நாயகன் குணாளன் நேராக சென்று நாட்டின் பேரரசர் சாம்ராட் அசோகரைச் சந்திக்கிறார். அசோகர் கலிங்க போருக்குப் பின் சண்டையே போட்டதில்லை என்று சொல்கிறார்கள். கரீனா கபூரின் கண்ணீருக்குப் பின்னர் அவர் புத்தமதத்தைத் தழுவி விட்டதாக ஷாருக்கான் எங்களுக்குச் சொல்லிக் கொடுந்திருந்தார். இருந்தாலும் எம்.கே.தியாகராஜ பாகவதர் தட்சசீலத்தில் கலகக் காரர்களை ஒடுக்கி திரும்புவதாக ஒரு வசனத்தை பின்னர் வைக்கிறார்கள்.
குணாளன் தனது தந்தையைச் சந்தித்த உடன் தந்தை மணமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அவருக்கு அவரது சிற்றன்னையை அறிமுகப்படுத்துகிறார், குணாளன் போரில் இருந்த நேரத்தில் அவரது தந்தை மகாச் சக்கரவர்த்தி அசோகர் மணம்புரிந்து கொண்டாராம். அந்த சித்தியின் பெயர் மனத்தில் நிற்கவில்லை,. ஆனால் அவரை அழைக்கும்போதெல்லாம் த்ரிஷா என்ற உச்சரிப்பே எனது காதில் விழுந்தது. தந்தையின் மனைவியாக கண்ணாம்பா நடித்திருந்தார், கண்ணாம்பா என்றதும் மனோகரா கண்ணாம்பா உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நினைவிற்கு வரவேண்டியவர் மனோகரா டி.ஆர் ராஜகுமாரி. அவரைவிட தளுக்கும் குளுக்கும் நிறைந்த ( வர்ணனை உதவி:- வசனகர்த்தா இளங்கோவன்) உடல்மொழியுடன் கண்ணாம்பா வலம்வருகிறார்.
அவருக்கு பார்த்த உடனேயே எம்.கேடி.யை பிடித்துப் போய்விடுகிறது. அவரை அடையத்துடிக்கிறார், பலானபலான திட்டங்கள் போடுகிறார். சிறப்பாக அலங்கரித்துக்கொள்கிறார். அசோகரின் மூலமாக குணாளனை அந்தப் புரத்திற்கு அழைத்துவந்து பாடச் சொல்கிறார், தந்தையின் முன்பாக மகன் சிற்றன்னையின் அந்தப் புரத்தில் பாட்டுப் பாடுகிறார். கடவுள் வர்ண்ணை மாதிரி பாடுகிறார். அதில் கண்ணாம்பா மிகவும் மனம் உருகிவிடுகிறார்.
அவசர வேலை காரணமாக தந்தை அசோகர் வெளியே கிளம்ப மகன் குணாளன் அந்தப் புரத்தில் பாடுவதை தொடருகிறார்.
உன்னை கண்டு மயங்காத பேர்களுண்டோ....,
இந்தப் பாடல்கூட கடவுள் பக்தி பாடல்தானாம்.
சிற்றன்னை சொக்கிப் போய் நடனமும் ஆடுகிறார். இந்தப் பாடல் முடிந்த உடன் எம்.கே.டியை வழிக்குக் கொண்டு வர கண்ணாம்பா பல இலக்கிய விவாதங்களில் ஈடுபடுகிறார். இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்தால் சோனா பத்துக்கு பத்து மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்.
ஆனால் சோனாவால் இவ்வளவு பெரிய இலக்கிய விவாதத்தில் ஈடுபடமுடியுமா என்று தெரியவில்லை.
எம்கேடி அறிவுரை கூறிகிறார், இந்த நிலையில் அசோகர் அந்தப்புறத்தில் நுழைய குணாள் குற்றம்சாட்டப் பட்டு நாடுகடத்தப் படுகிறார்.
இளவரசன் குணாளுக்கு ஆதாரவாக ஒரு பிட்சு பேசுகிறார், அவரை எண்ணெய் கொப்பரையில் போடுமாறு உத்தரவிடுகிறார். புத்தபிட்சு எண்ணெய் கொப்பரையில் போட்ட உடன் தாமரையாய் மாறி தப்பிவிடுகிறார், இதை கேட்ட அசோகர் பிட்சு மகான் என்பதாக உணர்ந்து படுத்தபடுக்கையாகிவிடுகிறார்.
இவருக்கு வைத்தியம் பார்க்க வரும் வைத்தியரின் மகனாக இளம்வைத்தியராக என்.எஸ்.கிருஸ்ணன் வருகிறார், அவரை கண்ணாம்பாவின் அந்தரங்க தோழி மதுரம் ஆசைப் படுகிறார், அவரை தன்வழிக்கு கொண்டுவர அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார், அவரது பேச்சு சன் ம்யூசிக் நிகழ்ச்சிகளிடையே வரும் வாயாடிகளின் குழைவிற்கு நிகராக அமைந்திருக்கிறது. அதுவு,ம் காதல் நோயால் தான் வாடுவதாக இளம்வைத்தியரிடம் சென்று மருந்து கேட்க அவர் பல ஓலைச்சுவடிகளை எடுத்துப்படிக்க அவரது கைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கும்.
எம்.கேடி.யின் மனைவி காஞ்சனை தனது சின்ன மாமியாரைப் பார்த்து தனது கணவனை மீட்க உதவி கேட்க செல்கிறார். இவருக்கு சின்னமாமியாருக்கு முன்பே திருமணம் ஆகியிருக்கும். அங்கு தன் கணவன் மேல் சின்ன மாமியார் ஆசைப் படுவது புரிந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.
மகேந்திரனிடம் அடைக்கலமாகி இருக்கிறார் குணாள். அவருக்கு சில கடிதங்கள் வருகின்றன. மகேந்திரனாக நடித்திருப்பவர் எம்.ஜி.ராம்சந்தர். அதாவது பிற்கால எம்.ஜி.ராமச்சந்திரன் (எ) எம்.ஜி.ஆர் அவர்கள்.
குணாளின் மனைவி மூன்று மாத கர்ப்பம் மற்றும் கடும் ஜூரம் என்று கடிதம் வர யாருக்கும் தெரியாமல் நாடுதிரும்பி தனது மனைவியைப் பார்க்க அந்தப் புரத்திற்குள் நுழைகிறார். அந்தப் புரத்தில் அவரது சிற்றன்னை ஒரு முன்னேற்பாட்டுடன் உள்ளே தங்கியிருக்கிறார்.
-----------------------------------------------------------------------------
இந்தக் காட்சியில் மின்சாரம் போய்விட்டதால் படத்தை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது படத்தைப் பார்த்துவிட்டு மீதவிமர்சனத்தை எழுதிவிடுகிறேன்.
இதன் தொடர்ச்சி இங்கே உள்ளது
ம்ம்ம் நல்ல விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி டாக்டர்
ReplyDelete:-))
ReplyDelete;)
ReplyDeleteதொடரும் விறுவிறுப்பான விமர்சனப் பகுதிக்காக காத்திருக்கிறோம்...
நல்ல அருமையான படம் ; நல்ல விமர்சனம்
ReplyDeleteஇந்த படத்துக்கு இப்போதைய பொருத்தமான நடிக/நடிகையர் யார் சொல்லுங்க டாக்டர்
@ஆ.ஞானசேகரன்
ReplyDelete@T.V.Radhakrishnan
@சென்ஷி
@Starjan ( ஸ்டார்ஜன் )
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
ஜோரான விமர்சனம். சிடியை எங்கே பிடித்தீர்கள்?
ReplyDelete[co="violet"]வாங்க நகரின் முக்கியக் கடைகளில் ஒரிஜினல் கிடைக்கிறது[/co]
ReplyDelete