சில உறுதிமொழிகள் உங்கள் உதவிக்கு:-
- 1. காலையில் எழுந்ததும் கண்விழிப்பேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் தினமும் பல்விலக்குவேன் என்றும் குளிப்பேன் என்றும் உறுதி எடுப்பது கொஞ்சம் ஆபத்தானது.
- 2.காலையில் காஃபி போடும் வேளையை இனிமேல் மனைவியிடம் கொடுத்துவிடுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் சோறு கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.
- 3. அடிக்கடி முகம் கழுவுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் மேக்கப் போடுவேன் என்று எடுத்து விடாதீர்கள் செலவு தாங்காது.
- 4. சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விடுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று உறுதிமொழி எடுப்பது ஆபத்தானது. கிட்டப் போனால் முட்டம் பகை என்று பழமொழியே இருக்கிறது. அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு வரமாக அமையும்.
- 5. தினமும் இருசக்கரவாகனத்தில் செல்லலாம் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் உங்களுக்கு லிப்ட் கொடுப்பவர்கள் உங்களையும் வண்டி எடுத்து வரச் சொல்லும் அபாயமும் குறைந்தபட்சம் எரிபொருள் நிரப்பச் சொல்லும் வாய்ப்பும் இருக்கிறது.
- 6.மது, புகை ஆகியவற்றை நிறுத்துமாறு உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். பத்தாவது முறையாக இருபதாவது முறையாக என்று சாதனை அளவுகளை குறித்துக் கொள்ள முடியும். ஆனால் உங்களை ரஜினிக்கு எதிரானவராக காட்டும் வாய்ப்பு இருக்கிறது.
- 7.சினிமா பார்க்க மாட்டேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் ஐங்கரன் முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் நஷ்டமடைய நீங்கள் மறைமுக காரணமாகவும் உலக பொருளாதாரம் வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பேர்க்க வேண்டி வரலாம்.
- 8.ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றலாம் என்று முடிவு செய்யலாம். அனைத்து போஸ்டர்களையும் வேறொருவர் ஒட்டிவிட்டு உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கலாம்.
- 9.ஏதாவது விளையாட்டு வீரனாக மாறி மாடலிங் உலகில் நிறைய சம்பாதிக்கலாம் என உறுதி எடுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பிரபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் குறைந்தபட்சம் நாசர், டெல்லி கணேஷ் போன்றவர்களுக்கு போட்டி கொடுக்கமுடியுமா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
- 10.கல்லூரி மாணவர்கள் யாரையாவது காதலிக்கலாம் என உறுதி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கொலை கேசில் மாட்டும் வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.
உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்பது நமது மன உறுதிக்கும் செயலாற்றும் தன்மைக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். என்வே எடுக்கும் உறுதி மொழி உறுதியாக அமைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ இந்த புத்தாண்டில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
புத்தாண்டுடன் பொங்கல் கொண்டாடிவிட்டு வீரவிளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கே சுட்டுங்கள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteசரஸ்வதி சபதம் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கீங்க
வாருங்கள் ஆளவந்தான், மற்றும் முரளிக்கண்ணன் அவர்களே....
ReplyDeleteசரஸ்வதி சபதம்னாலே நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதாகத்தானே பொருள்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!
ReplyDeleteSUREஷ்,எனக்கும் இதில 1-2 உறுதிமொழிகள் பிடிச்சிருக்கு.எதுன்னு சொல்லக்கூடாது.அப்புறம்....!
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாங்க பாசகி, ஹேமா, பழைமைபேசி அவர்களே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete