Sunday, October 18, 2009

சிரிப்பொலி தொலைக்காட்சியின் குசும்பு

சிரிப்பொலித் தொலைக்காட்சியில் பொதுவாக நகைச்சுவைக் காட்சிகள் போடுவார்கள். அந்தக் குழுமத்தில் நகைச்சுவைக்கான அலைவரிசை இது. சில நேரங்களில் திரைப்படங்களும் போடுவார்கள். பொதுவாக நகைச்சுவைப் படங்களே வரும்.

இன்று தேவர் மகன்

இது காசு படைத்த இரு அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் எப்படி வெட்டி கவுரவத்திற்காக  ஊரை இரண்டு படுத்தி நாசமாக போகிறார்கள் என்பதைக் கதையாக படைத்திருப்பார்கள்
. தேவர் சமுதாயத்தை பின் புலமாக கொண்டு படம் எடுக்கப் பட்டிருந்தாலும் அனைத்து சமுதாயங்களிலும் இருப்பதுதான் இந்தப் பிரச்சனை.  கொஞ்சம் தீவிரமான காட்சி அமைப்புகளுடன் படம் அமைந்திருக்கும். வடிவேலுவுக்குக்கூட ஒரு தீவிர விசுவாசி வேடம்தான். தலைவனுக்காக கையை இழந்தாலும் திரும்ப வந்து மீண்டும் அரிவாள் தூக்குவேன் என்று சொல்லும் வேடம்.

இந்தப் பட்த்தில் என்ன நகைச்சுவையைக் கண்டார்களோ.., தெரியவில்லை. இப்போது படம் ஓடிக் கொண்டிருக்கிறது. யாராவது நகைச்சுவையைக் கண்டுபிடித்தால் சொல்லுங்களேன்,

11 comments:

  1. //Anonymous Anonymous said...

    50 ஆவது ஆண்டு நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காடசிக்குக் கொடுக்காமல் விஜய் தொலைக்காட்சிக்குக் கொடுத்த கோபம்தான்.

    நாதன்//

    அன்புக்குரிய அனானி என்கிற நாதன் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  2. Naanum idha pathi dhaaan kadandha sila mani nerangallaavae yosithu kondu irundhen....

    ReplyDelete
  3. கமல் பொன்விழா நிகழ்ச்சியை கலைஞர் டி,விக்கு தராததால் சீரியஸ் ஆகிபோய் கமலின் சீரியஸ் படமான தேவர் மகனை காமடி டி.வியில் போட்டு விட்டார்கள். அவ்வளவுதான். :)

    ReplyDelete
  4. @nigdyn
    @ரகுநாதன்

    வருகைக்கும் நன்றி நண்பர்களே..,

    நீங்கள் சொல்லும் காரணம்கூட ஏற்றுக்கொள்ளக்கூடியதே...,

    ReplyDelete
  5. //கமல் பொன்விழா நிகழ்ச்சியை கலைஞர் டி,விக்கு தராததால் சீரியஸ் ஆகிபோய் கமலின் சீரியஸ் படமான தேவர் மகனை காமடி டி.வியில் போட்டு விட்டார்கள். அவ்வளவுதான். :) //

    இதை நானும் ஆமோதிக்கிறேன். எல்லாம் வயிறறெரிச்சல் தான் காரணம்.

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது. இவர்கள் இப்படி செய்து உலகநாயகனை அவமதிப்பதாக அவர்கள் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனத்தைதான் காண்பிக்கிறது...

    ஏனுங்க சார் நீங்க என்ன சொல்றீங்கோ???

    ReplyDelete
  6. [[ரகுநாதன் said...

    கமல் பொன்விழா நிகழ்ச்சியை கலைஞர் டி,விக்கு தராததால் சீரியஸ் ஆகிபோய் கமலின் சீரியஸ் படமான தேவர் மகனை காமடி டி.வியில் போட்டு விட்டார்கள். அவ்வளவுதான். :)]]


    இருக்கலாம்

    ReplyDelete
  7. மேலே நண்பர்கள் சொன்ன காரணமாகத் தான் இருக்கலாம்..
    பாவம்..

    கலைஞரை அதிதியாக அங்கே அழைக்காததும் ஒரு காரணமோ?

    ReplyDelete
  8. ஒரு வேளை இந்த இடுக்கன் வருங்கால் நகுக வா இருக்குமோ!!!

    ReplyDelete
  9. என்னா செய்வது மருத்துவரே...

    வியாபரம் என்று வந்துவிட்ட பின், தொலைக்காட்சி பார்க்கின்ற நம்ம மாதிரி ஆளுங்களைப் பார்த்தா காமெடியா இருக்கு.. அதான் ஒரு சீரியஸ் படத்தை காமெடி படமா ஆக்கிட்டாங்க.

    எவ்வளவோ மெகா சீரியல் கொடுமைகளை தாங்கறாங்க இந்த தமிழ் மக்கள், இதை தாங்க மாட்டாங்களா அப்படின்ற நம்பிக்கைத்தாங்க

    ReplyDelete
  10. "ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 7!" has been dedicated for you!

    மருத்துவருக்காக இது!

    ReplyDelete
  11. @நாஞ்சில் பிரதாப்
    @ஆ.ஞானசேகரன்
    @LOSHAN
    @குறை ஒன்றும் இல்லை
    @இராகவன் நைஜிரியா
    @பழமைபேசி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails