Friday, July 17, 2009

ஆள்காட்டி விரலின் பார்வையில்..,


பொதுவாக தொடர்பதிவு என்னும்போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

இன்று எதைப் பதிவு செய்வது என்ற ஒரு மாபெரும் சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது யாரோ ஒரு புண்ணியவானிடம் உதித்த கருவிற்கு நாமும் ஒரு அலங்காரம் செய்வித்து அதை நமது சொந்த கருத்தாக போட்டுக் கொள்ள முடியும். அதையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாமும் மகிழ்ச்சியாக ஹிட் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்த தொடர்பதிவினைப் படிக்கும்போதே இப்படியெல்லாம் எப்படி சிந்தனை செய்கிறார்கள் என்ற வியப்பும் மலைப்பும் ஏற்பட்டது முடிவில் நமக்கும் ஒரு விருது கொடுத்து அதை ஆறுபேருக்கு பங்கு போட சொன்ன போது பயம்தான் ஏற்பட்டது.பிரியமுடன் வசந்த்தின் பதிவின் தொடர்ச்சி என்றால் எனக்கு நன்றாகத்தான் இருக்கும். அந்த பதிவின் தரத்தில் எதிர்பார்த்தால் கொஞ்சம் சிரமம் தான்.

இந்தப் பதிவு வழக்கம்போல் இருந்தாலும் நமது அபிமான நட்சத்திரங்களின் பெயர்களும் அவர்களின் தொடுப்பும் கொடுப்பதால் இந்த இடுகையும் ஓரளவு நன்றாகவே அமையும் என்பதாக இந்த இடுகையை தொடர்கிறேன்.

சுவாரஸிமான வலைப்பூவுக்கான விருது தருவதற்கான காரணத்தையும் பதிவர்களையும் நான் அறிமுகம் செய்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாத அளவு அவர்கள் எல்லோரும் பிரபலமானவர்கள் என்றாலும் நானும் கொஞ்சம் அவர்களைப் பற்றி பேசிவிட்டு விருதினைக் கொடுத்து விடுகிறேன்.

1.இளைய பல்லவன்:- மிக ஆரம்ப கட்டத்திலேயே தமிழ்மண நட்சத்திரமாணவர். சரித்திர கதைகளுக்கு தேவையான ஆதாரங்களுடன் சக்கரவியூகம் உருவாக்குபவர்.

2.முரளிக்கண்ணன்:- நகைச்சுவை இயல்பாக கொண்டுவருபவர். விஜய்- ராகுல்காந்தி சந்திப்பும், பையாண்ணா வார்த்தை பிரயோகமும் , நாகராஜன் சந்து படித்தவர்களும் இவரை சினிமா எக்ஸ்பிரஸ் பார்வையில் பார்க்க மாட்டார்கள்

3.குடுகுடுப்பை:- எங்கள் உள்ளம் கவர்ந்த ஜக்கம்மா பக்தர்.

4.நசரேயன்:- புருஷன் v 1.0 மென்பொருள் இன்றைய வெளியீடு இது ஒன்று போதும் அவருக்கு சுவாரசியமான வலைப்பூ விருது வழங்க.....

5.சூரியன்:- நாமெல்லாம் ஒரு வலைப்பூ வைத்துக் கொண்டு நூறு வலைப்பூக்களைப் பின் தொடர்வோம். ஆனால் இவர் நூறு வலைப்பூக்களை நடத்தப் போபவர்.

6.ஜெக்நாதன்:- சங்காவுடன் ஒரு​பேட்டி, பின்னூட்டமே ஒரு இடுகையாய்.. , ,
,என்னடா பாண்டி என்ன பண்ண​போற?

போன்ற இடுகைகள் மூலம் தனது கணக்கினை துவக்கிப் போய் கொண்டிருப்பவர். அவரது பூவுக்கும் சுவாரளியமான பூ விருதினை வழங்கி விடலாம்.

எல்லாரும் பிடிங்க......

இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...ஆறுபேரை....

வாழ்த்துக்கள் நண்பர்களே......பிடிச்சுருந்தாலும் வச்சுக்கோங்க....பிடிக்கலன்னாலும் வச்சுக்கோங்க.....

14 comments:

 1. என்னாச்சுன்னு தெரியல..,

  தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை..,

  ReplyDelete
 2. வாழ்த்துகள்! விருதுக்கு(ம்)

  தமிழ் மணத்தில் இணைந்திருக்கே!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்!! சுரேஷ்!!

  ReplyDelete
 4. விருது வாங்கிய கையோடு பிரித்துக்கொடுத்துவிட்டீர்கள்!

  ReplyDelete
 5. விருது வாங்கியோருக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 6. விருது வாங்கியோருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 7. அன்பு தல! அன்பே தல!
  SUREஷ் இடமிருந்து விருது ​பெற்றிருக்கும் இளைய பல்லவன், முரளிக்கண்ணன், குடுகுடுப்பை, நசரேயன், சூரியன் அனைருக்கும் வாழ்த்துக்கள்!
  இந்த விருது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இன்னும் உத்வேகமாய் (மொக்கைதான் இருந்தாலும்..) செயலாற்றச் ​சொல்கிறது! நன்றி தல!

  ReplyDelete
 8. தல, என்ன அதிசயம்!

  நான் உங்களுக்கு விருது கொடுத்து இருக்கேன். நீங்க எனக்கு விருதுக கொடுத்து இருக்கீங்க!

  நன்றிகள் தல.

  நாம ரெண்டு பேரும் சேந்து குடுகுடுப்பைக்கு கொடுத்திருக்கோம்!

  நன்றி! நன்றி! நன்றி!

  ReplyDelete
 9. விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  நிச்சயம் தகுதியானவர்களே பெற்றிருக்கிறீங்க‌

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் தல

  கொஞ்சம் பிசியோ

  ஆளையே காணோம்

  ReplyDelete
 11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நன்றி மருத்துவரே

  ReplyDelete
 13. அண்ணே நன்றிண்ணே .. ரொம்ப சந்தோசம்.

  ReplyDelete
 14. @ நட்புடன் ஜமால் said...

  வாழ்த்துகள்! விருதுக்கு(ம்)

  தமிழ் மணத்தில் இணைந்திருக்கே!

  நன்றி தல

  @ தேவன் மாயம் said...

  விருது வாங்கியோருக்கும் வாழ்த்துக்கள்!!

  same blood

  @ பிரியமுடன்.........வசந்த் said...

  விருது வாங்கியோருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் தல

  நன்றி தல

  @ஜெகநாதன் நன்றி தல

  @ இளைய பல்லவன் said...

  தல, என்ன அதிசயம்!

  same blood

  @அபுஅஃப்ஸர்

  நன்றி தல

  @ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  வாழ்த்துக்கள் தல

  கொஞ்சம் பிசியோ

  ஆளையே காணோம்

  உணர்வுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி தல

  @அக்பர் நன்றி தல

  @நசரேயன் நன்றி தல

  @சூரியன் நன்றி தல

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails