Monday, March 15, 2010

நன்றி வலைச்சரமே.....,

மார்ச் 8ம் தேதி முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருக்க வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள்.  வலைச்சர ஆசிரியர் வேலை என்பது அந்தக் கால குமுதம் பொறுப்பாசிரியர் வேலை போல நமது பேரை மட்டும்போட்டுக் கொள்வதாகவோ அல்லது நமது நண்பர்கள் உறவினர்கள் படங்களைப் போட்டு, பேட்டி கண்டு  எங்களோட ஜிம்மி, மத்ததெல்லாம் டம்மி என்று எழுதுவதோ இல்லாமல், ஒவ்வொரு இடுகையிலும்  புதிய பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுமாம்.  வேலை கொஞ்சம் கடினமானதாகத்தான் இருந்தது, நமது கனவுகளே மாதிரி முழுக்க முழுக்க மொக்கைப் பதிவுகளைப் போட்டு நிரப்பும் இடுகைகளாக இருந்தாலும் ரசிக்கும் படியான இடுகைகள், நம்மால் ரசிக்க முடியாவிட்டாலும்  கருத்துள்ள இடுகைகளை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடனே ஆரம்பித்தேன்.  முழுக்க முழுக்க புதியவர்களை மட்டுமே படித்து, அவர்களுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டு ஒருவாரம் காலம் தள்ளினேன். அதில்கூட கடைசி இரண்டு நாட்கள்  விதியின் சதியால் தொலைப் பேசி இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.  இன்றுதான் மீள முடிந்தது, விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்களே  எதாவது பிரவுசிங் செண்டர் போய் இடுகைகள் போடலாம் என்றால் எல்லா பிரவுசிங்செண்டர்களும் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தன. நமக்கு இடம் கொடுத்த புண்ணியவான்களிடம் தமிழ் டைப்பிங் இல்லை. ஒரு மையத்தில் இருந்த தமிழ் உரு நமக்கு வரவில்லை. சரி என்று அப்படியே விட்டு விட்டேன்.

இன்று இணைப்பு மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியுடம் வலைச்சரத்திற்கு நன்றியறிவிக்கையாக இந்த இடுகையை நமது பதிவிலேயே போட்டுவிடுகிறேன் நன்றி.., நன்றி....,

===================================================================
முதல் இடுகை:-

புணரலாமா?கூடாதா ?வலைச்சரத்தின் ஆசிரியராக தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவுக்கும் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் நன்றி.

வலையுலகில் மற்றவர்களை அறிமுகப் படுத்துவது என்பதைவிட நான்படித்த சில இடுகைகளை  நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவே இதைக் கருதுகிறேன்.

என்னால் சில இடுகைகள் இன்னும் கூடுதலாக சென்றடையும் என்பதும், என்னால் சிலருக்கு பின் தொடருபவர்கள் கூடுவார்கள் என்றாலும் எனக்கு மிக மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை வலைச்சரம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வாரத்தினை தொடங்குகிறேன்.

எனவே புதிதாக என்னைப் பார்ப்பவர்கள் நான் எழுதும் எல்லாத் தளங்களையும் புக் மார்க் அல்லது ஃபாலோ செய்து கொண்டு இந்த தளத்தையும் பின் தொடர்ந்து வாருங்கள். வலைச்சரம் மூலம்  முதன் முதலாக பார்ப்பவர்கள் எனது மற்ற பூக்களைத் தொடருங்கள்.  ஏற்கனவே படிப்பவர்கள் இதில் வரும்புது முகங்களைத் தொடருங்கள்.

================================================================

வலைப்பூக்கள் எழுதுபவர்களின் எண்ணங்களில் வலைச் சர ஆசிரியர் பதவி என்பது எப்படி ஒரு கனவாக இருக்கிறது என்பதை  ரங்கன் அவர்களின் இந்தப் பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.  அவரே கார் வாங்கிய கதையையும் எழுதி இருக்கிறார், அதையும் படித்துவிடுங்கள். 

ஒரு வயோதிகரிடம் மாட்டிக் கொண்ட வேலைக்காரியின் கதை இதோ

.

==========================================================

//ன்று மாலையும் அதே விவாதம். புணரலாமா கூடாதா என்று.

பளிங்குக் கோப்பையை மேசையில் ஊன்றி, இடமிருந்து வலமாக மெள்ளச் சுற்றினாள். கோப்பையிலிருந்த '94ம் வருட அறுவடையின் இத்தாலிய திராட்சை மது அதற்கேற்ப சுழன்று, கோப்பையின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு அடங்கியது. "என்ன பார்க்கிறாய்?" என்றாள், எதிரே உட்கார்ந்திருந்த அவனிடம்.//இப்படி ஒரு கதை ஆரம்பித்தால் என்ன நினைக்கத்தோன்றும்?   சில பல நூற்றாண்டுகள் தாண்டியெல்லாம் போகாமல் நம்மைச் சுற்றியே பின்னப் பட்ட கதை இது.   முதிர்ந்த எழுத்தாளராகக் காட்சி அளிக்கும் அப்பாத்துரையின் எழுத்துக்கள் இவை.  இவரது விபரீதக் கதைகள் கொஞ்சம் விபரீதமாகவே போய் கொண்டிருக்கும். 


======================================================


சில மூத்த பதிவர்கள் மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான அருன் பரத் கோமதிநாயகம் எழுதிய ராஜாக் காலக் கதை. ஆனால் 24ம்புலிகேசி பற்றியது. 


===========================================================
காதல் கதையில் கூட வேகத்தைக் காட்டும் காயத்ரியின் எழுத்துக்கள் இவை. 


=====================================================================


இவர் ஒரு மூத்த எழுத்தாளர்தான் வெயிட்டான ஒரு கதை. ஒரு தம்பியையும் தங்கையையும் ஒப்பீடு செய்திருப்பார் இம்சை அரசி
=====================================================================


கடலை போடுவதற்காக தனியாக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் வருணின் எழுத்துக்கள் இளமை பொங்குபவை

==================================================================

திருமணத்திற்காக மாமா ஒருவர் எவ்வளவு சிரமப் படுகிறார் என்பது இந்த இடுகையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  
எழுதியவரை பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள இயலாமல் இருப்பது இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காந்தித் தாத்தாவின் கண்ணாடி உடைந்திருந்தால்...,

சிந்தனைச் செல்வம் என்பது எல்லோருக்கும் அமையாது.

biopen அவர்களின் சிந்தனை பாருங்கள் எப்படியெல்லாம் போயிருக்கிறது என்று.

=============================================================

நண்பர் கபிலனின் சிந்தனை பாருங்களேன். எப்படியெல்லாம் போகிறது என்று,
 சிநேகா இப்படியெல்லாம் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் நடித்திருப்பாரா?

================================================================

கபிலன் அப்படியெல்லாம் யோசித்தால்,  நண்பர் சேட்டைக்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறார்?  முதலில் இப்படி யோசித்தார்.


பின்னர் இப்படி யோசித்தார்.   அடுத்ததாக இப்படி யோசிக்கிறார்.  இன்னும் யோசித்துக் கொண்டே இருப்பாராம்.


========================================================================

ஆனாப் பாருங்க ஜோதி இந்த மாதிரி இருந்தால்தான் சிந்தனைன்னு லேபிள் போடுவாராம்.

====================================================================

ஆனா எங்களப் பொறுத்த வரை இப்படி இருந்தால்தான் முழுமையான சிந்தனை என்பதை ஒத்துக் கொள்வோம்.  இதுக்குப் போய் பெரிய ஸ்பான்சர்லாம் பிடிக்கணுமா? என்ன?

==============================================================
காந்தியோட நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பக்கூடிய இந்த இடுகை வித்தியாசமான என்ற தோற்றத்தில் வந்தாலும் இயல்பான ஒன்றுதான்.

==================================================================
பெருந்தேவியின் சிந்தனைகளை பெண்கள் தின சிறப்பு இடுகையாகப் போடலாம்.
===================================================================

இடுகைகளைப் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்ளலாமே..,>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..

மனைவி கண்கலங்கிய நேரம்

தனது குடும்பத்தார் படத்துடன் ஒரு பதிவு போட்டு தான் நினைத்தவற்றை ஆணித்தரமாகச் சொல்லக்கூடிய இந்தப் பதிவு நான் படித்து மிரண்டது. வெண்ணிற இரவுகளின் இந்த இடுகையை நீங்கள் படித்து விட்டீர்களா..,?

=============================================================
ஆண்மை என்பதன் விளக்கம் இந்த இடுகை என்றால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? இதுவும் கூட வெண்ணிற இரவின் இடுகைதான்

===============================================================

ஆண்கள், பெண்கள் பற்றியெல்லாம் வெண்ணிற இடுகை தனித்தனியே இடுகைகள் எழுதிக் கொண்டிருந்தாலும்,  சம் உரிமை பற்றி இங்கு மேரி ஜோசப் ஒரு இடுகை போட்டு இருக்கிறார். இதைப் படித்துவிட்டால் நீங்களும் அவரது அடுத்த இடுகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

===================================================================
வழக்கமாக இந்த மாதிரி கவிதைகள் படிக்கும்போது பெண்ணீய கவிதை என்று தான் தோன்றும். ஆனால் எனக்கு வேறு மாதிரி தோன்றியது. நீங்களும் படித்துப் பாருங்கள்.  நண்டு@நொரண்டு   எழுதியது

===============================================================

நெருங்கிய உறவினரான ஒரு பெண்ணிற்கு நளினி என்று பெயர் வைத்து ஒரு இடுகை கொடுத்துள்ளார், ஜிகர்தண்டா.  ஆனால் அந்தப் பெயர் அந்த இடுகைக்கு முக்கியமல்ல.  ஆனால் நளினி என்ற பெயருக்கு காரணம் கொடுத்துள்ளார் பாருங்கள்.  அட.. அட... அட...,

================================================================
ஒரு மனைவி கண்கலங்கிய கதை இது.., உணர்வுகள் உடைப்பெடுத்த கதை. மங்குனி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.

=====================================================================

புருஷன் பொண்டாட்டி சண்டையில முதல் அடி வெங்கட்டுத்தான் என்பதை சுட்டிக் காட்டிய இடுகை இது. ஆனால் இதில் வெங்கட்டுக்கு ஏன் விழ வேண்டும் என்பதை அறிய இடுகையைப் படியுங்கள்.

===============================================================

பிரபல பதிவர் ராஜ நடராஜனின் பதிவு இது. ஒரு முக்கியமான விஷயத்தை அதில் சேர்க்காததன் காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே..,

========================================================================
பெண்ணுக்கு பேர் வைக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்குது பாருங்க, ரோஸ்விக் னா அப்படித்தான்.

======================================================================

சில விஷயங்கள் அனுபவித்தால் மட்டும் புரியும்.  Empiric RaaGo  அவர்களின் இந்தப் பதிவினை அனுபவித்துப் பாருங்களேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

ஆண்ட்ரியா சாயல்காரர்களும். டோனி முதலானவர்களும்


சச்சின் சாதனையைக்கூட முறியடிக்கும் காலம் வரலாம். கவாஸ்கரின் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு நபர் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவரது அண்ணன்கள் பற்றிய லோகநாதனின் பதிவு இது
===========================================
ஐ.பி.எல் போட்டிகளின் போது இந்த ஆண்டும் ஒரு ஃபேக் பிளேயர் வரப்போகிறர்ராம். அவர் அமெரிக்க தமிழராம். இந்த இடுகையின் பின்னூட்டம் சொல்கிறது.
பதிவர் பழையவர் என்றாலும் இந்த பதிவு புதிது, இடுகைகள் புதிதோ புதிது
==============================================

ஒரு காதலியின் மனதில் காதலன் இருப்பதை அறிய தாடி பயன்படூம் என்று
எறும்பின் இந்த் இடுகை சொல்கிறது.

===================================================

ஊக்கப் படுத்துவது என்றால் என்ன? என்று +2 தேர்வில் கேட்டால் சாதிகாவின் இந்த இடுகையை அப்படியே தள்ளிவிட்டுவிடலாம்

==============================================


சச்சின் சம்பளத்தைக் குறைப்பது பற்றீ மின்னஞ்சலில் படித்திருந்தாலும் படிக்காதவர்கள் இந்த தளத்தில் போய் படித்துக் கொள்ளுங்கள்.

==========================================================

எனக்கு மிகப் பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர் தலைவர் ஆகமாலே ஓய்வு பெற்றுவிட்டார். அது ஏன் என்பதை விதூஷ் இந்த இடுகையில் எழுதியுள்ளார். இதை எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

=======================================================

குச்சியை வைத்தே சாதனை செய்த நபரைப் பற்றி சசிக்குமார் இந்த இடுகையில் சொல்லி இருக்கிறார். ஒரு எட்டுப் பாருங்கள். அசத்தல் புரியும்.

==================================================

தண்டல் வளருவது எப்படின்னு ஒரு கவிதை

Toto எழுதியிருக்கிறார். சுருங்கச் சொன்ன நிறைவான கவிதை.

==================================================================

லண்டன் போலிஸ் ரஜினியைத் துறத்திய கதை உங்களுக்கு தெரியுமா?

தெரியலேன்னா கோழிப் பையனைக்கேளுங்க

=======================================================

டோனியின் கேரக்டர் தெரியுமா உங்களுக்கு? தெரியாதவர்கள் இவர்களைப் போய் பாருங்கள். கூடவே ரஞ்சிதா பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

==============================================

சின்ன வீடு படத்தில் கவாஸ்கர் சதம் அடித்த செய்தியும் அடுத்த நாள் மீண்டும் சதம் அடித்த செய்தியும் மீண்டும் ஒலிபரப்பப்படும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ற் கவிதை  சரவணன் சாரதிக்குச் சொந்தம்.

=============================================================
ஐ.பி.எல் அழகிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். பாருங்கள் யாருக்காவது ஆண்ட்ரியா சாயல் தென்படுகிறதா? தொகுத்தவர் சிவ்

====================================================================

சச்சின் பெரியவரா? லாரா பெரியவரா என்ற சச்சரவு இங்கே நடக்கிறது. உயிரெழுத்துன்னா சும்மாவா..,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

வெள்ளிக் கிழமை வெளியீடு இது

பொதுவாக நடிகைகளைப் பாராட்டி ஒரு இடுகை எழுதுவது என்பது மிகவும் சிரம்ம். எழுதுவதற்கு விஷயம் கிடைத்தல் என்பதைவிட மனம் வருதம் என்பது மிக அபூர்வர்ம். ஆனால் ரகுநாதனுக்கு அந்த மனம் இருக்கிறது. அவரை பாராட்டியே தீர வேண்டும்.படங்கள் வேறு போட்டு இருக்கிறார்.
========================================================
தியரி ஆஃப் ரிலேடிவிட்டி என்ற தத்துவம் யார் சொன்னது தெரியுமா? அதன் அடிப்படையில்தான் இந்த இயங்கிறது என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிரபுச் சந்திரனின் இந்த இடுகையைப் படித்துவிட்டுப் பின்னர் விவாதிப்போம். வாருங்கள்.

============================================================

சூரியனுக்கே லைட் அடிக்கும் பதிவு இது. லைட் அடிப்பவர் லேகா

=============================================================
சில கதைகளைப் படிக்கும்போது வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும். சில கதைகளைப் படிக்கும்போது மனம் விட்டு அளத் தோன்றும். எல்லாக் கதைகளையும் பழைய இலக்கியவாதிகள் ஏதாவது ஒரு கோணத்தில் தொட்டுச் சென்றிருப்பர்.   ஆனால் ஒரு மனிதனின் வெகுசாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அவனின் மிகப் பெரிய இழப்பின்போது கூட அவனின் மிகச் சாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அதுவே அவனுக்கு ஒரு சுமையாய் இருப்பதுவாக  கடுகைத் துளைத்து ஏழ் கடலை நுழைக்கும் வேலையை விட இந்த கதைமாந்தர்கள்களை புரிந்து கொள்வது சிரமமோ? சுந்தராவிடம் கேட்டுப் பாருங்கள்

=======================================================

தகாத உறவு, பொருந்தா உறவுக் காதல், பொருந்தா வயதுக் காதல் சதிவேலைகள் நிறைந்த ஒரு கதை தினமும் படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தத் தளத்தில்.  
ஆசிரியர் பெயர் கூட நந்தாவில்தான் முடிகிறது.

===============================================================
மிகப் பிரபலாமன ஒரு தளம் இது. எனக்கென்னவோ நிறையப் பேரை சென்றடையவில்லையோ என்ற எண்ணம் உண்டு அதனால் இதற்கும் சேர்த்து ஒரு அறிமுகம்


============================================================


எதிர்ப்பு மட்டும் முக்கியமா? முன்னேற்றமும் அவசியம்தானே? இது போன்ற இடுகைகள் நிறையப் பேருக்கு புரிவது இல்லை. சிலர் புரிய விரும்புவதும் இல்லை.

===============================================================

உங்கள் பார்வை பறந்து விரிந்து விசாலமாக அமைய லக்கி லிமட்டின் இந்த இடுகையைப் படியுங்கள்.

==============================================

அடுத்து எந்த சாமியார் மாட்டப் போகிறார் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கும் இடுகை இது. பாஸ்கருடையது.

=======================================================

இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு இடுகைபோதும். பெயர் சொல்லாவிட்டால் கூட நீங்கள் வலைப்பூவிற்குப்  போனால் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  வலைப்பூவின் பெயர் சும்மா

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...
பின்னூட்டங்கள் குறைவாக வந்திருந்தாலும் இந்தவாரத்தில் நான்கு பிந்தொடர்பவர்கள் வலைச்சரத்திற்கு அதிகரித்து இருக்கிறார்கள். வரூகைகளும் கூட சராசரியாகத்தான் இருந்தது.  நம்மால் வலைச்சரத்திற்கு எந்த கெட்டபெயரும் இல்லை என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ஒருமுறை வலைச்சரத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

19 comments:

 1. கலக்கிட்டீங்க தல.. வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்....அடே...யப்பா...எவ்ளோ படிக்குறீங்க...கலக்கல்ஸ் அண்ணே....

  ReplyDelete
 3. மன்னிக்கவும்..லேட்டாயிடுச்சுங்க.

  ReplyDelete
 4. அருமைங்க... எல்லா புத்தகத்தையும் படிக்கணும்

  ReplyDelete
 5. அம்பூட்டு இடுக்கையையும் தொகுத்தாச்சா

  நீங்க நல்ல தொகுப்பாசிரியர் தான்.

  வலைச்சரத்திற்கும் தங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. அருமையான பதிவு பழனி சார் , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ஒரு வாரமாக பதிவு எதையும் காணோமே என்று பார்த்தேன். காரணம் புரிந்தது.

  புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துவதற்க்கான தங்களின் முயற்சி மகிழ்ச்சிக்குரியது.

  ReplyDelete
 8. தொகுப்புகளுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. @சசிகுமார்

  @பாலமுருகன்

  @ஸ்ரீராம்.

  வருகைக்கும் கருத்துக்குக்களுக்கும் நன்றி நண்பர்களே..,

  ReplyDelete
 10. ஒரு வாரமா விடாம படிச்சோம்ல கடைசில என் பேரைப் போட்டு பெருமைப் படுத்திட்டீங்க சுரேஷ் நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 11. //thenammailakshmanan said...

  ஒரு வாரமா விடாம படிச்சோம்ல கடைசில என் பேரைப் போட்டு பெருமைப் படுத்திட்டீங்க சுரேஷ் நன்றி நன்றி நன்றி//

  தொடர்ந்துவாருங்கள் தல..,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails