சூப்பர்கள் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். பந்துவீச்சாளர்கள் உருப்படியாக பந்துவீசினால் ஆட்டத்தை முழுமையாகவே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
அதுவும் ஒரு பந்துவீச்சாளர் மட்டும் கூட தனது நான்கு ஓவர்களை ஒழுங்காகப் போட்டால் அவர் உடன் வீசப்படும் ஓவர்களையும் சேர்த்து எட்டு ஓவர்கள் கூட முழுமையாக கட்டுப் படுத்தப் பட்டு விடுகிறது,அதைத்தான் முரளி நிகழ்த்தினார். . இந்த கட்டத்தில் களத் தடுப்பாளர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பெருகி அவர்களும் கூட வேலை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் சுலபமாக ஆட்டத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது.
கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான்.
ஆட்டம் டையில் முடிந்தால் கூட சூப்பர் ஓவரை கொஞ்சம் கவனத்துடன் போட்டால் சுலபமாக வெல்ல முடியும். ஆக மட்டையாளர்கள் கையிலிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சாளர்களுக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
சூழ்நிலை சமநிலையியல் விதிகளின்படி அனைத்தும் சமநிலையில் இருந்தால் மட்டுமே அந்த சூழல் நிலைத்து நிற்கும். இது அறிவியல், வரலாறு, புவியியல் ரீதியாக பலமுறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.
கிரிக்கெட்டில் மட்டையர்கள் மட்டும் மன்னர்களாக இருந்த நிலைமாறி பந்துவீச்சாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்திருப்பதால் கிரிக்கெட் உருப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.
===============================================================
மங்கூஸ் மட்டையைப் பற்றிப் படிக்கும்போது முன்னொரு காலத்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நிகழ்ச்சியெல்லாம் நினைவுக்கு வருகிறது,. முதன் முதலாக நினைவு தெரிந்து விளையாடிய மட்டைதென்னை மட்டையில் செதுக்கியது. அதில் ரப்பர் பந்தைப் போட்டு அடித்து விளையாடுவோம். இன்றும்கூட இளஞ்சிறார்கள் அப்படித்தான் இந்தப் பகுதிகளில் ஆரம்பிக்கிறார்கள். அடுத்த கட்டத்தில் கிடைத்த மரக்கட்டைகளை செதுக்கி விளையாடினோம். ஆனால் இன்று அந்தக் கட்டத்திற்கு ரெடிமேட் மட்டைகள் களத்தில் வந்து விட்டன.
போட்டிகள் எல்லாம் பதினைந்து ஓவர்களாக நடக்கும். தொடர் கிரிக்கெட் என்றால் இறுதிப் போட்டி இருபத்தைந்து ஓவர்கள் நடக்கும். பெரிய கோப்பையெல்லாம் வைத்தால் முப்பது ஓவர் போட்டிகளாக் நடக்கும். இப்போது எல்லாமே 20-20 ஆகிவிட்டன.
இது போன்ற போட்டிகளுக்கு எங்கள் சொந்தத் தயாரிப்பு மட்டைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அவை மங்கூஸ் மட்டைகள் போல கைபிடி நீளமாக குட்டையாக இருந்திருக்கின்றன். பிளேடுகள் கூட எங்களுக்க்கு கிடைத்த மரப் பலகைகளைப் பொறுத்து அமைந்திருக்கின்றன. ஆனால் மாத்யூ ஹெய்டனுக்கு மங்கூஸ் மட்டைகள் அனுமதி கிடைக்கிறது, எங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது.
ஒருவேளை மாங்கூஸ் மட்டையின் காரணமாக மீண்டும் எங்கள் சொந்தத் தயாரிப்பு மட்டைகள் பிரபலமாகும் என்றே தோன்றுகிறது.
புதிய ரக மட்டைகள்
தெண்டுல்கர் உபயோகப் படுத்த தென்னைஸ் மட்டைகள்
டோணிக்கா டயர்ஸ் மட்டைகள் , மட்டைகளின் தடிமனை அதிகப் படுத்த மட்டைகளில் டயர் சுற்றப் பட்டிருக்கும்.
யுவராஸ் சிங்கிற்கு உருப்பெறா மட்டைகள் மற்றவர்கள் தயாரிப்பில் முழு உருவம் பெறாத மட்டைகள் இவரது ரசிகர்கள் விளையாட கொடுக்கப் படும்.
ஐயகோ தமிழ்மணத்தில் சேர மறுக்கிறதே..,
ReplyDeleteமாங்கூஸ் மட்டையை விட இந்த கருவிப் பட்டையின் தொந்தரவு தாங்க முடியலயே
ReplyDeleteநேற்று சென்னை அணி தோற்றது மிக கேவலமானஒன்று தல...
ReplyDeleteஹைய்யா நாந்தான் முதல்லயா...
ReplyDelete///மாங்கூஸ் மட்டையை விட இந்த கருவிப் பட்டையின் தொந்தரவு தாங்க முடியலயே///
ReplyDeleteதலைவரே! இனிமே எல்லாம் அப்படித்தான்...
//ஐயகோ தமிழ்மணத்தில் சேர மறுக்கிறதே..,//
ReplyDeleteநானும் ஸ்டார்ஜன்னும் சிரிச்சு முடியல தல
ஸ்டார்ஜன் இப்பதான் மாட்டினாரு அடுத்து நீங்களா.
//மாங்கூஸ் மட்டையை விட இந்த கருவிப் பட்டையின் தொந்தரவு தாங்க முடியலயே//
பஞ்ச் அருமை.
மட்டைக்கு நீங்க முன்பே காப்புரிமை வாங்கியிருக்க வேண்டியதுதானே.
தல,
ReplyDelete//கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான். //
உண்மைதான். அதனால்தான் டோனி சென்னை டீமில் ஜோகிந்தரை சேர்த்தார்.
தல,
ReplyDelete// மாத்யூ ஹெய்டனுக்கு மங்கூஸ் மட்டைகள் அனுமதி கிடைக்கிறது, எங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது.//
இந்த மாதிரி ஒரு அடக்குமுறை அநீதி உங்களுக்குமா?
தல,
ReplyDelete//யுவராஸ் சிங்கிற்கு உருப்பெறா மட்டைகள்//
அற்புதம். மிகவும் ரசித்தேன். இது //உருப்பெறா// யுவராஜை தானே குறித்தது? அல்லது அவரின் மட்டையையுமா?
வோட்டு போட்டாச்சு தல.
ReplyDeleteநல்ல பதிவுதல
ReplyDeleteமங்கூஸ் பார்க்க மிகச்சிறியது, இருந்தாலும் அதற்கு வேலை 4 மேட்சில் இரண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது
இப்பதாங்க நான் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி
ReplyDelete// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDelete///மாங்கூஸ் மட்டையை விட இந்த கருவிப் பட்டையின் தொந்தரவு தாங்க முடியலயே///
தலைவரே! இனிமே எல்லாம் அப்படித்தான்...//
இப்பக்கூட அப்படித்தான் என்று மாலையில் ஒரு பின்னூட்டம் போட்டேன் பின்னூட்டம் கூட சபையேறவில்லை
அக்பர் said...
ReplyDeleteமட்டைக்கு நீங்க முன்பே காப்புரிமை வாங்கியிருக்க வேண்டியதுதானே.
தெரியாமப் போச்சே.., தெரியாம போச்சே..,
// King Viswa said...
ReplyDeleteதல,
//கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான். //
உண்மைதான். அதனால்தான் டோனி சென்னை டீமில் ஜோகிந்தரை சேர்த்தார்.//
டோனியின் நன்றி நவிழலுக்கு இதைவிட பெரிய உதாரணம் காட்டவே முடியாது தல..,
// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteநல்ல பதிவுதல
மங்கூஸ் பார்க்க மிகச்சிறியது, இருந்தாலும் அதற்கு வேலை 4 மேட்சில் இரண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது//
இரண்டில் புட்டுக்கொண்டது.., அப்படியென்றால் திறமை ஆட்டக்காரர் மீதா? அல்லது மட்டையின் மீதா தல
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDeleteஇப்பதாங்க நான் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி//
நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் தல..,
நல்ல மட்டையடி தல!
ReplyDeleteஎல்லாரையும் மட்டையாக்கிட்டீங்க!!!
//மாங்கூஸ் மட்டையை விட இந்த கருவிப் பட்டையின் தொந்தரவு தாங்க முடியலயே//
ReplyDeleteஇது கிர்ன்னு இருக்கு!!
தல,
ReplyDeleteநியூ டெம்ப்ளேட் சூப்பர்.
very nice
ReplyDelete//ஜெகநாதன் said...
ReplyDeleteநல்ல மட்டையடி தல!
எல்லாரையும் மட்டையாக்கிட்டீங்க!!!
//
எல்லோரும் ஆடலாம் வாங்க
// King Viswa said...
ReplyDeleteதல,
நியூ டெம்ப்ளேட் சூப்பர்.//
உபயம் கூகிள்
//Anonymous said...
ReplyDeletevery nice
//
இதக்கூடவா அனானியா வந்து சொல்வாங்க..,
ஓட்டு நிறைய வாங்கியும் கூட தமிழ் மணம் தூங்கி விட்டதால் பரிந்துரைக்கு வராத இடுகை
ReplyDelete