Tuesday, July 14, 2009
ஸ்ரீதேவி என்னும் பூங்காற்று
திரைப்படம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் நம்மைக் கவர்ந்த பாடல்களில் நினைவோ ஒரு பறவை மறக்க முடியாத பாடலாக அமைந்திருக்கும். சிவப்பு ரோஜாக்கள் படமும் நம்மில் பெரும்பாலானோர் பாத்திருப்போம். கமல் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருப்பார்கள்.
அதோ போல் சினிமா பாடல்களை நாம் ரசிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் இளமை எனும் பூங்காற்று பாடலும், சின்னப் புறா ஒன்று பாடலும் இடம் பெற்றிருக்கும்.
இளமை என்னும் பூங்காற்று பகலில் ஒரு இரவு என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் தான் பொன்னாரம்.., பூவாரம்.., என்ற ரம் பாடல் இடம் பெற்றிருக்கும். நினைவோ ஒரு பறவை பாடல் போல படமாக்கியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். பாடலை சன் மியூசிக் உபயத்தில்தான் பார்த்தோம். எதிர்பார்த்தமாதிரி இல்லை என்பது ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தாலும் ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருக்கும். பாருங்களேன், அவரது காது மடல்..,அறுவை சிகிச்சை செய்யப்படாத மூக்கு, மூக்குத்தி.., அவிழ்ந்த கூந்தல் ஆகியவை கூட அற்புதமாக நடித்திருக்கும்..,
மண்டை உடைந்ததால் கட்டுப்போட தன் ஆடையைக் கிழித்ததன் விளைவே இந்தப் பாடல்....
சின்னப் புறா ஒன்று பாடல்.., இதன் காட்சி அமைப்பில் பெரிய ஏமாற்றம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாயகனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான். கதை பல முறை டி.ஆர் ஆல் வெற்றிப் படமாக்கப் பட்ட கதைதான். பாடலைன் நடுவில் கிராஃபிக்ஸ் காட்சிகள் வேறு இணைக்கப் பட்டு படுஅட்டகாசமான பாடாய் அமைந்திருக்கும் பார்த்து ரசியுங்களேன்.
தமிழ்மணம், தமிழீஷில் ஓட்டுப் போடுங்க தல..,
Subscribe to:
Post Comments (Atom)
பொன்னாரம்.., பூவாரம்\\
ReplyDeleteரொம்ப இரசித்த பாடல்களில் ஒன்று.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பாடல்களுமே இன்றும் நம்மை புன்னகைக்க வைக்கும் பாடல்கள்
ReplyDelete// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பாடல்களுமே இன்றும் நம்மை புன்னகைக்க வைக்கும் பாடல்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
நல்ல பாடல்கள்
ReplyDeleteநல்ல தொகுப்பு
வாங்க நம்ம பக்கத்துக்கு
நன்றி தல..,
ReplyDeleteகருத்திற்கும், அழைப்பிற்கும்
நல்ல இசை ரசிகர் போல இருக்கு,
ReplyDeleteரசிங்க ரசிங்க நல்ல ரசிங்க.
அப்புறம் நம்ம பக்கம் ஆளையே காணோம்.
// அக்பர் said...
ReplyDeleteநல்ல இசை ரசிகர் போல இருக்கு,
ரசிங்க ரசிங்க நல்ல ரசிங்க.
அப்புறம் நம்ம பக்கம் ஆளையே காணோம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.,
நல்லாருக்குத் தொகுப்பு.
ReplyDeleteபொன்னாராம். பூவாம்... காட்சியமைப்பு படு பேஜாரு... ஸ்ரீதேவிக்காக பார்க்கலாம்.
//மண்டை உடைந்ததால் கட்டுப்போட தன் ஆடையைக் கிழித்ததன் விளைவே இந்தப் பாடல்....//
தமிழ் சினிமால பாட்டுக்கா சார் காரணம் வேணும்... இதெல்லாம் ஒண்ணுமே இல்ல...
//நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteநல்லாருக்குத் தொகுப்பு.//
நன்றி நண்பரே..,