சிவாஜிக்கு ஏன் விருது?
1.பணம் சம்பாதித்த இளைஞன் மீண்டும் தாயகத்திற்கு திரும்பி நல்லவை செய்ய நினைக்கிறார். இந்தப் புள்ளியிலிருந்து படம் விருதினை நோக்கி படம் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
2.நமது கலாச்சாரப் படி பெண் வேண்டும் என்று சொன்னது மட்டும் அல்லாமல் உடனே நயனத்துடன் ஆட ஆரம்பித்து இளைஞர்களின் உள்ளக்கிடைக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
3. மகனைவிட வயதில் இளைய வயதில் தம்பி இருக்கும் சில குடும்ப சூழலை அம்பலப் படுத்தியது படத்தின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டியது.
4.ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்று காட்டியதன்மூலம் கல்வி முதலாளிகளின் கஷ்டத்தில் பங்கு கொள்ளவந்த படமாக விளங்கியது.
5.ஒரு இதய மருத்துவர் எவ்வளவு கஷ்டப் பட்டு உயிரைக் காப்பாற்றுகிறார்? அந்த நேரத்தில் அவருக்கு எவ்வளவு வியர்வை கொட்டுகிறது என்பதைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்
6.மாயாஜாலில் குரங்குப் படம் பார்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்ற சமூக விழிப்புணர்ர்சியை உருவாக்கிய படம். சீட் பெல்டின் மகத்துவத்தை மக்களுக்கு லேசான பிரச்சாரத்துடன் சொன்ன படம்.
7.வாழ்க்கையில் முன்னேர ஒரு ரூபாய் இருந்தாலே போதும் என்பதை வலியுறுத்திய படம்.
8.வாழ்க்கையில் மிகவும் கஷ்டங்கள் வரும்ப்பொது தலைமுடியை ஒரு சிலுப்பு சிலுப்பினால் தனி வழியும் வலிமையும் கிடைக்கும் என்பதைச் சொன்ன படம்.
9.காதலுக்காக தண்டவாளத்தில் கூட நிற்கும் இளைஞனையும், கடைசிநேரத்தில் மணம் மாறினால்கூட மாட்டிக்கொள்ளவேண்டி வரும் என்ற சூழலையும் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்ன படம்.
10.வருமானத்திற்கு மீறி சொத்து சேர்க்கும்ப்பொது எப்படிச் சேர்த்தால் அரசை ஏமாற்றமுடியும் எனச் சொல்லிக் கொடுத்த படம்.
11.சிவப்பழகின் முக்கியத்துவத்தையும் பழகுவதின் முக்கியத்துவத்தையும் சொல்லி ஒரு மரியாதையை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மறந்து போயிருந்த அங்கவை சங்கவை பெயர்களை ஒவ்வொருவரையும் உச்சரிக்க வைத்த படம்.
12.திருநல்லாறு போனால்கூட ஜாதகப் படித்தான் நடக்கும் என்பதை ஆணித்தரமாக கூறி தேவையில்லாத பரிகாரங்களில் வீணாக வேண்டாம் என்ற பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்த படம்.
13.உலக அளவில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், கடன் அட்டை வாங்குவது மிகவும் சுலபம் என்பதை உல்கத்தோருக்குச் சொன்ன படம்.
14.வீட்டின் ஓட்டில் கூட பணத்தினை சேர்க்கமுடியும் என்று ஒரு புது வழி கண்டுபிடித்தபடம்.
15.வழக்கறிஞர்கள் பலருக்கும் கூலியை கையிலிருப்பதைக் கொடுத்துத்தான் வாடிக்கையாளர்கள் கழிக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள்
16.ஷ்ரேயாவை வைத்துக்கூட படத்தை ஓட்ட முடியும் என்று சாதித்துக் காட்டிய படம்
17.முக்கிய நடிகர்களாக ரஜினியும் நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்/
பெண்களை கவர்ந்தவை:-
1காதலனுக்காக நடு ரயில்பாதையில் தவணியை கழட்டிவிட்டு ஓடுவாள் பத்தினி என்பதைப் பதிவு செய்த படம்
2.காதல்னுக்காக காதலையே தியாகம் செய்வாள் என்பதைக் காட்டிய படம்
3. கணவனைக் காப்பாற்ற அவனை காட்டிக் கொடுக்க தயங்க மாட்டாள் பெண் என்பதும் பதிவு செய்யப் பட்டுவிட்டது.
இது போன்ற பல கருத்துக்களும் காட்சிகளும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வும் மற்றும் பல அவலங்களையும் சாடியிருப்பதால் சிவாஜிக்கு விருது வழங்கியிருப்பது மிகவும் பொறுத்தமான ஒன்றே.
தெலுங்குப் படத்தில் சிவாஜிப் பதிலாக ஏ.என்.ஆர், எம்ஜியாருக்குப் பதிலாக எண்டியார், கமலுக்குப் பதிலாக சிரஞ்சீவி வேடத்தில் ரஜினிபோடும் ஆட்டம்
ரஜினி போட்ட ஆட்டத்திற்கு எண்டியாரும், ஸ்ரீதேவியும் போட்ட ஒரிஜினல் ஆட்டம்
இந்தப் பாட்டுக்கு ரசிகர்கள் கண்டிப்பாக மிகப் பெரிய ஆட்டம் போட்டிருப்பார்கள். இன்னும் கூட போட்டுக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தவிர பாட்டில் கொஞ்சூண்டு கவர்ச்சியும் கூடுதலாக இருக்கிறதே!
Subscribe to:
Post Comments (Atom)
Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்
- பிரசவ கால விபத்துக்கள் - 12/31/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும் - 12/30/2013 - SUREஷ்(பழனியிலிருந்து)
- நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10 - 10/1/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே - 9/28/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
- இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..? - 8/12/2010 - SUREஷ்(பழனியிலிருந்து)
அப்படி போடுங்க அருவாளை. எர்ச்சலும், கோபமும் இங்கே எள்ளலாய் வந்திருக்கிறது. ரசித்தேன்.
ReplyDeleteஇன்னொரு மிக முக்கியமான விடயத்தை விட்டுவிட்டீர்கள் அங்கவை, சங்கவை என்ற சங்ககால மகளிர்களை கொச்சைப் படுத்தியதற்க்கும் விருது கொடுக்கின்றார்கள்.
ReplyDelete:-)))))))
ReplyDeleteரசித்தேன்
சுரேஷ் த பாஸ்
ReplyDelete@மாதவராஜ்
ReplyDelete@வந்தியத்தேவன்
@♠புதுவை சிவா♠
@Starjan ( ஸ்டார்ஜன் )
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
@வந்தியத்தேவன்
அந்தப் பெயர்களை தமிழக மக்கள் மீண்டும் உச்சரிக்க வைத்த படம் சிவாஜி ..,
அரசியல்ல இதெல்லாம் ரொம்பச் சாதாரணம் தலை! :)
ReplyDeleteஅமெரிக்கா போனால் 200 கோடிகள் சம்பாதிப்பது..அதுவும் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினீயருக்கு எளிது என உணர்த்திய படம்
ReplyDeleteதேசிய நீரோட்டக் கட்சியின் அமைப்பு
yemba olaga nayagan rasigana Rajiniya vambukku ilukkalaina pothu pogathaa?
ReplyDeleteதலைவரே! ரசித்தேன். இந்த மேட்டர விருது கமிட்டிக்காரங்க படிச்சா காண்டு ஆயிடுவாங்க..,
ReplyDeleteவாவ் சூப்பர்!! ரஜினி இப்படி கூட ஆடுவாரா என்ன??!! அழகாய் மற்ற நடிகர்களை இமிடேட் செய்கிறார் அசத்தல். இணைப்புக்கு நன்றி சார்.
ReplyDelete@வருண்
ReplyDelete@T.V.Radhakrishnan
@Anonymous
@அன்புடன் நிஜாம்
@Kavi
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
why they give dasaavatharm
ReplyDeletetell me answer this question my friend
நாம இத பத்தி எழுதனும்னு நெனச்சுட்டு பார்த்தா.... சும்மா அந்தர் பண்ணிடிங்க வாத்யாரே!!!!!!!குறிப்பா //வருமானத்திற்கு மீறி சொத்து சேர்க்கும்ப்பொது எப்படிச் சேர்த்தால் அரசை ஏமாற்றமுடியும் எனச் சொல்லிக் கொடுத்த படம்//Nice punch.
ReplyDeleteஅப்புறம் திருநள்ளாறு இதான் வாத்யாரே கரெக்ட்
ம்ம்ம்ம்......
ReplyDelete:)))
அடிச்சு துவம்சம் செஞ்சுட்டீங்க டாக்டர்.. சிரிப்ப அடக்க முடியலை :)
ReplyDeleteதலைவரை நக்கல் பண்ணாதீங்க. வேண்டாம் இந்த விபரீதம் !
ReplyDeleteஏதோ எங்க தல ரஜினிக்கு விருது கிடைச்சா அதைக் கொண்டாடாம கிண்டல் பண்றீங்களே... ஏன் தசாவதாரம் படத்துக்குக் கமலுக்குக் கொடுக்கலையா.
ReplyDelete:) :) :)
சும்மா ஜாலிக்கு. நீங்க எழுதியிருப்பது தூள்!
Fantastic
ReplyDeleteBachlor of Social Sicence என்ற புதிய cource ஐ அறிமுகப்படுத்தியது.
ReplyDelete:-)))))))
super post :-)
ReplyDeleteஇதுல வஞ்ச புகழ்ச்சி எதுவும் இல்லையே?
ReplyDeleteநல்லா இருக்கு பாஸ் :-)
@Matcha இதே கோணத்தில் அந்தப் படத்தையும் பார்த்துவிட்டால் போச்சு தல..,
ReplyDelete@கிட்டிபுல்லு
@ஜெகதீசன்
@சென்ஷி
@மணிகண்டன்
@ஜ்யோவ்ராம் சுந்தர்
@தண்டோரா ......
@ஷாகுல்
@" உழவன் " " Uzhavan "
@சிங்கக்குட்டி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
மிக..மிக அருமையான அலசல்.
ReplyDeleteயூத் விகடன் மூலம் உங்க பதிவுக்கு வந்தேன். அசத்திட்டீங்க. கலக்கலோ கலக்கல்.
ReplyDeleteஎல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?
ReplyDeleteNobody has the guts to criticize that award where Kamal came up with bunch of masks with a worthless plot!
Why does that deserve best picture award?? I want you to explain that too, suresh! Thanks
// skishok said...
ReplyDeleteமிக..மிக அருமையான அலசல்.//
நன்றி தல
// Anonymous said...
யூத் விகடன் மூலம் உங்க பதிவுக்கு வந்தேன். அசத்திட்டீங்க. கலக்கலோ கலக்கல்.//
நன்றி அனானி, நன்றி யூத் விகடன்
// வருண் said...
ReplyDeleteஎல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?
Nobody has the guts to criticize that award where Kamal came up with bunch of masks with a worthless plot!
Why does that deserve best picture award?? I want you to explain that too, suresh! Thanks//
தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன் படம் இரண்டுமே கமல் நடித்த படங்கள்தானே தல..,
பெரும்பாலான பதிவர்கள் உ.போ.ஒ.பற்றி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.நான் கூட ஒரிஜினல் காமன் மேன் பற்றி ஒரு இடுகை எழுதியிருக்கிறேன்.
நான் எழுதிய பிற பழைய இடுகைகளுக்கு
இந்த
மற்றும்
இந்த
சுட்டிகளைப் படித்துப் பாருங்களேன்.
இந்த மாபெரும் படத்தை என்னைத் தெலுங்கிலும் பார்க்கத் தூண்டுகிறீர்கள் :)
ReplyDelete//
ReplyDeleteசிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி [^] (உளியின் ஓசை)
//
இதையே தாங்கி கிட்ட எங்களுக்கு சிவாஜி க்கு குடுத்த விருது பெருசா தெரியல.
:)
ReplyDeleteசிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி [^] (உளியின் ஓசை)
//
ha ha ha the best Award
மாதவராஜ் அண்ணன் பதிவிலிருந்து நீந்தி வந்தேன். பிரமாதமான பகடி. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteமிக அருமையான விளக்கம் நன்றி நண்பா
ReplyDelete@Nundhaa
ReplyDelete@அஹோரி
@பிரியமுடன்...வசந்த்
@LOSHAN
@செல்வேந்திரன்
@ரஹ்மான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
// Ammu Madhu said...
ReplyDelete:)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல
:))) சிந்தனை சிரிப்பூ...
ReplyDelete// ரகுநாதன் said...
ReplyDelete:))) சிந்தனை சிரிப்பூ...//
நன்றி நண்பரே
முடியல :-))))))))))))
ReplyDeleteநண்பரே சுரேஷ் சிவாஜிக்கு விருது என்ற இடுகையை படித்து அதற்கு கமெண்ட் அடிக்காமல் போனால் அவர்கள் பாவம் செய்தவர்கள் . நன்று உமது விமர்சனங்கள் ரசிகன் என்ற போர்வையில் அழியும் ஒரு ரசிகனுகாவது sendru அடைய வேண்டும் நண்பரே, உமது தைரியாமான எழுது பணி சிறக்க எமதுவாழ்த்துக்கள் www.sathuragirisundaramahalingam.blogspot.com
ReplyDeleteபொதுவாக ஒரு கிண்டலும் ஆற்றாமையும் தெரிந்தாலும், பாய்ன்ட் நம்பர் ௧, ௪, ௭ இவை மூன்றும் உண்மையிலேயே விருது கொடுக்கத் தகுதியான அம்சங்கள் என்கிற மாதிரியல்லவா இருக்கின்றன!
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
Those are point Nos 1,4 and 7. sorry for the typo
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
@பாசக்கார பயபுள்ள...
ReplyDelete@prabakar.l.n
@Jawahar
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,