நமக்கும் பெண்களுக்கும் என்றுமே ஒத்துப் போனதில்லை. ஆதியிலும் சரி, பாதியிலும் சரி, வேதியியல் ஒழுங்காக இல்லாமல் போனதற்கு என்ன செய்ய முடியும். நம்மை யாராவது பிடித்த பத்து பெண்களை பட்டியலிடச் சொன்னால் பெண்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே பெண்ணடிமைத்தனம் அல்லவா என்று சொல்லி அதைத் தவிர்த்திருப்போமோ.., சரித்திரம் படைத்தவர்களை பெண் என்ற கண்கொண்டு பார்ப்பது ஆண் ஆதிக்கம் அல்லவா..,
வழக்கமாக நமது வலைப்பூவிற்கு வருபவர்களுக்கு இதில் வரும் வாசம் கொஞ்சம் வித்தியாசமாகப் படுகிறது அல்லவா.., என்னை யாரும் அழைக்காமலேயே எனக்குப் பிடித்த பத்து பெண்கள் தலைப்பை நான் எடுத்துக் கொண்டு இந்த இடுகையை எழுத ஆரம்பித்து விட்டேன்.
சரித்திரம் படைத்தவர்களை பெண்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைத்த கூட்டத்தின் வழியே சென்று நான் இன்னும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்க யோசனை செய்ததில் பிடித்த நடிகைகள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
1. குஷ்பூ:-
பதின்ம வயதில் சுற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்தான் மிகவும் பிடிக்கும். என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. கொஞ்ச நாள் கழித்து யோசித்ததில் கண்ணத்தான், கண்ணத்தான் என்று கொஞ்சிக் கொண்டிருந்ததுதான் காரணமாக இருக்கும் தோன்றியது. இருந்தாலும் பிரம்மா எஃபக்ட் மறுக்க முடியாத ஒன்று. ஆனால் ஏனோ ஜாக்பாட் பார்க்க நமக்கு ஒரு நல்ல காலம் பிறக்க மறுக்கிறது.
2.ராதா:-
இந்த காலகட்டத்தில் நான் பார்த்த இன்னொரு படம் அலைகள் ஓய்வதில்லை. அந்த படம் பல சுற்றுகளுக்குப் பிறகு எங்கள் ஊருக்கு வந்த போது பார்த்துவிட்டு
தாங்குமோ என் தேகமே..., தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
என்று பாடிக் கொண்டு சுற்றினோம்.
அதே வேகத்தில் சத்தியம் சிவம் சுந்தரம் ( ராம நாராயணன் படம்தான்) பார்த்துவிட்டு வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று சுற்றியது நினைவில் இருந்தாலும் அவரது பல படங்கள் பார்க்க இந்த அலைகள் ஓய்வதில்லை எஃபெக்ட் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.
3.எஸ்.டி.சுப்புலட்சுமி:-
இந்தப் பெயர் சரியா என்று தெரியவில்லை. இருந்தாலும் கதா பாத்திரத்தைச் சொன்னால் சரியாகப் புலப் படும் வாய்ப்பு இருக்கிறது. வேதாள உலகம் படத்தில் சாரங்கபாணி ( நாயகனின் தோழர்) க்கு ஜோடியாக வருவாரே ராஜாக்குட்டி, ராஜாக் குட்டி என்று கொஞ்சிக்கொண்டு வருவாரே அந்த அம்மையார் திரையில் கவர்ந்தவராக இருந்தார்.
4. கிரிஜா
இந்த அம்மையார் நடித்த படமும் உலக்ப் பிரசித்தம். ஆனால் அந்தப் படத்தின் நாயகனுக்கு இணையாக நடிக்கத் தகுந்த இளமையான நாயகிகல் இல்லாததால் இவரை இறக்குமதி செய்தார்களாம். அந்தப் படத்தின் வில்லியாகத் தோன்றிய நாயகின் மயக்கும் விழிகளின் முன்னும், நாயகனின் தாயாரான அனல் கக்கும் மொழிகளுக்கு முன் கிரிஜா அம்மையாரின் சிங்கார கண்மனி எடுபடாமல் போய்விட்டதாகவே நினைக்கிறேன். நினைவு கூற விரும்புவர்கள் மனோகரா படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிடவும்.
5. காஞ்சனா
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா என்று நெளித்து நெளித்து ஆடிவந்தவர். இவரைப் போல அழகாக சுரிதார் போட நாயகிகள் யாராவது இருக்கிறார்களா? வரவு எட்டனா செலவு பத்தனா என்று சோடாப் புட்டி கண்ணாடி அணிந்து ஒரு பெரிய மனிதத் தோரணையோடு இருந்தவர். நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் புது வெள்ளம் நதியாக ஓடும் அதில் இளநெஞ்சம் படகாக ஆடும் பாட்டில் எழுந்து நடக்க முயற்சி செய்து ரசிகர்களை கொள்ளை அடித்தவர். இந்தப் பாடலில் போடும் சுரிதார் கிளிந்து போகும் தன்மையில் இருக்கும் அதனால் காதலிக்க நேரமில்லை சுரிதாரோடு போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.
6.ராஜஸ்ரீ:-
இவரையும் காதலிக்க நேரமில்லையில்தான் பார்த்தோம். இருந்தாலும் இவரது துள்ளுவதோ இளமைதான் கண்ணுக்குள்ளேயே இருக்கும் படம். அதில் இவரது விளியோடு போட்டி போட்டு வரும் பாடல் நவீனம். பின்னர் குழந்தைகளுக்கு குடும்பப் பாடல் பாடி செத்துப் போனவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டி கொடுத்த போது பத்திரிக்கைச் செய்திகளில் வந்தார்.
7.சில்க் ஸ்மிதா
மேரியின் அண்னன் மனைவி பாத்திரத்தை மறக்க்க முடியுமா.., அதிலும் வேலைக்காரனை கடைக்குப் போகச் சொல்லும் பாத்திரம்.
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் இல்லை. என்ற பாடல் கூட இவருக்கு எழுதிய பாடல்தான்.
8. சிம்ரன்:
சிம்ரனை ஏன் பிடிக்கும் என்பதைப் பற்றித் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. கல்லூரியில் நல்ல தோழி அவர். கல்லூரியில் மற்ற பெண்களைவிட இவர் முகம் பார்த்த நாட்கள்தான் அதிகம். நம் கல்லூரிவாழ்க்கை முடிவுற்ற சில காலங்களில் இவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.
9.மணிஷா கொய்ராலா
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதப் போகும் காலங்கள், நுழைவுத்தேர்வு எழுதப் போகும் காலங்களில் ஓடத்துவங்கிய இவரது ஆதிக்கம் ஏறக்குறைய பயிற்சி முடிக்கும் காலம் வரை இருந்தது. கடைசியில் சாமுண்டீஸ்வரியாக செட்டில் ஆவார் என்று நினைத்தபோது மும்பை எக்ஸ்பிரஸில் டிக்கட் ஓய்வு பெற்று விட்டார்.
10. எஸ். வரலட்சுமி
துர்கா என்ற பெயரில் சக்கரவர்த்தித் திருமகளில் அவர் செய்யும் வில்லத்தனம் ஆகட்டும். இந்திராணியாக பாடும் வெள்ளிமலை மன்னவா ஆகட்டும். ஏடுதந்தானடி தில்லையிலே ஆகட்டும். தூங்கச் சொல்லும் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினை ஆகட்டும் .இவர் இவர்தான்.
உன்னை நான்றிவேன். என்னையன்றி யாறரிவார் என்னவோ பஞ்ச் டயலாக் மாதிரி தோன்றுகிறது.
என்ன தல, பட்டியலெல்லாம் போட்டதுக்கப்புரம், மத்த பதிவர்களை தொடர அழைக்கவே இல்லையே!
ReplyDelete// பாலமுருகன் said...
ReplyDeleteஎன்ன தல, பட்டியலெல்லாம் போட்டதுக்கப்புரம், மத்த பதிவர்களை தொடர அழைக்கவே இல்லையே!//
ஹி.., ஹி..,
நீங்களே தொடருங்கள் தல...,
அருமையான தேர்வு தல..
ReplyDeleteதல லிஸ்ட் சூப்பர்.
ReplyDeleteஉங்களுக்கு பழைய படங்கள் தான் ரொம்ப பிடிக்கும் போல.
பெண் நடிகைகள்?? Are there any ஆண் நடிகைகள்? You mean, in Street Theater (Koothu), men will do Women's (Sthri) Part?
ReplyDeleteநல்லா தொகுப்பு அண்ணே...
ReplyDeleteநடிகைகள்னு சொல்லிட்டு நம்ம நமிதாவ விட்டுபுடீன்களே...
என்ன எல்லாருமே நடிகைகள் தானா?
ReplyDeleteமனிஷாவுக்கு ஒரு சுழி எக்ஸ்ட்ரா போட்ட
ReplyDeleteமாதிரி இருக்கு......மனிஷா மேல உங்களுக்கு
இருக்கிற அன்பு புரியுது....
தல,பெண் நடிகைகள்? பெண்நடிகர்கள்னு போட்டிருக்கலாம்.
ReplyDeleteஉங்க லிஸ்ட்ல, வரலட்சுமி பிடிக்கும்.
ராஜஸ்ரீயா?!!!!ஹாஹாஹா!
அவங்களுக்கு அழகு "பின்னால" மட்டும்தான்! :)))))) முகத்தைலாம் பார்க்கமாட்டீங்களா!
குடியிருந்தகோயில்லயா இல்ல காதலிக்க நேரமில்லைலயா? எதுல பார்த்து விழுந்தீங்க?!! :)))
ஆரம்ப வேதியியல் கமெண்டை மிகவும் ரசித்தேன் தல.
ReplyDeleteதல, மனிஷா மறுபடியும் மாப்பிள்ளை ரீமேக் படத்தில் தனுஷின் மாமியாராக வருகிறார். வேறொரு படத்தில் நயன்தாராவின் அம்மாவாக நடிக்கிறார்.
ReplyDeleteமுதன் முதலில் வந்த பெண் வீராங்கனை - கொங்கு நாட்டு தங்கம் - கதாநாயகியை மறந்து விட்டீர்களோ?
ReplyDelete// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅருமையான தேர்வு தல..//
:))
// அக்பர் said...
ReplyDeleteதல லிஸ்ட் சூப்பர்.
உங்களுக்கு பழைய படங்கள் தான் ரொம்ப பிடிக்கும் போல.//
இந்த நூற்றாண்டில் படம் பார்ப்பது மிக அபூர்வமாக இருக்கிறது தல..,
// Anonymous said...
ReplyDeleteபெண் நடிகைகள்?? Are there any ஆண் நடிகைகள்? You mean, in Street Theater (Koothu), men will do Women's (Sthri) Part?//
அன்பும், பண்பும் பாசமும் உள்ள அனானி நண்பா என்று ஒரு இடுகை எப்பொதோ எழுதிய நினைவு
// seemangani said...
ReplyDeleteநல்லா தொகுப்பு அண்ணே...
நடிகைகள்னு சொல்லிட்டு நம்ம நமிதாவ விட்டுபுடீன்களே...//
??
// என் நடை பாதையில்(ராம்) said...
ReplyDeleteஎன்ன எல்லாருமே நடிகைகள் தானா?//
பட்டியலை நான் சுருக்கிவிட்டேன் தல.., தொடர் பதிவுகளை நமது வசதிக்கேற்ப வளைத்துக் கொள்வது என்பது மரபுதான் தல..,
// ஜெட்லி said...
ReplyDeleteமனிஷாவுக்கு ஒரு சுழி எக்ஸ்ட்ரா போட்ட
மாதிரி இருக்கு......மனிஷா மேல உங்களுக்கு
இருக்கிற அன்பு புரியுது....//
மணிஷாவின் புகைப்படம் பார்த்தால் அவருக்கு எத்தனை சுழிகள் என்பது தெரிந்துவிடும்
// King Viswa said...
ReplyDeleteமுதன் முதலில் வந்த பெண் வீராங்கனை - கொங்கு நாட்டு தங்கம் - கதாநாயகியை மறந்து விட்டீர்களோ?//
ரிவைஸ்டு ஃபார்ம் போடும்போது சேர்த்துவிடுவோம் தல..,
// வருண் said...
ReplyDeleteதல,பெண் நடிகைகள்? பெண்நடிகர்கள்னு போட்டிருக்கலாம்.//
நீங்கள் சொல்லும் வார்த்தைதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
// King Viswa said...
ReplyDeleteதல, மனிஷா மறுபடியும் மாப்பிள்ளை ரீமேக் படத்தில் தனுஷின் மாமியாராக வருகிறார். வேறொரு படத்தில் நயன்தாராவின் அம்மாவாக நடிக்கிறார்.//
ஆஹா.., ஆஹா...,
சூப்பர் லிஸ்ட்.:)))
ReplyDeleteஇந்த வரலக்ஷ்மிதான் ரஞ்சியை நித்யாவுக்கு அறிமுகம் செஞ்சாங்களாமே ..
ReplyDeleteHello Friend, Hope everything is fine.
ReplyDeleteI am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
(Pls ignore if you get this mail already)
என்னமோ போங்க....வித்தியாசமான லிஸ்ட் உங்கள் ரசனையும் கூட
ReplyDelete"ஏமாற்றம்தானா என் வாழ்விலே, துன்பமே நீங்காதோ இனிமேலே". சக்கரவர்த்தி திருமகளில் துர்கா-எஸ்.வரலக்ஷ்மி பாடிய இந்த பாட்டு எனக்கு பிடிக்கும். அதைச் சொல்ல விட்டுட்டீங்களே.
ReplyDeleteசுரேஷ் பலதுறை சார்ந்த பெண்களா அல்லது நடிகைகளா ..உங்களை இப்படி எழுத அழைச்சது யார் அல்லது நீங்களாவே எழுதிடீங்களா ஆனால் நல்ல பகிர்வு....:))
ReplyDelete//T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteசூப்பர் லிஸ்ட்.:)))//
நன்றி தல..,
//ஸ்ரீராம். said...
ReplyDeleteஇந்த வரலக்ஷ்மிதான் ரஞ்சியை நித்யாவுக்கு அறிமுகம் செஞ்சாங்களாமே //
வாங்க தல.., தகவலுக்கு நன்றி..,
//Mehar said...
ReplyDeleteI am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". //
இந்த மின்னஞ்சலில் உள்குத்து எதுவும் இல்லையே தல.., கோயமுத்தூர் காரகளாக வேற இருக்கீக..,
//ஜீவன்சிவம் said...
ReplyDeleteஎன்னமோ போங்க....வித்தியாசமான லிஸ்ட் உங்கள் ரசனையும் கூட//
நன்றி தல..,
//சகாதேவன் said...
ReplyDelete"ஏமாற்றம்தானா என் வாழ்விலே, துன்பமே நீங்காதோ இனிமேலே". சக்கரவர்த்தி திருமகளில் துர்கா-எஸ்.வரலக்ஷ்மி பாடிய இந்த பாட்டு எனக்கு பிடிக்கும். அதைச் சொல்ல விட்டுட்டீங்களே.//
இது போன்ற பகிர்வுகள் பின்னூட்டங்களை மேலும் சுவாரசியமாக மாற்றும் தல..,
//thenammailakshmanan said...
ReplyDeleteசுரேஷ் பலதுறை சார்ந்த பெண்களா அல்லது நடிகைகளா ..உங்களை இப்படி எழுத அழைச்சது யார் அல்லது நீங்களாவே எழுதிடீங்களா ஆனால் நல்ல பகிர்வு....:))//
நன்றி தல.., முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள்..,
தல,
ReplyDeleteபத்து தானா? இல்லை லிஸ்ட் தொடருமா?
தல,
ReplyDeleteகுஷ்பூ அக்கா தான் நம்ம பேவரிட் கூட.
unga vayasai yoogikkave mudiyaama...oru list-ai pottu...asathittengale!
ReplyDeletethodarunga!!
-MCE
யப்பா டேய் நம்ம சொப்பன சுந்தரிய விட்டுடியேப்பா....(ஆமா இப்ப யாரு வெச்சிருக்காங்க?)
ReplyDeleteஆமா இப்போ இதுங்களையெல்லாம் யார் யார் வெச்சிருக்காங்க...சும்மா சொல்லுப்பா அடிக்கவும்லாம் மாட்டேன்...
ReplyDeleteninga kushboo katchiya
ReplyDeleteகுஷ்பு படம் மட்டும்தான் கிடைச்சுதா...
ReplyDelete