Wednesday, March 30, 2011

நிஜமா இலவசம்னு ஒன்னு இருக்கா?

இலவசம், இலவசம் என்று புலம்புவர்களுக்கு ஒரு கேள்வி, தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

தமிழ் நாட்டில் நிறைய இலவசங்கள் கொடுப்பதாகப் புலம்புகிறீர்களே..,  பள்ளி மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கு , வயோதிகர்களைத் தவிர  வேறு மக்களுக்கு இலவசங்கள் ஏதாவது கொடுத்திருக்கிறார்களா?

தொலைக்காட்சி பெட்டி மட்டும் விதிவிலக்காக எல்லோருக்கும் கொடுக்கப் பட்டது. நாட்டு நிகழ்வுகளை, மக்களின் வாழ்க்கை முறைகளை தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொண்டு சென்ற மிக முக்கிய அரசியல் நிகழ்வு அது.


9 comments:

  1. //தொலைக்காட்சி பெட்டி மட்டும் விதிவிலக்காக எல்லோருக்கும் கொடுக்கப் பட்டது. நாட்டு நிகழ்வுகளை, மக்களின் வாழ்க்கை முறைகளை தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொண்டு சென்ற மிக முக்கிய அரசியல் நிகழ்வு அது. //
    மிக்சி, கிரைண்டர் மட்டும் விதி விலக்காக எல்லா குடும்பங்களும் நேரத்தை சேமிக்கவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொடுக்கப்பட்ட மிக முக்கிய அரசியல் நிகழ்வு.
    fan மட்டும் விதி விலக்காக எல்லா குடும்பங்களும் குளிர்ந்த காற்றை வாங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொடுக்கப்பட்ட மிக முக்கிய அரசியல் நிகழ்வு.
    கார் மட்டும் விதி விலக்காக எல்லா குடும்பங்களும் பாதுகாப்பாக பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொடுக்கப்பட்ட மிக முக்கிய அரசியல் நிகழ்வு.
    பிரிட்ஜ் மட்டும் விதி விலக்காக எல்லா குடும்பங்களும் உணவு பொருட்களை வீணாக்காமல் மறு நாள் உபயோகபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொடுக்கப்பட்ட மிக முக்கிய அரசியல் நிகழ்வு.

    நீங்கள் டி வி இலவசமாக கொடுப்பதற்கான 'நியாயத்தை' எழுதிவிட்டதால், இனி அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படப்போகும் இலவசங்களுக்கான 'நியாயம்' இதோ!

    ReplyDelete
  2. விதண்டா வாதமாகச் சொன்னாலும்கூட அந்தப் பொருட்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா..,

    ReplyDelete
  3. //அந்தப் பொருட்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா..,//
    கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், அதை அவர்கள் உழைத்து பெற வேண்டும். இலவசமாக அல்ல. இலவசமாக கொடுப்பதை விட வாங்கும் சக்தியை கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. இப்போது சொல்லப் பட்டுள்ள இலவசங்கள் பெரும்பாலும் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்குத்தான், மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் படிக்கவிட்டால் அவர்கள் அனைத்தையும் சம்பாதித்துக் கொள்வார்கள்

    ReplyDelete
  5. //இப்போது சொல்லப் பட்டுள்ள இலவசங்கள் பெரும்பாலும் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்குத்தான், மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் படிக்கவிட்டால் அவர்கள் அனைத்தையும் சம்பாதித்துக் கொள்வார்கள்//

    இதன் மீது வாதம் கத்திமேல் நடப்பது போன்றது. ஏதாவது சொன்னால், ஏழைகளை எதிர்த்து சொல்வது போல பொருள் கொடுக்கும். இலவசங்கள் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொலைக்காட்சி இலவசமாக கொடுத்ததற்கு உள் நோக்கம், சுமங்கலி அதிக லாபம் சம்பாதிப்பதும், சன் டிவி தன் மொத்த viewer base ஐ பெரிய அளவு அதிகப்படுத்தி அதிக விளம்பர வருமானம் பார்க்கவும் தான் என்பது தான் என நான் நினைக்கிறேன் (சன் மட்டுமல்லாது, மற்ற சேனல்களும் பலனடையும். ஆனால், சன் மிகப்ரபலமானதால் அதிக பலன் அறுவடை செய்தது)

    ReplyDelete
  6. // மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் படிக்கவிட்டால் அவர்கள் அனைத்தையும் சம்பாதித்துக் கொள்வார்கள்//

    இதன்படி பார்த்தால் வசதியானவர்கள் வீட்டு மாணவர்கள் எல்லோரும் நன்றாக படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படியா இருக்கிறது?

    I just could not resist arguing more. but i truly stop now!

    ReplyDelete
  7. //இதன்படி பார்த்தால் வசதியானவர்கள் வீட்டு மாணவர்கள் எல்லோரும் நன்றாக படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படியா இருக்கிறது?

    I just could not resist arguing more. but i truly stop now//


    நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்கிறோம் நாங்கள்.

    பொருளாதார தடையில்லாதவர்கள் அனைவரும் நன்றாகப் படிக்கிறார்களா? என்கிறீர்கள் நீங்கள்

    உங்கள் வாதத்தை மீண்டும் நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்கள்

    ReplyDelete
  8. எந்த பொருளாதார தடை என்பது தான் இங்கே கேள்வி. உணவு தடையாக இருக்க கூடாது கண்டிப்பாக. ஆனால், எந்த அளவு பொருளாதார குறைபாடு தடையாக இருக்கிறது என்பதே இங்கு கேள்வி. டி வி, மிக்சி, கிரைண்டர் இல்லாதது படிப்புக்கு தடையாக இருக்கிறதா? ஆம் என்றால், சிலருக்கு கார் இல்லாதது கூட தடையாக இருக்கும். இதற்க்கு முடிவு ஏது?


    இதனால் தான் சொன்னேன் இந்த வாதம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்ன சொன்னாலும் எளிதில் தவறாக பொருள் தரக்கூடியது!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails