகுதிப் பிரதிநிதியிடம் நாம் எளிதில் சாதித்துக் கொள்ளமுடியுமா என்று பார்ப்பார்கள். அப்போது சாதிய ரீதியில் ஏற்கனவே உள்ள நெருக்கம் உதவும். சாதிக்கு அப்பாற்பட்டு தங்கள் பகுதியில் செல்வாக்கினை வளர்த்து வைத்திருக்கும் சிலரிடம் பெரும்பான்மைச் சாதியை சேர்ந்தவர்களை நிருத்தினாலும் செயிக்க முடியாத நிலையே ஏற்படும்.
கூட்டணியைப் பார்த்து ஓட்டுப் போடுவது என்பதும் நடக்கிறது. பெரும்பாலான கூட்டணிகள் இன்னார் வரக்கூடாது என்றுதான் சேருகின்றன.
91லும் சரி, 96, 2001ன் மெகா கூட்டணி, 2006 கூட்டணி போன்றவை இவர்கள் வெல்ல வேண்டும் என்பதை விட இந்த நபர் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில்தான் கவனத்துடம் இருந்தன. 96ல் கொள்கைக்கான உருவான தமாகா அதைக் குழிதோண்டி2001ல் புதைத்ததற்கு காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? இன்னார் வரக்கூடாது என்று என்ற காரணம் கூட தலைவனை முன்னிலைப் படுத்துவது என்றே அமைகிறதல்லவா?
பிரச்சனைகள் என்பதில் பொதுப் பிரச்சனைகள் என்றுமே ஓட்டுப் போடும் காரணியாக இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டிருந்தாலும் தீர்க்கும் நபரை தேடியே ஓட்டுப் போடுகிறார்கள்.
வாக்குறுதிகள் : மனிதன் என்று ஒரு திரைப்படம் எஸ்பி முத்துராமன் இயக்கியது. அதை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும். வாக்குறுதிகளை வைத்து மக்கள் மத்தியில் நம்மை பற்றியே பேசும் சூழலை உருவாக்க முடியும். வாக்குறுதிகள் தலைவனின் மதிப்பை மிகவும் உயர்த்தும். ஆனால் சொல்லும் தலைவரின் நம்பகத்தன்மையும் இதில் அடங்கியிருக்கின்றது,
பிரியாணியும் குவார்ட்டரும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுவதாகச் சொல்லுகிறார்கள். யாருமே அந்த குறிப்பிட்ட தினத்தில் வாங்கிக் கொடுப்பதைப் பொறுத்து ஓட்டுப் போடுவதில்லை. வாங்கிக் கொடுப்பவருக்கும் அதை சாப்பிடுபவருக்கும் இடையிலான் ஒரு நெருக்கம் மட்டுமே அதை ஓட்டாக மாற்ற முடியும். திடீரென ஒரு ஆள் ஆயிரம் ரெண்டாயிரம் அல்லது ஒரு ஃபுல் வாங்கிக் கொடுத்து குறிப்பிட்ட சின்னத்துக்கு ஓட்டுப் போடச் சொன்னால் கண்டிப்பாக அதே சின்னத்துக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு நம் ஊரில் நேர்மை இருக்கிறதா என்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,
============================================
சக பதிவர் மாதவராஜ் அவர்களின் தளத்தில் கொடுத்துள்ள கேள்விகளுக்கான எனது கருத்தே இந்த இடுகை.
==================================================
பணம், சாதி, கொள்கை கூட்டணி எல்லாம் இருந்தாலும் தலைவன், தலைவன் மட்டுமே அவை எல்லாவற்றையும் ஓட்டாக மாற்ற முடியும். தமிழ்கத்தில் இதுவரை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
=======================================================
கூட்டணி கட்சிகள் இருந்தாலும் தேர்தலுக்குப் பின்னரும் இவர்கள் நம்முடன் இருப்பார்களா? என்பதும் ஓட்டுப் போடும் வாக்காளர்கள் யோசித்துக் கொண்டுதான் ஓட்டுப் போடுகிறார்கள். எனக்கென்னவோ 1980ல் நடந்த இந்த சிந்தனை ஓட்டம் இந்த ஆண்டும் வரும் என்று தோன்றுகிறது.
==================================================================
அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்று பற்றி முதலமைச்சர் உத்தரவு போடச் சொன்னபோது ‘ஜீ.ஓ. இடம் தராது’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரி சொன்னார். உடனே அவர் , ‘ஜீ.ஓ.’ன்னா என்ன?’ என்று கேட்டிருக்கிறார். இதுகூட தெரியாமல் ஒரு முதலமைச்சர் இருக்கிறாரே என்று நினைத்தாரோ என்னவோ, ‘அது கவர்மெண்ட் ஆர்டர் ஐயா’ என்றார் அந்த அதிகாரி. ‘அதுசரி, கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?’ என்று மறுபடி கேட்டார்
என்ன பதில் சொல்வதென்றே அதிகாரிக்குத் தெரியவில்லை. மௌனம். மீண்டும் அவரே பேசினார் : ‘நீங்கள் எழுதி வைப்பதில் நான் கையெழுத்துப் போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர். அப்படித்தானே? நான் சொன்னபடி மாற்றி எழுதுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்!’
இவ்வாறு சொன்ன முதல்வர் பிற்காலத்தில் சட்ட மன்ற தேர்தலில் தோற்றுப் போனார். அவர் தோற்றதற்கு பணம், சாதி, கொள்கை, பிரச்சனை, கூட்டணி போன்றவை காரணம் என்றா நினைக்கிறீர்கள்?
ஒரு தலைவர், அவர் வழி நடந்த களப் பணியாளர்களின் கடின உழைப்பு அவ்வளவுதான்.
===================================================================
கொள்கை அடிப்படையில் ஓட்டுப் போடுபவர்கள் யாராவது இருந்தால் எந்தக் கொள்கையின் அடிப்படையில் எதிர்கட்சி வேட்பாளரை நிராகரித்தீர்கள் என்று சொன்னால் கொள்கை அடிப்படையில் ஓட்டு என்றால் என்ன புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
எங்கள் கட்சியின் கொள்கையை அந்தக் கட்சி காப்பியடித்து விட்டது என்று எந்த தலைவரும் கூறாவிட்டாலும் அதுதான் நாட்டு நடப்பு
=============================================================

கொள்கை அடிப்படையில் ஓட்டு என்றால் என்ன ??? என்ன????
ReplyDeleteதலைவன் வழியில் நடப்பதுதான் கொள்கை
ReplyDelete