பொதுவாக திரைப்படம் பார்ப்பவர்களில் சிலர் தங்கள் காலத்துப் படங்களைப் பார்ப்பார்கள்;ஒரு சிலர் எல்லாக் காலத்துப் படங்களையும் பார்ப்பார்கள்; ஒரு சிலர் எத்தனை வயதானாலும் புதுப் படங்களை மட்டுமே பார்ப்பார்கள். எல்லாவித ரசனை உள்ளவர்களையும் ஒரு முறையேனும் பார்க்கவைக்க முடியும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் பாடல்வரிகள் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக அமைந்திருப்பதாக சிலர் கூறுவார்கள்.
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
(இன்பமே)
சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
(இன்பமே)
பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
(இன்பமே)
மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
(இன்பமே)
...........................................
நம் எல்லோருக்குமே நமக்கு பிடித்த பாட்லகளைப் பாடும் ஆசை இருக்கும். சிலர் உரத்த குரலில் பாடுவார்கள், சிலர் குளிக்கும் போது மட்டும் பாடுவார்கள்.
இவரும் ஆடிப்பாடுகிறார், ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்; உங்கள் கற்பனையை கொஞ்சம் அழிப்பது போல தோன்றலாம்
பிடித்தவர்கள் மட்டும் பார்க்கவும். பிடிக்காதவர்கள் நீங்களே ஆடிப்பாடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்
என்ன கொடுமை டாக்டர்?
ReplyDeleteஇனி இந்த பாட்ட கேட்டா விஜயகாந்துதான் எஇனைப்புக்கு வருவார்.
இது கொஞ்சம் ஓவர் தல.
ReplyDelete// ஷாகுல் said...
ReplyDeleteஎன்ன கொடுமை டாக்டர்?
இனி இந்த பாட்ட கேட்டா விஜயகாந்துதான் எஇனைப்புக்கு வருவார்.//
நல்லதுதானே தல..,
// அக்பர் said...
ReplyDeleteஇது கொஞ்சம் ஓவர் தல.//
மேட்டர் ஓவர்..,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
உங்கள் மனதைரியத்தை மெச்சினோம்...
ReplyDelete(வேற என்னத்த சொல்ல....:-)
ஏங்க இப்படி...
ReplyDeleteரீமிக்ஸ் பருவாயில்லை பருவாயில்லை.
ReplyDeleteகலக்கல்.
”முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண” என்ற பாட்டை உதித் நாராயண் குரலில் ரீமிக்ஸில் கேட்க என் விருப்பம்.
// கடைக்குட்டி said...
ReplyDeleteஉங்கள் மனதைரியத்தை மெச்சினோம்...
(வேற என்னத்த சொல்ல....:-)//
நீங்க மரியாதை படத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கவேண்டிய பாராட்டு
// கே.ரவிஷங்கர் said...
ReplyDeleteரீமிக்ஸ் பருவாயில்லை பருவாயில்லை.
கலக்கல்.
”முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண” என்ற பாட்டை உதித் நாராயண் குரலில் ரீமிக்ஸில் கேட்க என் விருப்பம்.//
முட்டை டாரு பெட்டித் திருநாகை அட்டிக்கீரை ஷத்தி ஷ்ரவண..........
// ஸ்ரீராம். said...
ReplyDeleteஏங்க இப்படி...//
கனவு காணுங்கள் அப்படின்னு சொல்லியிருக்காங்களே..........,