நாகரீகத்தின் ஒரு கட்டமாக உற்சாகமாக இருத்தல் கருதப் படுகிறது. அசுரர் நிலை கடந்து கடவுளர் நிலை அடைந்துவிட்டதை தெரிவிக்க சோமபானம் பருகுவது ஒரு அடையாளமாக நிலவிய சூழலைக் கூட நாம் கதைகளில் படித்திருக்கிறோம்.
உலக நாகரீகங்களில் இளைஞர்கள் சுதந்திரமானவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ள உற்சாக பாணம் அருந்தும் கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன.
ஆனால் ஒரு விளையாட்டுவீரனின் வாழ்க்கையில் இந்த உற்சாகபானங்கள், ஊக்கமருந்துகள் எங்கே எப்படி வருகின்றன என்றுபார்த்தால் கொஞ்சம் த்லைசுற்றவைக்கும்.
விளையாட்டுவீரனின் முதல் உற்சாக பானமே அவன் வாங்கும் கைதட்ட்ல்களே. ஒரு எழுத்தாளன் கைதட்டல் தொடர்ச்சியாக வாங்கினால் அவன் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருப்பான். ஒரு விளையாட்டுவீரன் கைதட்டல் வாங்கும்போது அவனுக்கு மேலும் உற்சாகம் பீரிட்டுக் கிளம்பும். அதே நேரத்தில் அவனுக்கு அடுத்த வீளையாட்டுப் போட்டிகளில் மேலும் சிறப்பாக விளையாடியே தீர வேண்டிய நெருக்குதல்களுக்கு ஆளாகிறான்.
சில ஆண்டுகளில் அவனிடம் இளமை விடைபெற தொடங்குகிறது. சில நேரங்களில் அவனைவிட இளமையான திறமையான ஆட்டக்காரர்கள் வந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் அவனது நேற்றைய performanace இன்றைய போட்டியாக அமைந்துவிடுகிறது. அப்போது அவனுக்கு நெருக்கடி அதிகமாகிறது.
கால்பந்து போன்ற போட்டிகளில் அவனைச் சுற்றி கூடுதல் ஆட்கள் வியூகம் அமைத்துக் கொள்வார்கள். மாரடோனாவுக்கு நடந்தது அதுதான். அவர் களத்தில் தனி ஒருவராக வெற்றி வாங்கித் தருபவர் என்ற எண்ணம் உலகளாவிய ரசிகர்கள் மனதில் பதிய வைக்கப் பட்டுவிட்டது. அவர் அளவு இன்னொரு திறமைசாலி அணிக்கு கிடைக்கவில்லை. எதிர் அணியினர் ஒரு யூகம் வகுத்தனர். அவரை சுற்றி கூடுதல் வீரர்கள்; மற்றவர்கள் மட்டுமே கால்பந்து ஆடுவார்கள். இவர்கள் மாரடோனாவை முடக்குவதிலேயே காலம் தள்ளுவார்கள். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெருக்குதலே அவருக்கு தனது திற்மையை கூட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. தினமும் ஒருநாள் வய்து கூடிவிடுமே; அந்தக் கட்டாயமே அவரைப் போதைப் பொருட்களை உட்கொள்ளத்தூண்டியது எனலாம்
இது தொடர்பாக ஏற்கன்வே நான் எழுதிய இடுகை இந்த இடத்தில்
விளையாட்டுவீரர்களுக்காவது போதைப் பொருட்கள் உபயோகப் படுத்துவதை கட்டுப்படுத்த தனி பரிசோதனைகளும், உபயோகப் படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால் வாழ்நாள் தடைபோன்ற தண்டனைகளும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் நடிகர்களுக்கு?
திரைப்பட நடிகர்களுக்கு முந்தைய படைப்பைவிட இன்றைய படைப்பை மேலும் இளமையாகக் காட்ட கிராஃபிக்ஸ் யுத்திகளும் டூப் நடிகர்களும் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்.
ஆனால் மேடை நடிகர்களுக்கு?
அவர்களது நேற்றைய வெளிப்பாடுகளைவிட இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக அமைய வேண்டிய கட்டாய்த்தில் இருப்பார்கள். மைக்கேல் ஜாக்ஸன் அவர்களுக்கு நடந்தது அதுதான். அவரது 20 வய்து வேகம் 30ல், 40ல் கிடைக்குமா? ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். விளைவு அவர் அந்தத் திற்மையைக்காட்ட உதவிகளை நாடினார். கடும்பயிற்சிகளை மேற்கொண்டார். அதற்கு ஊக்கமருந்துகள் உதவின. விளையாட்டுப் போட்டிகளில் தடுக்க தனி ஆணையங்களும் சட்ட விதிகளும் இருப்பதுபோல் இங்கு இல்லையே. தொடர்ச்சியாக உபயோகப் படுத்த, படுத்த ஒரு கட்டத்தில் அவரது நடனம் முழுக்க ஊக்க மருந்துகளை நம்பியே அமைந்தன. அவரது வாழ்க்கையே அதன் ஆதிக்கத்தில் அமைந்துவிட்டது.
=========================================================
thriller பாடல்காட்சி
beat it
Black or white
திரைப்பட நடிகர்களுக்கு முந்தைய படைப்பைவிட இன்றைய படைப்பை மேலும் இளமையாகக் காட்ட கிராஃபிக்ஸ் யுத்திகளும் டூப் நடிகர்களும் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்.
ReplyDeleteஆனால் மேடை நடிகர்களுக்கு?
நல்ல கேள்வி
//sakthi said...//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
அருமையாக விளக்கியுள்ளீர்கள்
ReplyDeleteஅருமையாக விளக்கியுள்ளீர்கள்
ReplyDeleteநல்லா அலசியிருக்கறீங்க.
ReplyDelete\\விளையாட்டுவீரர்களுக்காவது போதைப் பொருட்கள் உபயோகப் படுத்துவதை கட்டுப்படுத்த தனி பரிசோதனைகளும், உபயோகப் படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால் வாழ்நாள் தடைபோன்ற தண்டனைகளும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன\\
அப்படி இருந்தும் Tour De France சைக்கிள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று ஊக்க மருந்து உட்கொள்ளுபவர்கள் இருக்குறாங்களே... வெற்றி பெறவேண்டும் என்ற வெறி அவர்களை இதற்கு தூண்டுகிறதோ...
நல்ல அலசல், நல்ல கேள்வி... பாராட்டுகள் நண்பரே
ReplyDeleteவிரிவான பதிவு தல
ReplyDeleteஆமா நீங்களும் போட்டாச்சு எம் ஜே பதிவு.........
ஊக்க மருந்துன்னு யார் பேர் வாச்சது.
ReplyDeleteஆனா ஒன்னு தல,
நம்மலோட படைப்புகளுக்கு ஊக்கமருந்தே தேவை இல்லை.
நல்ல பதிவு, சுரேஷ் black & while பார்த்து ரொம்ப நாளாச்சு, பதிவுக்கு நன்றி,..
ReplyDelete// புருனோ Bruno said...
ReplyDeleteஅருமையாக விளக்கியுள்ளீர்கள்//
நன்றி தல..,
//குறும்பன் said...
ReplyDeleteஅப்படி இருந்தும் Tour De France சைக்கிள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று ஊக்க மருந்து உட்கொள்ளுபவர்கள் இருக்குறாங்களே... //
எல்லா விளையாட்டுக்களிலும் இருக்கிறார்கள் தல..,
ஆனால் நிறைய விளையாட்டுவீரர்களுக்கு அதைப் பற்றிய தெளிவான பார்வை கிடையாது
// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநல்ல அலசல், நல்ல கேள்வி... பாராட்டுகள் நண்பரே//
நன்றி தல..,
// பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteவிரிவான பதிவு தல
ஆமா நீங்களும் போட்டாச்சு எம் ஜே பதிவு.........//
எம்.ஜே. இறந்த உடன் தமிழ் மணத்தில் இணைக்கப் பட்ட முதல் எம்.ஜே. பதிவு
ஆந்திராவில் மைக்கேல் ஜாக்ஸன்
அதுவும் இந்தத் தளத்திலிருந்தே அனுப்பப் பட்டது
// அக்பர் said...
ReplyDeleteஊக்க மருந்துன்னு யார் பேர் வாச்சது.
ஆனா ஒன்னு தல,
நம்மலோட படைப்புகளுக்கு ஊக்கமருந்தே தேவை இல்லை.//
உண்மை தல..,
//jothi said...
ReplyDeleteநல்ல பதிவு, சுரேஷ் black & while பார்த்து ரொம்ப நாளாச்சு, பதிவுக்கு நன்றி,..//
நன்றி தல,,,,
நல்ல பதிவுண்ணே..
ReplyDelete// சூரியன் said...
ReplyDeleteநல்ல பதிவுண்ணே..//
நன்றி தல..,
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
விளையாட்டுவீரனின் முதல் உற்சாக பானமே அவன் வாங்கும் கைதட்ட்ல்களே. ஒரு எழுத்தாளன் கைதட்டல் தொடர்ச்சியாக வாங்கினால் அவன் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருப்பான்//
ReplyDeleteஉண்மை...உண்மை...
ஓ.கே. செய்திவளையம்
ReplyDelete// ஸ்ரீராம். said...
ReplyDeleteவிளையாட்டுவீரனின் முதல் உற்சாக பானமே அவன் வாங்கும் கைதட்ட்ல்களே. ஒரு எழுத்தாளன் கைதட்டல் தொடர்ச்சியாக வாங்கினால் அவன் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருப்பான்//
உண்மை...உண்மை...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,