இளவரசன் ராஜராஜ சோழன் அடிமை நாடாக இருக்கும் பாண்டிய நாட்டில் பல அக்கிரமங்கள் செய்கிறார். ( அக்கிரமங்கள் என்றால் எல்லாம்தான்)
அந்த சூழலில் சாளுக்கிய இளவரசி மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்பதற்காக வெடிகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படுகிறது. வழக்கம்போல் வெடிகள் வெடித்த உடன் இளவரசி அமர்ந்திருக்கும் யானை மிரண்டு ஓடுகிறது.
அப்போது புலவர் பைந்தமிழ்குமரன் யானைமேல் ஏறி யானையை கட்டுப் படுத்தி சாளுக்கிய இளவரசியைக் காப்பாற்றுகிறார்.
ஏற்கனவே புலவரின் புரட்சிகரப் பாடல்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் சாளுக்கியப் பைங்கிளி புலவரை அரசவையில் கவுரவிக்க எண்ணுகிறார். அப்போதைய டம்மி பாண்டிய அரச்வைக்கு அவர் வரவழைக்கப் படுகிறார்.
அங்கு பாண்டியர்களை தூற்றி சோழர்களுக்குப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. பாண்டியர்களைத் தூற்றுப் போதெல்லாம் புலவர் பைந்தமிழ் குமரனும் அவரது மாணவனும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.
புலவருக்கு கவுரம் அளிப்பதற்காக மாலை அணிவிக்க இளவரசர் ராஜராஜர் வருகிறார். மாலை அணிவிக்கும்போது சற்று குத்தலாக பேசி அவரைப் பாடச் சொல்கிறார். பாடலுக்கு பிறகு மாலை அணிவிக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.
தனதுபாடல் ஏழை மக்களுக்கானது என்றும் அதில் சோகச்சுவைத்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறி புலவர் பைந்தமிழ் குமரன் மறுக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை நிறம்பிய தமிழ்ப்பா எந்தச் சுவையில் இருந்தாலும் ரசித்து இன்புற முடியும் என்று விருந்தினர்களான சாளுக்கிய அரசரும் இள்வரசியும் சொல்ல தனது பாணியிலான பாடலைப் பாட அவர் ஒத்துக் கொண்டு பாடல் படுகிறார்.
அவர் பாடும் திரைப்பாடல்:-
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ?
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
இந்தப் பாடல் பாடப் படும்போது இளவரசர் ராஜராஜரும் அரசப் பிரதிநிதி ஜயங்கொண்ட மாறவர்மரும் மேலும் மேலும் கோபப் படுகிறார்கள். இருந்தாலும் சாளுக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் என்பதால் முழுப் பாடலையும் அனுமதிக்கின்றனர்.
பாடல் முடிவடைந்ததும் பாடலை மெச்சி சாளுக்கிய இளவரசியே புலவருக்கு மாலை அணிவிக்கப் போகிறார். புலவர் அதைக் கையில் பெற்றுக் கொள்கிறார்.
இந்தப் படத்தின் மூலக் கதையைப் படித்த பின் படத்தின் முழு விமர்சனத்தையும் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
//இந்தப் படத்தின் மூலக் கதையைப் படித்த பின் படத்தின் முழு விமர்சனத்தையும் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்//
ReplyDeleteநானும் அதைப் படித்துப் பார்க்கலாமென்று இருக்கிறேன்!
பழந்தமிழ்ப் படத்தின் கதையைப் படித்துப் பார்க்க ஆவலோடு உள்ளோம்!!
ReplyDelete:)
ReplyDeleteதொடர்பான இடுகையை விரைவில் எதிர்பார்க்கின்றேன்!
சீக்கிரம் எழுதுங்க தல
ReplyDeleteநீங்கள் சொல்லும் கதை கயல்விழியின் கதையை ஒத்துள்ளது. கல்கியில் சமீபத்தில் 1964-ல் தொடங்கி அனேகமாக 1965 வரை அகிலன் எழுதிய வரலாற்றுத் தொடர்கதை இது. அதில் வரும் ராஜராஜன் நீங்கள் நினைப்பது போல தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இல்லை.
ReplyDeleteஇதே கதையைத்தான் சமீபத்தில் 1977-ல் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆர். படமாகக் கொடுத்தார். மாறுவேடத்தில புலவர் பைந்தமிழ்குமரனாக வருவது சுந்தர பாண்டியனே, அதாவது எம்.ஜி.ஆர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேட்டிராத தகவல்கள். இதைப்பற்றிய அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன் தல
ReplyDelete@பழமைபேசி
ReplyDelete@தேவன் மாயம்
@சென்ஷி
@புருனோ Bruno
@ dondu(#11168674346665545885)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
//இதே கதையைத்தான் சமீபத்தில் 1977-ல் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆர். படமாகக் கொடுத்தார். மாறுவேடத்தில புலவர் பைந்தமிழ்குமரனாக வருவது சுந்தர பாண்டியனே, அதாவது எம்.ஜி.ஆர்.
ReplyDelete//
உண்மைதான் தலைவரே.., அந்தப் பாடல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப் பாடல்தான்
//அதில் வரும் ராஜராஜன் நீங்கள் நினைப்பது போல தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இல்லை.//
ReplyDeleteஆமாம் தலைவரே.., அவர் அரசன் ஆனபிறகுதான் ராஜராஜ சோழர் என்ற பட்டத்தினை சூட்டிக் கொண்டார். இந்தப் படத்தில் வருபவர் அநேகமாக மூன்றாம் ராஜராஜர்.
கயல்விழி கதையை கடந்த ஒரு வாரமாகத் தேடி கொண்டிருக்கிறேன். ஏதாவது லின்க் கிடைத்தால் கொடுங்கள் சார்.
// ☀நான் ஆதவன்☀ said...
ReplyDeleteகேட்டிராத தகவல்கள். இதைப்பற்றிய அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன் தல//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
மூலக் கதையைப் படித்துவிட்டு எழுதுகிறேன்..,
இதைத் தான் நானும் சொல்ல நினைத்தேன் ...முதலாம் ராஜ ராஜ சோழனே தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தவர் ,அவரது பேரனுக்கும் ராஜ ராஜன் எனும் நாமமே ,அதாவது முதலாம் ராஜேந்திரரின் (கங்கை கொண்டான்) புதல்வன் .
ReplyDeleteஆக ராஜ ராஜ சோழர்களை நாம் எண்களின் அடிப்படையில் தான் அடையாளம் காண வேண்டும் .மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தில் வாழ்ந்தது ராஜேந்திர சோழரின் புதல்வர் ராஜ ராஜனாக இருக்கலாம்...ஆதாரங்களின் அடிப்படையில் யாரேனும் விளக்குவார்களா? ...பார்க்கலாம்!?
இந்த திரைப்படத்தை பற்றி மேலதிக தகவல் ஏதாச்சும் உண்டா? ஒரு பிரதி எடுக்க முடியுமா?
ReplyDelete//இதே கதையைத்தான் சமீபத்தில் 1977-ல் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆர். படமாகக் கொடுத்தார். மாறுவேடத்தில புலவர் பைந்தமிழ்குமரனாக வருவது சுந்தர பாண்டியனே, அதாவது எம்.ஜி.ஆர்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்//
இதைத் தான் நானும் சொல்ல நினைத்தேன் ...முதலாம் ராஜ ராஜ சோழனே தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தவர் ,அவரது பேரனுக்கும் ராஜ ராஜன் எனும் நாமமே ,அதாவது முதலாம் ராஜேந்திரரின் (கங்கை கொண்டான்) புதல்வன் .
ஆக ராஜ ராஜ சோழர்களை நாம் எண்களின் அடிப்படையில் தான் அடையாளம் காண வேண்டும் .மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தில் வாழ்ந்தது ராஜேந்திர சோழரின் புதல்வர் ராஜ ராஜனாக இருக்கலாம்...ஆதாரங்களின் அடிப்படையில் யாரேனும் விளக்குவார்களா? ...பார்க்கலாம்!?
note:
மேற்கோள் விடுபட்டுப் போய்விட்டது ,அதற்காக இரண்டாம் முறை கருத்துரை
நல்லா இருக்குங்க.. ஆவலா இருக்கு அடுத்த பாகத்த படிக்க..
ReplyDelete@மிஸஸ்.தேவ்
ReplyDeleteஅநேகமாக மூன்றாம் ராஜராஜன் ஆக இருக்கலாம். கயல்விழி நாவலைப் படித்தால் அதில் கண்டிப்பாக ஆசிரியர் கொடுத்து இருப்பார். படித்தபின் நான் விரிவாக இடுகை இடுகிறேன்
@இரா பிரஜீவ்
விரிவாக இடுகை நாவலை படித்தபிற்கு கொடுக்கிறேன்.
இந்தத் திரைப்படம் எம்ஜியார் முதல்வராக தேர்ந்தெடுத்தபிற்கு வந்த முதல்படம். எம்.ஜியார் உயிரோடு இருக்கும்போது வந்த கடைசிப் படம். இயக்கம் எம்.ஜி ஆர்.
இணை ஒளிப்பதிவு கர்ணன்
எம்ஜியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டதால் படத்தை விரைவாக வெளியிட இயக்குநர் சங்கர், ப. நீலகண்டன் ஆகியோரும் படத்தின் பல பகுதிகளை இயக்கியதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு தனியாக நன்றி அட்டையும் படத்தில் போடப் படுகிறது.
சுவராசியமான இடுகை டாக்டர். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்
ReplyDelete//குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteநல்லா இருக்குங்க.. ஆவலா இருக்கு அடுத்த பாகத்த படிக்க..
//
நன்றி தல..,
// முரளிகண்ணன் said...
ReplyDeleteசுவராசியமான இடுகை டாக்டர். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்//
நன்றி தல.., கயல்விழி படித்தபிறகே அடுத்த பகுதி எழுதலாம் என்றிருக்கிறேன்..,
கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது
ReplyDeleteபாதியில நிப்பாட்டீங்க
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பக்கா failure படமாமே
ReplyDelete(தல எங்க என் முதல் பின்னூட்டம்
சுவராசியமான இடுகை.நான் கயல்விழி நாவல் படித்துள்ளேன்..
ReplyDeleteசுரேஷ் உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை.
சிவாஜி ஒரு சகாப்தம் -22 தங்கள் பின்னூட்டத்திற்கு முரளியின் பாராய்யும் ,அதற்கு உங்கள் சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளேன்.
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteகதை ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது
பாதியில நிப்பாட்டீங்க//
கண்டிப்பாக தொடருகிறேன் தல..,
// jaisankar jaganathan said...
ReplyDeleteமதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பக்கா failure படமாமே
(தல எங்க என் முதல் பின்னூட்டம்//
இருக்கலாம், ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. சரித்திர பட பிரியர்களுக்கும், எம்ஜியார் ரசிகர்களுக்கும் லதா ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
(ஒளிப்பதிவில் கர்ணனின் பங்கும் இருக்கிறது.)
தேர்தல் கொண்டாட்டத்தில் இந்தப் படமும் ஓடியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
(தல எங்க என் முதல் பின்னூட்டம்
எனக்குப் பிடிக்கவில்லை அதனால் ஒரே தூக்காக தூக்கிவிட்டேன்.
//T.V.Radhakrishnan சொன்னவை எல்லாம்//
ReplyDeleteநானும் ந்ன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தல..,
எனக்கு தெரிந்து ராஜராஜ சோழதேவரின் புதல்வர் ராஜேந்திரன், அவரது மகன் இரண்டாம் ராஜராஜன், அவரது மகன் முதலாம் குலோத்துங்கன், பிறகு இரண்டாம் குலோத்துங்கன், அதன் பிறகுதான் மூன்றாம் ராஜராஜன், (நம்பியார்).
ReplyDeleteஒரு வேளை இரண்டாம் குலோத்துங்கனுக்கு பிறகு மூன்றாம் குலோத்துங்கனும் இருந்திருக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் இந்தப் பாடல் என்னுடைய அபிமானப் பாடல்களில் ஒன்று. கானடாவை வீரமாகவும் பயன்படுத்த முடியும் என்பது வீரமுண்டு-வெற்றியுண்டு என்கிற சரணத்தில் தெரியும்.
ReplyDeleteஎம்.ஜி.ஆரும் கவிநயமும் வரிசையில் நான் எழுதுவதற்காக வைத்திருந்த பாட்டை அவுட் செய்ததால் உங்க பேச்சு கா!
http://kgjawarlal.wordpress.com
வரலாற்றை வைத்து யாரையும் ஈரோவாகவோ வில்லனாகவோ அணுக முடியாது தல! நமக்கு நரசிம்ம பல்லவன் ஈரோன்னா, இன்னொருத்தங்களுக்கு புலிகேசி ஈரோ!
ReplyDeleteரொம்ப அழகா போகுது கதை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.
ReplyDeleteடோண்டு சார்,
ReplyDelete1977 உங்களுக்கு சமீபமா? உங்க உலகம் ரொம்ப மெதுவா சுத்துது!
http://kgjawarlal.wordpress.com
புலிகேசியும் நம்ம ஹீரோதான்னு சுஜாதா கற்றதும் பெற்றதும் பாகம்-4 இல எழுதியிருக்காரு ஜெகன்...
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
தகவல்களுக்கு நன்றி
ReplyDeletedondu(#11168674346665545885 சார்
-------------------------------------
மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி மதிப்பிற்குரிய jaisankar jaganathan அவர்களே..
உங்களின் இந்தப் பின்னூட்டமும் எனக்குப் பிடிக்கவில்லை. மற்ற வாசகர்களின் மனம் புண்படும் என்று தோன்றுவதால் இதையும் அடியோடு தூக்கிவிடுகிறேன். உங்களின் மேம்பட்ட புரட்சிக் கருத்துக்களை உங்கள் வலைப்பூவில் பதிந்தால் உங்கள் தனித்தன்மை புலப்படும்.
கமெண்ட் மாடரேசன் வைக்காமல் இருப்பதற்கு நண்பர்களின்மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையே காரணம்.
-----------------------------
jaisankar jaganathan அவர்களுக்கு உரிய வகையில் பதிலளித்து இருக்கும் ஜெகநாதன் , Jawarlal ஆகியோருக்கு மிகவும் நன்றி.
--------------------------
கண்டிப்பாக தொடருகிறேன் வானம்பாடிகள் சார்...,
// உங்களின் மேம்பட்ட புரட்சிக் கருத்துக்களை உங்கள் வலைப்பூவில் பதிந்தால் உங்கள் தனித்தன்மை புலப்படும்.
ReplyDeleteகமெண்ட் மாடரேசன் வைக்காமல் இருப்பதற்கு நண்பர்களின்மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையே காரணம்.
//
என்னை கமெண்ட் போட கூடாது என்று மறைமுகமாக எழுதிவிட்டீர்கள்
(ஆனாலும் நான் எழுதுவேன்)
என் கருத்து என்னவென்றால் சரித்திர பூர்வமான விமரிசனம் என்பது எப்பொழுதும் பொய். அதை சற்று கிண்டலாக எழுதினேன்
//jaisankar jaganathan said...
ReplyDelete(ஆனாலும் நான் எழுதுவேன்)//
எழுதுங்கள் மற்றவர்களின் மனம் வருத்தப் பட நேரிடாமல் எழுதுங்கள். வலைப்பூவில் வரும் பின்னூட்டத்திற்கு பின்னூட்டமிட்டவரை விட வலைப்பூ ஆசிரியரே பொறுப்பு என்று நீதிபதிகள் கூறுகிறார்கள்.
//என் கருத்து என்னவென்றால் சரித்திர பூர்வமான விமரிசனம் என்பது எப்பொழுதும் பொய்.//
பொதுவாக வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுவதுதான் சரித்திரம்
//அதை சற்று கிண்டலாக எழுதினேன்//
இந்த வலைப்பூவின் தலைப்புக்கு அடுத்த வரியை கவனியுங்கள்
மீண்டும் வருகை தந்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி தல