பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும் போர்
மேல் நாட்டு ஞானி சொன்னதாக ஒரு நகைச்சுவை நடிகர்இன்று வீட்டிற்குள் நுழையும்போது ஆதித்யா ஓடிக் கொண்டிருந்தது. எம்.ஜி.யார் படம் போல . எம்.ஜி.ஆர் படம் ஓடிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் மேஜர் சுந்தர் ராஜனிடம் அவரது வீட்டில் வைத்துத்தான் விவாதித்துக் கொண்டிருந்தார். தான் கட்ட மறுத்த அபராதத்தை ஏன் கட்டினீர்கள்?அபராதம் கட்டியதால் தான் தவறு செய்யததாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடுமே என்று சொல்கிறார். அதற்கு நீதிபதியான மேஜர் சட்டம் உன்னை குற்றவாளி என்றதால் உனக்கு தண்டனை கொடுத்தேன். நீ நிரபராதி என்று எனது மனசாட்சி சொன்னதால் உனக்கான அபராதத்தை நான் கட்டினேன் என்கிறார்.
எனக்கு இதில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. நீதிமன்றங்களில் குற்றங்களை ஆராயும்போது சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே நோக்கப் படுகின்றனவா?
அதில் நீதிபதிகளின் சுய எண்ணங்கள் கருத்துக்களின் அடிப்படையிலான பார்வைகள் கொடுக்க மாட்டார்களா?
சட்டங்கள் , சாட்சியங்கள், வாதங்கள், பிரதிவாதங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகின்றன என்றால் ஒரே பென்ச்சில் இருக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் வேறுகருத்து கொள்வது எப்படி? மூவரில் இருவர் ஆளுக்கொரு கருத்து கொள்கிறார்கள் என்றால் மூன்றாமவர் சொல்லும் கருத்துதான் தீர்ப்பாக அமையுமா? மூன்றாமவர் என்ன முடிவு எடுத்தாலுமே அது சட்டட்த்துக்கு உட்பட்டுத்தானே அமையும். அப்படி என்றால் குற்றவாளிக்கு ஆதாரவான நிலையை மூன்றாம் நபர் எடுத்துவிட்டால் குற்றவாளி விடுதலை அடைந்து விட மாட்டார்களா?
அதாவது வாதங்கள் , பிரதிவாதங்கள் சாட்சிகளின் அடிப்படையில்தான் முதலாமவர் குற்றவாளி என சொல்லுகிறார். ஆனால் மற்ற இருவரும் அதே அடிப்படையில் அவரை நிரபராதி என்று கருதிவிட்டால் நீதியின் நிலை என்ன ஆகும். பலநேரங்களில் பென்ச்சுகளில் இந்த கருத்து மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
அப்படியென்றால் குற்றவாளிக்கு அதிர்ஷ்ட்டக் காற்று அடித்தால் அவனுக்கு ஆதரவான எண்ணங்களைக் கொண்ட நீதியாளர்கள் வந்தால் விடுதலையாகிவிடலாமா?
======================================================================
மேலே சொன்ன தத்துவம் இடம் பெற்றிருந்த படம் ரிக்ஷாக்காரன், ஐசரிவேலன், சோ அவர்களிடம் சொல்லுவதாக காட்சி அமைந்திருந்தது. நீதிபதி கூட ரிக்ஷாகாரன் படத்தினைச் சேர்ந்தவர்தான்.
ரொம்ப நியாயமான கேள்வி.
ReplyDeleteதல் நீங்க வக்கீலுக்கும் படிச்சிருக்கலாம்.
தல,
ReplyDeleteஅந்த புரோபைல் போட்டோ சூப்பர். யாரு புடிச்சது?
பை தி வே, பதிவில் இருப்பது நியாயமான ஒரு விஷயம். நீதிபதியின் மன நிலையைக்கூட ஒரு காரணியாக கொள்ளலாம். அதனால் தான் ஒவ்வொரு நீதிபதியும் ஒரு விதமாக சிந்தித்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்குகிறார்.
தல,
ReplyDeleteபதிவின் கீழேயே கமென்ட் போடும் பெட்டியை வையுங்களேன்?
வைத்துவிட்டேன் தல
ReplyDeleteHeello mate nice post
ReplyDelete